இங்கே புதிய தலைமுறை! அங்கே ஈயம் பூசுகிற வேலை..!

 மின்வெளிப் பரப்பின் நாளைய மன்னர்கள்!
சில நேரங்களில், கூகிள் மெயிலில் ஸ்டேடஸ் செய்திகள் கொஞ்சம், அதில் சொல்லி இிருப்பதற்கு நேர்மாறாகத் தான் இருக்கும்! அல்லது, நாம் புரிந்து கொள்வதே கூட, ஸ்டேடசுக்கு எதிர்மாறாகத் தான் இருக்கும் போல!

இன்று காலை, திரு.புருஷோத்தமனுடைய ஸ்டேடஸ் செய்தி இது:
"இரண்டு வயது குழந்தை ஐபேட் பயன்படுத்தும் விநோத விடியோ - இதென்னய்யா பெருசு என் பையன் 10 மாசத்துல இருந்தே லேப்டாப் பயன்படுத்தறான் - எங்கப்பாவை விட அவனுக்கு நிறைய தெரியும்!"

மனிதர் குழந்தை லாப்டாப்பில் புகுந்து விளையாடும், மேலே பார்க்கிறீர்களே, அந்தப் புகைப்பட லிங்கையும் கொடுத்திருந்தார்!

நாம தான் பெரிய ட்யூப் லைட் ஆச்சே! உடனே உரையாடலைத் தொடங்கியாயிற்று! உரையாடல் என்றாலே கொஞ்சம் உளறலும் சேர்ந்தே வந்து விடுமோ!

நான்: எல்லா மகன்களுக்கும் அவர்களுடைய அப்பன்மாரை விட அதிகம் தெரியும்! ந்யூட்டன் சொன்ன மாதிரி, ஒரு தலைமுறை அதற்கு முந்தைய தலைமுறையின் தோள்களில் நின்று பார்ப்பதால், அதிக தூரம் பார்க்க முடிவது இயற்கைதானே!

அவர்: யெஸ், உண்மை தான்!நாலரை மாசத்துல இருந்தே லேப்டாப் தட்டினா இதுலாம் பெருசா?இது வரை 2 லேப்டாப்பை காலி செய்திருக்கான்அப்போ தெரியாம இருக்குமா?

நான்: ரெண்டே லேப்டாப் என்பது நெஜமாகவே ரொம்பக் குறைச்சல் :-))

அவர்: ஆகா நீங்க வேற! வயித்தெரிச்சலில் இருக்கேன் நானே!

புருஷோத்தமனுடைய  கைக்கெட்டும் தூரத்தில் இல்லாமல் இருந்ததால், இதைச் சொல்லிவிட்டுத்  தப்பித்தேன் என்று நினைக்கிறேன்!


அவர் சொல்லுகிற இரண்டரை வயதுப்பெண் ஐபாடை கையாளுகிற வீடியோவைமட்டுமல்ல, அதைக் குறித்த பதிவையும் நேற்று  நானும் பார்த்தேன். 
ஐபாட்  வாங்கிய ஒருவர், தன்னுடைய இரண்டரை வயது மகளிடம் அதைக் கொடுக்கிறார். ஏற்கெனெவே ஐபோனுடன்  பரிச்சயமுள்ள அந்தச் சிறுபெண் குழந்தை, வெகு லாவகமாகக் கையாளக் கற்றுக் கொள்வதை, ஐபோனில் பரிச்சயமான செயல்பாடுகளை, கேம்ஸ் விளையாடுவதை அடையாளம் கண்டு கொள்வதுடன் , இதில் படம் பார்க்கிற வசதியும் இருப்பதை கண்டுகொண்டதாக, ப்ளாஷ் பேஜில் இருக்கும் ஐகான் எதற்காக என்று பெரியவர்களையும் குழம்ப வைத்தது, இந்தச் சிறு பெண்ணையும் குழப்பியதை ஐந்தரை நிமிட வீடியோவிலும், இந்தப் பதிவிலும் சொல்லி இருக்கிறார்.  
வீடியோ, இங்கே மிகவும் மெதுவாக லோடாவதால், அங்கேயே போய்ப் பார்த்துக் கொள்ளலாம்!

ஐபாடைக் கையாளுவது எப்படி, அதில் என்னதான் இருக்கிறது என்பதையும் சொல்கிற வீடியோவாக இருக்கிறது.

அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் ஜிம் 72 என்பவர் சொல்லியிருப்பது இன்னமும் சுவாரசியமாக, இன்றைய குழந்தைகள் எப்படி மிகச் சிக்கலானவைகளையும் புரிந்து கொள்கிறவர்களாக இருக்கிறார்கள் என்பதைச் சொல்கிறது!

"That's cute! My two year old has been using Windows 7 for the better part of a year now. He knows how to use the Start Menu, desktop shortcuts, etc. He can navigate Windows Explorer to find his photos and videos. He even knows how to use Firefox to find his favorite sites and play his online games. He loves surfing YouTube, although we limit his time on it. He even knows his way around XBMC and the Wii. He routinely out bowls challengers.

It is absolutely amazing what a two year old can learn. I think exposing them to computers at such a young age is great. The connections they make and the problem solving skills they develop will surely put them ahead of their peers. "


புருஷோத்தமன் சார்! இரண்டு லாப்டாப்பை ஒப்பேற்றி விட்டான் என்று குறைப்பட்டுக் கொள்ள  வேண்டாம்! 

