கண்டதைச் சொல்லுகிறேன்! நடக்கும் கதையைச் சொல்லுகிறேன்!



கூகிள் விவகாரத்தில், நண்பர் ரவி எழுப்பிய ஒரு கேள்விக்கு பதில் சொல்லாமல் இருப்பதை, இப்போது தான் கவனித்தேன்! கீழே அவர் தன்னுடைய பின்னூட்டத்தில் எழுப்பியிருந்த கேள்வி!

Do you think that there is US Government behind Google's action? It is losing around $4 billion because of pulling out of china immediately and much more in the times to come. Just because it is not able to become number one, there is absolutely no business sense for any one to throw away $4 billion. same way, I do not think US government can have such a big clout in Google's decision. If US government has such big clouts in many US companies, there will not be big US companies having their head quarters abroad to evade US tax laws. As for as action against Toyota is concerned, it is a revenge for the humiliation US automakers have been facing for more than 10 years. Last 10+ years, Toyota Camry has been the number 1 car. the number 2 has been Honda Accord. This is a big humiliation considering that the Car was invented in US! This is first time they are tasting the blood of Toyota and so they are going great guns behind them.

வருகிற செய்திகள், ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக அர்த்தப் படுத்திக் கொள்ளக் கூடியதாக இருந்ததில் உண்மை இன்னது தான் என்று போட்டு உடைத்து விட முடிவதில்லை. கூகிள், வெளியேறிவிடுவேன் என்று சென்ற ஜனவரி 12 ஆம்  தேதி அறிவித்த போதும் சரி, அதற்குப் பிறகு ஹிலாரி கிளிண்டன் இணைய சுதந்திரத்தைப் பற்றி உபதேசம் செய்த போது, அதைச் சீன அரசு முளையிலேயே கிள்ளிஎறிந்த செய்தியிலும் சரி அமெரிக்க நிறுவனங்கள், அமெரிக்க அரசோடு ஒருங்கிணைந்து செயல்படுகிற ஒரு சித்திரம் கிடைத்தது.அதில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் தேவைப் படுவதாக எனக்குத் தோன்றவில்லை. அமெரிக்க அரசை, அதன் முடிவுகளை, வங்கி, நிதித்துறைகளுக்கு அடுத்தபடியாக, அமெரிக்கத் தொழில் துறைதான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. 

அடுத்து, அமெரிக்க நிறுவனங்கள்  அமெரிக்க வரிச் சட்டங்களை ஏமாற்றுவதற்காகவே  வெளிநாடுகளில் தலைமையகங்களை வைத்திருப்பது! கேய்மன் தீவுகளில் இருந்து, துபாய் வரை வரி ஏமாற்றுகிறவர்களின் சொர்கங்கள் நிறைய உண்டு! முப்பதே ஆண்டுகளில் துபாய் கொழித்தது, எண்ணெய் விற்று அல்ல! தாவூத் இப்ராஹீம் மாதிரி நிழல் உலக தாதாக்கள்,  வரி ஏய்ப்புச் செய்கிறவர்கள், உல்லாசம் தேடி வருகிறவர்கள் இப்படிப் பலவிதமான நபர்களுக்கும் இடம் கொடுத்துத் தான், துபாய் காசு கொழிக்கும் பிரதேசமாக உருவானது,  பிழைப்புத் தேடி வந்தவர்களை அடிமைகளாக நடத்தி உருவாகி இருக்கும் நவீன அடிமை சாம்ராஜ்யம் என்பதும் இந்தப் பக்கங்களில் பொருளாதாரம் குறித்த பதிவுகளில் பேசியிருக்கிறோம்!

