சண்டேன்னா மூணு! கொஞ்சம் லொள்ளு! கொஞ்சம் மாஜிக்! கொஞ்சம் உடான்ஸ்!

வாங்க! இன்னும் எத்தனை தரம் தான் நித்யானந்தாவோட சேட்டையையே தேடிப் பிடிச்சுப் பாப்பீங்க..? சூரியக் குடும்ப  டிவி அடுத்த சேட்டையை ஆரம்பிக்கிற வரைக்கும் பொழுது போக வேணாமா?

கொஞ்சம் வித்தியாசம் வேணுமில்லே! அதான், மொதல்ல கொஞ்சம் லொள்ளு!


எத்தனையோ லொள்ளு சபா, லொடுக்குப் பாண்டியைப்  பாத்துப் புட்டோம்! இதையும் பாக்க மாட்டோமா என்ன!

******
நித்யானந்தா, கேன்சர் இன்னும் என்னென்னமோ வியாதியை எல்லாம் குணப்படுத்தினதா சாரு நிவேதிதா ஏதோ  கொஞ்சமா எழுதினதுக்கே வால் பையன் அருண் முதலானோர் காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சினாங்க! 

வருஷா வருஷம் எக்சிபிஷன் மாதிரி, ஒவ்வொரு ஊரா டேரா போட்டு, ஏசு என்னோடு வாக்கிங் வந்தார், என்னோடு சாப்பிட்டு ஏப்பம்  விட்டார், வியாதியை சொஸ்தமாக்கினார்னு ஒரு கும்பல்னு இல்லை, எக்கச் சக்கமா ஒரு கூட்டம் அலைவது  எவருக்குமே தெரியவில்லை! 

தெரிந்தாலுமே அதையும் தொட்டு எழுத என்ன தடுக்கிறது என்பது இன்னொரு ஒன்பது ரூபாய் நோட்டு  மாதிரியான கேள்வி தான்! நிச்சயமாகப் பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவின் கருணை மீதான பயம் மட்டும் இல்லை! பாதாளம் வரைக்கும் பாயும் என்பார்களே, அதுவாகத் தான் இருக்க வேண்டும்!

சானல், பத்திரிக்கை நடத்தறவங்களுக்கு விளம்பரம், வேறு விதமான கைமாறு  எல்லாம் வேணும், அதனால கண்டுக்க மாட்டாங்க! கொஞ்சம் கவனிக்கிற விதத்துல கவனிச்சா அப்பா பேரு மட்டுமல்ல, ஆட்டுக் குட்டியோட பேர் கூட மவுன்ட் ரோடுக்கு வைக்கலாம்! மாவட்டத்துக்கும் வைக்கலாம்!

தமிழ்நாட்டில் பெருகிவரும் ஜெப கோபுரங்கள், ஜெபத் தோட்டங்கள், ஜெப உதவிக் கூட்டங்களில் நடப்பது  நித்யானந்தாவை விட மிக அசிங்கமானது!  நித்யானந்தா இங்கே  மாட்டின மாதிரியே, போப் ஆண்டவருடைய அந்தரங்க ஊழியம் செய்பவர்களுக்கு, ஆண்களை ஓரினச் சேர்க்கைக்கு  ஏற்பாடு செய்து கொடுத்த ஒரு அந்தரங்க ஊழியர் மாட்டிக் கொண்டிருக்கிறார்! இங்கேயும் சில  பாதிரிமார்களின் சேட்டை ஒன்றும் குறைந்தது இல்லை!

ஒரு சிலர் செய்யும் தவறுக்காக, ஒட்டு மொத்தத்தையுமே குறை சொல்கிற போக்கு எவ்வளவு முட்டாள்தனமானது என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன்! தவிர, நிறுவனப் படுத்தப் படும்போது, இந்தமாதிரியான கோளாறுகள் எழுவதும் இயற்கை. ஒரு நிறுவனம், அல்லது ஸ்தாபனம் என்றால் என்ன என்ற கேள்விக்கு விடை தேடி இந்தப் பதிவில் ஏற்கெனெவே கொஞ்சம் பார்த்திருக்கிறோம். அதில் இருந்து கொஞ்சம்........


