அன்னை என்னும் அற்புதப் பேரொளி

அன்னை என்னும் அற்புதப் பேரொளி, பூமிக்கு வந்த நாள் பிப்ரவரி 21, 1878.
பிப்ரவரி பிறந்தாலே, அன்னையின் அன்பர்களுக்கு ஒரு இனம் புரியாத பரவசம், எதிர்பார்ப்பு மிகுந்து காணப்படும்.அன்னை சரீரத்தில் இருந்த நாட்களில், அவளது பாதங்களில் விழுந்து வணங்கி, அவள் தரும் தரிசன நாள் செய்தியுடன், மலர்களைப் பிரசாதமாக பெறுவதற்காக ஒருவிதத் தவம் ஆரம்பித்து விடும்! அன்னை இன்றைக்கு ஸ்தூல சரீரத்தில் இல்லை என்ற போதிலும், அவளுடைய சாந்நித்தியத்தை உணருகிற பேறு அவளது குழந்தைகளுக்கு இன்றைக்கும் கிடைக்கிறது. 
 
 
நாளைக் காலையில், புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கான அன்பர்கள் வரிசையில் காத்திருந்து பெறுகிற தரிசன நாள் செய்தியின் முகப்புப் பக்கம் இது!
 தரிசன நாள் செய்தியின் உள்பக்கம் இது!
அன்னை-ஸ்ரீ அரவிந்தர் சமாதி மீது வைக்கப்பட்ட மலர்களுடன் அன்பர்களுக்குப் ப்ரசாதமாகக் கிடைக்கு
ம். அன்னையின் ஆசியைக் கோரிக் கடிதம் எழுதுகிறவர்களுக்கும் சில வாரங்களுக்குக் கிடைக்கும்!நேரில் செல்கிற அன்பர்கள், ஸ்ரீ அன்னையின் அறைக்கும் சென்று வர நாளை அனுமதிக்கப்படுவார்கள்.காத்திருந்து, ஸ்ரீ அன்னையின் தரிசனத்தை அனுபவிக்கக் கொடுப்பினை உள்ளவர்களுக்குக் கிடைக்கும் அனுபவமே அலாதி!

எங்கிருந்து அழைத்தபோதிலும்,அங்கே நானிருப்பேன், பிரார்த்தனைகளைச் செவிமடுப்பேன் என்று ஸ்ரீ அன்னை சொல்லியிருக்கிறார்.  அதை அனுபவபூர்வமாக உணர்ந்த அன்பர்கள் ஏராளம்!அன்னையை  புதுச்சேரி சென்று சேவிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் ஒருபக்கம் இருந்தாலும், அந்தக் குறை தெரியாத வண்ணம் அவளது அருள் எப்போது அடியவர்களைக் காத்து நிற்கிறது.

மா மிரா சரணம் மம! ஸ்ரீ அரவிந்த சரணம் மம!

ஓம் ஆனந்தமயி, சைதன்ய
யி, சத்யமயி பரமே!
 

3 comments:

  1. அன்னையின் பாதங்களில் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். அருமையான ஆத்மார்த்தமான தங்கள் இடுகை மனதை நிறைக்கிறது.

    ReplyDelete
  2. அன்னையின் திருவடிகள் சரணம்.

    ReplyDelete
  3. "It must not be past time. It must be the exclusive preoccupation of one's being, the very reason of existence"
    இங்கே தான் சறுக்குகிறோம் என்பதை நன்றாக புரிய வைத்துவிட்டார் ஸ்ரீ அன்னை. அருமையான அஞ்சலிக்கு பணிவான வணக்கங்கள்

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!