வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! ஓவ்வொன்றும் ஒருவிதமாக!

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்!  தலைப்பிட்டுக் கொஞ்சம் பதிவுகளை இங்கே எழுதிக் கொண்டிருந்தது நினைவிருக்கிறதா? கொஞ்சம் கதைகள், கொஞ்சம் அரசியல், கொஞ்சம் பிடித்த வாசிப்பு என்று பல்வேறு விஷயங்களின் கலவையாக எழுதிக் கொண்டிருந்தவை அவை. 

நாயைக் கூட்டிக் கொண்டு போனால் செய்தியல்ல! நாயைத் தூக்கிக் கொண்டு போனால்..!? தினத்தந்தி படித்தே தமிழறிவை வளர்த்துக் கொண்டதாக ஒரு இணைய உரையாடலில் என்னிடம் ஒருவர் சொன்னபோது நான் அதிக ஆச்சரியப்படவில்லை.காரணம் எதையும் ஆழமாகக் கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொள்வது நமக்கு மிகவும் சிரமமானதாகத் தானிருக்கிறது. வெளிப்படையாக இடைஞ்சல் தெரியாதவரை எதையும் கேள்விகள் கேட்டு, மண்டையைக் குழப்பிக் கொள்வது அனாவசியம் என்றே ஒதுக்கித் தள்ளி விட்டுப் போய்க்கொண்டே  இருப்பதில் அப்படி ஒரு சோம்பேறித்தனம், சுகம்!  அதனால் தானோ என்னவோ மொண்ணையாக மொக்கையாக எழுதுவது இணையத்தில் பொழுதுபோக்கத்தானே தவிர சீரியசாகப் பேசுவது எல்லாம் உதவாது என்றே கடந்துபோய்விடுகிறோம்.  முந்தைய பதிவில் வெளியுறவுக் கொள்கையைப் பற்றிக் கொஞ்சம் பேச ஆரம்பித்ததில் எழுத்தும் வாசிப்பும் என்பது இருமனம் கலக்கும் வித்தைக் களம் என்று தனது பூ வனம் 
பதிவில் எழுதிக்கொண்டிருக்கும் நண்பர் ஜீவி எழுப்பிய கேள்வி அதற்கு அங்கே எழுதிய பதில் இன்னமும் முக்கியமான விஷயத்தைத் தொட்டே பேச ஆரம்பிக்கவில்லை என்பதைச் சொல்லிக் கொண்டிருக்கிறது 

செய்திகளில் பரபரப்பாக வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் மாற்றப்பட்ட விவகாரம், முதலில் கண்ணியமாக வெளியேறப் பலமுறை வாய்ப்புக் கொடுக்கப்பட்டும், கடைசிநிமிடம் வரை ஒட்டிக் இருக்கிறது கொண்டிருந்த விவகாரம், காங்கிரஸ் ஆட்சேபணை இவைகளை ஒதுக்கி வைத்து விட்டு பத்துநாட்களுக்கு முன் எழுதப்பட்ட இந்தப் பதிவில் At home, Modi has shaken up the diffident foreign-policy establishment with his proactive approach and readiness to break with conventional methods and shibboleths. By taking bold new tacks, Modi is charting a course to boost India’s strategic influence both in its neighborhood and the wider world.

Indeed, Modi has put his stamp on foreign policy faster than any predecessor, other than the country’s first post-independence prime minister, Jawaharlal Nehru. Yet Modi appears to have no intent of enunciating a Modi doctrine in foreign policy. He wants his actions to define his policy trademarks.என்று சொல்லியிருப்பதைக் கவனியுங்கள். இங்கே நாம் எது முக்கியமோ அதைக் கோட்டை விட்டுவிட்டு வேறெதையோ பேசிக் கொண்டிருக்கிறோமே என்ற ஆதங்கம். எழுத வேண்டியது நிறைய இருக்கிறது, எழுதுவேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.


முன்னாள் மத்திய அமைச்சரும், பக்தவத்சலத்தின் பேத்தியுமான ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியிருக்கிறார். வழக்கமாக வெளியேறுகிறவர்கள் செய்கிற மாதிரித்தான்-குப்புறத் தள்ளின  குதிரை குழியும் பறித்ததாம் என்கிற மாதிரி,தான் எந்தத்தவறுமே  செய்யவில்லை. செய்ய வைத்தது ராகுல் காந்திதான் என்று சொல்லியிருக்கிறார்.

