Thursday, August 18, 2011

உட்டாலக்கடி கிரி கிரி! சவால் விடும் அழகிரி!

ஹிட்லர் என்று சொல்லிக் கொள்வது கூடப் பெருமையாக....! அழகிரி ஆதரவாளர்கள் போஸ்டர்  
தேர்தலில் தோற்றபிறகு மே மாதம் முதல் அடக்கி வாசித்துக் கொண்டிருந்த மதுரையின் முன்னாள் சுல்தான், பீவி இருவருமே எதிர் சவால் விடுகிற வாரமாக இந்த வாரம்ஆனது போல! 
மதுரையைக்  காலி செய்யும் 'னா, மதுரை சுத்தமாகிறது!, 'னாவின் அடிப்பொடிகள் வரிசையாகக் கைது, பொட்டும், ஒச்சும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஜூவியில் காந்தி அழகிரி வீராவேசப் பேட்டி, இன்றைக்கு அமைச்சருக்கு எச்சரிக்கை என்று மறுபடி பரபரப்புச் செய்திகளில் அ'னா அடிபட ஆரம்பித்திருக்கிறார்!  
சிக்கல்களில் இருந்துவிடுபடப் பேரம் பேசிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு வீராவேசம்!! செய்தி இங்கே! கிரானை‌ட் குவா‌ரிக‌ளி‌ல் கொ‌ள்ளையடி‌த்ததாக கூற‌ப்ப‌ட்ட புகாரு‌க்கான ஆதார‌த்‌தை அமை‌ச்ச‌ர் வேலும‌ணி 15 நா‌ட்களு‌க்கு‌ள் வெ‌ளி‌யிட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ஆதார‌த்தை வெ‌ளி‌யிட தவ‌றினா‌ல் ச‌ட்ட‌ப்படி நடவடி‌க்கை எடு‌க்க‌ப் படு‌ம் எ‌ன்று‌ம் தி.மு.க. தெ‌ன்ம‌ண்டல அமை‌ப்பாளரு‌ம், ம‌த்‌திய அமை‌ச்சரு‌மான மு.க.அழ‌கி‌ரி எ‌ச்ச‌ரி‌க்கை ‌ விடு‌த்து‌ள்ளா‌ர். ச‌ட்‌ட‌ப்பேரவை‌யி‌ல் நே‌ற்று நட‌ந்த தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாத‌த்‌தி‌ல் கல‌ந்து கொ‌ண்டு பே‌சிய பு‌திய த‌மிழக‌ம் உறு‌ப்‌பின‌ர் டாக்டர் கிருஷ்ணசாமி, மதுரை வட்டாரத்தில் கடந்த ஆட்சியில் மு.க.அழகிரி மற்றும் அவரது கூட்டாளிகள் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் குவாரிகளில் கொள்ளையடித்ததாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து அரசு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுமா? அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர். இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த அமைச்சர் வேலுமணி, மு.க.அழகிரி, அவரது கூட்டாளிகள் ஏராளமான குவாரிகளில் இப்படி கொள்ளையடித்தனர். அந்த குவாரிகளின் லைசென்சு தான் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் உரிய தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது எ‌ன்றா‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல் அமை‌ச்ச‌ர் வேலும‌ணி கூ‌றிய புகாரு‌க்கான ஆதார‌த்தை தர‌க்கோ‌ரி சபாநாயரு‌க்கு ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் மு.க.அழ‌கி‌ரி இ‌ன்று கடித‌ம் எழு‌தியு‌ள்ளா‌ர். அ‌தி‌ல், கிரானை‌ட் தொ‌ழி‌லி‌ல் தா‌ம் ஈடுபட ‌வி‌ல்‌லை எ‌ன்று‌ம் தமது புகழு‌க்கு அமை‌ச்ச‌ர் வேலும‌ணி கள‌ங்க‌ம் ஏ‌ற்ப‌டு‌த்‌தி‌வி‌ட்டதாகவு‌ம் அழ‌கி‌ரி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். புகாரு‌க்கான ஆதார‌த்‌தை அமை‌ச்ச‌ர் வேலும‌ணி 15 நா‌ட்களு‌க்கு‌ள் வெ‌ளி‌யிட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ஆதார‌த்தை வெ‌ளி‌யிட தவ‌றினா‌ல் ச‌ட்ட‌ப்படி நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர். ஆடி ஆடித்தானே இந்த கதிக்கு வந்தது!! இன்னும் ஆட்டமா ? இப்படி 'னா ஒருபக்கம் உதார் விட்டுக் கொண்டிருந்தாலும், தயா சைபர் பார்க் சார்பில், அதன் நிர்வாகி மணிகண்டன் நேற்றைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், அந்த நிறுவனத்தின் இயக்குனர்களைக் கைது செய்யப்போவதாக, காவல்துறை வேண்டுமென்றே செய்திகளைப் பரவ விட்டுக் கொண்டிருக்கிறது, இடப்பிரச்சினை தொடர்பாக சிவில் வழக்கு நடைபெற்று வரும்  நிலையில், அதில்  தலையிடாமலிருக்கும்படிக்கு  காவல்துறைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று  ஒரு மனுவைத்தாக்கல் செய்திருந்தார். இயக்குனர்கள் வேறு யாருமில்லை, அழகிரியின் மனைவியும் மகனும் தான்! அரசின் சார்பில் மனுதாரர் மீது (தயா சைபர் பார்க்) அப்படி ஒரு புகாரோ, முதல் தகவல் அறிக்கையோ இல்லை, போலீஸ் தொந்தரவு செய்வதாகக் கூறப்படுவதும் பொய்யானது  என்று சொல்லப்பட்டதை அடுத்து நீதிபதி திரு சுதாகர் வியாழனன்று அந்த மனுவை டிஸ்போஸ் செய்தார்.மனுதாரரின் வழக்கறிஞர் தொடர்ந்து, செய்தித்தாட்களில் அப்படி செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன என்றே வாதம் செய்துகொண்டிருந்தார்.

