Wednesday, June 09, 2010

வாரான் வாரான் பூச்சாண்டி! கூட்டணி வண்டியிலே!


செம்மொழி மாநாடு வருகிறதே, அதற்குப் பதிவுலகக் கடமையை எப்படி ஆற்றுவது என்று கொஞ்ச நாட்களாக ஒரு குடைச்சல், குழப்பம்!

பதிவர்கள் சார்பாகப் போடவிருக்கும் கடைக்குத் தன்னார்வலராகச் சேர்ந்து கொள்ளலாமா என்றால் அது நமக்கு ஒத்துக் கொள்ளாது. வேறு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இணையத்தில் சில புதிய தமிழ்ப்பதிவர்களை தேடிப்படித்துக் கொண்டிருந்தபோது, மார்க்கண்டேயன் என்ற மதுரைக்காரப் பதிவர் பக்கங்களில்  நா அப்படித்தான் ஈஸ்வரி ஆத்தாவின் பின்னூட்டத்தைப் பார்த்தேன்! வால்பையனுடைய பழைய
பதிவு ஒன்றில், இன்னொரு பதிவரை போடா லூசு என்று திட்டிப் பின்னூட்டம் எழுதியதும், அந்தப் பதிவர் பயந்துபோய், இன்னொரு தரம் போடா லூlசு பட்டம் வாங்க நான் தயாராக இல்லை என்று ஜகா வாங்கிய பழைய வரலாறு கண்முன்னே விரிய, ஈஸ்வரியின் பதிவுகளில் தேடிக் கொண்டிருக்கும் போது இந்தப் பதிவு கண்ணில் பட்டது!


அம்மா இங்கே வா வா! என்று பாட்டுப் பாடி ஆனா ஆவன்னா கற்றுத் தரும் இந்தப் பாடலைவிட செம்மொழிக்கு நம்மால் என்ன பெரிதாகச் செய்து விட முடியும்? ஒழுங்காகத் தமிழைக் கற்றுக் கொண்டு தமிளைத் தமிழாகப் பேசுவதைவிட வேறு என்ன செம்மை செய்து விட முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்த போதே, நா அப்படித்தான்! என்று மண்டையில் அடித்துச் சொல்கிற ஈஸ்வரி  எழுதிய நகைச்சுவை இது  இங்கே!

இந்த பாடல் கேட்கும் போது எங்கள் சுபிக்ஷா பாப்பாவின் நினைவு வரும்.

சுபிக்ஷா என் அக்காவின் குழந்தை
அவளுக்கு ஒன்றரை வயது இருக்கும் போது என் அக்கா அவளுக்கு இந்த பாடல் சொல்லி தந்தாள். அப்போது அவள் பட்ட பாடு இப்போது நினைத்தாலும் எங்களுக்கு சிரிப்பும், சந்தோசமும் தான் வருகிறது.

அக்கா: அம்மா இங்கே வா வா
பாப்பா: அம்மா தான் இங்க இருக்கீங்க. இன்னொரு அம்மாவை கூப்பிடணுமா?

அக்கா இந்த வரியிலே அதிர்ச்சி ஆகிட்டாள். பின் விளக்கம் சொல்லி கொடுத்து அடுத்த வரிக்கு வந்தாள்

அக்கா: ஆசை முத்தம் தா தா
பாப்பா: நிஜமாலும் முத்தம் கொடுத்தாள்

அக்கா: இலையில் சோறு போட்டு
பாப்பா: நிஜமாலும் போட போகிறார்கள் என்று நினைத்து எனக்கு சோறு வேண்டாம் வேண்டாம் ன்னு ஒரே சிணுங்கள்

அக்கா: ஈ யை தூர ஓட்டு
பாப்பா: எங்க மா ஈயி  ? இங்கே காட்டு. என் கண்ணுக்கு தெரியலையே...

ஒவ்வொரு முறையும் விளக்கம் சொல்லி, சொல்லிகொடுத்த அக்காவிற்கு அதற்கு மேல் பொறுமை இல்லை. அன்றைய பாடம் அத்தோடு முடிந்தது. எங்கள் குட்டி தேவதை எப்போதும் அக்காவிடம் பாடம் படிக்கும் போது இப்படி தான் எதையாவது கேட்பாள் அல்லது அடம் பிடிப்பாள். இப்போது பேபி School க்கு(Pre K.G) போயி நிறைய Tamil/English பாட்டு கத்துகிட்டு எங்களுக்கு போன்ல பாடி காட்டுறா.

