வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! சவ்வ்வ்வ்வு மிட்டாய் வோணுமா?



இது இல்லாத தமிழ் சீரியல் உண்டா..?


வெள்ளிக்கிழமை வில்லங்கம்..

பொதுவாகவே ஒவ்வொருநாள் எபிசோட் முடிவிலும் ஒரு சின்ன கிளைமாக்ஸ் இருக்கும்வெள்ளிக்கிழமைன்னா கேட்கவே வேண்டாம்..  அடுத்த சனிஞாயிறு ரெண்டு நாளும் சீரியல் கிடையாதுதிங்கட்கிழமை வரை மக்கள் இதைப்பத்தியே பேசிட்டு இருக்கணும்ங்கற மூட நம்பிக்கையிலேயோஎதிர்பார்ப்பிலேயோ ஒரு பெரிய கிளைமாக்ஸ் வைப்பாங்க.. 

முன்னே சொன்னேனே
. 2 கேரக்டர் சந்திக்கிறதுன்னு.. அப்படி பாவ்லா காட்ட ஆரம்பிக்கறதெல்லாம் பெரும்பாலும் இந்த வெள்ளிக்கிழமைகளில் தான் இருக்கும்..!
 
ரெண்டு பேரும் எதிர் எதிரே ஸ்லோ மோஷன்ல வருவாங்க.. பின்னணி இசை தூள் கெளப்பும்..!

ரெண்டுபேர் மூக்கும் முட்டிக்கற மாதிரி வர்றப்ப தொடரும் போட்டுருவாய்ங்க
..

திங்கக் கிழமை புருஷன் புள்ளகுட்டிக்கு சோறுகூட போடாம தாய்க்குலம் சந்திப்பை எதிர்பார்த்து குந்திப் பார்க்கும்
.. அன்னிக்கு காலையில் இதப்பத்தி அக்கம்பக்கத்துல டிஸ்கஷன்கூட நடந்திருக்கும்.
ஆனா என்ன ஆகும்
..?

ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு ஏரோப்ளேன் புகுந்து சந்திக்க விடாம செஞ்சிரும்
..!

இது இப்படி திரும்பிப் போகும்
.. அது அப்படித் திரும்பிப்போகும்..!

அப்படி இல்லேன்னு வையுங்க
..

ஒருத்தரை எவனாவது தடுத்து நிறுத்தி அட்ரசோ
டைமோ கேட்பான்.. இன்னொரு பார்ட்டி பொறத்தால நழுவிப் போயிரும்..!

இல்லாங்காட்டி
..

ஒருத்தர் பேண்ட்டிலிருந்து எதாவது கீழே விழுந்துரும்
.. அதைக் குனிஞ்சு எடுக்குறப்போ இன்னொருத்தர் மிஸ் ஆயிடுவாரு..!

ஒரு நண்பர் இப்படித்தன் ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தது  அதை நான் இந்தப்பக்கங்களில்  பகிர்ந்துகொண்டது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால்! இப்போதோ இனிவருவது,  வரவிருப்பது அடுத்த பதினைந்து நாட்களுக்குப் பின் ஒளிபரப்பவிருப்பதன் முன்னோட்டத்தையும் சேர்த்தே போட்டு சவ்வ்வு மிட்டாய் மாதிரி  இழுக்கிறார்கள்.மெகா சீரியல்கள் என்றுமட்டுமல்ல, சூப்பர் சிங்கர், செஃ ப், டாக்  ஷோ என்று எல்லாவற்றிற்கும் தான்! இப்படி வெள்ளிக் கிழமை சவ்வ்வ்வு மிட்டாயாக, வில்லங்கமாக இழுத்துக்கொண்டே போகும் விஷயங்களாகக் கொஞ்சம் ............

******

பதினோராவது முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார் கருணாநிதி என்று சொல்லும் செய்தியில் ஒரே ஒரு விஷயம் புதிதாக!  திமுக மகளிரணித் தலைவர் பொறுப்பு கனிமொழிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆற்காடு வீராசாமி செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் வகித்த முதன்மைச் செயலாளர் பொறுப்புக்கு துரைமுருகன் தேர்வு செய்யப் பட்டுள்ளார் என்பது மட்டும் தான்  இன்று கூடிய திமுக பொதுக்குழு 
ஒரு சாதாரணப்  பொதுக்கூட்டம் மாதிரித்தான் நடந்தது என்கிறது செய்தி  

முக அழகிரிக்கு இதயத்திலாவது இடம் கிடைத்ததா இல்லையா என்பது மெகாசீரியல் மாதிரித் தொடரும் சஸ்பென்ஸ். இதற்கான முன்னோட்டம் நேற்றைய  செய்திகளில் மு.க.அழகிரி கோபாலபுரம் வீட்டின் பின்வாசல் வழியாக வந்து தாயைச் சந்தித்தார், பின்வாசல் வழியாகவே வெளியேறினார் என்று வெளியானதில் தொடர்கிறது.

****** 

ரிச்சர்ட் டாகின்ஸ் மாதிரி நாத்திகர்கள் இப்படிச்சொன்னால் மட்டும் ஏற்றுக் கொண்டுவிடுவோமா என்றரீதியில்   மணிசங்கர அய்யர் மாதிரி  சிக்குலர் வியாதிகள் சொல்வது இப்படியாகவாம்! சிக்குலரிசமும் சவ்வ்வ்வு மிட்டாய் மாதிரித்தான் என்கிறீர்களா? அதுவும் சரிதான்!  .


******

கண்டிக்கிறோம் ஆனால் கண்டிப்பவர்கள் பின் அணிதிரளவில்லை என்பதைச் சொல்வதற்காக மட்டும் என்ற ரீதியில் கம்மூனிசச்சவ்வ்வ்வு ஒன்று இங்கே  


சவ்வ்வ்வு போதுமா? இன்னும் கொஞ்சம் இழுக்கட்டுமா?

வாய்விட்டுச் சிரிக்கத்தான் வேண்டும்! அதற்காக சவ்வாக இழுத்துக்கொண்டே போனால் எந்த டிராமாவும், அல்லது எதுவுமே ட்ராஜெடியாகத்தான் இருக்கும்! 

வர்ட்டா? !!

     


. .

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!