அப்படிப் போனதுதான் போனாங்களே! கூடவே  பானாசீனா, கார்த்தி  ரெண்டு பேரையும் கூட்டிட்டுப் போயிருந்தா காங்கிரஸ் கட்சி இன்னும் கொஞ்சம் கூடுதலா தூய்மையடைஞ்சிருக்குமேன்னு ஈவிகேஎஸ் இளங்கோவன் சொல்லியிருக்கார்! #குஷ்பூ கட்சிகுள்ளார வந்ததும் மனுசனுக்கு தெகிரியம் எக்குத்தப்பா கூடிப்போச்சு போல! காங்கிரஸ் காரனுக்கு எதையும் சுயமாகச்  செய்யத்தெரியாது.இன்னொருவர் வந்துதான் செய்துகொடுத்தாகவேண்டும் என்ற உண்மையும் வெளிப்பட்டிருக்கிறது.  

#எங்கூர்லபெண்ணியம் #பெமு வுக்கு முட்டுக்  கொடுப்பதிலும் கொச்சையான கவுஜ எயுதி சர்ச்சை உண்டாக்குவதோடு முடிந்துவிடும். பிராண்டட் (மார்க்சிஸ்ட் என்றறிக) பெண்ணியம் #ஜெயகாந்தன் முன்பொருசமயத்தில் சொன்ன மாதிரி #சுதந்திரமானஅடிமைகள் ஆகவே இருந்துவிடுகின்றன.  

Angelina Jolie detailed the heartbreak of Iraqi and Syrian refugees in a revealing op-ed for the New York Times on Tuesday.

“For many years I have visited camps, and every time, I sit in a tent and hear stories,” wrote the 39-year-old mother of six. “I try my best to give support. To say something that will show solidarity and give some kind of thoughtful guidance. On this trip I was speechless.”  


#மகாத்மாகாந்தி யை கோட்சேயின் துப்பாக்கி குண்டுஒருமுறைதான் சாகடித்தது. உண்மையில் அதற்கு  முன்னாலேயே  காந்தியைக் கொன்றது இந்தியப் பிரிவினையும் அதை ஒட்டி எழுந்த கலவரங்களில் நடந்த உயிர்க்கொலைகளும் தான்! #நேரு கிரீடம் சூட்டிக் கொண்டு #mytrystwithdestiniy  உரைநிகழ்த்த ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த தருணங்களில்  கலவரப் பகுதிகளுக்குத் தன்னந்தனியாக, கண்ணீருடன்   சந்திக்கச்சென்ற ஒரே தலைவர் காந்திதான். சுதந்திரத்துக்குப் பின்னால் காந்திக்குக் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஒரு குடும்பம் அவர் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு செய்த அக்கிரமங்களோடு ஒப்பிடுகையில் கோட்சேயின் குண்டு சாகடிப்பதற்கு முன்னாலேயே #காங்கிரஸ்கட்சி காந்தியைக் கொன்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். 


Last moments of Mahatma Gandhi
மாந்தருக்குள் ஒரு தெய்வம் என்று கல்கி எழுதியது நினைவிருக்கிறதா ?

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! ஓவ்வொன்றும் ஒருவிதமாக!  

******

2 comments:

  1. பதிவுகள் ஒவ்வொன்றும் ஆழமானவை. அர்த்தம் பொதிந்தவை. ஆனால் தலைப்பு மட்டும் ஏனோ ஆங்கிலத்தில்...!

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் இடதுபக்கம் பார்த்தீர்களானால் படிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்! ஆனால்.......! என்ற தலைப்பின் கீழ் ஸ்ரீ அரவிந்தருடைய சாவித்ரி காவியத்தில் இருந்து சிலவரிகள் அதன் தொடக்கமாக consent to be nothing என்றிருப்பதைப் பார்த்திருக்க முடியும் பெயர்க்காரணமும் புரிந்திருக்கக் கூடும்

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!