கனிமொழி கைது! வரும் ஆனால் வராது தானா?!


"நான் அவ்வளவு ஈஸியான டார்கெட் இல்லை!
 
அப்படி எவரும் நினைத்துவிடக் கூடாது!
 
சிபிஐ கைதுசெய்ய நினைக்குமானால் அதை சட்டப்படி எதிர் கொள்ளுவோம்!
 
முன்ஜாமீன் கேட்கப் போவதில்லை!"

இதெல்லாம் சற்று  நேரத்திற்கு முன்னால்  கனிமொழி சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சொன்னது! 
New Delhi:  Kanimozhi, the daughter of the Tamil Nadu Chief Minister, expects to be sent to jail tomorrow at the request of the CBI which is investigating her role in the 2G scam. Speaking to NDTV, she said today, "I am prepared to face the worst." Adding that she does not expect to be granted bail, she said, "I do not expect leniency because I am a woman."

இது என்டிடீவீ  பிற்பகல் (இரண்டுமணி முப்பத்தெட்டு நிமிடம்) வெளியிட்ட செய்தியில் இருப்பது. இரண்டு பேட்டிகளும் ஒன்றுக்கொன்று முரணாக  இருக்கிறது.

இந்த செய்திப்படி, மோசமான சூழலையும் சந்திக்கத் தயாராக இருப்பதாக, ஜாமீன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு  இல்லாததாக, பெண் என்பதால் கொஞ்சம் தாட்சணியத்தை எதிர்பார்க்கவில்லை என்பதாக இந்த செய்தி சொல்கிறது! கவிஞராக மட்டுமே அறியப்பட்ட கனிமொழி சங்கமம் நடத்திய அனுபவத்தில், தந்தையையும் மிஞ்சிய தேர்ந்த அரசியல் வாதியாகி விடுவார் என்றே தோன்றுகிறது! 

இந்த சானலில் கனிமொழி சொல்வதையும் கொஞ்சம் பார்த்துவிடுங்கள்! விசாரிக்கப்பட வேண்டியவர்கள் எவரெவரோ இருக்க  என்னை மட்டும் ஏன் குறி வைக்கிறார்கள் என்றும் கேட்கிறார்!

எதிர்பார்த்தது போலவே, காங்கிரசுடனான கூட்டணி தர்மம் கொஞ்சம் விட்டுக் கொடுத்தது போலத்தான் தற்போதைய தகவல்கள் இருக்கின்றன. ஆனாலும், உச்சநீதிமன்றத்தின் நேரடிக் கண் காணிப்பின் கீழ் இருக்கும்  2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையில், தன்னுடைய கையைச் சுட்டுக் கொள்ளாமல் காங்கிரஸ் அவ்வளவு  உதவிகரமாக இருக்கமுடியாது என்ற நிலையும் இருக்கிறது. கே ஜி பாலகிருஷ்ணன் போன்ற கறைபடிந்த தலைமைநீதிபதி போல ஒருவர் இப்போதும் இருந்திருந்தால், ஒருவேளை அது சாத்தியமாகியிருக்கலாம். இப்போது அப்படி இல்லை என்பதுதான் ஆறுதலான செய்தி!


முதலில் கனிமொழியுடன் கருணாநிதியும் கூடவே செல்வார் என்றுதகவல்கள் வந்தன. இப்போது அதற்கு அவசியமில்லை என்றாகிவிட்டது போலும்! ராசாத்தி, தமிழக அமைச்சர் பூங்கோதையுடன் நேற்றே டில்லிக்குப் போய்விட்டார். திமுகவின் பதினெட்டு எம்பிக்களும், கனிமொழி நாளை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகும் போது கூடவே இருப்பார்கள் என்றும், பிஜேபியின் ராம்ஜேத் மலானி கனிமொழிக்காக ஆஜராகக் கூடும் என்று செய்திகள் வந்தன. சில சலுகைகளுக்காகவும் காசுக்காகவும்  கூவுகிற ஒரு கூட்டம்  இந்த பத்துநாட்களாக ஓவர்டைம் வேலை செய்தது செய்தித்தாட்களில் பெயர்களோடு கசிந்தன.

இதுஒருபுறமிருக்க, சோ போன்ற சட்டஞானமும் அரசியல் நடப்புக்களை அலசத் தெரிந்தவர்களும் கூட, கனிமொழி மாது சிபிஐ அடுக்கியிருக்கிற குற்றச்சாட்டுக்கள் அவ்வளவு  வலுவானதாக இல்லை என்று சொல்வதையும் கொஞ்சம் கவலையோடு கவனிக்க வேண்டியிருக்கிறது. கைப்புண்ணுக்குக் கூட, நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிற விதத்தில் நிரூபணம் வேண்டியிருக்கிறது. நாவரசு கொலை வழக்கில், ஜான்டேவிடுகள் தப்பித்த மாதிரி,  சரியான ஆதாரங்கள், கவனம் இல்லாமல் குற்றவாளிகளை அவ்வளவு எளிதாக தண்டித்து விட முடியாத படிதான் நம்முடைய அமைப்புக்களில் உள்ள கோளாறுகள் இருக்கின்றன.


