சாரு-ஜெமோ இருவருக்கும் நடக்கும் இலக்கியத்தரமான சண்டை

இப்படி ஒருத்தர் சிரிச்சிக்கிட்டே நின்னாக்க.....
இன்னொருத்தருக்குக் கடுப்பு வருமா, வராதா?

சாரு-ஜெமோ இருவருக்கும் நடக்கும் இலக்கியத்தரமான சண்டை, வாக்குவாதங்களைப் பற்றியது என்றவுடன், பதிவர்கள் கைவேலை என்னவாக இருந்தாலும் அப்படியே போட்டுவிட்டு, பின்னூட்டமிட ஆஜாராகி விடுகிறார்கள் என்று மறுபடி மறுபடி நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. புள்ளிவிவரங்களைத் தருவதற்கு நான் ரெடி, ஆனால் அது சாரு- ஜெமோ அக்கப்போரைவிட பெரிய அக்கப் போராக இருக்கும் என்பதால், இங்கே, இப்போது வேண்டாம்.

யாராச்சும் வேணும்னு கேளுங்களேன், ப்ளீஸ்! ப்ளீஸ்!

சாரு-ஜெமோ இருவருக்கும் சண்டையே, மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுடைய இடத்தை இவர்களில் யார் பிடிப்பார்கள் என்பதில் தான் ஆரம்பித்ததாக, எல்லாம் அறிந்த ஒரு பதிவர் சொல்லியிருந்ததைப் படித்த நினைவிருக்கிறது. எழுத்தாளர் சுஜாதா மறைந்த போது, அவரை நேசித்தவர்கள் பக்கம் பக்கமாக எழுதினார்கள். இன்னொரு தரப்போ, இறந்தவர் மீது சேற்றை வாரி வீசும் திருப்பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தது, இப்போதும் கூட அங்கொன்றும், இங்கொன்றுமாக இப்படிச் சேற்றை வீசும் பதிவுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

சாரு-ஜெமோ சண்டையைப் பற்றியே எத்தனை நாள் தான் பதிவுகள் எழுதிக் கொண்டிருப்பது? எத்தனை தடவை தான் 'ரிப்பீட்டேய் .... தல.. சூப்பரு.... கலக்கிட்டீங்க...'ன்னே பின்னூட்டம் எழுதிக் கொண்டிருப்பது? நாங்களும் சாரு-ஜெமோ லெவெலுக்கு எப்போ உசர்றது? பிரபல பதிவர் ஆக வோணாமா.....?!

அதுக்காகவே, பிரபல பதிவர்கள் Vs பிரபலமாகத் துடிக்கிற பதிவர்கள் இப்போது ஒரு புதிய விளையாட்டை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். இந்த தொடர் விளையாட்டு, சாரு-ஜெமோ சண்டையை விட இன்னும் கொஞ்ச நாளில் சூடு பிடித்து, தீப்பற்றி எரியப்போகிறது! பார்த்துக் கொண்டே இருங்கள்!

இவங்க ஒரு பதிவு போடுவாங்களாம்- அதுக்கு அவங்க ஒரு எதிர்ப்பதிவு போடுவாங்களாம், இந்த இரண்டு பேர் பதிவுகளிலுமே, பின்னூட்டப் புயல்கள் நுழைந்து ,கலக்கு கலக்குன்னு கலக்கின பிறகு ரெண்டு பதிவர்களுமே தனியாப் பேசி சமாதானமாப் போயிடுவாங்களாம்! போட்ட பதிவுகளும் காணாமப் போயிடுமாம். இது ஒரு விளையாட்டு! ஒருத்தருக்கொருத்தர் பத்த வச்சுக்கிறதும் ஒரு விளையாட்டு!

வடிவேலு நக்கலாச் சொல்கிற மாதிரி...........என்ன இது? .........சின்னப்புள்ளத் தனமால்ல இருக்குது!!

இவங்க சமாதானமாப் போனாலும், சண்டையிட்டே ஒழிஞ்சாலும் பின்னூட்டப் புயல்களுக்குக் கவலை இல்லை! அவர்கள் போட்ட பின்னூட்டங்களுமே கூடக் காணாமல் போவது தான் இவங்களுக்குப் பெரிய கவலையே! அதெப்படி, நீங்களா சமாதானம் பண்ணிக்கிடலாம்னு ஒரே போர்க்கொடி! இப்படி போர்க்கொடி உயர்த்துகிற பதிவுகளாக இருப்பது, விளையாட்டுக்குள்ளார ஒரு விளையாட்டு!

