கேடி ப்ரதர்சுக்குப் பிடித்த கேடு காலம்! மந்திரிசபையில் மாற்றம்!

பதிவு பிடித்திருக்கிறதா? பிடித்திருந்தால், கீழே உள்ள ப்ளஸ் ஒன் மீது க்ளிக் செய்யுங்கள்.

ஜூன் 30, 2001!

ஐயோ  கொல்றாங்களே! ஐயோ கொல்றாங்களே!
இப்படி ஒரு ஓலத்துடன் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட படலம் நடந்தேறிய நாள்.

தாத்தாவுக்காக அந்தப் பிரபலமான 'ஐயோ கொல்றாங்களே!" டயலாகை டப்பிங் கொடுத்தது தயாநிதி மாறன் தான் என்று சொல்லப்பட்டதுமுண்டு!

பேரன்கள், தங்களுடைய ஊடக பலத்தை வைத்து, ஒரு துரும்பை, மலை மாதிரி மாற்றிக் காட்டினார்கள்!  பல நாட்கள், சன் தொலைக்காட்சியில் அதையே திரும்பத்திரும்ப ஒளிபரப்பி, கோயபல்ஸ் சொன்ன மாதிரி, திரும்பத் திரும்பச் சொன்னால் பொய் கூட நிஜமாகிவிடும் என்பதை மெய்ப்பித்துக் காட்டினார்கள். தாத்தா என்னவோ பெரிய வசனகர்த்தா தான்! அது என்றைக்கோ காலாவதியாகிப் போன ஒன்று என்பது உளியின் ஓசை எழுதியவருக்கு இன்றைக்கும் கூடத் தெரியவில்லை என்பது அவருடைய பரிதாபம்!

அன்றைக்கு நடந்தது என்ன என்பதை ஹிந்து நாளிதழ் செய்தியாக  


ஆனால் தாத்தா தான் எழுதிய வசனத்தை விட, பேரன் கொடுத்த டப்பிங் ரொம்பவுமே எஃபெக்டிவாக இருந்ததை, ஒப்புக் கொண்ட மாதிரித்தான் பேரனை 2004 தேர்தலில் எம்பியாக்கி அழகு பார்த்ததும், ஆனா ஆவன்னா கூடத் தெரியாத பேரனைக் காபினட் அந்தஸ்துள்ள அமைச்சராக்கிப் பார்த்ததும் இருந்தது. 

ன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட கதையாகி விடப் போகிறது என்று அன்றைக்குத் தாத்தாவுக்குத்  தெரியவில்லை! எல்லாம் அவர் நம்பாத அந்த "விதி" என்றுதான் சொல்ல வேண்டும்!


தாத்தா கூட செய்யத் துணியாத ஒன்றை தயாநிதி துணிந்து செய்தார்!  

ஊழலைச் சொல்லவில்லை! ரத்தன் டாட்டாவை ரொம்ப நேரம் காக்க வைத்துத் தன்னுடைய கித்தாப்பைக் காண்பித்துக் கொண்ட விதம் ஒரு வலிமையான எதிரியை உருவாக்கப் போகிறதென்றோ,வடக்கத்திய கார்பரேட்டுக்கள் தாத்தாவின் அரசியல் வித்தகத்தைவிட அதிக சாமர்த்தியமானவை என்பதோ தயாநிதிக்கு அன்றைக்குத் தெரிந்திருக்கவில்லை! 

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவர்களுக்கு ஆப்பும் அதே மாதிரித்தான்  வரும் என்பது கேடி ப்ரதர்சுக்குத் தெரியவில்லை. மதுரை இளவரசருடன் நேரடியான மோதலில் இறங்கிக் கையைச் சுட்டுக் கொண்டார்கள். இதயம் கனத்துக் கண்கள் பணிக்க ஏற்பட்ட சமரசத்துக்கு கேடி பிரதர்ஸ் அதிக விலை கொடுக்க வேண்டிவந்தது தனிக்கதை!
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசாவை மிஞ்சிய வசூல் ராசாவாக இருந்தவர் தயாநிதிதான் என்று கூட சொல்கிறார்கள்! சொல்கிற கதையைக் கேட்கும் போதே தலை சுற்றுகிறது.
ன்றைக்கு, தயாநிதி மாறன் மன்மோகன் சிங்கை சந்தித்துத் திரும்பி ருக்கிறார். தன்னுடைய அமைச்சகத்தின் விவகாரங்களைப் பற்றி மட்டுமே பேசி வந்தேன் என்று யாரும் நம்பாத ஒன்றை சொல்லியிருக்கிறார். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற மாதிரி, நான் இன்னும் அமைச்சராகத் தான் இருக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார்! இந்த வார இறுதிக்குள் ராஜினாமா செய்கிற கூத்து அரங்கேறும் என்றும் சொல்கிறார்கள்!

