காதல்! காமம்! சார்கோசி! சபாஷ்! சரியான போட்டி!

எல்லோர் கண்ணும் நம்ம மேல தான்! என்ன பேசறாங்க, எப்படிப் பாக்கறாங்கன்னு தெரியலையே!

டிஸ்கி நம்பர் ஒண்ணு! 21/03/2010 & 31/03/2010
 
சப்பை மாட்டர் தான்! படமும் சப்பை தான்!  பத்து நாளா என்னமோ எக்சிபிஷன் பாக்க வர்ற மாதிரி 250 பேருக்குக் குறையாம இங்கே வர்றவங்களைப் பாத்து,
இதுக்கே இவ்வளவு பார்வைகள், ஆதரவா என்று கொஞ்சம் பயமாத் தான் இருக்கு மக்களே!
 
இதைக் கடந்து இங்கேயும் போய்ப் பாருங்க! சப்பை மாட்டருக்கா இப்படி அலைந்தோமுன்னு   நமக்கே தோணும்!  

தோணனும்!
 
பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி தேர்தலில் ஜெயித்து, அதிபரானவுடன் செய்த முதல் பரபரப்பான காரியம், தன்னுடைய இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, சந்தித்து மூன்றே மாதங்கள் ஆகியிருந்த, மாடல் அழகியும் பாப் இசைப் பாடகியுமான கார்லா ப்ரூனியைத் திருமணம் செய்து கொண்டது தான்

அந்தத் திருமணம், அவசர  அவசரமாக ஏன் செய்துகொள்ள வேண்டிவந்தது என்பதை ப்ரூனி ஸ்கை நியூஸ் என்ற பத்திரிகைக்குத் தனிப்பட்ட பெட்டியாகக் கொடுத்த செய்தி வீடியோ இங்கே!

சார்க்கோசியும், ப்ரூனியும் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டுப் போகட்டும்! 

அதே மாதிரி நித்யானந்தா-ரஞ்சிதா என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும், இவையெல்லாம் தனிநபர் பிரச்சினை. இதைப் பெரிதுபடுத்துவது அல்லது புறக்கணிப்பது இப்படி நீங்கள் என்ன செய்தாலும் பூமிப் பந்து சுழல்வது நின்றுவிடாது!
ஆனால்
காங்கிரஸ்காரர்கள் செய்யும் அய்யம்பேட்டை வேலை..?

மக்கள் அவையிலும், மாநிலங்கள்  அவையிலும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதவை எதிர்த்து ஏக ரகளை, இன்றைக்கு ஆதரித்துக் காங்கிரஸ் காரர்கள் அமளி என்று பரபரப்பாக ரீல் ஓட்டிக் கொண்டிருக்கும் போதே, சத்தமில்லாமல், விவாதமே இல்லாமல், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் அணு மின் நிலையம் நிறுவி, ஏதாவது விபரீதம் ஏற்பட்டால், அதன் சுமையை இந்திய மக்களே தாங்குவார்கள் என்று வகை செய்யும் அயோக்கியத்தனமான மசோதா ஒன்றும் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறதே........!

அது ......

உங்களையும், என்னையும்  மற்றுமுள்ள அத்தனை பேரையும்  பாதிக்கக் கூடிய விஷயம். பொருளாதார ரீதியாக மட்டும் இதைப் பார்க்க முடியாது! நாகசாகி, ஹிரோஷிமாவில் வீசப் பட்ட அணுகுண்டுகளின் கதிர் வீச்சு அபாயம் அறுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னாலும், இன்னமும் குறையவில்லை.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், போபால் விஷவாயுக் கசிவினால் ஏற்பட்ட சீரழிவே இன்னமும் சரி செய்யப்படவில்லை. பாதிக்கப் பட்ட ஜனங்களுக்கு நிவாரணம் முறையாகப் போய்ச் சேரவுமில்லை. யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் ஆண்டேர்சனை இங்கே கொண்டுவந்து தண்டிக்க காங்கிரஸ் கட்சிக்கும் சரி, இந்திய அரசுக்கும் சரி  முதுகெலும்பு இல்லை.

கொடைக்கானலில், ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் பாதரசக் கழிவுகளைக் கொட்டி சுற்றுச் சூழலை நஞ்சாக்கி வைத்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை இல்லை என்பதோடு, கழிவுகளை அகற்றும் பொறுப்பைக் கூட அவர்கள் முறையாகச் செய்யவில்லை. பாதரச நஞ்சு அப்படியே இருக்கும் சூழலில், அந்த நிறுவனத்தின் மீது அரசு தனது நடவடிக்கைகளைத் தளர்த்தியிருக்கிறது.

கரூர், ஈரோடு, திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகளில் இருந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவுகள் பிரச்சினை வரை எல்லாமே இங்கே அமுக்கியே வாசிக்கப் படுகிறது.  அமுக்க உதவுகிறவர்கள் பை வேண்டுமானால் நிரம்பலாம், அப்பாவி ஜனங்களுடைய வாழ்க்கை......?

