ஒரு புதன் கிழமை! செய்திகள் நல்லதுக்குத் தானா நஞ்சான்னு தெரியலையே....!


இன்றைக்கு மக்களவையில், அணு உலை விபத்து நஷ்டஈட்டை வரையறை செய்யும் மசோதா, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பதினெட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. 



அமெரிக்காவிடம் சிக்கிக் கொண்டு, இந்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தவித்த தவிப்பு இருக்கிறதே....! 

எதிர்க்கட்சிகள் கொண்டு வருகிற எந்தத் திருத்தத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக, காங்கிரஸ் தன்னுடைய பழைய நிலையில் இருந்து இறங்கி வந்ததில் இருந்தே, சாவி, ஆளும் ஐமு கூட்டணிக் குழப்ப வெர்ஷன் இரண்டின் பிரதமரிடமோ, காங்கிரஸ் கட்சியிடமோ இல்லை என்ற சந்தேகத்தை உறுதிப் படுத்துவதாக இருக்கிறது.

திருத்தங்களுடன், மசோதா நிறைவேற ஆதரித்த பிஜேபி கட்சியும்,அதன் சார்பில் மக்களவையில் கேள்வி எழுப்பிய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜஸ்வந்த் சிங்கும் கூட ஒரு கேள்வியை மிக அழுத்தமாக பிரதமரிடம் முன்வைத்திருக்கிறார்.

"உண்மையோடு,நாணயத்தோடு, வெளிப்படையாகப் பேசுங்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டியை, நாடாளுமன்றத்தை இந்த மசோதா விவகாரத்தில்
எதற்காக இவ்வளவு அவசர அவசரமாக முடுக்கி விடுகிறீர்கள்?"

பிரதமரிடமிருந்தோ, ஆளும் தரப்பிலிருந்தோ இந்தக் கேள்விக்கு நேரடியான,வெளிப் படையான பதில் இல்லை.அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்திய விஜயத்திற்காக இதை அவசர அவசரமாக நிறைவேற்ற வேண்டியது இல்லையே! அமெரிக்கா  ஆட்டுவிக்கிறபடி எல்லாம் ஆட வேண்டிய அவசியம் தான் என்ன? நாம் ஒன்றும் தென்கொரியா இல்லை,
தென் கொரிய முன்னுதாரணத்தை நாம் பின்பற்ற வேண்டியதுமில்லை என்று சொன்னதற்கு மிகவும் மழுப்பலாக பதில், கொஞ்சம்
பேரத்தை
க் கூட்டித் தருகிறேன்,எப்படியாவது எல்லோருமாக சேர்ந்து மசோதாவை நிறைவேற்றித் தந்துவிடுங்கள் என்ற மாதிரி, அள்ளித் தெளித்த கோலமாக இந்த மசோதா நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இங்கே என்டிடிவி செய்தியில்

பிரதமர்,எப்போதும் போலவே அமெரிக்கக் கம்பனிகளுக்கு ஆதாயம் தருவதுபோலத் தான் இந்த மசோதா இருக்கிறது என்பதை மறுத்திருக்கிறார்.



ஆ! ராசா! என்று வாயைப் பிளக்கிற மாதிரி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லப் பட்டபோது கூட மறுத்தவர் தான் திரு.மன்மோகன் சிங்! இப்படி, தன்னுடைய கூட்டணிக் குழப்பம் ஒவ்வொன்றிற்கும் சப்பைக் கட்டுக் கட்டுவது, மறுத்து அறிக்கை விடுவதைத் தவிர, இந்த ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின் இரண்டாவது ஆண்டு பதவிக்காலத்தில் மன்மோகன் சிங் எதையும் பிரமாதமாக சாதிக்கவில்லை என்பது இன்னொரு முறை நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

இந்தப் பதினெட்டுத் திருத்தங்கள் என்ன பெரிய மாறுதலைக் கொண்டு வந்து விடும் என்பது இனிமேல்தான் தெரியும். 

மேலோட்டமாக, வெறும் ஐநூறு ரூபாய் கோடிகளாக வரையறை செய்து அறிமுகப் படுத்தப் பட்ட நட்ட ஈடு, இப்போது மூன்று பங்கு அதிகரிக்கப் பட்டு ஆயிரத்தைநூறு கோடிகளாகப் பெரிய மனதுடன், காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் இவ்வளவு ஒற்றுமையாக இந்த விஷயத்தில் ஒன்று சேரவில்லை என்றால் இந்தப் "பெருந்தன்மை" கூட வந்திருக்காது என்பது ஒருபுறம்!

சட்ட வரைவில்,அணு உலை நிறுவும் நிறுவனங்களைத் தப்ப வைக்கிற விதத்தில், விபத்து ஏற்படுத்தும் நோக்கத்துடன் என்று இருந்த வார்த்தையை நீக்கவும் அரசு சம்மதித்திருக்கிறதாம்! 


ஒரு சட்டம் என்ன நோக்கத்திற்காக, என்னென்ன விஷயங்களைத் தொட்டு இயற்றப்பட்டிருக்கிறது என்பதையெல்லாம் தெளிவாக வரையறை செய்து, யார், எதற்கு,எந்த அளவுக்குப் பொறுப்பு என்பதைத் தீர்மானிக்க உதவியாக இயற்றப் படுவதற்குப் பதிலாக, குறைகளோடு தான் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது என்பதும், திருத்தங்களைப் "பெருந்தன்மையோடு" ஏற்றுக் கொண்ட விதம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது என்றே தோன்றுகிறது.



"Yet few questions are being asked as to why the government is in an unseemly rush to pass such legislation and join the Convention on Supplementary Compensation, which hasn’t even come into force.

With the fundamental issues having been eclipsed from the debate, the focus has fallen on the right to recourse in the operator’s fiduciary liability policy. The government’s repeated attempts to dilute the right-to-recourse provisions against suppliers have exposed a disturbing dimension of the relationship between the executive branch and Parliament. First, a key word, “and”, was mysteriously added to the parliamentary standing committee’s text to water down those provisions.

When a furor greeted that surreptitious insertion, the government simply decided to supplant the committee’s agreed text with a new formulation that sets the right-to-recourse bar so high (“the nuclear incident has resulted as a consequence of an act of supplier or his employees, done with the intent to cause nuclear damage…”) as to render that right infructuous. All this raises troubling questions about the executive branch’s persistent moves to nullify a parliamentary committee’s work.

Broadly, the nuclear deal, which was pushed through without building “the broadest possible national consensus” that the PM had promised, has come to symbolize the decline of Indian politics, with self-aggrandizement replacing principles as the guiding philosophy for parties and national interests taking a back seat."

இது நேற்றைய எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் திரு பிரம்ம செலானி எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி. முழுக் கட்டுரையையும் வாசிக்க



மகாராஷ்டிரா மாநிலத்தில் தாபோல் மின் உற்பத்தி நிலைய விவகாரத்தில் அமெரிக்க என்ரான் (தற்போது திவாலாகி விட்டது) நிறுவனத்திடம் ஏமாந்த கதையிலிருந்து இந்திய அரசோ, இந்திய அரசியல்வாதிகளோ எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. ஒன்று இரண்டல்ல, நாற்பது அணு உலைகளை அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து வாங்க இந்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இப்படி மொத்தக் கொள்முதல் செய்கிற எந்த ஒரு வாடிக்கையாளரையும், தயாரிப்பாளர்கள் எளிதில் ஒதுக்கி விட முடியாது! இந்த அளவுக்கு வாங்கும் வாடிக்கையாளர், மிகவும் முக்கியமானவராகத் தான் இருப்பார்! 

ஆனால், இங்கேயோ, விஷயமே தலைகீழாகத் தான் இருக்கிறது! அமெரிக்க அரசு நம்முடைய கைகளைப் பின்னால் முறுக்கி, வலுக் கட்டாயமாக, நஷ்ட ஈடு தரும் பொறுப்பில் இருந்து அமெரிக்க நிறுவனங்களை வெகு கவனமாகப் பாதுகாத்திருக்கிறது, நிர்பந்தம் செய்திருக்கிறது. 

அணு உலைகளை நிறுவி நிர்வகிக்கப் போகிற நான்கு அமெரிக்க நிறுவனங்களுக்குச் சாதகமாகவே, (இந்திய மக்களது வரிப் பணத்தில் இருந்து) கடைத் தேங்காயை எடுத்து அமெரிக்கப் பெருச்சாளிகளுக்குப் பலகாரம் சுட்டுப் போடுகிற வேலையாகத் தான் ஐ மு கூட்டணிக் குழப்ப அரசின், காங்கிரஸ் கட்சியின் செயல் பாடு இருக்கிறது என்பது நிச்சயமாகப் பெருமைப் படக்கூடிய விஷயம் அல்ல!

அணு உலைகளால் தயாரிக்கப்படும் மின்சாரத்தைப் புறக்கணிக்க முடியாது என்று ஒரு வாதம் வலுவாக முன்வைக்கப் படுகிறது. சரிதான்! அதைவிட, இந்திய மக்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியமானது இல்லையா?

இன்னொரு போபாலை, அல்லது பேரழிவை இந்த தேசம் தாங்குமா?

*படங்கள் இணையத்தில் இருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டவை. உரிமை அதை உருவாக்கியவர்களுக்கே!  




 

3 comments:

  1. இவர்களுக்கு வெளியில் சொல்ல முடியாத வேறு ஏதோ ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும் என்றே நடப்புக்கள் உணர்த்துகின்றன.இவர்களுக்கு மிக மிக முக்கியம் சோனியா, ராகுல், ப்ரியங்க போன்றோர்களின் நலன் ,பாதுகாப்பு மட்டுமே. அணுஉலை விபத்து என்றால் இவர்கள் எவரும் பாதிக்கபோவது இல்லை. அடுத்த நிமிடமே தனி விமானத்தில் பறந்து விடுவார்கள்.எனவே வருவது வரட்டும் . என்ற எண்ணம் தவிர வேறு ஒரு நல்ல காரணம் இல்லை.

    --

    ReplyDelete
  2. மானம் கெட்ட மன்மோகன் சிங் அரசு பற்றி மிக சரியான பதிவு

    ReplyDelete
  3. வாருங்கள் திரு மாணிக்கம்!

    சோனியா, மற்றும் குடும்பத்தினரின் சுய நலன்களைத் தாண்டியும் விஷயத்தின் விபரீதம் பரந்து விரிகிறது. ஒரு அரசு, அதை நிர்வகிக்கும் கட்சி, அல்லது கூட்டணிக்குத் தங்கள் தேசத்தின் இறையாண்மையைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியவில்லை, அல்லது அவர்கள் பதவியில் இருப்பதே இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. இது எப்படி ஏற்படுகிறது?

    அரசு, நிர்வாகம், சட்ட அமைப்புக்கு உட்பட்டவை. நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்தது, நீதிமன்றம் சட்டத்தைப் பாதுகாக்க, அது மீறப்படும்போது பரிகாரம் சொல்ல, தடை செய்ய அதிகாரம் படைத்தது. இங்கே சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளவர்களாக, நாடாளுமன்றத்திற்குப் பிரதிநிதிகளாக இருக்கும் எவராவது, தனது பொறுப்பு, கடமையை உணர்ந்தவராக இருக்கிறாரா? ஒரு சட்ட முன்வரைவை, அறிமுகப்படுத்தும்போது, மகாகனம் பொருந்திய மக்கள் பிரதிநிதி, அதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறாரா, புரிந்துகொண்ட அதன் சாதக பாதகங்களை விவாதிக்கத் தயாராக, தகுதி உள்ளவராக இருக்கிறாரா? குறைந்தபட்சம், நாடாளுமன்றத்திற்கு கட் அடிக்காமல் ஒழுங்காக வருகிறாரா?

    இந்திரா காண்டி காலத்தில் இருந்தே இந்தச் சீரழிவு பெரிய அளவில், வெளிப்படையாகத் தொடங்கி விட்டது! இன்னும் சரியாகச் சொல்லப் போனால், நேரு காலம் முதலே அப்படித்தான் என்பதும் தெரியும்.

    திரு சுந்தர்!

    மானங்கெட்ட என்ற வார்த்தைகள் எல்லாம் அதீதம்!

    அரசியலுக்குள் நுழையும்போதே இந்திய அரசியல்வாதிகள் சூடு, சுரணை, வெட்கம், நியாய உணர்ச்சி, சொந்த புத்தி இப்படி எல்லாவற்றையும் உதிர்த்து விட்டு அல்லது தியாகம் செய்து விட்டுத் தான் வருகிறார்கள் என்றாலும், ப்ரோபைலில் சொந்த விவரம் எதுவுமில்லாமல், ஏதோ ஒரு பெயருடன் கூடின அனானியாக இப்படி வந்து கருத்துச் சொல்வது சரிதானா?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!