மண்டேன்னா உருப்படியாக ஒண்ணு! யூட்யூப் கொண்டாட்டம்!


யூட்யூப் தனது ஐந்தாவது ஆண்டு நிறைவுக்  கொண்டாட்டத்தை, இந்த மே மாதப் புள்ளிவிவரங்களின் படி தினசரி இருநூறு கோடிப் பார்வையாளர்களைக் கொண்டதாக வளர்ந்திருப்பதாக இந்த ப்ளாகில் தெரிவித்து சந்தோஷப் பட்டிருக்கிறது! இது அமெரிக்காவில் முன்னணியில் உள்ள மூன்று தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு உள்ள பார்வையாளர்களின் கூட்டுத் தொகையை விட அதிகமாம்!

ஐந்தாவது ஆண்டுக் கொண்டாட்டங்களை ஒட்டி ஒரு தனி சானலாக, என்னுடைய யூட்யூப் கதை என்று பயனாளர்களுடைய அனுபவத்தைத் தொகுத்துச் சொல்வதும் ஆரம்பமாகி இருக்கிறது!


அம்மா! தம்பி என் விரலைக் கடிச்சுட்டான்......!

இந்தப்பதிவில் ஒரு சூப்பர் யூட்யூப் வீடியோவைப் பார்த்திருக்கிறோம், அந்தக் குட்டிப் பையனை நினைவிருக்கிறதா? இப்படி நிறையப் பயனாளர்கள் தங்களுடைய தயாரிப்பை, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்புத்  தந்த யூட்யூபிற்கு ஐந்தாவது ஆண்டு நிறைவு வாழ்த்துக்களைச் சொல்வோம்!

போன பிப்ரவரி பத்தொன்பதாம் தேதியே கார்டியன் பத்திரிக்கை ஐந்தாண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக அதிகம் பார்க்கப் பட்ட ஐந்து யூட்யூப் வீடியோக்களைச்சுட்டியிருந்தது. அதிகாரப் பூர்வமான
வலைத்தளம் ஐந்தேகால் ஆண்டுகளில் தினசரி இருநூறு கோடிப் பார்வையாளர்கள் வருவதை இந்த மே மாதம் எட்டிப் பிடித்த சாதனையை ஒரு கொண்டாட்டமாகச் சொல்கிறது

உங்களுடைய அனுபவங்களை யூட்யூபில் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்களா? மிகவும் விரும்பிப் பார்த்த யூட்யூப் வீடியோக்களை நினைவு வைத்திருக்கிறீர்களா என்று கொஞ்சம் சொல்லுங்களேன்!
 

  "தொடர்ந்து வரும் புதிய வழிமுறைகள் எப்படி இந்த இணையத்தை அப்படியே ஆளுமை செய்யத் தொடங்குகின்றன என்பதைப் பார்ப்பதே மிக ஆச்சரியமான விஷயம் தான்! மின்னஞ்சல் அனுப்புகிற முறை ஊகத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தது, ஆனாலும் வந்தது... உஷ ..ஷ்.ஷ் அப்படியே இணையத்தில் ராஜாங்கம் நடத்த ஆரம்பித்தது.அப்புறம் பார்த்தால், நாப்ஸ்டர், யு ட்யூப், மை ஸ்பேஸ்..பேஸ் புக் ..இப்படி ஏராளமான சோஷல் நெட் ஒர்கிங் ..யாருமே இப்படி எல்லாம் வரும், இப்படி வளரும் என்று எண்ணிப்பார்த்தது கூட இல்லை. இணையத்தை ஏன் நேசிக்கிறேன் என்றால், அது புதுமையின், புதுப்படைப்புக்களை உருவாக்கும் உந்துசக்தியாக இருக்கிறது. எங்கிருந்து என்ன வரும் என்று தெரியாது. ஆனால், வந்தவுடன், அய்யோ பத்திக்கிச்சு, பத்திக்கிச்சுன்னு தீயாப் பத்திக்கும்."

இது இணையத்தைப் படைத்தவர் சொன்னது! இங்கே பார்த்திருக்கிறோம்!


 

4 comments:

  1. அட!

    சாதனைதான்! மக்களை சுலபமாய் சென்றடையும் பயனுள்ள எதுவுமே அமோக வெற்றியடையும் போல.

    :))

    ReplyDelete
  2. உண்மைதான்! கடந்த பத்தாண்டுகளில் இணையத்தின் வளர்ச்சியில் நாப்ஸ்டர், யூட்யூப் இவை ஏற்படுத்திய தாக்கம் எவருமே கணிக்க முடியாத அளவுக்குப் பிரம்மாண்டமாக இருந்தது. தகவல் புரட்சி என்பதன் தோற்றுவாயாக, காணொளி ஊடகமாக இருந்தது.

    ReplyDelete
  3. நம்முடைய நேரத்தை வெகுவாக திங்கிறதுல இந்த மாதிரி வலைத்தளங்களுக்கு பெரும்பங்கு வகிக்கின்றன.ஆனால் தேடினால் நிறைய அரிய பல விசயங்களும் கிட்டுகின்றன. நன்றி.

    ReplyDelete
  4. நேரத்தைத் திங்கறது....!

    லூயிஸ் கரால் எழுதிய Through the looking glass கதையில் கூட The mad tea party என்ற அத்தியாயத்தில் இதைப் பத்தி ஒரு சுவாரசியமான விஷயம் ஒண்ணு வரும். இந்த வார்த்தையைப் பாத்ததுமே நினைவு வேறெங்கோ சுழல ஆரம்பிச்சாச்சு!

    நேரத்தைப் பயன்படுத்துவது அல்லது வீணாக்காமல் இருப்பது என்பது மிகப் பெரிய வரம்! அதை விட, சும்மா இரு சொல்லற என்றபடிக்கு இருப்பது மிகப் பெரிய வரம்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!