எந்த ஒரு உண்மையும் பேசுவதில் இல்லை, வாழ்ந்து காட்டுவதில் தான் இருக்கிறது!


யமுனைத் துறைவன் என்றும் யாமுனாசார்யர் என்றும் ஆளவந்தார் என்றும் கொண்டாடப் படும் உன்னதமான வைணவ ஆசிரியனின் பிறந்த திருநாள் இன்று!

ஏற்கெனெவே, ஆளவந்தாரைப் பற்றி, மூன்று பகுதிகளாக, இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம். மறுபடியும் ஒருமுறை படிப்பது--- வாழ்க்கை என்பது மனம் போன போக்கில் வாழ்வது அல்ல, கண்டதே காட்சி-கொண்டதே கோலம் என்று மயங்கிக் கிடப்பதும் அல்ல. இறைவன் ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காகவே, காரணத்தோடு தான் இந்த வாழ்க்கையை நமக்கு வழங்கியிருக்கிறான். ஒன்றை அறிவது என்பது அறிவதோடு மட்டும் நின்றுவிட்டால் பயனில்லையே? அறிவதற்கும், ஒரு காரண காரியம் இருக்க வேண்டும் அல்லவா?

அதைப் பற்றிச் சிந்திக்கவும், முன்னவர்கள் காட்டித் தந்த பாதையை அறிந்துகொள்ளவும் இந்த மூன்று பகுதிகளும் உதவியாக இருக்கும் என்றே நம்புகிறேன்.

எந்த ஒரு உண்மையும் பேசுவதில் இல்லை, வாழ்ந்து காட்டுவதில் தான் இருக்கிறது!

பகுதி ஒன்று- ஒரு காலிப் பாத்திரத்தின் கதை!


பகுதி இரண்டு-உன் தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க முடியாது!


பகுதி மூன்று-வைணவம் வெறும் பேச்சில் இல்லை, வாழ்ந்து காட்டுவதில் தான் இருக்கிறது!

உங்களுடைய கருத்தையும், கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாம் அல்லவா?!

2 comments:

  1. பிள்ளையை பெற்ற தாய்மார் பலபேர் மலடியாகத்தான் உள்ளனர்.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி.
    நன்மக்களைப் பெறாதவள், பெற்றுமே மலடி தான்! இது வெறும் வாதத்திற்காகச் சொல்லப் படுவது மட்டுமே அல்ல. ஒரு நல்ல சமுதாயத்தைச் உருவாக்க நன்மக்கள் வேண்டும் என்பதற்காகச் சொல்லப் படுவது

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!