1,76,000,00,00,000 ரூபாய்கள்! 
நூற்றெழுபத்தாறுக்குப் பின்னல் பத்து சைபர்கள்! ஒரு கோடி என்பது ஒன்றுக்குப் பின்னால் ஏழு சைபர்கள்! எண்ணுவது எவ்வளவு சிரமம் என்பதை ஒன்று முதல் பத்தாயிரம் வரை வாய் விட்டு சொல்லிப் பாருங்கள்! இந்த சைபர்கள் எவ்வளவு பெரிய மலைகளாக இருக்கின்றன என்பது ஓரளவுக்குப் புரியும்.

2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் வருமானவரித்துறை விசாரணை எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பதை விசாரிக்க நடந்த இன்றைய அமர்வில் இத்தனை சைபர்களை எங்கள் வாழ்நாளிலேயே கண்டதில்லை என்று தன்னுடைய அதிர்ச்சியைத் தெரிவித்திருக்கிற உச்ச நீதிமன்றம் பொதுநல வழக்குத் தொடர்ந்திருக்கிற வாதிகளுக்கு ஒரு உத்தரவாதத்தையும் சேர்த்தே சொல்லியிருக்கிறது! 
 

The court also assured the petitioners, CPIL and others, that all the persons involved in the scam will be brought to justice irrespective of their wealth, position and power.



"You (petitioner) rest assured that no person, irrespective of their chair and wealth, could get immunity in any way," the bench said, adding "investigation in the case has made some progress which would not not have been possible in normal circumstances."

யாராக இருந்தாலும் சரி, பணம் அல்லது பதவியை வைத்துத்  தப்பிவிட முடியாது என்ற உத்தரவாதத்தைத்தருகிறோம்!இது உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி திரு ஜி எஸ் சிங்வி, ஏ கே கங்குலி இருவர் கொண்ட பெஞ்ச் சொன்னது!

""நெஞ்சுக்கு......... நீதி"!  

விரைவிலேயே கிடைத்துவிடும் என்று நம்பிக்கையளிக்கிற சில வெளிச்சக் கோடுகளும் இந்த தேசத்தில் இன்னமும் இருப்பது ஒன்றுதான் ஜனங்களுக்கு விடிவுகாலம் விரைவில் வரும் என்ற நம்பிக்கையைத்தந்து கொண்டிருக்கிறது.

இது கொஞ்சம் ஆறிப்போன ஒன்று தான்! ஆனாலும், திரைமறைவில் நடந்ததென்ன என்பதற்கு இங்கேயே ஒரு க்ளூ இருக்கிறது போலத் தெரிகிறதே!

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுக எம்பி கனிமொழி தவிர, கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டி, சினியுக் பிலிம்ஸ் புரமோட்டர் கரீம் மொரானி ஆகியோரும் நாளை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.இந் நிலையில் கரீம் மொரானி முன்ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், தன்னை சிபிஐ கைது செய்ய வாய்ப்பிருப்பதாக மொரானி கூறி்யுள்ளார்.

இந்த ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நாங்கள் மொரானியை கைது செய்வோம் என்று கூறுவது தவறான கருத்து ('misconceived') என்றார்.  இதனால் அவரை சிபிஐ கைது செய்ய வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி தரப்பட்டது தொடர்பான பண பரிவர்த்தனை வழக்கில் தான் மொரானியும், கனிமொழியும் சிபிஐ குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்பட்படுள்ளனர். இதில் மொரானியை சிபிஐ கைது செய்யும் திட்டத்தில் இல்லாவிட்டால், அதே அடிப்படையில் கனிமொழியும் கைதாக வாய்ப்பில்லை என்ற சிறிய தைரியத்தில் திமுக உள்ளது.

அமலாக்கப் பிரிவிடம் கனிமொழி ஆஜர் எப்போது?:

இதே வழக்கில் இன்று (வியாழக்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் நிர்வாகி உஸ்மான் பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா, குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குனர் ராஜீவ் அகர்வால், சினியுக் நிறுவன இயக்குனர் கரீம் மொரானி ஆகியோருக்கும் சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act-PMLA) கீழ் இந்த சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.மேலும் பணப் பரிவர்த்தனைகள், வருவாய் ஆதாரங்கள், சொத்துகள் பற்றிய ஆவணங்களையும் கனிமொழி உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது.

2ஜி  ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் முறைகேடாக லாபமடைந்த டி.பி.ரியால்டி நிறுவனம், தனது குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனம் மற்றும் சினியுக் நிறுவனம் ஆகிய துணை நிறுவனங்கள் மூலமாக கலைஞர் டி.விக்கு ரூ.214 கோடி நிதியுதவி அளித்தது.இது தொடர்பாக கலைஞர் டி.வியில் தலா 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், சிபிஐ நீதிமன்றத்தில் நாளை ஆஜராக வேண்டிய நிலையில் உள்ள கனிமொழி இன்று அமலாக்கப் பிரிவினரிடம் ஆஜராக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.




No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!