Consent to be......nothing!

நம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக!

▼

கருத்துக் கணிப்புகள்! கணிப்பா, திணிப்பா?

நிறைய விஷயங்களை இங்கே ஸ்பூனில் ஊட்டிவிட்டுத் தான் சொல்ல வேண்டியிருக்கிறதோ? கொஞ்சம்  தேடிப் பார்த்தாலேயே எளிதில் எல்லா விஷயங்களையும், இணையம் நம்முன்னால் கொண்டுவந்து கொட்டத் தயாராக இருக்கும்போது கூட, ஏன் தகவல்களைத் தேடி, சரிபார்த்துக் கொள்ள  தோன்றுவதே இல்லை?

மக்கள் யார்பக்கம் என்று ஒரு சரியான கணிப்பை, ஒரு மிகச்சிறிய பகுதியிடம் மட்டும் கேட்டு முடிவு செய்து விட முடியுமா? Sample size சிறிதோ பெரிதோ ஒரு சரியான representative factors இருக்குமானால், கணிப்பு சரியாகவே இருக்குமென்று தான் புள்ளியியல் பாடம் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் காண்பதென்ன?

இங்கே ஜனங்களுடைய நாடித்துடிப்பை சரியாகக் கணிக்கிறார்களா என்பதை முடிவு செய்வதற்கு முன் ஒவ்வொரு ஊடகத்தையும், ஒருபக்கச் சார்போடு செயல் படுகிறார்களா? கிடைத்த தகவல்களை சரியாக அனலைஸ் செய்து உள்ளது உள்ளபடியே சொல்கிறார்களா? தகவல்களைத் திரித்து தங்களுடைய வசதிக்கேற்றபடி சொல்கிறார்களா?
விலைக்கு வாங்கப்பட்ட செய்தியாக, கருத்து கணிப்புகள் இருக்கிறதா? 

பதிவில் இப்படிக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக் கொண்டே இருந்தால், மூடிவைத்து விட்டு அடுத்த வரியைப் படிக்கப் பொறுமையில்லாமல், நகர்ந்து விடுகிறவர்கள் எண்ணிக்கை இங்கே 90%.. 95% மேல் இருக்கிற கள யதார்த்தத்தை, கொஞ்சம் புரிந்து கொள்ள முடியுமானால், ஒரு நல்ல கருத்து கணிப்பு நடத்துவதற்கு, களநிலவரத்தை சரியாக நாடிபிடித்துப் பார்ப்பதற்கு, சரியான கேள்விகள், உறுதிப்படுத்திக் கொள்ள உதவியாக இன்னும் கொஞ்சம் துணைக்கேள்விகள், கேள்வி கேட்கப் படுகிறவருடைய அரசியல் சாதிச்சார்பு இவைகளைப் புரிந்துகொண்டு பதிலை வகைப்படுத்துவது, இவையெல்லாம் முக்கிய காரணிகளாக இருந்தாலும் .......

நம்மூர் ஜனங்கள் இங்கே கருத்துக் கணிப்புக்காக சொல்கிற பதில், அப்படியே தேர்தல் முடிவுகளோடு ஒத்துப்போகும் என்பதற்கு கொஞ்சமும் உத்தரவாதம் இல்லை. கேள்விக்கு குண்டக்க மண்டக்க பதில் சொல்லிக் குழப்புவது இங்கே சர்வ சாதாரணம். 

     
இவ்வளவு நீண்ட விவாதமெல்லாம் தேவையில்லையே!ஆர்கே நகர் தொகுதியில் டெபாசிட் இழந்ததற்கு என்ன என்ன காரணம் என்று ஸ்டாலின் ஒரு கோடிகாட்டியதே போதுமானது! ஆர்கேநகர் இடைத்தேர்தலில் ஒரு பூத்தில் திமுகவுக்கு விழுந்த வாக்குகள் 11 ஆனால் அங்கே இருந்த திமுக ஆதரவு பூத் ஏஜெண்டுகள் எண்ணிக்கை 25 என்று சொல்லியிருக்கிறார்.இதில் புதிய செய்தி எதுவுமில்லை. கழகம் ஆட்சியில் இருந்த சமயத்தில் வாக்குப்பதிவில் காட்டிய அதே வித்தையை தினகரனும் செய்து காட்டினார். அவ்வளவுதான்!    

