“For all problems of existence are essentially problems of harmony."


At each step one recieves an intimation of what the following step will be.

“For all problems of existence are essentially problems of harmony.They arise from the perception of an unsolved discord and the instinct of an undiscovered agreement or unity. ”
-Sri Aurobindo,
The Future Evolution of Man, Ch.1 'The Human Aspiration

“Everyone has in him something divine, something his own, a chance of perfection and strength in however small a sphere which God offers him to take or refuse. The task is to find it, develop it and use it. The chief aim of education should be to help the growing soul to draw out that in itself which is best and make it perfect for a noble use.”
-Sri Aurobindo

ஸ்ரீ அரவிந்தர் எவ்வாறு மனித குலம், பரிணாமத்தில் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என்பதை " The Future Evolution of man" என்கிற நூலில் அழகாக விளக்கியிருக்கிறார்.ஒவ்வொரு அடி எடுத்து வைக்கிறபோதும், அடுத்த அடி எப்படி எடுத்து வைக்க வேண்டும் என்பதை அறிகிற புத்தியையும் ஆண்டவன் நமக்கு அருளுகிறான் என்பதையும் ஸ்ரீ அரவிந்தர் சொல்கிறார். அதன் முதல் அத்தியாயத்தின் சாராம்சமாக பவித்ரா என்று அன்புடன் அழைக்கப்பட்ட அடியவர் இப்படிச் சொல்லுகிறார்:

The Human Aspiration

“ Man's highest aspiration - his seeking for perfection, his longing for freedom and mastery, his search after pure truth and unmixed delight - is in flagrant contradiction with his present existence and normal experience.

Such contradiction is part of Nature's general method; it is a sign that she is working towards a greater harmony. The reconciliation is achieved by an evolutionary progress.

Life evolves out of Matter, Mind out of Life, because they are already involved there: Matter is a form of veiled Life, Life a form of veiled Mind. May not Mind be a form and veil of a higher power, the Spirit, which would be supramental in its nature? Man's highest aspiration would then only indicate the gradual unveiling of the Spirit within, the preparation of a higher life upon earth.”

மனிதன் தன் வாழ்வில் சந்திக்கிற ஒவ்வொரு முரண்பாடும், ஒவ்வொரு துயரமும் ஒரு பெரிய ஒருமைக்கான முன்னேற்பாடாகவே அமைவது இறைவனது சித்தம். சடமாக இருந்த நிலையிலிருந்து உயிர் தோன்றியது. உயிரிலிருந்து மனம் தோன்றியது. சடமாக இருந்த நிலையில் உயிர்மை மறைக்கப்பட்டதாக இருந்தது போலவே உயிர்மை என்பது மனத்தின் மறைக்கப்பட்ட வடிவமாக இருக்கிறது. மனத்தையும் மிஞ்சிய பெருநிலையை அடைவதற்கே கேள்விகள் எழுந்தன.

தன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை அறிந்து கொள்வதில் மனிதனுக்கு இயல்பாகவே எழுந்த ஆர்வம் அல்லது விழைவு, அதை ஒட்டி எழுகிற தடைகள், அதையும் மீறி அடுத்து என்ன, அடுத்தது என்ன என்கிற தேடல் மனித குலம் தோன்றிய நாளில் இருந்தே தொடங்கி விட்டது.

அந்த வகையில், இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிற ஒவ்வொரு முரண்பாடும், எதிர்மறையான சிந்தனையும், சூழலும், இவனை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திச் செல்லுகிற கருவியாகவே இறைவன் அருளியிருக்கிறான். வீணே கழிந்தன நாட்கள் என்று வேதனைப் படவோ பதட்டப் படவோ அவசியமில்லை என்று சொல்லாமல் சொல்லுகிறான். வெளியே ஆர்ப்பரிக்கிற ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஈடாக உள்ளேயே இருக்கிற அழுக்கை, இருளைக் கண்டு கொள்கிற பயிற்சியாகவே படிப்பித்துக் கொண்டிருக்கிறான்.
"மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டா"
பழுதையைப் பாம்பாகக் காண்பிக்கிற மனத்தின் உண்மையான தன்மையைப் புரிந்து கொண்டால் அதுவே இன்றைக்குக் கிடைக்கிற பெரிய வரம்!
ஸ்ரீ அரவிந்த அன்னையே!
உன் திருவடிகளைச் சரண் அடைகிறேன்.
எனது மனம், கரணங்கள், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.
உனது பிரியத்திற்கு உகந்த குழந்தையாக வரம் அருள்வாய்.
உனது சித்தத்தின் படியே இயங்குகிற வாழ்க்கையை அருள்வாய்.
அகந்தை, அறியாமை எனும் இருளில் மறைந்து கிடக்கிற, உனது சித்தத்திற்கு பணிய மறுக்கிற பகுதிகளில் உனது கருணையாகிற ஓளி படட்டும், உனது ஒளியினால் இவனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தும் நிறைவு செய்யப் படட்டும்.

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!