கூடவே அ'னாவும் மத்திய மந்திரிசபையில் இருந்து கழற்றிவிடப்படுவார், கண்டனூர் பானா சீனாவுக்கு இப்போது இறங்குமுகம் ஆனால் ,மந்திரி சபையில் இருந்து கழற்றிவிடப்படமாட்டார் என்றெல்லாம் ஊகங்கள், வதந்திகள் நிறைய உலவிக் கொண்டிருக்கின்றன.   


பரிதாபமாக இருக்கிறது என்று சொல்லி விட முடியாது!பத்தே ஆண்டுகள் தான்! தயாநிதி மாறன் அரசியல் வால் நட்சத்திரமாகிப் போனதற்கு அதுவே அதிக காலம் தான்!
 

காங்கிரஸ் என்றால் வஞ்சம் தீர்ப்பது! படித்ததும் பிடித்ததும்!

அன்றொரு நாள் ஜூன் 28

 
இப்படி அன்றொரு நாள் என்று தலைப்பிட்டு, அந்த அந்த நாட்களில்  நடந்த சம்பவங்களை கொஞ்சம் பழைய நடப்புக்களைத் திரும்பிப் பார்க்கிற விதத்தில்,சுவாரசியமாக, சுருக்கமாக கூகிள் வலைக் குழுமங்களில் (மின்தமிழ், தமிழ்வாசல்) எழுதிக் கொண்டிருக்கிறார், இன்னம்புரான் என்று அறியப்பட்ட திரு சௌந்தரராஜன். இந்திய அரசின் தணிக்கைத் துறையில் பணியாற்றியவர் என்ற வகையில், இந்திய அரசு, அரசு நிர்வாக (அ)லட்சணம் பற்றி நிறையவே தெரிந்து வைத்திருப்பவர்! பிரிட்டிஷ் அரசு அமைப்பு, நீதி, நிர்வாக, தேர்தல்  முறையில் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பவர்! இந்தியச் சூழ் நிலையில் அது ஊழலுக்கு மட்டுமே வித்து, விளைநிலம் என்பதாக இவருடன் எனக்குக் கருத்து வேறுபாடு இருந்தாலும், இவருடைய பத்தி எழுத்து கொஞ்சம் சுவாரசியமாகத் தான் இருக்கிறது.

இன்று ஜூன் 28 காங்கிரஸ்காரர்களே  மறந்துபோன அல்லது சோனியா அண்ட் கம்பனியால் திட்டமிட்டே மறக்கடிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் பி வி நரசிம்ம ராவ் பிறந்த தினம் என்று ஆரம்பித்து, ஒன்றிரண்டு விஷயங்களைத் தொட்டு திரு இன்னம்புரான்,அதற்குப் பின்னூட்டமாக எழுத்தாளர் திரு வி.திவாகர் எழுதியிருந்ததை இன்று மாலை படித்துக் கொண்டிருந்த போது, சிலவிஷயங்களை மறுபடி நினைத்துப்பார்த்தேன்!

நரசிம்ம ராவ் என்று சொன்னவுடன் உடனேயே நினைவுக்கு வருவது, நேரு காலம் தொட்டுக் கடைப்பிடிக்கப்பட்ட முட்டாள்தனமான சோஷலிசப் பொருளாதாரத்தால் தேசமே திவாலாகும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்த நேரத்தில்,துணிச்சலுடன் மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள்!

நரசிம்ம ராவ் என்று சொன்னவுடன், கூடவே நினைவுக்கு வருவது சூட் கேஸ்!

ஹர்ஷத் மேத்தா என்ற பங்குவர்த்தகப் புள்ளி நரசிம்மராவுக்கு ஒரு கோடி ரூபாய் ஒரு சூட் கேசில் அடைத்துக் கொடுத்ததாக வந்த செய்திகள், ஒருகோடி ரூபாயை (அப்போது, ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கிடையாது!) சூட்கேசில் அடைக்க முடியுமா, முடியாதா என்று தொடர்ந்து கொண்டிருந்த சர்ச்சைகள்! அதையும் தாண்டி, சிரிக்கவே தெரியாத மனிதராக எப்போதுமே சீரியஸாக, சிடுமூஞ்சியாக முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் நபர் என்ற சித்திரம்!

நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கையை விட, நரசிம்மராவ் வாங்கிய ஓட்டுக்கள் மிகவும் அதிகம்(!!) என்று அந்த நாட்களிலேயே நம்முடைய தேர்தல்முறை மிகவும் கேலிக்குள்ளானதும் கூடவே நினைவுக்கு  வருகிறது!

பொருளாதார சீர்திருத்தம், நரசிம்ம ராவ் தலைமையிலான அரசின் தனிப்பெரும் சாதனை! திவாலாகும் நிலையில் இருந்த தேசம் கொஞ்சம் மீண்டெழ உதவிய சாதனை அது! அந்த சீர்திருத்தத்தைத் தொடர்ந்து  வந்த உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளினால்தான், இப்போது நம்முடைய அரசியல் வாதிகள் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொள்ளையடிக்க முடிந்திருக்கிறது! 

போபார்ஸ் ஊழலில் ராஜீவ் காந்திக்கு சுவிஸ் ரகசிய வங்கிக் கணக்கில் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட தொகை வெறும் அறுபத்து நாலே கோடி ரூபாய்தான்! இன்றைக்கு இரட்டை இலக்கமாக இருந்த கோடிகள், ஆயிரம் லட்சம் கோடிகளில் பேசப்படுவதாகப் பெருகிப் போகிற அளவுக்கு, ஒருவலுவான பொருளாதார அடித் தளத்தை அமைத்துக் கொடுத்தவர் நரசிம்மராவ் தான்! 

ஆனால், நரசிம்மராவை நன்றியோடு  நினைத்துப்பார்க்க, அவரால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்ட, அன்றைக்குப் பொருளாதார மேதையாகவும், இன்றைக்கு வெறும் டம்மிப் பீஸ், காமெடிப் பீசாகவும் ஆக்கப்பட்டிருக்கிற மன்மோகன் சிங்குக்குக் கூட நேரமில்லை! தைரியமுமில்லை! 

இதை சொல்கிற போதே, மன்மோகன் சிங் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, வேறு புதிய முகமூடி உட்கார வைக்கப்படலாம் என்ற ஹேஷ்யங்கள் வலுத்துக் கொண்டிருக்கின்றன. பிரணாப் அல்லது பானா சீனா என்றெல்லாம் பெயர்கள் அடிபட்டன., பானா சீனா கதையே இப்போது கந்தலாகிக் கொண்டிருக்கும் நிலையில் உள்துறையாவது தங்குமா என்றே தெரியாத நிலையில் மன்மோஹனுக்கும் நரசிம்மராவுக்கு ஏற்பட்ட அதே கதிதானா அல்லது கொஞ்சம் மரியாதையாவது மிஞ்சுமா என்பதே தெரியவில்லை!

பொருளாதார சீர்திருத்தம் மட்டுமல்ல, நரசிம்மராவ் ஆட்சிக்கு இன்னுமொரு தனிச்சிறப்பும் இருந்தது.  சோனியா அண்ட் கம்பனியைத் தலைதூக்க விடாமல் வைத்திருந்ததுதான் அந்தத்தனிச் சிறப்பு! 


அதுவே அவருக்கு வினையாகிப் போனது, வரலாற்றின் நகை முரணாகத் தெரிந்தாலும், காங்கிரஸ் வரலாறே, துரோகங்கள், உள்ளிருந்தே கொல்லும் வியாதியாக இருக்கும் அதன் தலைவர்களைப் பற்றி கொஞ்சமாவது அறிந்தவர்களுக்கு ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை!

டில்லியை சமாதிகளின் நகரம் என்று சொல்வார்கள்!  

மொகலாயப் பேரரசர்கள், வெறும் பத்தே மைல் பரப்பளவை மட்டும் ஆண்டு கொண்டு உலகத்தின் சக்கரவர்த்தி என்று பொருள் பட ஷா ஆலம் என்ற பெயருடன் ஆண்டஒரு நபரையும்  உள்ளிட்டு  (இந்த உலகப்பேரரசனுடைய ஆட்சியின் கீழ் டில்லி யில் இருந்து தற்போது பாலம் விமான நிலையம் வரையிலான இடம் மட்டுமே) ஏகப்பட்ட சமாதிகள், நினைவுச் சின்னங்கள், ஸ்தூபிகள்!