கருத்து கணிப்புகள் பெரும்பாலான நேரங்களில் கருத்துத் திணிப்பாக, ஸ்பான்சர் செய்யப்பட்ட செய்திகளாக, விலைக்கு வாங்கப்படக் கூடியவையாக இருப்பதை NDTV பிரணாய் ராய் உள்ளிட்ட சில ஊடகக்காரர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில், வளர்ந்த விதம்,பர்கா தத், வீர் சங்வி போன்றவர்கள் ஊட்டி வளர்க்கப்பட்டகதை, நிரா ராடியா போன்ற கார்பரேட் தரகர்கள் மத்திய மந்திரி சபையில் கேட்ட துறையை வாங்கி கொடுக்கக் கூடிய விதத்தில் வளர்ந்ததெல்லாம் இப்போது சமீபத்தில் நம் கண்முன் நடந்த கதை.

ஊடகங்களில் வருகிற செய்திகளின் வேர் எதுவென்று தேடிப்பார்க்கப் பழகினாலேயே அவைகளின் உண்மை இன்னதென்று உரைத்துப் பார்த்துவிட முடியும்.

அப்படிப் பார்க்கப் பழகிக் கொள்ளப் போகிறோமா? இதுதான், இது மட்டுமே தான் நமக்கு முன்னால் இருக்கும் கேள்வி! 

கேள்விகளைக் கேள்வி கேளுங்கள்! 

கேள்விப்படுகிற எல்லாவற்றையுமே கேள்வி கேட்கவும் தெரிந்து கொண்டாகவேண்டுமே! இல்லையென்றால் அம்பாரம் அம்பாரமாகக் காதுல பூ சுற்றிக்கொள்வது நிச்சயம்!



              
              
at January 31, 2019 2 comments:
Share

ஒரு இந்தியக்கனவு! American Dream! சீனர்களுடைய கனவு!

ஒரு இந்தியக் கனவு!


.
முண்டாசுக்கவிஞன் பாரதி கொஞ்சம் அவசரப்பட்டு இப்படி ஆனந்தப்பள்ளு பாடிவிட்டானோ? விடுதலை வேட்கையில், அது நிகழ்வதற்கு முன்னாலேயே ஒரு இந்தியக்கனவாக என்னென்னவெல்லாம் பாரதிக்கு தோன்றியது என்பதை இந்தப் பாட்டிலேயே தெரிந்து கொள்ளமுடியும். பூ வனம் பக்கங்களில் எழுத்தாளர் ஜீவி பாரதி வாழ்க்கையைக் குறித்து நெடுந்தொடராக எழுதி வருவதை, மீண்டும் ஒரு பார்வை எட்டிப் பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சு விடத்தான் முடிகிறது. வெள்ளைத்துரைகளைக் கப்பலேற்றிவிட்டு, சுதந்திர இந்தியாவை ஆளக்கிளம்பிய  புண்ணியவான் நேரு இந்தியக் கனவுகளை என்ன செய்தார் என்பது இன்று வரை கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிற ரகசியம்.

1948 இல் ஹைதராபாத் நிஜாம் மீது எடுக்கப்பட்ட Police Action இந்திய கம்யூனிஸ்டுகளை, இந்த இந்திய  அரசு யாருடையது என்று வெகுவாகக் குழப்பி, கட்சி வலதுCPI இடது CPIM என்று இரண்டாக உடைந்து, கொஞ்ச நாட்களிலேயே இடதுகளும்  உடைந்து இடது, அதிஇடது CPI ML  என்று பல குறுங்குழுக்களாக மாறினது தான் மிச்சம். இன்னமும் கூட இந்திய அரசின் வர்க்கத்தன்மை என்னவென்று தீர்மானிக்க முடியாத நிலையில் தான் ஒட்டுமொத்த இந்திய கமூனிஸ்டுகளும் இருக்கிறார்கள். திராவிடங்கள், பெரியார் அம்பேத்கர் ஈயங்கள் இந்த அளவுக்குக் குழம்புவதில்லை. எல்லாம் சாதிமயம் சனாதனம் பாசிசம் என்று முத்திரை குத்தி தத்துவ பிரச்சினைகளை முடித்துக் கொள்வார்கள்!

