வந்தேனே! வலைப்பதிவெழுத மீண்டும் வந்தேனே!



ஓம் நமோ பகவதே ஸ்ரீஅரவிந்தாய 
*****

ஊடகங்களில் நல்ல செய்தி அல்லது கெட்ட செய்தி என்று பிரித்துப் பார்க்க முடியுமா? இது நேற்றைக்கு எழுந்த கேள்வி. முதலில் செய்தி என்ன, யார் பார்வையில் இருந்து, எந்த சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்டது என்பதெல்லாம் அந்த நல்லது அல்லது கெட்டது என்கிற அடைமொழியைத் தீர்மானிக்கின்றன.

#WashingtonPost இதழுக்கு பாகிஸ்தானிய பிரதமர் #இம்ரான்கான் அளித்திருக்கிற இந்தப் பேட்டியைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்! அமெரிக்க அதிபர் #டொனால்ட்ட்ரம்ப் புடன் #இம்ரான்கான் நடத்திய ட்வீட்டர் அக்கப்போரை ஏற்கெனெவே படித்து இருப்பீர்கள்.. இந்தப் பேட்டி அமெரிக்காவுடனான பாகிஸ்தானிய உறவுகள் மிகவும் கீழேபோய்க் கொண்டிருக்கும் நேரத்தில் துல்லியமான கேள்விகள் அதிக மழுப்பல் இல்லாத பதில்கள் என்றிருப்பதைச் சொல்லியே ஆகவேண்டும்.

Imran Khan, a onetime cricket star, led the life of a glamorous playboy before he turned to Pakistani politics. This summer, after years in the opposition and then as a member of the coalition government in Islamabad, he finally captured the premiership. He inherits it with a daunting list of challenges for his country, including poverty, terrorism and corruption. This past week, President Trump — who has traded Twitter barbs with Khan and cut military assistance to Pakistan — asked him to help bring the Afghan Taliban to peace talks


இப்படி இம்ரான் கானுடைய பூர்வோத்தரங்களை மிகச்சுருக்கமாக சொல்லிவிட்டு பேட்டியை ஆரம்பிக்கிறார் சீனியர் அசோசியேட் எடிட்டர் லாலி வேமௌத்  முழுப்பேட்டியும் இங்கே   #TheWashingtonPost என்ற தலைப்புக்கு கீழே Democracy dies in Darkness என்று இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? 

இந்தப் பேட்டியைப் படித்த பிறகு ஒரு நண்பருடன்  இந்தப் பக்கங்களிலேயே  உரையாடியது நினைவுக்கு வந்தது. நினைவுகள் இங்கே    அதில் எழுதிய ஒரு பின்னூட்டம் 

இது அறியாமை தான்! அலட்சியப்போக்கு இல்லை. நம்மால் என்ன செய்ய முடியும் என்பது தெரியாமலேயே ஏமாந்துகொண்டிருப்பது ஒருவகையான அறிவின்மைதான்! அதே மாதிரி, நாம் எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றும் ஆகப் போவதில்லை,ஏதோ கிடைக்கிறதே அதையாவது வாங்கிக் கொள்வோம் என்ற அவலம், அதுவும் கூட ஒருவகையில்,அறியாமைதான். வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்துத் தட்டுக் காசு சம்பாதிக்கத் தெரிந்த சாமர்த்தியம், ஓட்டுக்கு எத்தனை தருவீர்கள் என்று கேட்டு வாங்கிக் கொள்கிற சாமர்த்தியம், ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை, ஏதோ ஒரு நாளைக்குத் தானே வருகிறது. அதுவும் கூட அனைவருக்கும் கிடைப்பது இல்லை! Winner takes all என்ற பிரிட்டிஷ் தேர்தல் முறைகூட ஊழல் செய்கிறவனுக்குத் தான் உபயோகமாக இருக்கிறது.

ஏமாந்து கொண்டிருக்கிறோம் என்பது தெரியும் தான், ஆனால் என்ன செய்வது என்பதில் தெளிவில்லாத, அறியாத ஜனங்கள் தான், இவர்கள் தான் இந்த தேசத்து இனமானத் தலைவர்களுக்கும், ராஜசேகர ரெட்டி மாதிரி தண்ணீரில் கூட சம்பாதிக்கத் தெரிந்த அரசியல் வாதிகளுக்கும், சிபுசோரென், மது கோடா போல எல்லாவிதமான பெருச்சாளிகளுக்கும் நாலாவது தூண்! சாய் நாத் மாதிரி ஒருவர் மட்டும் எழுதி என்ன பயன்? 

எப்போதெல்லாம் சர்குலேஷன் சரிந்து விழுகிறதோ அப்போதெல்லாம் அரசை எதிர்த்து பரபரப்புச் செய்திகளை வெளியிடுவார் என்று அந்த நாட்களில் எக்ஸ்பிரஸ் கோயன்காவைப் பற்றி ஒரு கிண்டலான விமரிசனம் உண்டு. ஹிந்து வேறுரகம்!

அரசுக்கு எதிரான செய்திகளை,ஹிந்து ராம்களும், தங்களுக்குவசதி படுகிற வரை பிரசுரிப்பார்கள்! விளம்பரவருமானம் குறைவில்லாமல் கொடுத்தால், அவர்களும் ஒரு கட்டத்தில், முன்பு எழுதியதையே மறக்கடிக்கும் விதமாக சாதனை மலர்கள் வெளியிடுவார்கள். வேறென்ன?

வாஷிங்டன் போஸ்டில் வந்த பேட்டிக்கும் 2009 இல் எழுதிய பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

ஒன்றுமே இல்லை என்பதுதான் விசனம் தருகிற உண்மை.  Democracy dies in Darkness என்று வாஷிங்டன் போஸ்ட் சொல்லிக் கொள்வதில் கொஞ்சம் நியாயம் இருக்கிறது. நிக்சன் காலத்தைய வாட்டர்கேட் சமாசாரத்தை அம்பலப்படுத்திய நாளிதழ் அது என்பதில் இருந்தே அந்த வார்த்தைகள் வெற்று வார்த்தைகள் இல்லை என்பது புரிந்திருக்கும்.

சுதந்திரம், உரிமைகள் அவைகளைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே என்பதாவது புரிகிறதா?

எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம்?
         

3 comments:

  1. மறுபடியும் பதிவு எழுத வந்ததற்கு மிக்க நன்றி. பற்பல விஷயங்களை ஆழ்ந்து ஆராய்ந்து மாலையாக கோர்த்து கொடுக்கும் உங்கள் எழுத்து தனி ரகம் . இன்னுமொரு நிறைவான பதிவு!

    ReplyDelete
  2. ​வாருங்கள்... தொடருங்கள்.​

    ReplyDelete
  3. உற்சாகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி #பந்து & #ஸ்ரீராம் பதிவின் உள்ளடக்கத்தைப் பற்றிக் கொஞ்சம் விமரிசித்திருந்தால் இன்னமும் உற்சாகமாக இருந்திருக்குமே!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!