ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகமாச் சொன்னாரே!

இன்னுமா முழுசா நொறுங்கலை? ஏன்னு பார்க்கிறாரோ?

டிஸ்கி: இது இந்தப் பதிவோட பின் விளைவு தான்! படிச்சப்புறம் தண்ணியடிக்காமலேயே,ரெண்டு புல் அடிச்ச மாதிரி இருந்த போது, உசுப்பேத்தி விட இந்தப் பதிவும் சேர்ந்துகொண்டது ! போதாதா? மாப்பு, மச்சி, அண்ணே, தம்பீ, எல்லாரும் திருப்பாச்சியத் தீட்டித் தயாராகுங்க! தீவட்டியும் மறக்காம எடுத்துக்கங்க!

தலைப்பு, விஷயதானம் இரண்டுமே நம்ம வால்பையன் என்கிற திரு அருண் தான்! டோண்டு ராகவனுக்கு மட்டுமல்ல, என்னையும் கவர்ந்த பதிவர்! சரவெடி வெடிக்கிற மாதிரி, தொடர் பின்னூட்டங்களாகக் கலக்கி வெடிப்பவர். தெருவில், அல்லது கனவில் யாராவது சரவெடி கொளுத்திப் போடுகிறமாதிரி வந்தால் கூட, அட நம்ம வால்ஸ் தான் என்று நினைக்கிற விதத்தில், கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு துளைப்பவர்! எதுக்கு இவ்வளவு பில்டப்புங்கறீங்களா?

ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகமாச் சொன்னாரே, பட்ஸ்[Buds] இருந்தாலும் காது குடையலாம். ஹிட்சை[Hits] வச்சி என்ன பண்றது?

திருவாசகமாச் சொன்னவருக்கு, பாராட்டும் சொல்லணுமா இல்லையா? அதுக்குத் தான் இந்தப் பதிவு! அக்கப்போரில் கலக்கும் இன்னொரு வைக்கப் போர்னு யாராச்சும் நெனச்சா , நான் அதுக்குப் பொறுப்பல்ல! இத மனசுல நல்லா வச்சுகிட்டு, பதிவைப் படிக்க வேணுமாய்க் கேட்டுக்கிறேன்!

சீரியசான விஷயத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதில் இருந்து கொஞ்சம் விலகி, பதிவுலகைக் கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாம் என்றால், இங்கே தமிழ் வலைப் பதிவர்கள் ஒரு கொலைவெறியோடு, எரிந்த கட்சி, எரியாத கட்சி என இருகூறாகப் பிரிந்து, சாரு நிவேதிதா-ஜெயமோகன் இருவரிடையே நடக்கும் வார்த்தைப் போரை, இன்னும் கொஞ்சம் பேஜாரான அக்கப் போராக மாற்றியே தீருவது கங்கணம் கட்டிக் கொண்டது போல, தினசரி புதுப்புதுப் பதிவுகளாக எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள்!

இரண்டு நல்ல எழுத்தாளர்கள், கொஞ்சம் சரக்கு உள்ள எழுத்தாளர்களுமே கூட! இவர்களுக்குள்ளே அவ்வப்போது நடக்கும் நான் பெரிய ஆளா, நீ பெரிய ஆளா என்ற ஈகோ வளர்ந்து, ஒருத்தருக்குக் கொஞ்சம் பேர் கூடக் கிடைத்து விடுகிற மாதிரித் தெரிந்தால், இன்னொருத்தருக்குப் புகை வரும் என்ற அளவுக்கு மாறி, இவர்கள் எழுத்துக்களைப் படிக்கும் பதிவர்களுக்கும் தொற்றி, ரொம்பவுமே முத்தி போச்சு! ரீடரைத் திறக்கவே பயமாய் இருக்கிறது! இன்றைக்கு எத்தனை பேர் வாந்தி எடுக்கப் போகிறார்கள் என்பது தெரியாமலேயே "படா பேஜாராக்கீது!"

