பட்டாசு எடு! வெடித்துக் கொண்டாடு! தயாநிதி மாறனை ஒருவழி பண்ணிட்டாங்கோ!



கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளுகிற வரைக்கும் வலிக்காத மாதிரியே, சொரணை கேட்டுக் கிடந்தாயிற்று!
இப்போது வேறு வழி, சப்போர்ட் எதுவும் இல்லை என்பதால் தயாநிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்! ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து அரைமணி நேரம் ஆகிவிட்டது! இவர் ராஜினாமா செய்யவில்லை என்றால், அவர்களே நீக்கி இருப்பார்கள்! காலை நிலவரம், தெலங்கானா பிரச்சினையைக் காரணம் காட்டி அமைச்சரவை மாற்றம் தள்ளிப்போடப் படலாம் என்பதாகத் தான் இருந்தது. மாறன் விஷயத்தில் தனிக் கருணை எதுவும் இருப்பதற்கான தடையமோ, அல்லது மாறாகவோ எதுவும் தெரியவில்லை.அம்மா டில்லியில் இருந்து கொண்டு கேபிள் விவகாரத்தைக் கையில் எடுக்கிறேன் என்றார். காங்கிரஸ் காரர்களுக்கும் ரோஷம் வந்து விட்டது போல் தான் இருக்கிறது! தயாநிதியை மூட்டை முடிச்சைத் தூக்கிக் கொண்டு நீயாகப் போகிறாயா, அல்லது நாங்களே தூக்கிஎறியட்டுமா என்று கேட்டு விட்டார்கள் போல!

ஸ்வீட் எடு கொண்டாடு என்ற விளம்பரம் மாதிரி, சன் பிக்சர்ஸ் சாக்சேனா கைதுக்கே பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்களாம்! தயாநிதி ராஜினாமாவுக்கு என்ன செய்வார்கள், இன்னொரு தீபாவளி தானா?!

கனிமொழிக்கெதிராக இருப்பதை விட வலுவான சாட்சியங்கள், வாக்குமூலங்கள் தயாநிதி ஊழல் விவகாரத்தில் அதிகமாக இருக்கிறது.அஹமத் படேல் போன்ற காங்கிரஸ் தரகர்களை வைத்து இத்தனை நாள் பிழைப்பை நடத்திவந்தது இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. பேரனைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடிய முக தாத்தா இப்போது முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்! 


அவர் கவலை அவருக்கு! இரண்டு பெண்டாட்டிக் காரன் இருவரிடமும் மாட்டிக் கொண்டு முழிக்கிற கதையையே சரியாக ஸ்க்ரிப்ட் எழுதி சமாளிக்க முடியவில்லை. கதைவசனம் எழுதி எடுபட்ட காலம் எல்லாம் மலையேறி முப்பதாண்டுகளுக்கும் மேலாகிறது. இப்போதெல்லாம் உளியின் ஓசை என்றாலே காத தூரம் ஓடுகிறார்கள்!திமுகவின் பரிதாபமான தோல்விக்கு, முகவின் கதைவசனம் ஒரு முக்கியமான காரணம்!


மாவட்ட செயலாளர்களை அப்படியே ஓரம் கட்டிவிட்டு, நாடாளு மன்றத் தொகுதி செயலாளர்களாக நியமனம் செய்யலாம் என்ற யோசனைக்கும் இப்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது. 

அஞ்சாநெஞ்சன் என்று அடாவடித்தனம் செய்துகொண்டிருந்த மகனுக்கு இப்போது மத்திய அமைச்சர் பதவியின் பாதுகாப்புத் தேவைப் படுகிறது.உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சராக நாடாளுமன்றத்துக்கு அதிகம் போகாமலேயே, அமைச்சர் பொறுப்பை சரிவர செய்யாமலேயே ஒட்டிக் கொண்டிருந்தவருக்கும் இப்போது சங்கடம்! பொறுப்பு எதுவுமில்லாத அமைச்சராக இருந்தால் கூடப் போதும்!

தர்மகர்மாதிபதி என்று சனியை சொல்வதுண்டு! ஒருவரைப் பிடித்தால் இப்படித்தான், மொத்தமாகப் பிடித்து ஒரு ஆட்டு  ஆட்டும்! இத்தனை நாள் தமிழகத்தைப் பிடித்திருந்தது, விலகி திமுகவைப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

அதெல்லாம் சரிதான்!

ஊமை ஊரைக் கெடுக்கும் என்ற முதுமொழிக்கேற்ப ஊமையாக இருந்தே இந்த தேசத்தை ஒரு ஏழாண்டுகாலமாக கெடுத்துக் கொண்டிருக்கும் டம்மிப் பீஸ் மாட்டுகிற நாள் என்றோ, அன்றைக்கே இந்த தேசத்துக்கும் விடிவு காலம் பிறந்துவிடும்!

அந்தத் திருநாள் என்று வரும்?!








பதிவு பிடித்திருந்தால் பக்கத்தில் தெரியும் ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்திப் பகிர்ந்துகொள்ளுங்கள்!

1 comment:

  1. ஒரு நாள் உலகம் நீதி பெரும் ! திரு நாள் நிகழும் சேதி வரும் !!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!