" we here highly resolve that these dead shall not have died in vain, that this nation under God shall have a new birth of freedom, and that government of the people, by the people, for the people shall not perish from the earth   கெட்டிஸ்பர்க் பிரகடனத்தில் ஆப்ரஹாம் லிங்கன் இப்படி முழங்கியதுபோல இப்போது  நடைமுறையில் இல்லை என்பது வரை சரிதானே ரவி! கூகிள் எடுத்த முடிவு, அதைத் தனிமைப் படுத்தியிருக்கிறது, மற்ற நிறுவனங்கள் அடக்கி வாசிக்கவே விரும்புகின்றன. அமெரிக்க அரசு சீனக் கரன்சியின் மதிப்பைக் கூட்ட வேண்டும் என்று நிர்பந்தம் செய்தததற்குப் பலன் கிடைத்திருக்கிறது. உடனடியாகச் செய்தால், அமெரிக்காவுக்குப் பணிந்தது போல ஆகிவிடும் என்று சீனா, பரிவர்த்தனை விகிதத்தைப் படிப் படியாக உயர்த்தச் சம்மதித்திருப்பதாகவும் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன. 

கார்டியன் நாளிதழில் இப்படி வந்திருக்கிறது: "This is pure dog-whistle politics. Western governments, especially in the US, engage in endless posturing about human rights, but rarely do anything to endanger their economic interests. But governments do care about restraints on trade and are minded to take action to deal with them. As General de Gaulle, paraphrasing Lord Palmerston, once observed: "Great nations do not have friends; they only have interests." By aligning their company's commercial interests with the wider economic interest of the US, the Google boys have begun to recruit powerful allies "

இப்போது நான் சொல்ல வருவது தெளிவாக இருக்கிறதா, திரு ரவி?


******
Christians in Britain are being treated with disrespect and apparent discrimination unacceptable in a civilised country, according to a group of senior bishops led by Lord Carey, former archbishop of Canterbury.
இப்படிப் புலம்புகிற அளவுக்குப் பாதிரிமார்களின் செய்கைகள், நடத்தை கொண்டுபோய் விட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதாக மட்டும் காணோம்! எல்லா இடங்களிலும் ஏசு என்னோடு வாக்கிங் வருகிறார் என்று ஊழியம் நடத்திக் காணிக்கைகளில் கோடி குவித்துவிட முடியுமா என்ன! காருண்யமே இல்லாமல் ஒரு கல்லூரி,  ஜெப ஊழிய கோபுரங்கள், விசுவாசமாகக் காசைக் கலெக்ட் செய்து கொட்டும் அடிமைகள் என்று ஊர் ஊராக பிரான்ச் ஆரம்பிக்க முடியுமா என்ன?

இங்கிலாந்துப் பாதிரி ஒருவர் புலம்புவதை இங்கே படிக்க!  

The church has been tone deaf and dumb on the scandal for so long that it’s shocking, but not surprising, to learn from The Times’s Laurie Goodstein that a group of deaf former students spent 30 years trying to get church leaders to pay attention.

“Victims give similar accounts of Father Murphy’s pulling down their pants and touching them in his office, his car, his mother’s country house, on class excursions and fund-raising trips and in their dormitory beds at night,” Goodstein wrote. “Arthur Budzinski said he was first molested when he went to Father Murphy for confession when he was about 12, in 1960.” இப்படி நடந்த அசிங்கத்தை சொல்லிவிட்டு அப்படியே சந்தடி சாக்கில் போப்புக்குப் பதிலாக நோப் வர வேண்டும் என்று, மகளிர் இட ஒதுக்கீட்டைக் கேட்கிறார் இந்தப் பெண்மணி!


நான் அப்படித்தான் இருப்பேன்! எவன் எப்படிச் சொன்னால் எனக்கென்ன என்று அலட்சியம் காட்டும் போப்! வீடியோவில் பார்க்க!


 
******

நண்பர் அமர்ஹிதூர், முந்தைய பதிவில், பாதிரி சில்மிஷங்களைப் பற்றித் தொட்டு எழுதியிருந்ததற்கு, எல்லாமே அழுகிப் போனது தான், இதில் அது என்ன இது என்ன என்கிற மாதிரி ஒரு கேள்வியை  எழுப்பியிருந்தார். பொதுவாக, ஒருவருடைய தனிப்பட்ட நம்பிக்கை அது எப்படிப்பட்டதாகவே இருந்தாலும், அதை விமரிசிக்கும் பழக்கம் எனக்கில்லை. ஆனால், ஒருவருடைய நம்பிக்கை அல்லது அவநம்பிக்கை, பொதுத் தளத்திற்கு வரும்போது அது விமரிசனத்திற்கு உட்பட்டது தான்! அது, இது, எதுவாக இருந்தாலுமே!