இது இன்றைக்கு நேற்றைக்கு ஆரம்பித்ததல்ல. வழிவழியாக, நம்முடைய தமிழ்க் கலாச்சாரத்தில் ஊறி வளர்ந்து வருகிற மரபு. மணிமேகலையை எடுத்துக் கொண்டாலும் சரி, அனல் வாதம், புனல் வாதம் என்றெல்லாம் கதை சொல்லும் சைவ இலக்கியங்களை எடுத்துக் கொண்டாலும் சரி, இப்படிப் பாம்பும் கீரியுமாக இருவர் சண்டைபோடுவதைக் கூட்டமாகக் கூடி நின்று வேடிக்கை பார்ப்பதும், அதில் எவர் ஜெயிப்பார் எனப் பட்டி மன்றங்கள் நடத்துவதும் நமக்குப் புதிதா என்ன! அந்தக் காலத்தில், எழுத்துப்பிழை, கருத்துப் பிழை இருந்தால் சீத்தலைச் சாத்தனார், எழுத்தாணியால் தன் தலையிலேயே குத்திக் கொள்வாராம்! இங்கே பதிவுலகச் சாத்தனார்கள், கண்ணில் தென்படும் அத்தனைபேர்களையுமே குத்திக் குதறிக் கொண்டிருக்கிறார்கள்! சாரு-ஜெயமோகன் பிரச்சினை தீர்ந்து போனாலும், வேறு ஏதாவது இதே மாதிரிக் கிடைத்து விடாதா என்ன!!

சமீப காலத்தில் பொன்னியின் செல்வன் புதினத்தில் அமரர் கல்கி ஆழ்வார்க்கடியான் என்ற பாத்திரத்தை வைத்து, இந்த கலாசாரத்தைக் கொஞ்சம் ரசிக்கிற மாதிரி எழுதியிருந்தால், நாமும் அப்படியே செய்ய வேண்டுமா என்ன?

ஐயா, அப்படியே, ஏதோ ஒரு தரப்பு ஜெயித்து, இன்னொன்று தோற்றுப்போன பின்பும் நம்முடைய கொலைவெறி ஓய்ந்து விடுவதில்லை. உசுப்பேத்தி உசுப்பேத்தியே, இன்னும் கொஞ்சம் ரத்தக் களரியைப் பார்க்காவிட்டால், அப்புறம் நமது பண்பாடு, தொன்மை எல்லாம் என்ன ஆவது? நம்மைப் போலப் பண்பாட்டுக் காவலர்கள் உலகத்தில் எவரேனும் இருக்க முடியுமா? கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே 'வாலொடு' முன்தோன்றிய மூத்தகுடி அல்லவா நாம்!

இப்படி என்னை மாதிரியே, இந்த விஷயத்தில் பேஜாராகிக் கிடந்த வால்பையன் என்ற திரு. அருணுடன் ஒரு அரட்டை, அல்லது மப்பில் குறட்டை, எப்படி வேண்டுமானாலும், வைத்துக் கொள்ளுங்கள்!

நான்: இன்னுமா போதை இறங்கலே. ..??!! பதிவுலதான்:-))

வால்பையன்: :) அது எதிர் பதிவு சார்! சாரு சும்மா சும்மா தன்னை பாராட்டி வரும் கடிதங்களை போட்டு சுய விளம்பரம் தேடி கொள்கிறார்
வருத்தம் என்னவென்றால் நல்லாயிருந்த சில ப்ளாக்கர்ஸும் அப்படி செய்வது தான். சமீபத்திய உதாரணம் xyz.
(டிஸ்கி 2: பதிவர் பெயரைக் குறிப்பிடாமல் இருப்பது, அலட்சியம் செய்வதற்காக அல்ல. சாரு-ஜெமோ பிரச்சினையைப் பற்றி எழுதுவதற்கு முன்னால், நன்றாகவே இருந்த மனிதர், நல்ல பதிவர், இவங்க அக்கப்போரைப் பத்தி எழுதினதும் ஒருமாதிரியாய் ஆயிட்டார்னு நம்ம வாலு ரொம்பவுமே ஃபீல் பண்ணிச் சொன்னதாலே, வேண்டாம்னு தான்! அதுக்கப்புறம் நிலைமை ரொம்ப மோசமாகவே ஆயிடுச்சி போல!)