இப்படி இதுசாரிக் குழப்பத்தில் சிக்கிக் கொண்டவர் எழுத்தாளரும் நாடக ஆசிரியருமான கோமல் சுவாமிநாதன்! அவருடைய நாடகம் ஒன்றிற்குப் பெயர் ஒரு இந்தியக் கனவு! இன்னொன்று அனல்காற்று! திருச்சி ஆர் ஆர் சபாவில் இரண்டையும் நாடகமாகப் பார்த்து, கோமல் சுவாமிநாதனுடைய நவீன நாடக உத்திகளை இப்போது கூட வியந்தாலும், நாடகம் சொல்ல வந்த விஷயம் வெறும்கனவுதான் என்பது, இடதுசாரி, தொழிற்சங்க மயக்கங்களில் இருந்து விடுபட்டு வெளியே வந்து பார்க்கும்போதுதான் தெளிவாகப் புரிகிறது. ஒரு இந்தியக்கனவு முழுப்படம் யூட்யூபிலேயே காணக் கிடைக்கிறது. இரண்டேகால் மணிநேரம் பொறுமையாக, ஒரு  பிரசார டாக்குமென்டரியை பார்க்க முடிந்தால் , பாருங்களேன்! இங்கே சாம்பிளுக்கு ஒரு பாட்டு மட்டும்!      

இவ்வளவுதானா நம்முடைய இந்தியக்கனவு என்று நாமே அலுத்துக்கொள்கிற அளவுக்குத்தான் நாடு   விடுதலையடைந்த 72 ஆண்டுகளில் நம்மூர் அரசியல் அவ்வளவு தரம் தாழ்ந்து கிடக்கிறது.  

அப்படியே சோர்ந்து கிடக்கவிடாமல் அக்கம் பக்கம்! என்ன சேதி!   என்று பார்த்துக் கொண்டிருப்பதில் நம்மைச் சுற்றி நிகழ்கிற சில விஷயங்கள் தூண்டுகோலாக இருக்கின்றன.

The American Dream!

ஆனால் இங்கே இந்தப் பதிவிலும் 
ஒரு புத்தக விமரிசனமாக இங்கேயும்
எழுதியதில் பேராசையே அமெரிக்கர்களுடைய கனவாகவும் இருந்தது சொல்லப்பட்ட்டது!அதை American Tianxia என்ற வார்த்தைப் பிரயோகத்தில் 1950 முதலான நூறாண்டு அமெரிக்காவுடையதாகவும், அடுத்து இந்த நூற்றாண்டு சீனாவுடையதாக இருக்கும் என்பது வெறும் பிரசாரமாகவோ வார்த்தை ஜாலமாகவோ இல்லாமல் தொடர்ந்து உருவாகிவரும் சீனாவின் ஆதிக்கக் கனவு, நம்மையே சுற்றி சுற்றிப் பின்னப்படும் வலையாக செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை ஒரு சிறு காணொளியாக 

  
அக்கம் பக்கம்! என்ன சேதி!  பக்கங்களை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்வீர்கள் தானே!!

       
at January 30, 2019 No comments:
Share

தொலைக்காட்சி விவாதங்கள்! யாருடைய முகம் தெரிகிறது?

எங்கள்Blog ஸ்ரீராமுக்கும் எனக்கும் இங்கே நடந்த பின்னூட்டத் தகவல் பரிமாற்றம்!அவருக்கு நீண்ட நேர வீடியோ இணைப்புக்கள் என்றால் ஏகத்துக்கும் அலெர்ஜி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு உரையாடலைக் கவனியுங்கள்! அதற்கு முன்னதாக அங்கே நான் சுட்டிக் காட்டியிருந்த விவாதத்தின் வீடியோ, தவிர்ப்பதில் எதையெல்லாம் இழக்கிறோம்?
முழுதாகப் பார்க்க சோம்பலாக இருந்தால் 41 வது நிமிடத்திலிருந்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம் என்ன சொல்கிறார் என்பதையாவது கவனியுங்கள்!

ஸ்ரீராம்.January 30, 2019 at 6:07 AM
ஒன்றரை மணிநேரமா? அடேங்கப்பா... நான் தொலைக்காட்சிகளில் மிகவும் வேகமாக தாண்டிச்செல்வது இதுபோன்ற டாக் ஷோக்கள்!!