மதங்களை பரப்புகிறவர்களுக்கு , இந்த உள்ளார்ந்த பார்வை , மாற்றம் , முயற்சி எதுவும் தேவை இல்லை . அவர்களுக்குத் தேவை , ஒரு செம்மறி ஆட்டுக் கூட்டம், தன்னுடைய சொந்த முயற்சி எதுவும் இன்றி யாரோ ஒரு மீட்பர் வந்து ரட்சிப்பார் என்று சொன்னால் , அதை அப்படியே கிளிப்பிள்ளை போலச் சொல்லிக்கொண்டிருக்கும் ஒருகூட்டம் .

" வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே! என்னிடம் வாருங்கள், நானே இளைப்பாறுதலைக் கொடுப்பேன்!"  இப்படிச் சுவர்களில் பெரிதாக எழுதி வைத்திருப்பதைப் படித்திருப்பீர்கள் இல்லையா?

மாற்றம் என்பது கொஞ்சம் பயமுறுத்துகிற விஷயம் . இது சாக்கடை தான் , ஆனாலும் இதை சுத்தம் செய்வது என்னால் ஆகாது , அதனால் இப்படியே இருந்து விட்டுப் போகிறேன், நாற்றம் தாங்கமுடிய வில்லை தான், ஆனாலும் எனக்குப் பழகிப்போய்விட்டது, இருந்து விட்டுப்போகட்டுமே, மாற்றம் என்பது எப்படியிருக்குமோ, நமக்கேன் வம்பு என்றிருக்கும் மனிதர்களை மதமான பேய் பிடித்து ஆட்டுவதில் வியப்பொன்றுமில்லை.

மாறுவதைவிட, அடுத்தவன் சொல்லுக்குத் தலையாட்டிக் கொண்டிருப்பது சுலபம் இல்லையா?

பரலோக சாம்ராஜ்ஜியம் கிடைத்தால் நல்லது தான், ஆனால் அதற்காக நான் ஏன் சிரமப்படவேண்டும்?


ஊழியக்காரரிடம் , தசமபாகம் [டென்பெர் சென்ட் ] கொடுத்து விட்டால், அவர் நமக்காக ஜெபம் செய்வார், மீட்பரிடம் நம்மை ரட்சிக்கும்படி மன்றாடுவார், சிபாரிசு செய்வார்! சங்கீதம் பாடுவார், மேடையில் ஆடுவார்! அது போதாதா? நான் வேறு எதற்காக, கஷ்டப்பட வேண்டும்?

மதங்கள் வணிக நிறுவனங்களாகிப்போனதற்கு ஊழியம் என்றபெயரில்காணிக்கையாகப் பெறுகிற டென் பெர் சென்ட் ப்படி ஒரு காரணமோ, அதைவிடப் பெரிய காரணம் வழிபாடு என்ற பெயரில், நான் ஒன்றுமே செய்ய வேண்டாம், முயற்சி செய்ய வேண்டாம், கஷ்டப்பட்டு என்னிடம் இருக்கும் மிருகத்தன்மையை மாற்றிக் கொள்ள வேண்டாம் என்றிருக்கிற சோம்பல், மாறுவதற்குத் தயாராக இல்லாத தன்மை, மாறவேண்டுமே என்ற நினைப்பே பயம் -இதுதான்

இதுதான் மிகப்பெரிய கோளாறு!



நாம கொஞ்சம் மாஜிக் பாக்கலாம்! இந்த மாஜிக் பாக்கும்போது கொஞ்சம் ஆச்சரியமா இருக்கும்!  மாஜிக்னு நாம நினைக்கிறது, திறமையான ப்ராக்டிஸ் தான்! சித்திரமும் கைப் பழக்கம்னு சொல்வாங்களே, அது தான்! வேற மந்திரம், மாங்காய், ஊறுகாய், தொக்கு எதுவும் இல்லை!

******
யூட்யூப் வீடியோ ஒன்று இங்கே! ஒரு சினிமா காட்சிதான்! நம்பினாலும் சரி, உடான்ஸ் என்றாலும் சரி, கொஞ்சம் சுவாரசியமாகத் தான் இருக்கிறது! 