இன்றைய குழந்தைகள், பரந்த மின்வெளியின் எதிர்கால மன்னர்கள்! 

தொழில்நுட்பமும், மின்வெளி சாம்ராஜ்யமும் அவர்களுடையது! நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் இந்த செய்தியைப் படித்துப் பாருங்கள்!

oooOooo




ஊருக்குத் தானடி உபதேசம்! உனக்கும் எனக்கும் என்றா சொன்னேன்?

கருத்துப் படம்! பார்த்துச் சிரிப்பதற்கும் கூட! வேறு யாரை? நம்மைப் பார்த்துத் தான் !

மாற்றங்கள் வேண்டாமே, நான் இப்படியே இருந்துவிட்டுப் போகிறேனே என்று மனிதன், பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுவதில் பாலியல் சில்மிஷங்கள் செய்யும் பாதிரிமாரும், நித்தியானந்தா, பிரேமானந்தா மாதிரி காமிகளும், ஜெப  ஊழியம் செய்கிறேன் என்று பணத்தைக் கறக்கும் ஜெபகோபுர வகையறா, பகுத்தறிவு பிராண்டில் காசுபார்க்கும் தொகையறாக் கும்பலும் தான் உருவாகும்
.

ஈயம், பித்தாளைக்குப் பேரீச்சம்பழம் என்று விற்பனை செய்பவர்களுக்கும் சரி, எதற்கெடுத்தாலும் ஏதோ ஒரு ஈயத்தைப் பூசிவிட்டால், அத்தோடு அந்தப் பிரச்சினை தீர்ந்தது என்று ஈயம் பூசும் தொழிலைச் செய்துகொண்டிருப்பவர்களுக்கும் சரி! 


தசம பாகத்தில்பங்கு பெறுபவர்களும், ஹோமம் நடத்தி தட்சணை பெறுபவர்களும், மனிதனுடைய மிக அடிப்படையான பலவீனத்தின் வெளிப்பாடு தான்! என் பிள்ளை நன்றாகப் படிப்பதற்கு உண்டான சூழலையும் வசதிகளையும் செய்து கொடுப்பதை விட, பரீட்சையில் நல்ல மார்க் எடுப்பதற்காக நடத்தப் படும் ஜெபக் கூட்டங்களில், ஹயக்ரீவ ஹோமங்களில், ஒரு 'காணிக்கை'யை லஞ்சமாகக் கொடுத்து விடுவது எனக்கு சுலபமாகவே இருக்கிறது. ஏனென்றால், நான் அதற்காக கஷ்டப்பட வேண்டியது எதுவும் இல்லையே! என்னை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் கூட இல்லையே! என் பிள்ளை பாவம், கஷ்டப்பட்டுப் படிக்கக் கூட வேண்டியதில்லையே!

ஆக, மனிதனின் இயல்பான இந்த மந்தத்தன்மையைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆத்திக-நாத்திக வாதங்களை விட்டு விலகி, உண்மை என்ன என்பதைத் தேட முயற்சிக்கலாம்! மெய்ப்பொருளை இவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள முடியாது! இவர்கள் சொல்வதை வைத்து மட்டும், இருக்கிறது அல்லது இல்லை என்று தெரிந்து கொள்ள முடியாது!

ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதிய புத்தகத்தைப் படிப்பது கொஞ்சம் போரடிக்கும்! தமிழிலேயே, "கடவுள் இருக்கிறாரா" என்று எழுத்தாளர் சுஜாதா ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். டாகின்ஸ் மாதிரி இல்லாமல், அறிவியலும், கடவுள் கோட்பாடும் என்ன சொல்கின்றன என்பதைக் கொஞ்சம் எளிமையாகவே, சொல்ல முயற்சித்திருக்கிறார்.  

புத்தகக் கடைக்குப் போய், காசு கொடுத்து வாங்க மனமில்லாத கஞ்சர்களுக்கு மட்டும் -->

இணையத்தில் தேடினால் எளிதாகக் கிடைக்கும். படித்துப் பாருங்கள், விவாதத்தைத் தொடரலாம்!

ஈயம் பூசுகிற தில்லாலங்கடிகளும், என்னமோ பெண்டு நிமிர்த்துவதாகச் சொல்லிக் கொள்ளும் தம்பட்டங்களும், மானாட மார்பாட நிகழ்ச்சியை விட சலிப்பைத் தான் தருகிறது! பின்னிப் பெடலெடுத்து விட்டதாக நாம் தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்!

உருப்படியான  சிந்தனைகளுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள்!




 



3 comments:

  1. பல நேரங்களில் சமுதாய பரப்பில் விடை கிடைக்காமல் குழம்பி கிடக்கும் கேள்விகளுக்கு என் பையன் மூலம் விடைகிடைக்கின்றது...

    ReplyDelete
  2. மிகவும் சிறப்பானதோர் பதிவு . ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டிய பலவற்றை பற்றி மிகவும் தகுந்த குறிப்புகழுடன் கொடுத்து இருக்கும் முறை பாராட்டப் படவேண்டிய ஒன்று .
    பகிர்வுக்கு நன்றி !தொடருங்கள் மீண்டும் வருவேன்

    ReplyDelete
  3. உண்மைதான் 2 வயது நிரம்பாத என் பெண் அழகாக பென் டிரைவை USB போர்டில் கனெக்ட் செய்கிறாள்

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!