நேற்றைய (அல்லது அதற்கு முதல் நாளோ?) ஹிந்து தமிழில் இது சம்பந்தமாக ஒரு நடுப்பக்கக் கட்டுரை வந்திருந்ததே, கவனித்தீர்களோ?
ReplyDelete
Replies
  1. கிருஷ்ண மூர்த்தி SJanuary 30, 2019 at 11:48 AM
    தமிழில் தொலைகாட்சி விவாதங்கள் இன்னமும் சரியான பக்குவத்துக்கு வரவில்லை என்பது உண்மைதான்! அதற்காக அவைகளைக் கடந்தும் போய்விட முடியாது ஸ்ரீராம்! கழுதைகளுக்கு வெள்ளிமூக்கு முளைத்து இவை குதிரையில்லை என்று ஒவ்வொரு அரசியல்கட்சியின் யோக்கியதையையும் தோலுரிக்கிறமாதிரி, நேற்றிரவு நியூஸ் 7 கேள்விநேரம் நிகழ்ச்சி இருந்தது. அந்த தமாஷாவையும் சேர்த்தே கடந்து போய்விடுகிறீர்கள்!

    சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம் எப்படி இரண்டுகழகங்களும் ஒன்று மாற்றி ஒன்று வாக்குவங்கியைக் குறிவைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களைக் கொழுக்க வைத்தன, நிதிநிலைமை எப்படி மோசமானது என்பதை நன்றாகவே தோலுரித்தார்.

    ஹிந்து நடுப்பக்கக் கட்டுரை? இல்லை, பார்க்கிறேன்.

இதுமாதிரி விவாதங்களில் வெளிப்படுவது யாருடைய முகம்? யாருடைய குரல்? எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா? மேலே விவாதத்துக்குத்  தலைப்பு, அரசு ஊழியர்களை பகடைக்காயாக ஆக்குகிறார்களா அரசியல்வாதிகள்? ஆனால் கள யதார்த்தம் என்ன? அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும், அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொண்டு கூட்டுக் களவாணிகளாக இருப்பதை ஏன் பேசத் தயங்குகிறார்கள்?

முதலில் ஒரு அரசின் வருமானம் என்பது பெரும்பாலும்  வரிவருவாய் மட்டுமே! அதை ஊழியர்கள் சம்பளம், பென்ஷன் இத்தியாதிகளுக்கே முழுவதும்  செலவிட வேண்டுமென்றால் அரசு என்பது ஜனங்களுக்கானதா? அரசு ஊழியர்களுக்கு அள்ளி இறைப்பதற்கு மட்டுமே ஆனதா? இந்த கேள்விக்கு பதில் சொல்ல யாராவது தயாராக இருக்கிறார்களா?

ஜனங்களுடைய பிரச்சினையை ஒதுக்கி வைத்து விட்டு, இப்படி ஏற்கெனெவே கொழுத்திருக்கும்  பெருச்சாளிகளை மேலும் மேலும் கொழுக்க விடுவது எங்கே போய் முடியும் என்று யோசிப்பதற்கு,யாராவது தயாராக இருக்கிறார்களா?

இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு பொ அகத்திய லிங்கத்தின் கண்டுபிடிப்பு! அல்லது கண்ணாடியில் பார்க்க முடிகிற கம்யூனிஸ்டுகளின் முகம்! கண்ணாடி உண்மையான முகத்தைத்தான் காட்டுகிறதா?

மார்க்சீய மெய்ஞானம் கீனீஷியன் பொருளாதாரம் சொல்கிற கடன் வாங்கி வளர்ச்சி என்பதைப் பற்றி புரிந்துகொள்ளாமல் பேசுவது இயற்கைதான்! இங்கே இப்படிப் பேசுகிறவர்கள் கடன் வாங்கியாவது அரசு ஊழியர்களுக்கு அள்ளியிறை என்று குதிப்பதில். விவாதங்களில் தெரிகிற முகம் எது? எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்! எனக்கென்ன வந்தது என்று ஒதுங்கியோ, அல்லது  

#கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லும் ‘#தமிழ்’ #ஊடகங்கள்! #TamilTV #TVMedia

பிறந்த குழந்தைக்குக் கள்ளிப்பாலைக் கொடுத்துக் கொல்லும் செயலைத்தான் இங்கிருக்கும் ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன என்பதை – நீண்ட நாட்களுக்குப் பிறகு சில மணி நேரம் இன்று தமிழ் செய்தித் தொலைக்காட்சிகளைப் பார்த்துப் புரிந்து கொண்டேன் –
கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லும் ‘தமிழ்’ ஊடகங்கள்! - தினசரி

என்று அலுத்துக் கொள்ளவோ வேண்டாம்! செய்திகள், விவாதங்களில்,அவைகளின் வேர் எங்கே இருக்கிறது என்று பார்க்கத் தெரிந்துகொண்டாலே போதும்! அட! இதை முன்னாடியே ரங்கராஜ் பாண்டே சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்!      


                    
at January 30, 2019 4 comments:
Share

எமெர்ஜென்சி நாட்களிலும் அதற்குப் பின்னாலும் ஹீரோ! ஜார்ஜ் பெர்னாண்டஸ்!



