டீக்குடிக்கிற கப்புல, சுனாமி வருமா?! என்னமோ சொல்றாங்களே?


சாரு-ஜெமோ அக்கப்போரைப்பற்றி எழுத ஆரம்பித்தால், தமிழ் வலைப்பதிவர்கள், கைவேலை அத்தனையையும் விட்டு விட்டு, கோதாவில் [அட, பின்னூட்டங்களைத் தாங்க சொல்றேன்] இறங்கி வந்து விடுகிறார்கள் என்று முந்தைய பதிவொன்றில் சொல்லியிருந்தேன், இல்லையா? படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலின்னு சொல்லிக்கிட்டு ஒருத்தர், சாருவைப்பத்தித் தொடர்ச்சியா ஒரு நாலு பதிவைப் போட்டார், அப்புறம் எந்த போதி மரத்தடியில ஞானம் கிடைச்சுதோ, அது தெரியல ஒருக்கா, இந்த போதிமரமாக் கூட இருக்கலாம்!, இவங்களைப் பத்திப் பேசறதே வேஸ்ட் அப்படீன்னு இப்பத் தெளிஞ்ச புத்திசாலி ஆகிட்டார். அதாச்சும், இப்பல்லாம் பதிவே எழுதறதில்லே!

உண்மையும் அது தாங்க!

இவங்க ரெண்டு பேருக்கும் நாம இத்தனை நாள் ஓசியிலேயே விளம்பரம் கொடுத்து, தட்டி, பானர், எல்லாம் வச்சு, ரசிகர் மன்ற ஷோ மாதிரி நடத்தி, நமக்குள்ளாரையே அடிச்சுகிட்டு, "தல, உன்ன மாதிரி வருமா"ன்னு ரொம்பவே ஃபீலிங்க்ஸ் ஆகி, படா பேஜாரா போனப்புறம், ப்ளீசிங் பௌடருக்குக் கிடைச்ச போதி மரம் எங்கேயிருக்குன்னு தேட ஆரம்பிப்போம்னு நெனச்சீங்கன்னா, நீங்க ஒரு கனவுலகத்துல இருக்கீங்க, யதார்த்தத்துக்கும் அதுக்கும் ரொம்பதூரம்னு தெரிஞ்சுக்குவீங்க!

அது ரொம்பவே பின்-நவீனத்துவம்! எழுத்துல எழுதித் தான் பாக்கலாம்! அப்பவும் ஒண்ணும் புரியாது! உனக்கே இது ஓவராத் தெரியலைன்னுட்டு இதைத் தண்டோராப் போட்டு ஒருத்தர் சொல்லியிருக்கிறார், பாருங்க!

என்னை பார்க்கும் போதெல்லாம்

மனதிற்குள் மழையடிக்கும்

என்பீர்களே

இப்போதும் அப்படித்தானா?

எட்டாவது திருமண நாள்

முடிந்ததும் மனைவி கேட்டாள்

இல்லையென்று உண்மையை சொன்னால்

புண்படுவாள்-என்று

“ஆமாம்என்று பொய் சொன்னேன்

இதில் எதாவது முரண் இருந்தால்

அதுமுன் நவினத்துவம்

இல்லையென்றால் ‘பின் நவினத்துவம்

புரியவில்லையென்றால்

சர்க்காரிசம்


புள்ளி விவரம் எல்லாம் ரெடியா இருக்கு, யாராச்சும் வேணும்னு கேளுங்களேன் ப்ளீஸ் ப்ளீஸ்னு கெஞ்சியும் கூட, யாரும் கேக்கலை. வேலியில மேயுற ஓணானை மேல எடுத்து விட்டுக்குவானேன், அப்புறம் குத்துதே குடையுதேன்னு கதறுவானேன் அப்படீங்கரதுல மக்கள் எல்லாரும் தெளிவா இருந்தாங்கன்னு தெரிஞ்சது.அது தவிர, ஏகப்பட்ட பிரபல பதிவர்கள் இதைப் பத்தித் தங்களுக்குள்ளாரையே அடிச்சுகிட்டப்ப, எக்கச்சக்கமாப் பின்னூட்டங்கள் போட்டுக் களைச்சுப் போய் இருந்த நேரத்தில, மக்களை அப்படி ஒரு கேள்வியக் கேட்டு பயமுறுத்தியிருக்க வேணாம் தான்!

