A change of consciousness is the major fact of the next evolutionary transformation


“A change of consciousness is the major fact of the next evolutionary transformation, and the consciousness itself, by its own mutation, will impose and effect any necessary mutation of the body.“

-Sri Aurobindo

“The Future Evolution of Man” Chapter 2

மனிதனுடைய பரிணாம வளர்ச்சி எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை ஸ்ரீ அரவிந்தர் சொன்னதன் சாராம்சமாக, பவித்ரா என்றழைக்கப்பட்ட அடியவர் இரண்டாவது அத்தியாயத்தின் சுருக்கத்தை இப்படிச் சொல்கிறார்:

The Place of Man in Evolution

“An evolution of consciousness is the central motive of terrestrial existence. The evolutionary working of Nature has a double process: an evolution of forms, an evolution of the soul.

Man occupies the crest of the evolutionary wave. With him occurs the passage from an unconscious to a conscious evolution. At each step one receives an intimation of what the following step will be. The nature of the next step is indicated by the deep aspirations awakening in the human race.

A change of consciousness is the major fact of the next evolutionary transformation, and the consciousness itself, by its own mutation, will impose and effect any necessary mutation of the body. There is no reason to suppose that this transformation is impossible on earth. In fact, it would give the truest meaning to earthly existence.

Man's urge towards spirituality is an undeniable indication of the inner drive of the Spirit within towards emergence, its insistence towards the next step of its manifestation.”

பரிணாம வளர்ச்சியில் இரண்டு விதமான அம்சங்கள் இருக்கின்றன. ஒன்று வடிவங்களிலான பரிணாம மாற்றம், இன்னொன்று ஆத்மா அல்லது சைத்ய புருஷனுடைய பரிணாம மாற்றம்.

முதலாவது அம்சத்தில்,

"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்"

என்று திருவாசகத்தில் மணிவாசகப் பெருமான் உரைத்தது
போல, பரிணாமம் பல படிகளைக் கொண்டதாயிருக்கிறது. இரண்டாவதாக ,புல்லாய்க் கிடந்த போதும், புழுவாய்க் கிடந்த போதும், பலப்பல மிருகமாய்ப் பிறந்த போதும், உள்ளே இருக்கிற ஆத்மா ஒன்றே என்று சொல்லப் பட்டாலும், விழிப்பு நிலையில் ஏகப் பட்ட படித்தரங்கள் இருக்கின்றன.

ரமண மகரிஷி, தன்னுடைய சிறு வயதில் மரணத்தைப் பற்றிய ஒரு விழிப்பு ஏற்பட்டதும் "என் தந்தையிடம் போகிறேன்" என்று எழுதி வைத்து விட்டுத் திருவண்ணாமலைக்கு வந்தார். பன்னிரண்டு வயதிலேயே, ஆத்ம ஞானம் கிடைத்து விட்டது என்பது வரை எல்லோருக்கும் தெரியும், ஆனால், அதற்கு முன் எத்தனை எத்தனை முயற்சிகள், எத்தனை எத்தனை பிறவிகளில் அவர் செய்திருப்பார் என்பது மட்டும் தெரியாது. ஒவ்வொரு மனிதனிடத்திலும், இத்தகு முயற்சிகளை, பரிணாமச் சக்கரம் எல்லா நேரங்களிலும் செய்து கொண்டே வந்திருக்கிறது, இனியும் மேற்கொள்ளும்.

ஸ்ரீ அரவிந்தர் மேலும் என்ன சொல்கிறார் என்பதைப் பாருங்கள்:

“If a spiritual unfolding on earth is the hidden truth of our birth into Matter, if it is fundamentally an evolution of consciousness that has been taking place in Nature, then man as he is cannot be the last term of that evolution: he is too imperfect an expression of the spirit, mind itself a too limited form and instrumentation; mind is only a middle term of consciousness, the mental being can only be a transitional being.

If, then, man is incapable of exceeding mentality, he must be surpassed and supermind and superman must manifest and take the lead of the creation. But if his mind is capable of opening to what exceeds it, then there is no reason why man himself should not arrive at supermind and supermanhood or at least lend his mentality, life and body to an evolution of that greater term of the Spirit manifesting in Nature.”

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!