பதிவைக் கொஞ்சம் கவனித்துப் படித்தால், நித்தியானந்தாவாகட்டும், ஜெயேந்திரராகட்டும், அல்லது சில்மிஷங்கள், பாலியல் வக்கிரங்களில் ஈடுபடுகிற பாதிரிகள் எவரானாலும், தவறு செய்தவன் தண்டிக்கப் பட்டே ஆக வேண்டும் என்பதில் எனக்குக் கருத்து மாறுபாடே இல்லை. அதே நேரம், இப்படி சில சில்லறைகள் செய்யும் சில்மிஷங்களை வைத்து, ஒட்டு மொத்தமாக ஒரு நம்பிக்கை, அல்லது மரபுகளை பொத்தாம் பொதுவாகக் கையை நீட்டி விமரிசித்து விட முடியாது என்பதிலும், நான் தெளிவாகவே இருக்கிறேன்.

ஸ்ரீ அரவிந்தர், அன்னையிடம் எனக்கிருக்கும் ஈடுபாட்டைக் குறித்துக் கூட சில கேள்விகள், அது மட்டும் ஒழுங்கோ என்ற மாதிரியான கேள்விகள் வந்திருக்கின்றன. அங்கேயே கூட, என்னுடைய அனுபவங்கள் மட்டுமே என்னுடைய நம்பிக்கையைத் தீர்மானிக்கின்றன என்பதைச் சொல்லி இருக்கிறேன். என்னுடைய நம்பிக்கைகளை எவர் மீதும் திணித்ததில்லை, ஏற்றுக் கொண்டாகவேண்டும் என்று எதிர் பார்த்ததுமில்லை. எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக்  கொண்டுவிடுகிற பழக்கம்  இல்லை. அதே நேரம், கேள்விகள் என்பது உண்மையைத் தேடுவதற்காகவே, புரிந்து கொள்வதற்காகவே!

இங்கே தமிழகத்தில் என்ன நடந்தது?


நித்தியானந்தா -ரஞ்சிதா விவகாரம், என்னவோ வெடிகுண்டு  வந்து விழுந்து விட்ட மாதிரி, பூமிப் பந்து சுழல்வது அப்படியே நின்று போன மாதிரி, இங்கே ஊடகங்களால், திரும்பத் திரும்ப பதிவர்களால் பேசப் பட்டுக் கொண்டே இருந்தது. அடுத்தவன் படுக்கையை எட்டிப் பார்க்க விரும்புகிற அற்பத்தனத்தைத் தவிர, அந்த செய்தியால் வேறு எந்தப் பயனுமே இல்லை! நித்தியானந்தாவோடு  வேறு வகையான பேரம் படியாமல் போனதால், இந்த விவகாரம் கிளப்பப் பட்டது என்று ஒரு வலுவான சந்தேகம் விவரம் தெரிந்தவர்களால் எழுப்பப் படுகிறது. இன்னொரு ஊடகம், இதை ஸ்பெஷல் எடிஷனாகப் போட்டு, காசு பார்த்தது! பர்மா பஜாரில் ஐநூறு   முதல் எண்ணூறு ரூபாய் வரை  சிடிக்கள் விற்பனையான வேடிக்கையும் கூட  நடந்தது என்றால்....!
தொழில் முறை நீலப் படங்கள் கூட இந்த அளவுக்கு விலை போவதில்லை என்று நண்பர்கள் சொல்லக் கேட்கும்போது  இதை என்னவென்று சொல்வது?பரபரப்புச் செய்திகளாக வருவதன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிற போக்கை,  எங்கே போகிறோம் என்ற இதே  கேள்வியை முன்னால் புவனேஸ்வரி விவகாரம் இங்கே பற்றிக் கொண்டு எரிந்த தருணத்திலும் எழுப்பியிருக்கிறேன். அதை இங்கேயும் பார்க்கலாம்!

