ஒரு
திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் தொடர்ந்து கேள்விகள் கேட்கிற மாதிரி ஒரு காட்சி அதற்கு நடிகவேள் எம்
ஆர் ராதா, தன்னுடைய கரகரத்த குரலில் கேள்வி கேக்குறான்...கேள்விப்பய மவனே என்று பதில் சொல்கிற வசனம் அந்த நாட்களில் கொஞ்சம் பிரபலம். ஆனால் வெறும் காமெடியாக மட்டுமே பார்க்கப்பட்டது. இங்கே எத்தனை பேருக்கு நினைவிருக்கப் போகிறது என்பது தெரியவில்லை ஆனால் நம்மில் பெரும் பாலோனோருக்குக் கேள்விகளே சுத்தமாகப் பிடிக்காது என்பது தான் உண்மை!
ஒரு நிலையில் கேள்வி கேட்பவரையே பிடிக்காது என்று கூட ஆகி விடுவதுண்டு!
அப்புறம் எப்படிக் கேள்விகளைக் கேள்வி கேட்பது?
பொதுத்துறையில் ஒரு புள்ளி ராசா வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம் ஸ்டாஃப் மீட்டிங் என்ற ஒரு சாங்கியம் மாதம் ஒருமுறையாவது நடத்தப்படவேண்டும் என்பது ஒரு விதி
மாதம் ஒரு முறை நடந்ததாக ஏதோ ஒரு தேதியில் நடந்ததாக ஒரு ஸ்டேட் மெண்டில் வட்டார அலுவலகத்துக்கு அனுப்புவதில் ஒரு குறைச்சலுமில்லை! தப்பித்தவறி சிலசமயங்களில் ஸ்டாஃப் மீட்டிங் நடந்துவிடுவதுமுண்டு. கிளை மேலாளர் ஏதோ கேட்க வேண்டுமே என்பதற்காக ஒரு டாபிக்-உதாரணமாக பிசினஸ் போதவில்லை அது இது என்று வட்டார அலுவலகத்தில் கேட்ட கேள்வியை பணியாற்றுகிறவர்களுடைய கருத்துக்களுக்காக முன்வைப்பார் முன்வைக்கும் விதமே கருத்துக்களைக் கேட்பதற்காக அல்ல, இது ஒரு சாங்கியம் தான் என்ற ர்தியில்
இருக்கும் அங்கே நடக்கும் கலந்துரையாடல் எப்படிப் போகும்
என்ன ஆகும் என்பதை ஒரு சிறுகுழந்தை கூட ஊகித்துவிடும் என்பதால் அதிக
விவரணைகள் தேவையில்லை.
முந்தின பதிவில் சேத் கோடின், கேள்விகளைக் கேள்வி கேளுங்கள் என்று தலைப்பிட்டு சொல்லியிருந்த ஒரு இரண்டு வரிப்பதிவைப் பார்த்திருந்தோம் இல்லைனா?
The best creative solutions don't come from finding good answers to the questions that are presented.
They come from inventing new questions.
முதலில் கேள்விகள் எப்படி, எந்த மாதிரியான சூழலில் எழுகின்றன?
முந்தின பதிவில் சேத் கோடின், கேள்விகளைக் கேள்வி கேளுங்கள் என்று தலைப்பிட்டு சொல்லியிருந்த ஒரு இரண்டு வரிப்பதிவைப் பார்த்திருந்தோம் இல்லைனா?
The best creative solutions don't come from finding good answers to the questions that are presented.
They come from inventing new questions.
முதலில் கேள்விகள் எப்படி, எந்த மாதிரியான சூழலில் எழுகின்றன?
ஆர்வம் பயம்,பிரச்சினை என்று கேள்விகள் பெரிதாக எழுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் உயிரினங்களின் மிக அடிப் படையான இயல்பே கேள்விகளைக் கேட்டு விடைகளைத் தேடுவதாகத்தான் இருக்கிறது.ஆனால் இந்தமாதிரிக் கேள்வி எழுப்பி விடைகளைத் தேடி அலைகிற நிகழ்வு ஒரே மாதிரி, ஒரே நேரத்தில் எல்லோரிடத்திலும் நிகழ்வதில்லை.
இதில் ஒரு தெளிவிருந்தாலேயே, கேள்விகளுக்கான விடையைக் கண்டு கொள்வது மிக எளிது. A problem (question) well stated, is a problem half-solved தெளிவாக வரையறுக்கப்படுகிற கேள்விக்கான பாதிப் பதில் அப்படிக் கேட்கப் படும் கேள்வியிலேயே இருக்கிறது என்று சொல்வது இதனால் தான்! சேத் கோடின் சொல்வதில் இர்ண்டாவது வரியைப் பார்ப்போம் (தீர்வுகள், கேள்விக்ளுக்கான சரியான பதிலைக் கண்டு சொல்வதில் இல்லை) அவை புதிதாகக் கேள்விகளை எழுப்புவதில்(கண்டுபிடிப்பதில்) இருந்து வருகின்றன என்று சொல்கிறாரே அது முழுக்க முழுக்க சரிதானா?
மேம்போக்காகப் பார்க்கையில் சரிதான் என்று உடன்பட்டாலும் கொஞ்சம் யோசித்துப் பார்க்கையில், கேள்விகளைப் புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமே இல்லாமல், ஒரு கேள்வியே அதைத் தொட்டு இன்னும் பல கேள்விகளுக்கு வித்தாக இருக்கிறது, மேலும் கேள்விகளுக்கு இடம் கொடுக்கிறது என்று தான் படுகிறது ஒரு குளத்தில் கல்லை விட்டெரிகையில் அது தொடர்ந்து அதிர்வு அலைகளை உருவாக்குகிற மாதிரியே!
சேத் கோடின் இந்தப் பதிவை
வெளியிட்டிருந்தது டிசம்பர் 22. இதற்கும்
மூன்று வாரங்களுக்கு முன்னமேயே வேறொருcontext இல் டாம் ஃபாஸ்டர் எழுதிய பதிவையும் கொஞ்சம் சேர்த்துப் பாருங்கள்
“So, to clarify, I don’t bring value by
telling you what to do, but I bring value by asking questions?”
“You’re telling me,” Jeanine started
slowly, “that I don’t bring value to my team by telling them what to do, but
that, as a manager, I bring value by asking questions.”
கேள்விகள்
கேட்பது தெளிவுபடுத்திக்கொள்வதற்காக மட்டுமே இல்லை! கேள்விக்குப்
பதில் என்பது அத்துடன் திருப்தியடைந்து விடுகிற நிலை.. அப்படி ஆகுமேயானால், அதற்குப் பிறகு
எதுவுமே வளர்ச்சி தேய்மானம் என்று ஒன்றுமே இருக்காது.
கேள்விகளைக்
கேள்வி கேட்பது என்பது, இன்னும் விரிந்து விரிந்து,புதிய வளர்ச்சி,புதிய
இலக்குகளைத் தேடுவது, எட்டிப் பிடிப்பது! தொட்டுத்தொடர்ந்து வளர்ந்து உயர்கிற
நிலை!
சரிதானா?கொஞ்சம்
யோசித்து உங்களுக்கு எப்படிப் படுகிறது என்பதைக் கொஞ்சம்
சொல்லுங்களேன்! தெரிந்து கொள்ள, தொடர்ந்து பேசக் காத்திருக்கிறேன்!
//கேள்விகளைக் கேள்வி கேட்பது என்பது, இன்னும் விரிந்து விரிந்து,புதிய வளர்ச்சி,புதிய இலக்குகளைத் தேடுவது, எட்டிப் பிடிப்பது! தொட்டுத்தொடர்ந்து வளர்ந்து உயர்கிற நிலை! //
ReplyDeleteஅனுபவித்துச் சொல்லியிருக்கிறீர்கள். அப்படித் தொட்டுத் தொடர்ந்து வளர்தலில் அதீத ஆசை உண்டு எனக்கும்.
வாருங்கள் ஜீவி சார்!கேள்விகளே மதிப்பைத் தருகின்றன, மதிப்பைக் கூட்டுகின்றன. வளரச் செய்கின்றன எப்படியான கேள்விகள் என்பதில் தான் சூட்சுமமே இருக்கிறது இந்த டாபிக் என்னை அவ்வளவு எளிதாக விட்டு விடாது போலிருக்கிறது! :-)
ReplyDelete