இங்கே இந்தப் பக்கங்களில், அதை ஒட்டிய கொஞ்சம் விசித்திரமான செய்தி, படம் ஒன்றையும் பார்க்கலாம்!



 

8 comments:

  1. சுறாமீனா நான் எதிர்பார்க்கவே இல்லை :)))

    ReplyDelete
  2. //நித்யானந்தா, கேன்சர் இன்னும் என்னென்னமோ வியாதியை எல்லாம் குணப்படுத்தினதா சாரு நிவேதிதா ஏதோ கொஞ்சமா எழுதினதுக்கே வால் பையன் அருண் முதலானோர் காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சினாங்க!

    வருஷா வருஷம் எக்சிபிஷன் மாதிரி, ஒவ்வொரு ஊரா டேரா போட்டு, ஏசு என்னோடு வாக்கிங் வந்தார், என்னோடு சாப்பிட்டு ஏப்பம் விட்டார், வியாதியை சொஸ்தமாக்கினார்னு ஒரு கும்பல்னு இல்லை, எக்கச் சக்கமா ஒரு கூட்டம் அலைவது எவருக்குமே தெரியவில்லை!

    தெரிந்தாலுமே அதையும் தொட்டு எழுத என்ன தடுக்கிறது என்பது இன்னொரு ஒன்பது ரூபாய் நோட்டு மாதிரியான கேள்வி தான்! நிச்சயமாகப் பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவின் கருணை மீதான பயம் மட்டும் இல்லை! பாதாளம் வரைக்கும் பாயும் என்பார்களே, அதுவாகத் தான் இருக்க வேண்டும்!//

    ரெண்டு பேரும் சேந்துதானேத் திருட வந்தோம்; அவர விட்டுட்டு என்ன மட்டும் ஏன் புடிக்கிறீங்க அப்படின்னு கேக்கரத விடுங்க பாஸு. இதக் கொஞ்சம் பாருங்க http://allinall2010.blogspot.com/2010/02/blog-post.html

    ReplyDelete
  3. MEGA SHART வீடியோ அருமை...

    ReplyDelete
  4. கும்மி!

    நல்லாவே கும்மி அடிக்கறீங்க! ஆனால் இது கும்மியடிக்கிற இடமில்லை!

    அவனை விட்டு விட்டு என்னை மட்டுமே ஏன் பிடிக்கிறீங்க என்ற கேள்வி இங்கே இல்லை. மிகத் தெளிவாகவே இவனை ஏன் பிடிக்கவில்லை என்பதற்கான காரணமும் சொல்லப் பட்டிருக்கிறது!

    தவிர ஆல் இன் ஆல் சைக்கிள் பன்க்சர் ஓட்டுகிற கடை நீங்கள் அறிமுகப் படுத்துவதற்கு முன்னாலேயே எனக்குத் தெரியும்!

    கடை தெரிந்தாலும்,பன்க்சர் ஒட்டிக் கொள்கிற தேவை உள்ளவர்கள் அல்லவா கவலைப் பட வேண்டும்!

    ReplyDelete
  5. ட்ரீமர்!கனவு காண்பவன்! அழகாக இருக்கிறது, கனவு!

    கனவு காண்பது நல்லது தான்! கனவு கண்டு கொண்டிருக்கும்போது இடுப்பில் உள்ள அரைத் துணியையும் யாராவது களவாடிக் கொண்டு போகாமல் கவனமாக இருங்கள்!

    ReplyDelete
  6. but in christian community they strongly beleving. they afraid to comment also.

    before some years back-i asked one guy in softly. after that,he not talking with me.

    ReplyDelete
  7. வாருங்கள் பாலு!

    ஆப்ரஹாமைட் மதங்கள் மூன்றிலுமே சகிப்புத் தன்மையோ, விமரிசனங்களை எதிர்கொள்வதோ எப்போதுமே இருந்ததில்லை!

    அந்த நபர் விலகிப் போனதில் ஆச்சரியமொன்றுமில்லை!

    ReplyDelete
  8. அந்த நாய் படத்தை ரொம்ப ரசித்தேன். மேஜிக் க்கும்தான்...நன்றி.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!