நான்: ஒரு ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களுக்குத் தமிழ் வலைப்பதிவர்கள் இன்னமும் மாற மாட்டேன் என்கிற மாதிரியே இருக்கிறது. இப்படி எரிகிற தீயில் மேலும் எண்ணெய் ஊற்றுவானேன்?

வால்பையன்: அதே தான் என் வருத்தமும். சிலருக்கு பொழுது போகலையாம்

நான்: பொழுது போக்க வேறு "நல்ல" விஷயங்கள் இருக்கிறதே? பிரபுதேவா- நயன்தாரா கிசுகிசு இப்படி!

வால்பையன்: ஹாஹாஹா! இன்னும் நிறைய இருக்கு. ஆனால் நேரடியா சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்க்குற மாதிரி வருமா!? :)

நான்: எனக்கு வருத்தம் என்னவென்றால், காலை எழுந்தவுடன் பதிவுகளைப் பார்க்கும் போது, சாரு-ஜெமோ பற்றி யாராவது தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருப்பதைப் பார்ப்பது தான். அவர்கள் இருவரும், தங்கள் பிழைப்பை நன்றாக ஓட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்! ஆன்னால், இதை எழுதும், படிக்கும் பதிவர்கள்..?

வால்பையன்: அதுவும் தான்! ரெண்டு கோஷ்டிகள்! போஸ்டர் அடிச்சி தான் ஒட்டல!

நான்: அதைத்தான், வினை, எதிர்வினைப் பதிவுகளில் நிறையப்பேர் செய்து கொண்டிருக்கிறார்களே!

வால்பையன்: ஆரோக்கியமான விவாதம் கிடையாது. நீ பெருசா நான் பெருசா தான் மேட்டரே இருக்கும்

நான்: ஒரு பதிவில் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டேன் "சாருவைத் திட்டிப் பதிவு போட்டா முன்னூறு பின்னூட்டம் வரும்' நான் அவரிடம் கேட்டேன் , உங்களுக்கும் அப்படி வரவேண்டுமென்கிற நப்பாசையா என்று..

ஒரிஜினலா, கொஞ்சம் யோசித்து எழுதுகிற பதிவுகள் குறைந்து போய்விட்டதோ என்று வருத்தமாக இருக்கிறது.

இவர்களைக் கொஞ்சம் கவனிக்காமல் இருந்தாலே தொண்ணூறு சதம் வெட்டி விவாதங்கள் குறைந்து போய் விடும் என்றே தோன்றுகிறது.

வால்பையன்: பட்ஸ்[Buds] இருந்தாலும் காது குடையலாம். ஹிட்சை[Hits] வச்சி என்ன பண்றது?

வடிவேலு அடிக்கடி உதிர்க்கிற வசனம் இது: "நம்மளை வச்சுக் காமடி கீமடி ஒண்ணும் பண்ணலையே?"

இது தொடரும் காமெடி!! சாருவின் கடிதத்திலிருந்து........சாரி, கடிச்சதிலிருந்து!

"
ஒரு அன்பர் எனக்கும், ...வுக்கும் பொதுவாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். “ஏம்பா நீங்க ரெண்டு பேரும் இப்டி அடிச்சிக்கிறீங்க?” ...வை விட இந்த மாதிரி ஆசாமிகள்தான் ஆபத்தானவர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இது போன்றவர்களுக்கு எந்த அடையாளமும் இல்லை. அதனால் இப்படி எங்களை விலக்கி விடுவதன் மூலம் இவர்கள் எங்களை விட மேலானவர்களாகக் காண்பித்துக் கொள்ள விழைகிறார்கள்.

இவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். நான் ஆயிரமாயிரம் பக்கங்கள் எழுதியிருப்பேன். அதைப் பற்றியெல்லாம் சொல்வதற்கு உங்களிடம் ஒரு வார்த்தை உண்டா? ராஸ லீலா 700 பக்கம். காம ரூப கதைகள் 350 பக்கம். இதையெல்லாம் பற்றி உங்கள் கருத்து என்ன? இதையெல்லாம் விட்டு விட்டு ஏதோ தெருச் சண்டையை வேடிக்கை பார்க்கும் மனோபாவத்துடன் வேடிக்கை பார்த்துக் களித்து விட்டு என்னங்கடா எனக்கு அறிவுரை?"

சாருவும், ஜெயமோகனும், நம்மை வைத்துக் காமெடி பண்ணுகிறார்களோ இல்லையோ, சக வலைப்பதிவர்கள் தங்களை அறியாமலேயே, இந்த அக்கப் போரில் சிக்கிக் கொண்டு, நல்ல காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்!

பார்ப்போமே, இது இன்னும் எத்தனை காலம் தான்..............!?!?

ஜூன் முப்பதன்று, புதுமைப்பித்தனின் நினைவுதினம் இன்று-- எவருக்கேனும் நினைவிருக்கிறதா என்று நண்பர் வால்பையன் அங்கே எழுப்பியிருந்த கேள்வி, பின்னூட்டச் சூறாவளியில் எவர் கண்ணுக்குமே படாமல் போனது, எனக்கு ஆச்சரியமாயில்லை!!

தமிழ் வலைப் பதிவுகள், சமீப காலங்களில் தனிநபர் தாக்குதல்களாக மாறிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொருவரும் இது தான் சாக்கு என்று, கூட்டத்தோடு கூட்டமாகக் கல்லை வீசிக் கொண்டிருக்கிறார்கள்!

இங்கே ஒருத்தர் இதைப்பத்தி ரொம்ப சீரியஸாக ஒரு பதிவு போட்டிருக்கார், படிச்சுப் பாருங்க! பொழுது போகணுமில்ல?!

பேச்சுப் பேச்சாத் தான் இருக்கணும் மக்களே! மேல விழுந்து பிராண்டக்கூடாது!

அதெல்லாமில்ல, வேலியில போற ஓணானை எடுத்துள்ளார விட்டுக்கிட்டு, குத்துதே குடையுதேன்னுதான் இருப்பேன் என்பவர்களுக்காக மட்டும் இங்கே வேலியில போற ஓணான் மீது க்ளிக்கிப்பாருங்க!.


4 comments:

  1. இந்த சண்டைங்கள் படிக்க நெம்ப கஸ்டமா இருக்கு!

    ReplyDelete
  2. அருமையா சொல்லியிருக்கிங்க சார்!

    இவ்விசயத்தில் நான் களத்தில் இல்லையென்றாலும் மனதளவில் காயப்படுகிறேன்.

    சம்பந்தபட்டவர்கள் எனது நண்பர்கள் தான் என்றாலும் அறிவுரை சொல்ல எனக்கு தகுதி இருக்கிறதா என யோசிக்கிறேன்.

    எவ்வளவு பசியிலும் சோற்றை ஆறவைத்து தான் சாப்பிடுகிறோம்! இதில் மட்டும் ஏன் இந்த அவசரமோ!

    ReplyDelete
  3. ஏ..... அகுலு பாரு .. பிகுலு பாரு ...


    அண்டா ... உண்டா.... ரவுசு பாரு ...


    கோடமபாக்காம் மயிலு பாரு......


    ஏ ... இந்தா ... ஏ ... இந்தா ... அட்ச்சு உடே.....

    ReplyDelete
  4. @லவ்டேல் மேடி
    திருப்பாச்சி, தீவட்டியோட வருவீங்கன்னு பாத்தா டப்பாங்குத்து மட்டும் தானா?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!