சண்டேன்னா மூணு! கவிதை! வீடியோ! கருத்துப் படம்!

உன்னை ஒரு போதும் விட மாட்டேன்!  

ஒரு கவிதை! ஒவ்வொரு எழுத்தாக உதிர்ந்து பாடும் மனிதனாகப் படம்!



காதலைச் சொல்லுவதாகத் தான் இந்த வரிகளை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை! இரண்டு பேருக்கிடையேயான அன்பு, அது வெளிப்படுகிற விதங்களில் சமயத்தில் தென்படுகிற வலி, அழுகை இப்படி, உணர்வுகளைச் சொல்வதாகக் கூட வைத்துக் கொள்ளலாம்!

னிமேஷனில் இந்தப் பக்கத்தைப் பார்த்தபோது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. கவிதையின் ஒவ்வொரு எழுத்தாக உதிர்ந்து, மனித உருமாறி ஆடுகிற மாதிரி! நன்றாக இருந்தது! கவிதை வரிகளைப் படித்தபோது இன்னமும் நன்றாக இருந்தது!  வரிகளைப் படமாக மேலே! அனிமேஷனில் ஒவ்வொரு எழுத்தாக உதிர்வதைப் பார்க்க இங்கே!

oooOooo 

மிழ் வலைப்பதிவுகளில் எனக்கிருக்கும் ஒரே மனக்குறை, குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஒட்டிக் கொண்டிருப்பதே போதும், அதை விட சொர்க்கம் வேறெதுவுமில்லை என்ற அளவில் பதிவுகளும் சரி, பதிவர்களும் சரி தங்களை எல்லை கட்டிக் கொண்டு எழுதுவது தான்!

ம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது, அறிவியல் மாற்றங்கள் என்னென்ன நிகழ்ந்து கொண்டிருக்கின்றன, அரசியல் எந்த அளவுக்குச் சீரழிந்து கொண்டிருக்கிறது என்பது மாதிரிக் கொஞ்சம் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய பதிவுகளைத் தமிழிலும் நிறையப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை நிறைய இருக்கிறது! உலகம் போகிற போக்கைச் சொல்கிற பதிவாக........

கிம் ஜோங்  இல் என்கிற  68 வயதான, மாசேதுங் வழிமுறைகளை அப்படியே கடைப் பிடிக்கும் ஒப்பற்ற ஒரே கம்யூனிஸ்ட் தலைவர், வட கொரிய அதிபரைப் பற்றி ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்!

ர்க்கரை, பக்கவாதம், இதயநோய் எல்லாவற்றையும் சுமந்து கொண்டு அதே நேரம், ஆட்சியின் மீது தனது பிடியைக் கொஞ்சமும் தளரவிடாமல், இறுக்கிப் பிடித்துக் கொண்டு, தன்னுடைய வாரிசுகளுக்கு மட்டுமே அதிகாரம் என்று சாமர்த்தியமாகச் செயல்படும் ஒரு கம்யூனிஸ்ட் சர்வாதிகாரி!



ந்த வீடியோவைப் பாருங்கள்! 

ந்தக் கிறுக்குப் பிடித்த அரசியல் தலைவரிடம் சிக்கிக் கொண்டு வட கொரிய மக்கள் மட்டுமல்ல, அண்டை நாடுகளான தென் கொரியாவும், ஜப்பானும் அலறிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கிறுக்குப் பிடித்த மூர்க்கன்  எந்த நேரத்தில் என்ன செய்து, இன்னுமொரு வேண்டாத யுத்தகளத்தில் இழுத்து விடுவார்  என்பதை எவராலுமே கணித்துச் சொல்ல முடியவில்லை. பார்ப்பதற்குத் தான் கிறுக்குத் தனமாகத் தெரிகிறதே தவிர, கிம் ஜோங் இல் எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்கிற மாதிரித் தான் இருக்கிறது.

ம்மூர்த் தலை ஒன்று தன்னை எல்லோரும் எப்போதும் பாராட்டு விழா நடத்திக் குளிரவைத்துக் கூத்தாடிக் கொண்டிருக்கவேண்டும் என்று நடத்திக் கொண்டிருக்கிற கதை தான் அங்கேயும்! இங்கே நடக்கிற மாதிரிதான், அங்கேயும் தலைவரின் இரண்டு பெண்டாட்டிகளின் வாரிசுகளில் எவர்  அடுத்துத் தலைமைப் பீடத்திற்கு வருவது என்ற போட்டாபோட்டி ஒரு புறம்!

