சண்டேன்னா மூணு! த்ரீ இன் ஒன்! திமுக, ஊழல், பொதுக்குழு!


புலி வருது புலி வருது என்று டமாரங்கள் ஒலித்தாலும், எலிதான் வந்தது, கூடவே கிலியும் வந்தது என்ற ரீதியில் தான், திமுகவின் இரண்டுநாள் பொதுக் குழு விவகாரம் எதிர்பார்த்தபடியே நடந்து முடிந்திருக்கிறது.

ஸ்டாலின்-அழகிரி இருவருக்கிடையிலான தலைமையைக் கைப் பற்றுவதில் இருந்த போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு, ஒன்றுமே நடக்காதமாதிரி வெளியே கருணாநிதியே கழகத்தின் ஆயுட்காலத் தலைவர் என்று அறிவிக்கப் பட்டிருப்பதில் அழகிரி தற்காலிகமாக வெற்றி பெற்றிருக்கிற தோற்றம் உருவாக்கப் பட்டிருக்கிறது. 


ன்றைக்கு ஞாயிறன்று நடந்துகொண்ட கூட்டத்தில் அழகிரி கலந்து கொள்ளாமல் புறக்கணித்துத் தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொண்டிருக்கிறார். ராசாத்தி தரப்பும்,அழகிரியோடு சேர்ந்து ஸ்டாலின் கை ஓங்காமல் பார்த்துக் கொண்டதில் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறது.

"
குடும்பத்தில் குழப்பம் விளைவிக்கப்பார்க்கிறாயா" என்று தலைவரின் கோபத்துக்கு ஆளாகி, அப்புறம் சமாதானப்படுத்தப் பட்ட ஆஸ்தான ஜோக்கர் துரை முருகனும், எப்போதுமே செகண்ட் பிடில் வாசிக்கும் அன்பழகனும் ஸ்டாலினுக்கு எதிராகத் தலைவரின் குரலை எதிரொலித்திருக்கிறார்கள். கதைவசனகர்த்தா இந்த விஷயத்தில் சாமர்த்தியமாக ஸ்க்ரிப்ட் எழுதி இருக்கிறார்!

கூட்டத்தில் இருபத்தைந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டிருக்கின்றன. நிறைவேற்றப் பட்டிருக்கின்றன என்று சொல்வது தமாஷாகத்தான் இருக்கும்!


ப்போதும் போல இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கருணாநிதிக்கே வழங்கப் பட்டிருப்பதும், கூட்டணி தொடருமா என்ற கேள்வியை வேண்டுமென்றே பரபரப்பாக எழுப்பிவிட்டுக் கடைசியில் உப்புச் சப்பில்லாமல் காங்கிரசுடன் கூட்டணி தொடரும் என்று முனக வேண்டிய பரிதாபமான நிலையில் திமுக இருக்கிறது. கூட்டத்தில் கூட்டணியை முறிக்க வேண்டும் என்று பலரையும் பேசவைத்துவிட்டு, அப்புறமாகக் கூட்டணி தொடரும் என்று தலைவர் அறிவிப்பது இப்போது புதிதாக நடந்து விடவில்லை! 

ந்தக் கதை வசனம் ஏற்கெனெவே பலமுறை அரங்கேற்றப்பட்டு சந்தி சிரிக்கும் படியான பிறகும் வசனகர்த்தா தன்னுடைய உளியின் ஓசையைத் தொடர்ந்துகொண்டே இருப்பது சரியான காமெடிக் கொடுமை!


கூட்டணி தர்மத்தில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு மந்திரிப் பதவி காலியாக விடப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் சொன்னாலும், அதை ஏற்றுக் கொள்ள முடியாத தர்மசங்கடத்தில் தலைமை இருக்கிறது. பொதுக் குழுவைக் கூட்டி அதில் முடிவெடுப்போம் என்று சொன்ன கருணாநிதி, பொதுக் குழுவிலும்  அதைக் குறித்து எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. காலி இடத்தை நிரப்பப் போவதில்லை என்று மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிபிஐ கனிமொழி விவகாரத்தில் ஒருதலைப்பட்சமாக, இயற்கை நீதிக்கு முரணாக செயல்படுவதாக, அந்த அமைப்புக்குக் கண்டனம் தெரிவித்துத் தீர்மானம்! தீர்மானத்தின் உண்மையான பொருள், சிபிஐயைக்  கையில் வைத்திருக்கும் மத்திய அரசு, தங்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்பதுதான்! மத்திய அரசைக் கண்டிக்கிறோம் என்று சொல்லக்கூடத் துணிவில்லை! அப்படி ஒருதலைப்பட்சமாக செயல்படும் கூட்டணியில் இருந்து வெளியேறி, தங்களுடைய சுய மரியாதையைக் காப்பாற்றிக் கொள்கிற துணிச்சலும் இல்லை!