இவர் இன்னொரு விளையாட்டை ஆரம்பித்து வைத்திருக்கிறார். ஒரு பதிவரின் பெயரைக் குறிப்பிட்டுக் கண்டனப் பதிவாக [உளாக்காட்டிக்குத்தான்!] ஒன்னு எழுதுவாராம்! சம்பந்தப்பட்ட பதிவர், தன்னுடைய பதிவை, நீக்கிவிட்டால், இவரும் இந்தப் பதிவை நீக்கி விடுவாராம்! ஐயாமார்களே, அம்மாமார்களே, நடத்துங்க! நடத்துங்க! யாராவது அடிபட்டு, அழுவதைப் பார்த்தால் தானே, நமக்கு நல்ல காமெடி கிடைக்கும்!

இப்படிக் கொஞ்சநாளா, தமிழ் வலைப்பதிவுலகமே கொந்தளிச்சிட்டிருக்கும் போது, நாமளும் அந்த ஜோதில ஐக்கியமாகாட்டா...... அப்புறம் எப்புடி? நம்மளைப் பிரபலப் பதிவரா ஒத்துக்க வேண்டாம்.. ....சரி, சரி, போனாப் போகட்டுங்க!

ஒரு சாதாப் பதிவர்னோ, இல்லை வெறும் சோதாப் பதிவர்னோ கூட ஒத்துக்காமப் போயிட்டீங்கன்னா....? எனக்கு அழுவாச்சி, அழுவாச்சியா வந்திடுங்க!

அதுக்குத்தான் இப்பிடி!!ஹி. ஹி. ஹி. ....இஃகி இஃகி இஃகி...... !

தீராத பக்கங்களில் படிச்சது..ரசிச்சது.... இந்தப் பதிவும் எத்தனை மணி, எத்தனை நிமிடம் நீக்கப்படாமல் இருக்கும் என்று தெரியாததால், அங்கேயிருந்து சுட்டது:

அது
அதுவாய்க் கிழிய
இது
இதுவாய்க் கிழிய
அதை
அவர் வாய் கிழிய
இதை
இவர் வாய் கிழிய
அப்படியே
அவரவர் வாய் கிழிய
எது எதுவோ
எப்படி எப்படியோ
எங்கெல்லாமோ கிழிய
கிழிந்தது
கிருஷ்ணகிரி!

நன்றி, இந்தப்பக்கத்தில் இருந்து சுட்டது.

இந்த அக்கப்போரில், கிழிஞ்சது கிருஷ்ணகிரி மட்டும் தானா? இன்னும் வேறு ஏதாவது உண்டா?

அப்படியே இந்தப்பக்கத்தையும் வந்து படிச்சதுக்கும் ரொம்ப நன்றிங்கோ!


பேச்சுப் பேச்சாத் தான் இருக்கணும் மக்களே! மேல விழுந்து பிராண்டக்கூடாது!


Quo Vadis? எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?


2 comments:

  1. ஆரம்பத்திலிருந்தே எனது மனநிலையும் இதே தான்!
    குறிப்பாக எனது நண்பர் மற்றும் எனது ஆல்டர் ஈகோ ப்ளீச்சிங்கின் பதிவை சுட்டிகாட்டியமைக்கு நன்றி!

    இது ஒன்றும் குடுமிபிடி சண்டையும் அல்ல, ஆளாளுக்கு நாட்டாமை செய்ய, அவர்களது கருத்து மோதல் அவர்களே பேசி தீர்த்து கொள்வார்கள், அடுத்தவன் சூட்டில் குளிர் காய்வது தமிழனுக்கே உரிய குணம் போல!

    ஜெயமோகன் சிரிப்பும்,
    சாருவின் முறைப்பும்

    சொல்றதுகில்ல பத்து நிமிசம் சிரிச்சிட்டு தான் படிக்கவே ஆரம்பிச்சேன்!

    ReplyDelete
  2. நன்றாக சொன்னிர்கள். அது என்னவோ தெரியலீங்க. கொஞ்ச நாளாவே தமிழ் வலைப்பதிவுகளில் எங்கு பார்த்தாலும் ஒரே 'ரத்தக்களறி'.
    இதையும் கொஞ்சம் பாருங்க.
    http://valaivesumvasavan.blogspot.com/2009/07/blog-post.html

    http://simpleblabla.blogspot.com/2009/07/blog-post.html

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!