சண்டேன்னா மூணு! ஊழலுக்கெதிரான இந்தியாவும் சால்வை அழகரும்!



சென்னையில் அண்ணா ஹசாரே கூட்டத்துக்குத் திரளாக வந்திருந்த கூட்டம் இது. புகைப்படத்துக்கு நன்றி: ஹிந்து நாளிதழ் 


உறுதியான லோக்பால் அமைப்பு இருக்குமேயானால் சிதம்பரம் ஜெயிலுக்குள் இருந்திருப்பார் என்றார் அண்ணா.

 ஊழலுக்கெதிரான இந்தியா! 

இது அண்ணா ஹசாரே, அவரைப் பின்பற்றுகிறவர்களுடைய முழக்கம்
நம்மால் என்ன செய்ய முடியும் என்று சோம்பிக் கிடக்கிறவர்கள் மத்தியில் நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று அண்ணா ஹசாரே போன்றவர்கள முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஊழலுக்கு எதிரான இயக்கம் தொடங்கி போராட்டங்களை நடத்தி வரும் அன்னா ஹசாரே, சென்னைக்கு வந்த போது, பெரியார் தி.க., மே 17 இயக்கம், மக்கள் இயக்கம் உள்ளிட்டவை கருப்புக் கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. இதனால் விமான நிலையத்தில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று காலை பெங்களுருவிலிருந்து சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது அவருக்கு எதிரிப்பு தெரிவித்து பெரியார் தி.க., மே 17 இயக்கம், மக்கள் இயக்கம் உள்ளிட்டவை கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தன. ஜனநாயகத்திற்கு எதிராக, சர்வாதிகாரி போல செயல்படும் அன்னாவும் ஒரு பயங்கரவாதி என்றும், இந்தி வெறியரான அவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என்று பெரியார் தி.க.வினர் குற்றம்சாட்டினர்.

அர்த்தமிழந்து போன  வார்த்தைகள் வெற்றுக் கோஷங்களிலேயே இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த மாதிரியான அமைப்புக்கள், ஆசாமிகள்  கிளம்பிக் கொண்டிருப்பார்கள்?

எனக்கு மலையாளம் தெரியாது!இந்தப் படம் என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள மலையாளம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் உண்டோ!
 
சால்வை அழகர் பானா சீனா விவகாரம் நாளொரு பூதம் பொழுதொரு வதந்திகளால் சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்துக் கிளம்பியபோது,  ராசா மட்டுமே இவ்வளவு பெரிய ஊழலைத் தனியொரு ஆளாகச் செய்திருக்க முடியுமா என்று கருணாநிதி ஆரம்ப நாட்களில் ஒரு கேள்வியை எழுப்பினார். அதை இப்போது அவரே மறந்திருப்பார்!! ஆனால் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ஆராசாவும் சிதம்பரமும் கூட்டாகத்தான் இந்த விவகாரங்களில் ஈடு பட்டிருக்கிறார்கள் என்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருக்கிறார். நிதித்துறையில் இருந்து ஒருவர், சிபிஐ அதிகாரி ஒருவர் ஆக இருவரை சாட்சிகளாக அழைக்கக் கூடும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், வழக்கறிஞராக தன்னுடைய கட்சிக்காரர் ஒருவர் மீது உள்துறை மந்திரியாகவும் இருந்து அதீதக் கரிசனம் காட்டியதாக ஒரு தகவல் கசிந்து நாடாளுமன்றத்தில் ஏகத்துக்கும் அமளி. வேடிக்கை என்னவென்றால், இந்த விவகாரத்தில், இதைக் கசிய விட்டதே சிதம்பரத்தின் மீது அதீதமான அன்பு கொண்ட இன்னொரு அமைச்சர் சகா தான் என்றும் தகவல்கள் சொல்கின்றன.


தேக்குமரம் வளர்ப்பு, பாக்குமரம் வளர்ப்பு என்று அனுபவம் மிக்க நடேசன்கள் ஜனங்களிடமிருந்து பணத்தை சுருட்டி, சவுக்கு குச்சி மாதிரி இருந்த மீனாள் உண்டியலில் கொட்டிய தருணத்திலும்  கூட, அனுபவத்தை பானா சீனா தான் காப்பாற்றியதாக ஒரு தகவல், நினைவு!