னங்களுக்குப் பிழைப்புக்கு வழியில்லை! தொழில் வளர்ச்சியும் இல்லை! அதனால் என்ன? ஜனங்களுடைய
அதிருப்தி, கோபத்தைத் திசை திருப்புகிற மாதிரி, கடந்த மார்ச் மாதம் இருபத்தாறாம் தேதி தென்கொரியாவின் சிறிய கடற்படைக் கப்பலை மூழ்கடித்தது. 

விஷயம் வெளியே வந்ததும், தென் கொரியா ராஜீய, வர்த்தக உறவுகளை முறித்துக் கொண்டது. வட கொரியா, மறுபடியும் யுத்தம் வரும் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கிறது. 

ரே கல்லில் இரண்டு மாங்காய்! உள்ளூரில் ஜனங்களின் கவனத்தைத் திசை திருப்பின மாதிரியும் ஆயிற்று! எதிரிகளை வயிறு கலங்கச் செய்ததுமாயிற்று!



தில் திரைமறைவில் இருந்து கொண்டு சீனா எப்படித் தன்னுடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்பதை விளக்கி பிரம்ம செலானி எழுதிய கட்டுரை, சீனப் பூச்சாண்டியை புரிந்து கொள்ள அவசியம் படிக்க வேண்டிய ஒன்று!

கொரியாவில் கூட  இனமானத் தலைவர் உண்டு போல இருக்கிறதே என்று ஆச்சரியப் படுபவர்களுக்காகக் கூடுதல் விவரங்களைப் படிக்க

இங்கே         இங்கே        இங்கே       இங்கே 


oooOooo 

கருத்துப் படங்கள்! மூணு!

கண்ணாடி வீட்டுக்குள்ளே இருந்துகொண்டு கல்லைஎறின்னு அந்த அம்மா தான் சொல்றாங்க! இல்லே!?
 

ஆணி அடிக்கக் கூடாதுன்னு தான் சொன்னேன்! ஆனாக்க, கல் எறியலாம்!


அட! இது கூட நல்லாத் தான் இருக்கு! 
போப்புக்குக் கூட இம்மாம் பெரிய ஆப்பா?


 

3 comments:

  1. உங்க‌ளுடைய‌ எல்லா ப‌திவுக‌ளுமே ந‌ல்ல‌ உப‌யோக‌மாக‌ இருக்கு. க‌ருத்துள்ள‌தாக‌ இருக்கு. போட்டித் தேர்வுக்கு த‌யாராகும் மாண‌வ‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ ப‌ய‌னுள்ள‌ வ‌ழிகாட்டியாக‌ இருக்கிற‌து உங்க‌ள் ப‌திவுக‌ள் அனைத்தும்.

    ReplyDelete
  2. ஒரே நேரத்தில் இவ்வளவு ஐஸ் வச்சா ஜல்பு புடிச்சுக்கும்!
    நடப்பு விவ காரங்களைத் தொட்டு எழுதுகிறேன் என்கிற அளவுக்கு சரி! ஆர்வம் இருப்பவர்கள் படிக்கக் லிங்குகளைக் கொடுத்திருப்பது வரை இன்னும் கொஞ்சம் சரி!

    ஆனால், போட்டித் தேர்வுகளுக்குப் பயனுள்ள வகையில்.........?! அது மட்டும் உண்மையாக இருந்தால் இந்நேரத்துக்கு நோட்ஸ் எழுதிக் கொடுத்தே நாலைந்து கல்யாண மண்டபங்களை விலைக்கு வாங்கியிருப்பேன் !இப்படிப் பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்க மாட்டேனே!

    ReplyDelete
  3. சார் நான் ஐஸ் வைக்க‌ல‌ சார்... போட்டித் தேர்வுக்கு த‌யாராகுப‌வ‌ர்க‌ளுக்கு நாட்டு ந‌ட‌ப்பு தான் முக்கிய‌ம். அதை தான் அப்ப‌டி சொன்னேன்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!