ஊமைக்கோட்டான் மாதிரி இருந்து கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் என்ன நிர்பந்தத்தின் கீழ் அமெரிக்காவோடு அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டாரோ, தெரியாது! தவறு நடந்தால்,நட்ட ஈடு என்ற பிரச்சினையில், அமெரிக்க நிறுவனங்களே, அணு உலைகளை நிறுவுவதில் அக்கறை கொள்ளாத நிலையில், விட்டது சனியன் என்று கைகழுவ வேண்டிய விஷயத்தை, நட்டத்தையும், அழிவையும் எங்கள் ஜனங்களின் தலை மேல் ஏற்றுக் கொள்கிறோம் என்று ஒரு சட்ட மசோதாவை சத்தமே இல்லாமல் மக்களவையில் முன் வைத்தாயிற்று!
ஏன்?

காகிதப் பூ மணக்காது! காங்கிரஸ்காரனுக்கு நேர்மை சுட்டுப் போட்டாலும் வராது!

இலவசங்களில், கவர்ச்சிகரமான வாக்குறுதிகளில் ஏமாந்துபோகிற இந்தியனே! எச்சரிக்கை!


08/03/2010 தேதியிட்ட  ஹிந்து நாளிதழ் -திரு சித்தார்த் வரதராஜன் கட்டுரையை முழுதாகப் படிக்க 


In the event of damages from an accident exceeding 300 million SDRs (approximately $500 million) which India must provide for in its domestic law, the CSC allows victims to draw up to $100-120 million (approximately Rs. 500 crore) from an international fund to which all countries party to the CSC contribute according to a prescribed formula. Once the CSC has a large enough base of adherents — today only four countries have acceded to the convention — the victims could potentially draw up to $500 million from the international fund if the accident were deadly enough.

Although the benefits of the CSC funding cushion are not inconsiderable, the Indian law lets operators (and their suppliers) off the hook by not holding them liable to the extent envisaged by the CSC itself.



 

11 comments:

  1. i happy you joined important matter in the end

    ReplyDelete
  2. //அம்மணி 1993 இல் நிர்வாணமாகப் போஸ் கொடுத்த புகைப் படங்களை கிறிஸ்டி என்ற ஏல நிறுவனம், ஏலத்தில் விட்டது. இங்கே!//

    அம்மணிக்கு ரொம்ப தாராள மனசு சார்!

    ReplyDelete
  3. // அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் அணு மின் நிலையம் நிறுவி, ஏதாவது விபரீதம் ஏற்பட்டால், அதன் சுமையை இந்திய மக்களே தாங்குவார்கள் என்று வகை செய்யும் அயோக்கியத்தனமான மசோதா ஒன்றும் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறதே........!//

    இதெல்லாம் ஒன்னாநம்பர் அயோக்கியதனம்!

    காங்கிரஸ் அமெரிக்காவுக்கு மாமா வேலை பார்ப்பது அப்பட்டமாக இபொழுது தெரிகிறது!
    ஏன் எதிர்கட்சிகள் எந்த குரலும் எழுப்பவில்லை!?

    ReplyDelete
  4. இந்த பதிவில் சார்கோசிக்கு என்ன வேலை என்று தான் தெரியவில்லை!

    இந்திய விசயத்தை தனியாக சொல்லியிருக்கலாமே!
    ஏன் இழுக்கனும்!

    ReplyDelete
  5. வால்ஸ்!

    படம் போட்டாப் பாக்கறதுக்குன்னே உங்களை மாதிரிப் பத்துப் பேர் கூட வருவாங்கன்னுதான்!

    இனிமே கோனார் நோட்ஸ் தனி வலைப் பதிவாப போட்டுடலாம்னு இருக்கேன்!

    சர்கோசி எங்க வந்தாரு, எதுக்கு வந்தாருன்னு, பதிவிலேயே
    சரி! சரி! முக்கியமான விஷயத்துக்கு வருவோம்! என்று கொட்டை எழுத்தில் சொன்னதுக்குக் கீழேயே விலாவரியாச் சொல்லியாச்சே!

    படிக்காமலேயே பின்னூட்டம் தட்டுகிற வேலையைக் குறைந்தபட்சம் இந்தப் பக்கங்களிலாவது குறைத்துக் கொள்ளலாமே வால்ஸ்!

    ReplyDelete
  6. பாலு சார்!

    காகிதப் பூ மணக்காது! காங்கிரஸ் காரனுக்கு நேர்மை சுட்டுப் போட்டாலும் வராது!

    இதுதான் மாட்டர்!

    இந்த விஷயத்தை நேரடியாக ஒரே வரியில் சொன்னால் எத்தனை பேர் உடனே ஒத்துக் கொள்ளப் போகிறார்கள்?

    அங்கே சார்க்கோசி தன்னுடைய ஏலாமையைத் திசைதிருப்புவதற்கு, யுவான்னோவுடன் உறவு என்று கிளப்பி விட்டிருப்பதாக டெலிகிராப் பத்திரிக்கை ப்ளாகில் படித்தேன்!

    இங்கே அணு உலைகளில் விபத்து நஷ்ட ஈட்டை இந்திய ஜனங்களுடைய தலையிலேயே கட்ட ஒரு மசோதாவைக் காங்கிரஸ் அரசு கொண்டு வந்திருப்பதை நேற்றே தினமணி தலையங்கத்தை வைத்துச் சொன்னேன் இல்லையா?

    அதையே ஹிந்து நாளிதழிலும் வந்த செய்தியை வைத்து இன்றைக்குப் பதிவாக....!

    அம்புட்டுத்தேன்!

    ReplyDelete
  7. //படிக்காமலேயே பின்னூட்டம் தட்டுகிற வேலையைக் குறைந்தபட்சம் இந்தப் பக்கங்களிலாவது குறைத்துக் கொள்ளலாமே வால்ஸ்!//



    சர்கோசியிலிருந்து அணூஉலை வரை தனியாக பின்னுட்டம் இட்டிருக்கேன்!
    இதுக்கு மேல நான் படிச்சிட்டு போட்டேன் என்று அரவிந்தர் ஆசிரமத்திலிருந்து யாரையாவது வரச்சொல்லி தான் உங்களை நம்ப வைக்கனும்!

    முக்கியமான விசயத்துக்கு போவோம்னா அதுவரை சொன்னது முக்கியமில்லாத விசயம்னு ஊர்ஜிதம் ஆகுது!, அப்போ நீங்க எப்பவுமே தேவையில்லாத விசயத்தையும் சேர்த்து எழுதுவிங்கன்னு நீங்களே ஒத்துகிறிங்க!

    இதுல காங்கிரஸ் ஆதரவாளர்களோட அரசியல்நிலைபாடுகள் வேறு காமன்மேன்களுக்கு எதிரா இருக்கும், அவர்களுக்கு, நமக்கு எது முக்கியமா படுதோ அது தேவையில்லாத விசயம்!

    ஆக மொத்தம் பொழுது போனச்சரின்னு தானே எல்லா ப்ளாக்கும் இருக்கு!

    ReplyDelete
  8. //அங்கே சார்க்கோசி தன்னுடைய ஏலாமையைத் திசைதிருப்புவதற்கு, யுவான்னோவுடன் உறவு என்று கிளப்பி விட்டிருப்பதாக டெலிகிராப் பத்திரிக்கை ப்ளாகில் படித்தேன்!//

    டெலிகிராப் நம்மூர் தினமலர் மாதிரி கூட இருக்கலாம்! அதையெல்லாமா நம்பிகிட்டு உதாரணமா எடுத்துக்குவாங்க!

    ReplyDelete
  9. பொழுதுபோக்குவதற்காக என்று பதிவுகள் எழுத இனிமேல் தான் கற்றுக் கொள்ளவேண்டும்!

    பொழுதுபோக்குவதற்கு எனக்குப் புத்தகங்கள், வாசிப்பு இருக்கிறது! பதிவுகள் அவசியமே இல்லை.

    ReplyDelete
  10. // ஊமைக்கோட்டான் மாதிரி இருந்து கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் என்ன நிர்பந்தத்தின் கீழ் அமெரிக்காவோடு அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டாரோ, தெரியாது! தவறு நடந்தால்,நட்ட ஈடு என்ற பிரச்சினையில், அமெரிக்க நிறுவனங்களே, அணு உலைகளை நிறுவுவதில் அக்கறை கொள்ளாத நிலையில், விட்டது //

    இதைத்தான் நான் என் பின்னூட்டத்தில் விளக்கி இருக்கின்றேன். கையெழுத்துப் போட வேண்டிய நிர்பந்தம் இதுதான் எரிபொருள் இல்லாமல் மூட வேண்டிய நிலைதான். வெறும் பத்து ஆண்டுகளுக்குத் தான் எரிபொருள் இருந்தது. அடுத்த ஜம்பது அண்டுகளுக்கு எரிபொருள் இப்போ வாங்கியாச்சு.

    ReplyDelete
  11. /அடுத்த ஜம்பது அண்டுகளுக்கு எரிபொருள் /

    எதை விலை கொடுத்து என்பது முக்கியம் இல்லையா?

    PL480 இன் கீழ் உணவு உதவி செய்கிறேன் என்று, அமேரிக்கா தரம் குறைந்த கோதுமை, அதில் பார்த்தீனியம் கலை விதிகளையும் சேர்த்து அனுப்பியது,

    சீமைக் கருவேல மரம் என்று நிலத்தடி நீர்மட்டத்தை உறிஞ்சிப் பாலையாக்கும் மரங்களையும் சேர்த்து அனுப்பியது!

    இந்திரா காந்தி உயிரோடு இருந்த நேரத்திலேயே, சிஐஏ, திடீரென்று இந்திர இறந்துவிட்டால், இந்தியா ஒன்றாகவே இருக்குமா, அல்லது தனித் தனித் துண்டுகளாகிப் போய் விடுமா என்று ஆய்வு நடத்தியது,

    குஜராத்தில், செயற்கையான ப்ளேக் நோயை பரவ விட்டது

    இப்படி நிறைய விஷயங்களையும் சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!