தன்னுடைய செல்வாக்கு குறைந்துவிடவில்லை என்று காட்டிக் கொள்வதற்காக, வருகிற 26 ஆம் தேதி சென்னைவருகிற பிரதமரை, அன்று மாலையே காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொள்ள ஏற்பாடும் செய்திருக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தொட்டவர்கள் ஒவ்வொருவரையும் படா
பாடு படுத்திக் கொண்டிருக்கிறது.அவ்வளவு ராசியான ஊழல்!

கேடி பிரதர்ஸ் மட்டும் தான் இது வரை திருட்டுப் பூனைகள் மாதிரி, எந்த செய்தியும் வெளிவராதபடி, கமுக்கமாகக் காரியங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதுவும் கூட ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்றே தோன்றுகிறது.பானா சீனா உள்ளே போக வேண்டுமென்றால் முதலில் போகவேண்டியது தயாநிதி! 


போகிற போக்கைப் பார்த்தால், அப்படி ஒன்றும் அவசியமில்லாத படிக்கு, சால்வை அழகர் தானே முந்திக் கொள்வார் போல இருக்கிறதே!


 

5 comments:

  1. என்ன? பாயசம் செய்து சாப்பிட்ட சந்தோஷமா??
    // சவுக்கு குச்சி மாதிரி இருந்த மீனாள் உண்டியலில் கொட்டிய தருணத்திலும் கூட, அனுபவத்தை பானா சீனா தான் காப்பாற்றியதாக ஒரு தகவல், நினைவு!//

    சிரித்து மாளவில்லை !

    ஜனங்க முன்னாடி, மீடியா முன்னாடி ரொம்பவும் "சீன்" வுட்டா இப்படித்தான் எல்லாம் கடைசியில் நாறிப்பூடும்.

    உங்க மகிழ்ச்சியில் எனக்கும் பங்குண்டுதானே ?

    :)))))))

    ReplyDelete
  2. வாருங்கள் மாணிக்கம்!
    டிசம்பர் 26 அன்று மண்ணுமோகன் சிங்கைக் காரைக்குடிக்கு ழைத்து வந்து தன்னுடைய செல்வாக்கு இன்னமும் மங்கி விடவில்லை என்று "யாருக்கோ" பானா சீனா செய்தி சொல்ல முனைந்திருக்கிறார். அந்த "யாருக்கோ" யார் யார்,அந்தக் கூத்து எப்படி பூமராங் ஆகிறது என்பதையும் பார்த்து விட்டு, சேர்ந்தே கொண்டாடுவோம்!

    ReplyDelete
  3. பாராளும‌ன்ற‌ குளிர்கால‌த் தொட‌ர் டிச‌ம்ப‌ர் 29 வ‌ரை நீட்டிக்க‌ப்ப்ட்டிருக்கிற‌து. டிச‌ம்ப‌ர் 26 பிர‌த‌ம‌ர் வ‌ருகை இருக்குமா? காம‌ராஜ் அர‌ங்க‌ முல்லை பெரியாற்று பேச்சையே, டெல்லிக்கு போன‌வுட‌ன் வாப‌ஸ் வாங்கியாகி விட்டார் இந்த‌ வெள்ளை வேட்டி கொள்ளைய‌ர். எத்த‌னை கால‌ம் தான் ஏமாறுவோம்?

    ReplyDelete
  4. வாருங்கள் திரு. வாசன்!

    http://www.dnaindia.com/india/report_beleaguered-chidambaram-wants-pm-to-bat-for-him_1626606

    இந்த செய்தியும், நேற்று பிரதமரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளைக் குறித்த செய்தி ஒன்றையும் பார்த்தேன்.இதுவரை பிரதமரின் பயணத்திட்டம் அப்படியே இருக்கிறது. இப்போது, முல்லைப்பெரியாறு விவகாரத்தில் பானா சீனா அந்தர் பல்டி அடித்திருப்பது புதிய சர்ச்சை, எதிர்ப்புக்களை இன்னும் கிளறிவிடக் கூடும்.

    கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்து தானே தீர வேண்டும்! பார்ப்போம்

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!