இன்றைய செய்திகளில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவு, தலைப்புச் செய்திகளில் ஒன்றாக ஆகியிருக்கிறது. அரசியல்வாதியோ, சினிமா நடிகனோ அல்லது இங்கே பதிவுகள் எழுதிக் கொண்டு இருக்கிற நாமோ சும்மா இராமல் கையைக் காலை ஆட்டிக் கொண்டே இருக்கவேண்டும். இல்லையானால், இறந்தவர்கள் போல மறந்துபோனவர்கள் பட்டியலில் சேர்ந்து விட வேண்டியிருக்கும் என்பது எவ்வளவு கசப்பான உண்மை என்பதை ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணச் செய்தி முன்னால் வந்து உறுத்துகிறது.

ஜெர்ரி டு கார்கில் ஹீரோ ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் - போராட்டங்களையே வாழ்க்கையாகக் கொண்ட ஒரு தலைவன்! என்று தினமணி நாளிதழ் ஒரு சிறப்புக் கட்டுரையை புகழ் அஞ்சலியாக வெளியிட்டிருக்கிறது.


Narendra Modi‏Verified account @narendramodi
During his long years in public life, George Sahab never deviated from his political ideology. He resisted the Emergency tooth and nail. His simplicity and humility were noteworthy. My thoughts are with his family, friends and lakhs of people grieving. May his soul rest in peace.
8:08 PM - 28 Jan 2019

Narendra Modi‏Verified account @narendramodi

When we think of Mr. George Fernandes, we remember most notably the fiery trade union leader who fought for justice, the leader who could humble the mightiest of politicians at the hustings, a visionary Railway Minister and a great Defence Minister who made India safe and strong.
8:07 PM - 28 Jan 2019

 

Mohit singh‏ @mohitsinghj
#GeorgeFernandes . One of the best Defence Ministers India had.When bureaucrats were delaying procurement of equipment for jawans in Siachen,he transferred them to Siachen for a week. When they returned to Delhi,they signed the files.
8:01 PM - 28 Jan 2019

Mohit singh‏ @mohitsinghj

Rest In Peace #GeorgeFernandes 🙏 This man had guts to remove Sonia Gandhi ‘s Photo from a conference hall and said only slaves will put her pic with great people of India .. Watch his full video


0:29
52 views
8:22 PM - 28 Jan 2019 டிவிட்டரில் வீடியோவைப்! பாருங்கள் 
இந்த நான்கு ட்வீட்டுகளே ஜார்ஜ் பெர்னாண்டஸ் யார்,  எப்படிப்பட்ட ஆளுமை என்பதைச் சொல்லிவிடும்! இங்கே இன்றைய தலைப்புச் செய்தியாக! என்றைக்கும் நினைவில் வைத்திருக்க வேண்டிய ஹீரோவாக இருப்பவர்! 1974 இல்  அகில இந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தை முறியடிக்க, மதம்பிடித்த யானையாக இந்திரா, ஜார்ஜ் பெர்னாண்டசைக் கைது செய்ய நாடு முழுவதும் சல்லடைபோட்டுத் தேடியபோதும், தலைமறைவாக இருந்தேவேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது ஒரு சின்ன சாம்பிள்தான்!        





Emergency-era 'rebel leader' George Fernandes passes away at 88
Moneycontrol.com
2 hours ago


George Fernandes: Anti-Emergency crusader and a champion of the labourers
The Indian Express
2 hours ago


George Fernandes, the poster boy of anti-Emergency, dies at 88
The Indian Express
3 hours ago
More for emergency and george fernandes

Web results


at January 29, 2019 10 comments:
Share
‹
›
Home
View web version

என்னைத் தெரியுமா? இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்!

My photo
கிருஷ்ண மூர்த்தி S
வங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக!
View my complete profile
Powered by Blogger.