கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே!


நம்மில் பெரும்பாலோருக்கு, வாழ்க்கையில் நமக்குக் கிடைத்திருக்கிற வரங்களை கவனிப்பதை விட, குறைகளையே பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு பொதுவான குணம் இருக்கும். குறைகளையே பார்த்துக்கொண்டிருக்கிற பொழுதில், கைக்கு வர வேண்டிய எவ்வளவு அருமையான தருணங்களை, வாய்ப்புக்களைத் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது, ஏதோ ஒரு தருணத்தில் வெளிப்படும் போது, காலம் கடந்திருக்கும்.

This courage, this heroism which the Divine wants of us, why not use it to fight against one's own difficulties, one's own imperfections, one's own obscurities? Why not heroically face the furnace of inner purification so that it does not become necessary to pass once more through one of those terrible, gigantic destructions which plunge an entire civilisation into darkness?

இந்த வாக்கியங்களை மறுபடியும் படிக்கும் போது, ஸ்ரீ அரவிந்த அன்னை, "இனி என்ன நடக்கும்? இனி என்ன நடக்கும்?" என்று எல்லாத்திக்குகளிலும் இருந்து வரும் கேள்விகளுக்கு எவ்வளவு சுருக்கமான தீர்வைச் சொல்லியிருக்கிறார் என்பது புரிகிறது.

நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாக் குழப்பங்களுக்கும் ஒரே தீர்வு, புடமிட்ட தங்கம் போல, நம்மிடமிருக்கும் அழுக்கு, உலகியலிலான பலவீனங்களில் இருந்து விடுபட்டு, உன்னதமான ஆன்மீக அனுபவத்திற்குத் தயாராவது மட்டும் தான் என்கிறார் ஸ்ரீ அன்னை.

இறைவன் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன?

சூழ்நிலைகள், பழக்கங்களின் அடிமையாக இருப்பதிலிருந்து விடுபட வேண்டுமானால், மாற்றத்திற்கான போராட்டம் தனக்குள்ளேயே நிகழ்ந்தாக வேண்டும். நமக்குள் இருக்கும் பலவீனங்களை எதிர்த்துப் போராடுவதில் முனைப்பு வேண்டும். தங்கம் தீயிலிடப்படும் போது அதிலிருக்கும் தூசு நீங்கித் தூய்மையாவது போல, நமக்குள்ளேயே அந்த ஞான நெருப்பு வெளிப்பட வேண்டும். இத்தகைய வீரத்தைத்தான், திருவுருமாற்றத்திற்கு ஆயத்தமாவதைத்தான், இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறான். அழுகுணி ஆட்டத்தை விட்டு விட்டு, இறைவனது விளையாட்டில் ஆர்வத்தோடு பங்கேற்கிறவர்களாக ஆக வேண்டும்.

ஆனால், நமக்கு இது புரிவதே இல்லை. அல்லது, மாற்றத்தை மறுப்பது, முரண்டுபிடிப்பது நமக்கு மிகச் சுலபமாக இருக்கிறது. எதற்காகப் பிரயத்தனப்பட வேண்டும், இப்படியே இருந்து விட்டுப் போகலாமே என்றிருப்பது பழக்கங்களின், மிருகவுணர்வின் அடிமைகளாகவே நாம் இன்னமும் இருப்பதைத் தான் காட்டுகிறது.

இந்த மாற்றம், எல்லோருக்கும் சாத்தியப் படுவதில்லை. அதற்காகத் தான், இறைவன் சில முன்னோடிகளை, ஆசான்களை நமக்குத் தந்திருக்கிறான்.

பரந்த ஹிந்து சாம்ராஜ்யத்தில் துலுக்கர்களின் ஆக்கிரமிப்பு ஒரு துறவியின் மனதைச் சுட்டது.அதே நேரம்,தங்கள் தேசத்தில் அத்துமீறி நுழைந்த அந்நியர்கள், கோவில்களை இடித்தும் கொள்ளையடித்தும் செய்த அக்கிரமங்களை, ஒரு தாய் மனக் குமுறல்களுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இந்த இருவரின் எண்ண அலைகள், துலுக்கரை நடுங்கச் செய்த ஒரு மகா வீரனைத் தந்தது. சத்ரபதி சிவாஜி உருவாக்கிய குதிரைப்படையின் வேகம், அதைப்பற்றி நினைக்கும் போதே,மொகலாயர்களின் அடிவயிற்றைக் கலக்கியது. மொகலாய சாம்ராஜ்யம் சிதறுண்டு, பாளையக்காரனும் , ஜாகிர்தாரனுமாகக் குறுகிப் போய், இவர்களுக்கிடையே நடந்த ஆதிக்கப் போட்டியில், குள்ள நரி போல உள்ளே நுழைந்த ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை முன்னூறு வருடங்கள் அடிமைத்தளையில் வைத்திருந்தார்கள்.

சுதந்திர வேட்கை கொண்ட சில பேர் வீறு கொண்டேழுந்தார்கள். பலரோ, அடிமையாகவே இருப்பதில் மெத்தச் சுகம் கண்டு அதை எதிர்த்தார்கள். ஆனாலும், சுதந்திர வேட்கை கொண்ட மிகச்சிலரிடத்தில் தார்மீக நெறியும், ஒழுக்கமும் இருந்ததனால், ஜனங்கள் அவர்களையே பின்பற்றினார்கள். அடிமைப் படுத்தியவன், தானாகவே வெளியேறுகிற சூழலையும் உருவானது.

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தைநம்பும்யாரும் சேருவீர் (கத்)

ஒண்டி அண்டிக் குண்டுவிட்டு உயிர்பறித்த லின்றியே

மண்டலத்தில் கண்டிலாத சண்டை யொன்று புதுமையே (கத்)

குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசையில்லையே

எதிரியென்று யாருமில்லை ஏற்றும் ஆசையில்லதாய் (கத்)

கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே

பாபமான செய்கை யொன்றும் பண்ணுமாசை யின்றியே (கத்)...

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அவர்களின் கவிதை சொல்லும் உண்மையையும் இன்றைய த்யானத்திற்கு எடுத்துக் கொள்வோமா?

ஸ்ரீ அரவிந்த அன்னை இதைத் தான்

..so that it does not become necessary to pass once more through one of those terrible, gigantic destructions which plunge an entire civilisation into darkness? “

என்று குறிப்பிடுகிறார்.

India is the country where the psychic law can and
must rule and the time has come for that here. Besides, it is the only possible salvation for this country whose consciousness has unfortunately been warped by the influence and domination of a foreign nation, but which, in spite of everything, possesses a unique spiritual heritage.”
The Mother

2.8.1970

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!