கிறித்தவ நிறுவனங்கள் தொண்டு என்ற பெயரில் நிறைய இடங்களில் சில்மிஷங்கள், பல சமயங்களில் சண்டியர்த்தனங்களோடு  கூடஇருந்ததுண்டு என்பதை நிறைய சம்பவங்களைத் தொகுத்து என்னால் தர முடியும். ஆனால், அதைத் தொட்டு எழுதுவது, மத நம்பிக்கைக்கு எதிரானது என்ற அளவில் மட்டுமே குறுகிப் போய்விடக் கூடியதாகிவிடுமே என்பதால், பொதுவாக எந்த ஒரு மத நம்பிக்கை, பழக்கங்களையும் தொட்டு எழுதுவதில்லை. சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ஆலிவர் ட்விஸ்ட் நாவலில் கூட இந்தக் கிறித்தவத் தொண்டு எப்படி இருந்தது  சட்டம் எப்படி இருந்தது என்பதை ஒரு இங்கே சாம்பிள் பார்க்க முடியும்.

 மத குருமார்கள் எப்படி ஒரு சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள், அதையே வேத வாக்காக எடுத்துக் கொள்பவர்கள் பலர்   என்ன மாதிரிக் கொடும் செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதை இந்த பக்கங்களின் பல பதிவுகளில் பார்க்க முடியும்! இதில் எந்த ஒரு ப்ரான்டையும் விட்டு விடவில்லை! 

இந்த தேசம், மக்கள்  எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? இந்தக் கேள்வியைக் கேட்டு, சரி செய்துகொள்ளாமல் போனால் என்னவாகப் போகிறோம் என்பதை எந்த அருள் வாக்குச் சித்தர்களிடம்,  ஜெப ஊழியம்  செய்து அற்புதங்களை என்னவோ நாயர் கடை டீ போல வியாபாரம் செய்து கொண்டு இருப்பவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.

எங்கே போகிறோம்? இந்தக் கேள்வி வாழ்க்கையில், ஒவ்வொரு தருணத்திலும் கேட்டுக் கொள்ளப்பட வேண்டியது, பயணம் செய்யும் பாதை சரிதானா என்பதில்  .கவனமாக இருக்க வேண்டியது என்பதைத் தவிர வேறு இதற்கு மேலும் என்ன சொல்ல முடியும்?



 

3 comments:

  1. yes Sir.. it is clear now..

    a great insight..

    ReplyDelete
  2. WE ARE WAITING TO GOOD CHANGES.

    BUT PRACTICALLY - ITS GOING ON WORST.

    WHAT TO DO ;

    ANGERY MENS WILL SHOW OR TURN AGAINST GOVT / CORRUPTIONS IN WRONG WAY.

    THATTIME ALSO WE ARE ONLY GOING TO SUFFER.

    ReplyDelete
  3. ஊடகங்கள் நித்தியானந்தா விசயத்தில் பணம் சம்பாதிக்கும் நோக்கில்தான் நடந்து கொண்டன. இப்போதுள்ள ஊடகங்களுக்கு சமுதாய அக்கறையைவிட பணம் சம்பாதிக்கும் அக்கறைதான் அதிகம்.
    இந்தியாவில் உள்ள ஒரு சில ஊடகங்களை தவிர மற்ற அனைத்துமே சமுதாய அக்கறை அற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள். The Hindu , NDTV போன்ற ஊடகங்கள் கூட பணம் சம்பாதிப்பதையே குறிகோளாக கொண்டுள்ள நிலையில், sun TV யும் , நக்கீரனும் இவ்வாறு செய்கிறார்கள் என்றால் ஆச்சரியமில்லை.

    நித்தியானந்தா போல் உள்ள சாமியார்களாவது சேட்டை செய்யாமல் இருந்தால், மக்களும் ஒழுக்கமாக இருப்பார்கள். " சாமியாரே இப்படி தப்பு செய்யத்துல நாம செஞ்சா என்ன ? " என்று மக்கள் நினைத்தால் ?

    சாமியார்களை ஆன்மீக வழிகாட்டிகளாக ஏற்றுக்கொள்வது அவரவர் விருப்பம். ஏன் ? நானும் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவு கட்டுரைகளை படித்துக்கொண்டுதான் இருக்கின்றேன். ஆனால் போலிகள் எந்த மதமானாலும் தண்டிக்க பட வேண்டியவர்களே.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!