அன்னை என்னும் அற்புதப் பேரொளி!



நவம்பர் 17! ஸ்ரீ அரவிந்த அன்னை மகா சமாதி அடைந்த தினம். 





புதுவை ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திலும், அன்பர்கள் ஒவ்வொருவர் ஹ்ருதயத்திலும்,அன்னை என்றொரு அற்புதப் பேரொளியை ஆத்மார்த்தமாக வணங்கி அவளுடைய அருள் திறத்திலும் தோய்ந்திருக்கும் நாளும் கூட!





ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன்திருவடிகளைச் சரணடைகிறேன்.
எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.


தூய்மையும் அமைதியும் அருள்வாய்!




ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன்திருவடிகளைச் சரணடைகிறேன்.
எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.

தூய்மையும் அமைதியும் அருள்வாய்!

உனது அருளுக்குப் பாத்திரமாகும் தகுதி உள்ளவனாக வரம் அருள்வாய்!
ஒவ்வொரு அசைவிலும், எண்ணம் செயல் யாவற்றிலும் உனது சித்தப்படியே இயங்கும் கருவியாக என்னை ஏற்றுக் கொள்வாய்.

இந்த தேசம் தலைநிமிர்ந்து நிற்கவும்,அச்சமும் பேடிமையும் அடிமைச்சிறுமதியும் எங்களை  விட்டு விலகவும் வரம் தருவாய்.

ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி சத்யமயி பரமே!

2 comments:

  1. நிறைவே காணும் மனம் வேண்டும்...

    ReplyDelete
  2. அன்னையின் காருண்யம் மலர்களாய் பாரெங்கும் விகசித்துக் கிடக்கிறது. அன்னை நம்மை நல்வழிப் படுத்தட்டும்

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!