ந்தத் தீர்மானத்தின் உண்மையான அர்த்தம், ஐயா, எப்படியாவது கனிமொழியை ஜாமீனிலாவது வெளியே வர உதவி செய்யுங்கள் என்பது மட்டும் தான்!

கொஞ்சம் மிரட்டலாக இருக்கும் ஒரே தீர்மானம், பிரதமரும் லோக் பால் விசாரணைக்குள் வரவேண்டும் என்பது தான்!ஆனால், காங்கிரஸ் இதை சட்டை செய்யாது என்று தீர்மானம் போட வசனம் எழுதியவருக்குத்  தெரிந்தே இருப்பது காமெடியா?அல்லது கையறு நிலையா?

காங்கிரசிடம் கோரிக்கை வைக்கும் நிலையில் கூட திமுக இல்லை, கையேந்த வேண்டிய பரிதாபமான நிலையில் தானிருக்கிறது. நாளை வீரபாண்டி ஆறுமுகம், நாளை மறுநாள் கலாநிதி மாறன், அடுத்து கே என் நேரு,அப்புறம் அழகிரி என்று ஒருவர் பின் ஒருவராகக் கிரிமினல் வழக்குகளில் கம்பி எண்ண வேண்டிய நிலையில் இருந்து கொண்டு, காங்கிரஸ் ஒன்றைத்தான் ஆபத்பாந்தவனாகப் பிடித்துத் தொங்க வேண்டி இருக்கிறது! 

காங்கிரசோ, ஊழல் பழியை இவர்களே முழுக்கச் சுமக்கட்டும், ஒதுங்கி நின்று தாங்கள் உத்தமர்களாகிவிடலாம் என்று கணக்குப் பண்ணிக் கொண்டிருக்கிறது. 

மு கூட்டணிக் குழப்பத்தின் கூட்டணி தர்மம் இதுதான்!

காங்கிரஸ் தயவு இல்லாமல் திமுக பிழைத்திருக்க முடியுமா? இங்கே!


காலையில் கொஞ்சம் அப்டேட்ஸ்: தினமணிக்கு  நன்றியுடன்!

ஒட்ட விரும்பும் திமுக, வெட்ட விரும்பும் காங்கிரஸ்...!

First Published : 25 Jul 2011 02:12:00 AM IST


சென்னை, ஜூலை 24: காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக் கொள்ள திமுக தலைமை விரும்பாவிட்டாலும், திமுக உறவே கூடாது என்று காங்கிரஸ் தரப்பில் தீவிரமாக வலியுறுத்தப்படுகிறது.  கோவையில் ஞாயிற்றுக்கிழமை திமுக பொதுக் குழு கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக் கட்சியின் தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சியுடன் தங்களுக்கு அதிருப்தி எதுவும் இல்லை என்றாலும், மாநில நிர்வாகிகள் சிலர் திமுகவினர் மனம் புண்படும்படி பேசி வருவது குறித்து பொதுக் குழு கூட்டத்தில் விவாதிக்கப் பட்டதாகத் தெரிவித்தார்.  அந்த விவாதங்களுக்குப் பிறகு, காங்கிரஸ் - திமுக உறவு தொடரும் என்றும், மத்திய அமைச்சரவையில் திமுகவுக்காக ஒதுக்கப் பட்டுள்ள இரண்டு அமைச்சர் பதவிகளுக்கு யாரையும் பரிந்துரைக்காமல் அதை காலியாகவே வைத்துக் கொள்ளப் போவதாகவும் கூறினார் கருணாநிதி. 

சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததில் இருந்தே, திமுக மீது மக்களுக்கு இருந்த வெறுப்பால்தான் அந்த அணி தோற்றது என காங்கிரஸ், பா.ம.க. தரப்பினர் கூறி வருகின்றனர்.  திமுகவுடன் உறவு இனி தேவையில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா உள்ளிட்டோர் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர்.  

