திங்கட்கிழமை! தொடரும் காமெடி!

நவ ரசத்தில் எது எதுவோ குறையுதுன்னு சொன்னாங்க! எது எது எவ்வளவு குறையுதோ அதுக்கு மட்டும் மார்க்கைக் குறைச்சு எப்படியாச்சும் பாஸ் மார்க் போட்டுடுங்க ப்ளீஸ்! எனக்கு இதுக்கு மேலும் டம்மியா இருக்கத் தெரியாதுன்னு சொல்றாரோ?

ஒரு வழியாகப் பிரதமர் மன்மோகன் சிங் பத்திரிகையாளர்களுடன் எழுபத்தைந்து நிமிடம் உரையாடி விட்டார்!  சாதனை நம்பர் ஒன்! இது போதாதா என்ன!?

blow by blow என்று ஐபிஎன் செய்தித் தலைப்பைத் தமிழில், ஜனங்களுக்கு அடிமேல் அடி என்று மொழி பெயர்த்துச் சொன்னால் அதில் தவறேதும் இருக்காது!

உரையாடியதில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற மாதிரி சில விஷயங்கள் இருந்தது மிகப் பெரிய நகை முரண்!


தனக்கும்  சோனியாவுக்கும் கருத்து வேறுபாடு இல்லை! அவநம்பிக்கை
யும் இல்லையாம்!

குதிருக்குள் எதுவுமில்லை! மன்மோகன் சிங் சொல்கிறார்! நம்புவதும் நம்பாததும் உங்கள் சாய்ஸ்!



 கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமாம்!
ஆ! ராசா என்று வாயைப் பிளக்க வைக்கிற அளவுக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம் கிளம்பிய பின்னாலும் கூட, ராசா மீது  நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லையாம்! ராசாவை விசாரித்தபோது, அதற்கு முந்தைய பிஜேபி ஆட்சியில் நடைமுறையில் இருந்த  கொள்கையைத் தான் பின்பற்றியதாகச் சொன்னாராம்! அப்படிச் சொன்ன அமைச்சர் பிஜேபி அமைச்சரா அல்லது ஐமு கூட்டணிக் குழப்பத்தின் அமைச்சரா? அதையாவது சொன்னாராமா?

"Our government has been very clear right from the beginning that corruption is a problem. If I come to know that there is any involvement at any level, we will take action"
 

மன்மோகன் சிங் சொன்னதிலேயே  மிகப் பெரிய காமெடி இதுதான்!

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்பது வேறு விதமாக ஆகிவிட்ட அவலத்தைப் பரிதாபத்தோடு பார்க்க வேண்டியிருக்கிறது.

கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேடும் பிரதமர், தன்னுடைய மந்திரிகள்  மீது முடிவெடுக்கச் சிறிதும் அதிகாரமில்லாத டம்மிப் பீஸ் தான் என்று ஏற்கெனெவே நாடு முழுவதும் தெரிந்த ஒரு விஷயத்தைப் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தித் தான் சொல்ல வேண்டுமா என்ன?

எல்லாவற்றையும் விட ஹிந்து நாளிதழில் காங்கிரஸ் கட்சிக்குள் குறைந்தபட்சம் மூன்று விதமான அரசியல்-தத்துவார்த்தப் போக்குகளாகப்   பிரிந்து செயல்படுவதாக சித்தார்த் வரதராஜன் எழுதிய செய்திக் கட்டுரை  இன்றைக்கு
இன்னொரு மிகப் பெரிய காமெடி! அந்தக் கட்டுரையில், ஒரே ஒருவிஷயத்தை மட்டும் சரியாகச் சொல்லியிருக்கிறார். ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின் மிகப் பெரிய பலவீனமே, திருமதி சோனியா முன்னால் நின்று கட்சியையோ, கூட்டணியையோ நடத்திச் செல்ல முடியாத பலவீனம் தான்! வெர்ஷன் ஒன்றில், பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை முன்னிறுத்தியதும்,, தான் ஒதுங்கிக் கொண்டு பெரிய தியாக சிகரமாகக் காட்டிக் கொண்டதும்  கொஞ்ச நாளிலேயே சாயம் வெளுத்துப் போனது.

அம்மா என்னவென்றால் திமுகவாக இருந்தாலும் சரி, மம்தாவாக இருந்தாலும் சரி எல்லோருடனும் அனுசரித்துப் போய் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள முயன்று கொண்டிருக்கிறார்! தனயன் ராகுலோ, கட்சியை அடிமட்டத்தில் இருந்து உயிர்ப்பிக்க முயன்று கொண்டிருக்கிறார்! எதிரும்புதிருமான இந்த ஒரு விஷயமே காங்கிரஸ் எப்படிப் பட்ட குழப்பமான, பலவீனமான  தலைமையின் கீழ் இருக்கிறதென்பதைச் சொல்லும்!

காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி, பதவியில் இல்லையென்றால் பைத்தியம் பிடிக்கும்! 

ஆட்சியைப் பிடித்தாலோ காங்கிரஸ் கட்சிக்கு  கூட்டணிக் குழப்பங்களால் பைத்தியம் பிடிக்கும்!

வெட்டுத் தீர்மானத்தில் இருந்து தப்பிக்க மாயாவதியைக் குஷிப்படுத்தி, ஆதரவைப் பெற்ற தெம்பில் மன்மோகன் சிங் அணு உலை விபத்து நஷ்ட ஈடு மசோதாவை எப்படியாவது நிறைவேற்றியே தீருவது என்று, ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்! அதே நேரம், மாயாவதியுடனோ, முலாயம் சிங் யாதவுடனோ எந்தவிதமான பேரமும் இல்லையாம்! அப்படி எவராவது நினைத்தால் அந்த நினைப்பைத் தூக்கி எறியுங்கள் என்று வேறு திருவாய் மலர்ந்திருக்கிறார்!

தூக்கி எறியப்படவேண்டியது காங்கிரஸ் தான் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்! 

நம்பிக்கை ஒன்று தானே வாழ்வின் ஆதாரம்!?



 

4 comments:

  1. தூக்கி எறியப் பட வேண்டியது என்று நீங்கள் பேசி என்ன புண்ணியம்... மக்கள் 'சோற்றால் அடித்த பிண்டங்களாய்' இருக்கிறார்களே...! மன்மோகன் எப்படிதான் ராசா பற்றிய விஷயத்தை சிரிக்காமல் சொன்னாரோ...கொஞ்சம் கூச்சமாகக் கூட இருந்திருக்கும். எங்கே இருந்த மனிதர்..அரசியல்தான் எப்படிப் பட்ட மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றுகிறது?

    ReplyDelete
  2. நான் பேசுவது என்பது மாறி நாம் பேசுவது என்றாகும் நேரமும் வரவேண்டும்,அப்படி ஒரு நேரமும் வருமல்லவா ஸ்ரீராம்! இங்கே மக்களை மட்டுமே குற்றம் சொல்லிப் பயனில்லை. இந்தத் தேர்தல் முறையிலேயே நிறையக் குளறுபடிகள் இருக்கின்றன.

    ReplyDelete
  3. மண்மோகன் 100 % அக்மார்க் சர்தாரகவே இருக்க விரும்புகிறார்.

    ReplyDelete
  4. வாருங்கள் அமர்!

    சர்தார்ஜிகளின் மீது ஏன் இத்தனை கோபம்?

    சீக்கியர்களை படுகொலை செய்த சம்பவத்துக்கு சீக்கியரான மன்மோகன் சிங்கை விட்டே மன்னிப்புக் கேட்க வைத்த காங்கிரசின் பித்தலாட்டம் சர்தார்ஜிகளிடம் எடுபடவில்லையே!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!