மனுவை டிஸ்போஸ் செய்கையில் நீதிபதி சொன்ன ஒரு விஷயம் சுவாரசியமானது."பாதிக்கப்படுவதாக சொல்வது எவரோ அந்த நபர் தான் நீதிமன்றத்திற்கு வரவேண்டுமே தவிர, நிறுவனம் அல்ல! நிறுவனத்தின் இயக்குனர்கள் தாங்கள் தொந்தரவு செய்யப் படுவதாகக் கருதினால் காவல்துறை இயக்குனரை அணுகலாம்." நீதிமன்றத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு தடையுத்தரவை வாங்க முயன்ற நிறுவனத்தின் முயற்சிக்கு, பலன் கிடைக்கவில்லை,
அவ்வளவு தான்! அஞ்சா நெஞ்சும் கோழிக்குஞ்சும்! வீராவேசமான பேட்டி, அறிக்கைக்குப் பின்னால் எந்த அளவுக்கு அச்சம் உதறல் இருக்கிறது என்பது மீண்டும் ஒருமுறை அம்பலத்துக்கு வந்திருக்கிறது  என்பதைத் தவிர வேறென்ன சொல்ல!!
அவைக்கே வராமல், மந்திரிக்குண்டான கடமையை செய்யாமல் இருக்கும் அழகிரி மாதிரி ஆசாமிகளைக் கேள்வி கேட்கக் கூட இந்த டம்மிப் பீசுக்கு அதிகாரம் இல்லை! தைரியமும் இல்லை!
மன்மோகன் சிங்குக்கு மாஜிக் தெரியாது, ஆளவும் தெரியாது,சரி! 
இப்படிக் கேவலப்பட்டு, பிரதமர் நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருப்பதை விட மானம் மரியாதையோடு ஓடிப் போவது உத்தமம் என்று கூடவா தெரியாது?   தெரியாது?

1 comment:

  1. ரவுடிகள் ஒழிந்தால் சரி தான்.... நண்றி

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails