சண்டேன்னா மூணு! படங்கள் மூணு...! கவிதை ஒண்ணு!


சீரியஸா என்னத்தையோ யோசிக்கற மாதிரி எல்லாம் இல்லீங்க! ...ச்சும்மா ஒரு ஷோ காட்டத் தான்! செம்மொழி மாநாடு வேற வருது இல்லே?


எதுக்கு தலையை முட்டிட்டு நிக்கறோம்னு கேக்கறீங்களா? முட்டையில் இருந்து கோழியா, கோழியில் இருந்து முட்டையான்ற மாதிரி எங்க கிட்ட வந்து பரிணாமம் எனது புரிதல், படைப்புவாதம் இப்படீன்னெல்லாம் எழுதப்போறேன்னு பயமுறுத்தினாக்க நாங்க  வேற என்ன செய்யறதாம்...?


எங்களுக்கும் ஸ்டன்ட் அடிக்கத் தெரியும்! ஆனா இன்னாத்துக்கு ஸ்டன்ட்  அடிக்கறதுன்னு தெரியாமத் தான் ஒரே குழப்பமா இருந்தது. அதனால ஒரு ஸ்டன்ட் அடிச்சுப் பாப்போமேன்னு தான்......!

இந்தப் படம் எதுக்கு, அதுக்கு கமெண்டுன்னு கீழே கொஞ்சம் எழுதினது எதுக்குன்னு புரியலையா?

வால் பையனை விட்டே  இந்தத் தரம் உரை எழுதச் சொல்லிட்டாப் போச்சு!

அதுவரைக்கும், ரசிப்பதற்காக ரூமியின் கவிதை ஒன்று ! 

காதல் என் காதோடு வந்து சொன்னது:

"வேடனாக இராதே! எதிர்க்கச் சக்தியில்லாதவனாக இரு!
எனக்குப் பிரியமானவனாக ஒரு முட்டாளாகவே இருந்துவிடு!
செந்தழல் இரவியாக வேண்டாமே! ஒரு புள்ளியே கூடப் போதும்.
எனது இல்லத்தில் அண்டியிருந்து  வீடற்றவனாக இரு
எரியும் விளக்காக வேண்டாம், விட்டில் பூச்சியாக இரு! போதும்!
இருந்தால்  வாழ்க்கையை அனுபவித்து சுவைக்க முடியும்
அடங்கிப் பணி செய்வதன் பலம் என்னவென்று அப்போது தெரியும்!"

முகமதுஜலாலுதீன் ரூமி என்ற இந்த பெர்ஷிய  சூஃபி கவிஞருடைய கவிதைகளில் இருந்து அவ்வப்போது ஒரு சில கவிதைகளைப் பார்த்திருக்கிறோம்! அந்த வரிசையில் இன்னுமொன்று!


ரூமி  காதலையும் தொட்டு கவிதைகள் எழுதியிருக்கிறார்! ஆன்மநேயம் வெளிப்படும் சூ ஃபி கவிதைவரிகள் அவை! வெறும் உடல்களின் மீதான இச்சை என்பதையும் தாண்டி, கொஞ்சம் பரவசமான நிலையில்! இங்கே இப்படிச் சொல்லியிருந்தது நினைவு வருகிறதா?


Lover whispers to my ear,
"Better to be a prey than a hunter.
Make yourself My fool.
Stop trying to be the sun and become a speck!
Dwell at My door and be homeless.
Don't pretend to be a candle, be a moth,
so you may taste the savor of Life
and know the power hidden in serving."




 

2 comments:

  1. '' செந்தழல் இரவியாக வேண்டாமே! ''
    மொழி பெயர்ப்பு அருமை !அன்னையின் ஆசீர்வாதங்கள் உங்கள் மீது பொழியட்டும் !

    ReplyDelete
  2. நியோ! முதல் வருகைக்கு நன்றி!

    ரூமியின் அந்தக் கவிதையின் ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பில் scorching sun என்று இருக்கிறது. அதைத் தான் சுட்டெரிக்கும் சூரியனாக என்பதற்குப் பதிலாகச் செந்தழல் இரவியாக என்று வைத்துப் பார்த்தேன். நீங்கள் அந்த ஒரு வரியை மட்டும் எடுத்துப் போட்ட பிறகுதான், பதிவர் செந்தழல் ரவியைக் குறிக்கிறமாதிரி அர்த்தப் படுத்திக் கொண்டீர்களோ என்ற சந்தேகம் வந்தது. செந்தழல் ரவியும் நானும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் தான் இருக்கிறோம். செந்தழல் ரவியின் பக்கங்களில் வேறு ஒரு புகைச்சல் கிளம்பியிருப்பதைகுழலி புருஷோத்தமனுடைய ஸ்டேடஸ் மெசேஜை வைத்து இன்றைக்குத் தான் பார்த்துத் தெரிந்து கொண்டேன். அதில் சம்பந்தப் பட்டிருக்கும் பதிவர் ஏற்கெனெவே இதே மாதிரிப் பெண்பதிவர் ஒருவரைக் குறித்துக் கடுமையான சொல்லாடலை வைத்து ஒரு பதிவு, அப்புறம் கொஞ்ச நாள் வனவாசம் என்கிற மாதிரியான அறிவிப்பு, அப்புறம் அரிப்புத் தாள முடியாமல் மறுபடி எழுத வந்த கதையை அறிந்தே வைத்திருக்கிறேன்.

    ரூமியின் இந்தக் கவிதை காதலின் ஒருவிதமான தீவீரத் தன்மையை மட்டுமே சொல்கிறது.

    அப்புறம் உங்களுடைய பதிவுகளைப் படித்தேன். பொறியியல் கல்லூரி விவகாரங்களைக் குறித்த உங்களுடைய கோபம் எனக்கும் இருக்கிறது, ஒரு தகப்பனாக! என்னுடைய மகனும் சென்னையில் உள்ளஒரு பொறியியல் கல்லூரியில் தான் படிப்பை இந்த வருடம் முடித்திருக்கிறான். அவனுடைய, அவனுடைய நண்பர்களுடைய அனுபவங்களை அறிந்திருக்கிறேன்.ஆனால், உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி விடுவதால் பிரச்சினை தீர்ந்துபோய் விடுமா? உணர்ச்சிவசப்பட்டு எதையாவது எழுதிவிட்டு, அப்புறம் அதை இப்போது எழுதினால் அப்படி எழுதியிருக்க மாட்டேன் என்று நீங்கள் எழுதியிருப்பது குறைந்தது இரண்டு மூன்று பதிவுகளிலாவது பார்க்கக் கிடைக்கிறது.

    அப்புறம், அன்னையின் ஆசீர்வாதம்...!

    எல்லோருக்குமே தன்னுடைய அன்னையின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கிறது. அதை நீங்கள் வழிமொழிந்தாலும், வழி மொழியாவிட்டலும் கூடவே!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!