வருங்கால IAS / IPS / Doctor ஒருத்தங்க எங்க வீட்டு
க்குள்ளும்  இருக்காங்கப்பா.

ஈஸ்வரி 2010 இல் ஒரே ஒரு பதிவுதான் எழுதியிருக்கிறார். ஆனால், நேரம் கிடைக்கும்போது பதிவுகளைத் தொடர்ந்து பின்னூட்டம் மட்டும் எழுதுகிறார் என்று தெரிகிறது!

அப்பப்ப கொஞ்சம் பதிவுகளும்  எழுதுங்க ஈஸ்வரி!

******
தமிழன் பத்துப்பாட்டும் பதிற்றுப்பத்தும் பார்த்துக் கொண்டு இருந்தால் மட்டும் தமிழ் செம்மொழியாகி விடுமா என்ன? 

இது குத்துப்பாட்டு காலமில்லையோ? திடீரென்று இப்படி ஒரு சந்தேகம் வந்து விட்டது!


பாதுஷாக்களுக்கு சந்தேகம் வந்தால், தர்பாரைக் கூட்டலாம்! என்னை மாதிரி சாமானியர்களுக்கு, கூகிளைத் தவிர வேறு கதி...?! கூகிள் ஆண்டவர் தேடினவுடன் கிராக்கி பண்ணிக் கொள்ளாமல் ஒரு செமையான குத்துப் பாட்டைக் காண்பித்தார்!


மானாட மயிலாடக் குத்துப் பாட்டில் காலத்தைக் கழிக்கும் தமிழன், செம்மொழியை இதை விட சம்மு சம்மு சம்மிக்  குத்த முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது!


என்ன சொல்கிறீர்கள்? 

6 comments:

 1. என்னத்த சொல்ல! எல்லாம் தான் நீங்களே சொல்லிட்டீங்களே...இதுக்குமேல சம்மு சம்மிக் குத்த முடியாதுன்னு. அதேதான்.மற்றபடி நீங்கள் சில யோசனைகளும் சொல்லியிருக்கலாம் தமிழ் வாழ,,,,, இந்த மாதிரி பதிவு போட்டு குற்றம் சொல்லத்தான் என்னை போன்ற சிறியவர்கள் இருக்கோம்ல.... கலைஞருக்கு ஹெல்ப் பண்ணிவீகளா, அத விட்டுப்போட்டு!!! :)

  ReplyDelete
 2. நல்ல பாடல் ...

  http://inthiyaa.blogspot.com/2010/04/blog-post_12.html

  ReplyDelete
 3. இப்பவெல்லாம் ஈஸ்வரியக்கா சரியா பதிவு பக்கமே வருவதில்லை!

  ReplyDelete
 4. மயில்ராவணன்!

  மக்களுடைய கருத்தைக் காது கொடுத்துக் கேட்கிறவர்கள் கூட இங்கே அரசியலில் இருக்கிறார்களா என்ன?

  அப்புறம் தமிழ் வாழ யோசனைகளும் சொல்லியிருக்கிறேனே! ஆனா ஆவன்னாவை ஒழுங்காகக் கற்றுக் கொண்டு, டமிலைத் தமிழாகப் பேசுவது!

  மூக்கால் பேசாமல், வாயால் பேசுவது அடுத்தது!

  ReplyDelete
 5. யூர்கன் க்ருகியர்
  நல்ல பாடல் சரி! ஈஸ்வரி பதிவில் அவங்க அக்கா பட்ட பாட்டைப் படித்தீர்களா? அந்தே கெட்டப்பு நீங்கள் சுட்டிய வீடியோவில் இல்லையே!

  வால்ஸ்!

  ஈஸ்வரி உங்களுடைய பதிவுக்கு மட்டும் ரெகுலராக வர்ற மாதிரித் தெரியுதே! உங்க பதிவில் இருந்து மார்க்கண்டேயன் பதிவுக்குப் போய், அங்கே அவங்க ஆதரவா நாலு வார்த்தை பின்னூட்டம் எழுதினதை படிச்சப்புறம் தானே இந்தப் பதிவு!

  ReplyDelete
 6. தங்கள் வருகைக்கும் கவனத்திற்கும் மிக்க நன்றி ஐயா

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails