சண்டேன்னா மூணு!பெட்டி!போட்டி! பொட்டி!


திமுகவில் உட்கட்சித்தேர்தல்கள் தமாஷா உச்சகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 2004 க்குப் பிறகு நடக்கும் தேர்தல் இது. இலவுகாத்த கிளியாக அறுபதைத்தாண்டியும் இருக்க வேண்டியிருக்கிறதே என்று விசனப்பட்டு மு க ஸ்டாலின் தரப்பு கொஞ்சம் ஊக்கமாகவே இறங்கி வேலை செய்ய ஆரம்பிப்பதும் கடைசியில் ஒன்றுமில்லாமல் புஸ்வாணமாகிப் போவதும் சமீப காலமாக நடந்து கொண்டிருப்பதுதான். 



தி.மு.க., உட்கட்சி தேர்தல், சமீபத்தில் மாவட்டம் தோறும் நடந்தது. சட்டை கிழிப்பு, சேர் உடைப்பு, ஆள் கடத்தல் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறின. மாவட்ட செயலாளர் பதவிக்கு மட்டுமின்றி, கிளை செயலாளர், பகுதி, ஒன்றியம், பேரூராட்சி மற்றும் நகர செயலாளர் பதவிகளை கைப்பற்ற, பல லட்சங்களை செலவிட்டு, கட்சி பதவியை கைப்பற்றியுள்ளனர். சென்னை அறிவாலயத்தில், பேச்சுவார்த்தை நடத்தியே, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு மாவட்டச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பும் வெளியானது.


முக அழகிரி, கனிமொழி இருவரையும் ஓரம் கட்டி விட்டு ஸ்டாலின் அணி மொத்தக் கட்சியையும் கைப்பற்றி விட்ட மாதிரியே மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்படுகிற வரைக்கும் ஒரு பிம்பம் உருவாக்கப் பட்டுக்கொண்டே வந்தது. இன்றைய தலைப்புச்செய்திகளாக ஸ்டாலின் ராஜினாமா என்றும் அதை மறுத்து கழகத்தின் எதிரிகள்  கிளப்பிவிட்ட வதந்தி நம்பவேண்டாம் என்று ஸ்டாலின் அறிக்கை விட்டதுமாக ஆனது ஒன்றுதான் ஸ்டாலின் அணி கண்ட பலன்!  


பேராசரியர் வழிவிட்டு ஒதுங்குகிறார், ஸ்டாலின் பொதுச்செயலாளர் ஆகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்துகொண்டிருந்தபோது எந்தவிதமான மறுப்பும் அறிக்கையும் விடாதவர் தரப்பில் திடீரென்று ராஜினாமா, மறுப்பு என்றாகிக் கொண்டிருப்பதன் பின்னணி என்னவோ எப்போதும் கழகத்தில் நடக்கிற சொந்தக்கதை சோகக்கதைதான். தினமலர் நாளிதழில் முக அழகிரி சொன்னது இப்படி "தி.மு.க.,வை பொறுத்தவரை, கட்சிக்குள் ஏதாவது மாற்றம் வரும் முன்பாக, குழப்பத்தை ஏற்படுத்துவது வழக்கம். அரசியல் ராஜதந்திரம் தெரிந்தவர் கருணாநிதி. கட்சி பொறுப்புகளை ஸ்டாலின் ராஜினாமா செய்வதாக வெளியான தகவல்களும், தற்போது, அந்த தகவலை மறுப்பதும் அவர்களாக ஏற்படுத்தும் குழப்பம் தான். இதை அறிந்தே, 'எல்லாம் நாடகம்  "

"குழப்பத்தை பயன்படுத்தி, பொது!ச்செயலாளர் பதவிக்கு பெட்டி வைத்து தேர்தல் நடத்தி, ஸ்டாலினை பதவிக்கு கொண்டு வருவார். அல்லது, கட்சிக்குள் யாராவது ஒருவரை பலிகடா செய்து, இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பார். குட்டையை குழப்பி மீன் பிடிக்க தெரிந்தவர் கருணாநிதி. தி.மு.க.,வில் என்ன நடக்கிறது என்பது, அறிவாலயத்தில் 7ம் தேதி நடக்கும் மனுத்தாக்கல் நிகழ்ச்சியில் தெரிந்து விடும். எந்த முடிவாக !இருந்தாலும், 9ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் தான் தெரியும்." என்று தினமலர் செய்தி மேலும் விரிகிறது 

ஆக,மூணில் முதலாவது பெட்டி! 
******


பெட்டிக்குப் போட்டி! வேறு யார் ? நம்ம  அஞ்சாநெஞ்சன் முக அழகிரிதான் !


M. K. Alagiri


சென்னை:
 தி.மு.க.வினர் திருந்தினால் அக்கட்சியில் சேருவேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.இங்கே 

இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தி.மு.க.வில் தகுதியற்றவர்கள் பலர் உள்ளனர். இவர்களை வைத்துக்கொண்டு கட்சியை நடத்துகின்றனர்.எனவே தி.மு.க.வினர் திருந்த வேண்டும். தி.மு.க.வினர் திருந்தினால் அக்கட்சியில் சேருவேன்'' என்றார்.


மு.க.ஸ்டாலின் தனது பொருளாளர் பதவியை ராஜினாமா செய்ததாக வெளியான செய்தி குறித்து கேட்டதற்கு, ''ஸ்டாலின் ராஜினாமா குறித்த தகவல் எல்லாம் எனக்கு தெரியாது, முகவரி இல்லாத ஸ்டாலினை பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை'' என்றார். 


சபாஷ்! சரியான போட்டி!  

******
டிசிஎஸ் நிறுவனத்தில் பொட்டி தட்டுகிறவர்களுக்காக வினவு தளத்தில் சங்கம் அமைப்போம் என்று சொன்ன பிறகு விழித்துக் கொண்டவர்களில் முதலாவது மார்க்சிஸ்ட் கட்சி. அடுத்து தமிழ்க்குடிதாங்கி மருத்துவரும் குரல் கொடுத்திருக்கிறார். விவரம் இங்கே  

Currently, Information Technology companies are not covered by the Industrial Employment Act.

Currently, Information Technology companies are not covered by the Industrial Employment Act. என்கிற கசப்பான உண்மை எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியவில்லை 

As part of its decision to lay off 25,000 employees, TCS has been issuing pink slips to its employees since the last few days. This is an entirely unethical exercise aimed at cost-cutting and maximising profits. Already over 1,000 employees have contacted us. They are associate software consultants or associate software technologists, with an experience ranging from seven to 14 years. Almost none of them are under-performers as they have got performance grading of A, B or C. If the management says these people are underperformers, it should show the proof,” Vinod, a co-ordinator of Chennai-based Forum for IT Employees (FITE), told this newspaper.

பொட்டி தட்டும் தொழிலில் உள்ளவர்களுக்கு இந்த ஆண்டுத்துவக்கமே சரியாக இல்லை போல இருக்கிறது.ஆனால் இதே மாதிரி இன்ஃபோசிஸ் உள்ளிட்டு பிற ஐடி நிறுவனங்களில் வாடிக்கையாக நடந்து கொண்டிருந்த போது இவர்களில் எவரும் அதிகமாக அலட்டிக் கொண்டதில்லை. இங்கே எண்ணிக்கை அதிகம் என்பதால் சத்தமும் பெரிதாக இருக்கிறதா அல்லது கார்பரேட் நிறுவனங்களில் இதெல்லாம் சகஜமப்பா என்றிருப்பதா?

பொட்டிதட்டுகிறவர்களே! உங்கள் துறையில் என்ன நடக்கிறது என்பதைப் பின்னூட்டங்களாக இங்கே தட்டிவிடுங்களேன்! இந்த நாட்டில் நெஞ்சுக்கு நீதி கிடைககிறதா என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். "

மூணில் முதலாவதான பெட்டிச் செய்திக்கு அப்டேட் இங்கே 

'கட்சியின் பொதுச் செயலர் பதவியை பெறுவதற்காக, தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்திய ராஜினாமா நாடகம், கருணாநிதியின் உறுதியான முடிவால், எடுபடாமல் போய்விட்டது'   

என்று சோகக்கதையைப் போட்டுடைக்கிறது இந்தச்செய்தி!

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!