காங்கிரஸ் கூட்டணி தொடரும் என கருணாநிதி அறிவித்த அதே ஞாயிற்றுக்  கிழமை ஈரோட்டில் நடந்த இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் இதற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  தேர்தலுக்கு முன்பு இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த பாதயாத்திரையில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் இந்தக் கூட்டத்தில், "உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்தே போட்டியிட வேண்டும்'' என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.  

இதே நாளில் கோபியில் நடந்த காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் அல்லது திமுகவைத் தவிர்த்து மேலிடம் கூறும் எந்த நிலைப்பாட்டிற்கும் தயாராக இருக்கிறோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அந்தக் கூட்டத்தில் பேசிய இளங்கோவன், கடந்த தேர்தலில் மேலிடத்துக் கட்டளையை ஏற்று, சேரக் கூடாத இடத்தில் சேர்ந்ததுதான் தோல்விக்குக் காரணம் என்றார்.  

மாநிலத்தில் உள்ள பெரிய தலைவர்கள் கெüரவம் பார்க்காமல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வென்று காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றார் அவர்.  காங்கிரஸ் கட்சியில் இருந்து சிலர் பிரிந்து சென்ற நிலையில் உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தபோது 12 சதவீத வாக்குகளை காங்கிரஸ் பெற்றது. இப்போது ஒற்றுமையாக இருப்பதால் 20 சதவீத வாக்குகளைப் பெற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  
கூட்டணி அமைக்க வாய்ப்பு கிடைத்தால் திமுக அல்லாத வேறு கட்சிகளுடன் வேண்டுமானால் கூட்டணி அமைக்கலாம் என இந்த இரு கூட்டங்களிலும் தொண்டர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.  

தேர்தல் முடிவு வெளியான சில நாள்களில், அதுபற்றிக் குறிப்பிட்ட கருணாநிதி "கூடா நட்பால் நாம் தோற்றோம்'' என்று கூறினார்.  அதைத் தொடர்ந்து "சகவாச தோஷமே தோல்விக்குக் காரணம்'' என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். 

திமுக தலையெடுக்கவிடாமல் செய்ய ஜெயலலிதா ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை போல! சமச்சீர், பொய்வழக்கு,சட்டப்படி பொய் வழக்குகளைத் தகர்த்தெறிவோம் என்றெல்லாம் டமாரங்கள் கொஞ்சம் மெதுவாகத்தான் ஒலித்தன! 

கிழிந்துபோன டமாரங்களை வைத்து இன்னும் எத்தனை நாளைக்குத் தான் முரசொலிக்க முடியும்?

ஆடிய ஆட்டம் என்ன? தேடிய செல்வம் என்ன?
கேடிகள் கைகளில் தேசம் சிக்கிச் சீரழிந்ததும் என்ன?
டாட்டாவுக்கும் அம்பானிக்கும் கிளீன் சிட்!அவங்க எந்தத்
தப்புமே செய்யலையாம்! உத்தமராம்!சிபிஐ சொல்லுது.

...............காகித ஓடம், கடலலை மீது போவது போலே மூவரும் போவோம்!

இது அன்றைக்கே சொன்னது! 

திப்பு மரியாதை இருக்கும்போதே பொதுவாழ்வில் இருந்து ஒதுங்கிக் கொள்கிற வரம் சிலருக்குத்தான் கிடைக்கும் போல! 

ருணாநிதிக்கு அந்தக் கொடுப்பினை இல்லை என்று சொன்னால் உடன்பிறப்புக்களுக்குக் கோபம் வரும்! ஆனால், உண்மை அது தானே! அது அவர்களுக்கே தெரியுமே!







  
திவு பிடித்திருக்கிறதா? பிடித்திருந்தால், அருகில் உள்ள ப்ளஸ் பட்டனை அழுத்தித் தெரிவியுங்களேன்!
 

3 comments:

  1. அன்பரே ஒவ்வொன்றும் சாட்டையடி, சொல்ரக்கு ஆள் இல்லை, அதன் இப்படி

    ReplyDelete
  2. பதிவு பிடித்திருக்கிறதா? பிடித்திருந்தால், அருகில் உள்ள ப்ளஸ் பட்டனை அழுத்தித் தெரிவியுங்களேன்!

    இந்த லிங்க் எப்படி வைப்பது என சொல்லித்தர முடியுமாஆ.....

    ReplyDelete
  3. நல்ல விஷயங்களுக்கு மவுசு எப்பவும் உண்டு சகோ ....

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!