பத்தாததுக்கு, ஒருத்தருக்கொருத்தர் தீய வச்சுக்கிறது, ஆப்பு வச்சுக்கிறதுன்னு பதிவுலகமே இந்த மூணு வாரமா, கதி கலங்கிப்போயிருக்கும் இந்த நேரத்துல போய், நம்ம காப்டன் விஜயகாந்த் ரேஞ்சுக்குப் புள்ளி விவரம்லாம் அவுத்து விட்டாக்க, ஏற்கெனெவே நொந்து நூடுல்சாகிக் கிடக்கிற பதிவுலகம் தாங்காதுன்னும் புரிஞ்சது.

அதுக்காகத் திரட்டின புள்ளி விவரங்களையெல்லாம் என்ன செய்யுறது? கொஞ்சம் கொஞ்சமா கொடுக்கலாமா? இல்ல, பதிவர்கள், படிக்கிறவர்கள் எல்லாம் பிழைத்துப் போகட்டும் என்று விட்டு விடலாமா? இந்தக் கேள்வி என்னைக் குடைஞ்சுகிட்டே இருக்கு. குடைச்சல் ஓவராப் போனா, அப்ப இந்தப் புள்ளி விபரமெல்லாம் அவுத்து உடலாம்.

இப்பல்லாம் பாத்தீங்கன்னா, மக்கள் ரொம்பத் தெளிவாத்தான் இருக்காங்க! போன வருஷமெல்லாம் சாரு-ஜெமோ அப்படீன்னு சொல்ல ஆரம்பிச்சாலே, கூட்டமா வந்து குவிஞ்சுகிட்டு இருந்தவுங்க, பின்னூட்டமாக் கும்மிஎடுத்துக் கிட்டிருந்தவுங்க, ஏன் சாரு-ஜெமோவுக்கு மட்டும் தான் இலக்கியத்தரமாச் சண்டை போடத் தெரியுமா? நாங்களும் கூட இந்த அழுவாச்சி ஆட்டத்தை, அவங்களை விட ரொம்ப நல்லாவே ஆடுவோமேன்னு மூணு நாலு வாரமா தமிழ்ப் பதிவுலகில் சுனாமி ஒரு டீக் கப்புல ஒரு ஓரத்தில வந்து ஒரு கலக்குக் கலக்கிச்சு பாருங்க, என்னை மாதிரிக் கொஞ்சம் வயசாளிங்கல்லாம், பயந்தே போனோங்க! பூவுக்குள்ள பூகம்பம் பாத்தாச்சு, பூ ஒண்ணு புயலானதை, விஜயசாந்தி நடிச்சும் பாத்தாச்சு, இப்ப, ஒரு பதிவுலக டீக் கப்புல சுனாமி வந்தது தான் ரொம்ப இம்சையாப் போச்சுதுங்க!

பாத்துப்புட்டு, பதிவுலகமே அமைதியா இருக்கும் போது நாமளும் கொஞ்சம் அமைதியா இருப்போம்னு இருந்தாக்க , இவரு வேற சீரியாசாத் தமாஷ் பண்ணிக்கிட்டிருக்காரு, இப்பத்தான் கொஞ்சம் உடம்பு தேவலையாகி, மறுபடி கதை, கவிதை, பதிவுன்னு ஆரம்பிச்சிருக்காரு..இப்பப்போய் ..........இப்படியெல்லாமா?

"எதிர்வரும் 22ஆம் திகதி சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்பு"


கோப்பைக்கு உள்ளாரயா, இல்லையாங்கிறதை 23 ஆம் தேதியன்னிக்கிப் பாக்கலாங்களா! அதுக்கு முன்னாடி, இங்கயும் பார்த்து விடுங்கள்!

வர்ர்ட்டா:-))

5 comments:

  1. அண்ணே , நீங்க மதுரை யா ?

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி, திரு. சுந்தர். நானும் மதுரை தான். காமராஜரை உங்கள் பதிவில் நினைவு கூர்ந்த்தையும் படித்துப் பார்த்தேன். மனதுக்கு நிறைவாக இருந்தது.

    ReplyDelete
  3. உங்களோட about me நல்லாயிருக்கு...
    எவ்வளவு நாளா communista இருந்து waste பன்னிங்க?(2ண்டு சுழியா 3னு சுழியா ஒரே doubt)

    ReplyDelete
  4. /பன்னிங்க/
    ஜார்ஜ் ஆர்வெல் எழுதின அனிமல் ஃபார்ம் படிச்சதில்லையா?

    "All pigs are equal. Some pigs are more equal than others" நீங்க ரெண்டு சுழி போட்டீங்கன்னாலும், மூணு சுழி போட்டாலும், போகட்டும் அந்தப் புண்ணியம்........களுக்கே!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!