மண்டேன்னா ஒண்ணு! சொதப்பல்கள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!

மண்டேன்னா ஒண்ணு! சொதப்பல்கள் பலவிதம்! இப்படி சொதப்புகிற விதமாக சிலவிஷயங்களை இங்கே சொல்லியிருந்தது நினைவிருக்கிறதா? நினைவில் இல்லை என்றாலும் பரவாயில்லை சொதப்புவதையே தங்கள் முழுநேரத்தொழிலாக வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் இருக்கும் வரை நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது கொஞ்சம் கேலிக்கூத்தாக மட்டுமே இருக்கும். தி ஹிந்து நாளிதழில் வந்திருக்கும் இந்தச் செய்தி அதை உறுதிப்படுத்துகிற மாதிரி!  பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறைகளை அப்படியே இன்னமும் பின்பற்றுவதில், எழுந்திருக்கும் சொதப்பல் இது.

ஜெயிக்கிறவனே தோற்றவனுடைய பங்கையும் சேர்த்து எடுத்துக் கொள்வான் என்கிற வெஸ்ட்மினிஸ்டர் தேர்தல் முறைகளில் இருந்து விடுபட்டு தகுந்த தேர்தல் சீர்திர்த்தங்களைச் செய்தே ஆகவேண்டிய தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.  
******

சொதப்புவது மனித சுபாவம்!ஆனால் சொதப்பிக் கொண்டே இருப்பது மனித பலவீனம்!  இதற்கு அழகான உதாரணம் இந்த வீடியோ! அம்மா! தம்பி என்விரலைக் கடிச்சுட்டான் என்று புலம்பிக்கொண்டே விரலைக் கடிக்க மறுபடி மறுபடி தருகிற மாதிரி! ஐந்து வருடப் பழசானாலும் கூட இந்த வீடியோவை இதுவரை 809,031,229 தரம் பார்க்கப்பட்டிருப்பதில் இருந்தே சொதப்புவது எப்படி என்பது தான்  மனிதனுடைய மிகப்பெரிய சாதனையாகத் தெரிகிறதோ?
 

இதுவே இப்படியென்றால் காதலில் சொதப்புவது எப்படி என்று கேட்கவா வேண்டும்?

  .... ஆனா இந்தப் பொண்ணுங்க மனசை சைனாக்காரன் தயார் செஞ்சுருக்கான்  -இது சிம்பு.

மாட்டினாண்டா சிலம்பரசன்  -இது சூரி டயலாக்! எங்கே எப்படி என்று கேட்கிறீர்களா? இந்த ட்ரைலரில்தான்! காதல் சொதப்பல் என்றால் சிம்பு இல்லாமலா? 
   


இதெல்லாம் இப்படி இருக்க அமீர்கான் அனுஷ்கா ஷர்மா நடித்து சமீபத்தில் வெளியான PK  திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் குறித்து யூட்யூப் தளத்தில் பார்த்த ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்ட தருணங்களில் ஐயா நீங்கள் காதலில் தோல்வியடைந்தவரோ என்றொரு கேள்வி வந்தது.


#loveiswasteoftime  என்பதை நூறுவருஷ சினிமா எத்தனையோ விதங்களில் சொல்லியாகிவிட்டது என்று இந்த வீடியோவில் சொல்வது நிஜம் தான்!  #யார்சார்கேக்கறாங்க  என்று கடைசியில் கருத்துக்கள் வேறு! இப்படிப் பகிர்ந்திருந்ததில் தான் அப்படி ஒரு கேள்வி காதலில் ஜெயித்தவர்கள் கூட இப்படித் தங்களுடைய அனுபவத்தை உள்ளது உள்ளபடி உடைத்துச் சொல்லியிருக்கலாமே  என்று சொல்லியும் பார்த்தேன்.காதில் வாங்கிக் கொண்டார்களா என்பதே இன்னும்ம் சொதப்புகிற விஷயம் தான்! 

மண்டேன்னா ஒண்ணு! ஒரு புது வாரத்தின் தொடக்கம். ஆரம்பத்தில் கொஞ்சம் சோம்பல், சோகத்துடன் ஆரம்பித்தாலும் ,,அதாச்சும் காங்கிரசில் ஆரம்பிச்சு   #loveiswasteoftime வரை ஜாலியாக வந்தாச்சு இல்லியா?

வர்ட்டா? :-)))))

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!