இதுபோக சுதந்திர இந்தியாவின்(புது) டில்லி பாதுஷாக்களுக்கும்!  ஒரே விதிவிலக்கு, மகாத்மா காந்தி ஒருவர் தான்! பதவியில் இல்லாத சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி உட்பட நேரு குடும்பத்தவர்க்கு மட்டும் தனியாக நினைவிடங்கள்!

நரசிம்மராவுடைய கடைசி எட்டு ஆண்டுகாலம், அவ்வளவு சொல்லிக் கொள்ள முடியாத சோதனையான காலம். திட்டமிட்ட பழிவாங்குதல், வழக்குகளுக்கு ஆளான நிலையில், எதுவும் செய்ய முடியாமல், கடைசியில் 2004 டிசம்பர் 23 ஆம் தேதி மரணமடைந்த பிறகு கூட சோனியா அண்ட் கம்பனியுடைய வஞ்சம் தீரவில்லை! ஒரு முன்னாள் பிரதமர், அமிக இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக இருந்தவர், அவருடைய பிணத்தைக் கூட, காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்குள் கொண்டுவந்து அஞ்சலி செய்ய விடவில்லை. அக்பர் ரோடு கட்சி அலுவலக வாசலில்  இருபது  நிமிடம் வைத்து அனுப்பிய கட்சி காங்கிரஸ்! 

நரசிம்மராவ், நவயுக டில்லி பாதுஷா குடும்பத்தை சேர்ந்தவர் இல்லையே!

ஆனால், நரசிம்மராவ் எழுதிவைத்திருந்த புத்தக வரைவுகள், இதர விஷயங்களைக் கைப்பற்றுவதில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவான அரசு இயந்திரம் செயல்படத் தயங்கவில்லை!  எமெர்ஜென்சி குறித்து, நரசிம்மராவ் ஒரு புத்தகம் எழுத உத்தேசித்திருந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்!

டில்லி கண்டோன்மென்ட் பகுதியில் எரித்தால் என்னவோ நோய்
தொற்று வந்துவிடும் என்ற ரீதியில் அரசு இயந்திரம்முக்கி முனகி  சாதாரண ஜனங்கள் எரிக்கப்படும் நிகம்போத் இடுகாட்டில்  இறுதிச்  சடங்குகள் செய்யலாம் என்றிருந்த நிலையில், ஹிட்லர் மாதிரி சர்வாதிகாரம் செய்ய வந்த ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி தான் நரசிம்மராவ் குடும்பத்தை வற்புறுத்தி, இறுதிச்சடங்குகளை ஹைதராபாத்தில் வைத்துக் கொள்ள வற்புறுத்தினார்.

"Rao deftly navigated the political waters at a time when his own party was out to scuttle his most ambitions undertaking and made economic reforms politically tenable. How ironical then that today the same Congress party functionaries shout from the rooftops trying to take credit for India's economic success without acknowledging the role of Rao who envisioned and executed the process?
 

..........
 
For all this, Rao has only received contempt from his party colleagues. Being one of the most successful Indian prime ministers from a non-Nehru-Gandhi dynasty is not something that Congress-wallahs can accept easily. In their deference to the Dynasty, they have vilified Rao, a sagacious and wily leader who led this nation like few others. Hopefully, history will restore him to a place that he truly deserves -- as one of the most remarkable prime ministers of modern India."

எமெர்ஜென்சி முடிந்துவிட்டதாக அல்லது அது நேற்றைய பழங்கதை என்று யார் சொன்னது? 


  
 
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்  வரை, இந்திரா வாரிசுகளுடைய பிடியில் தான் காங்கிரஸ் கட்சி இருக்கும் என்ற நிலை தொடரும் வரை, எமெர்ஜென்சி, நெருக்கடி நிலை என்பது வெறும் கற்பனை இல்லை. எப்போதுவேண்டுமானாலும், அவர்களுடைய ஊழல் முகத்தை மறைத்துக் கொள்ள முடியாத தருணங்களில் சாதாரண ஜனங்களின் மீது பிரயோகிக்கப் படக் கூடியதுதான்!

இன்னும் கொஞ்சம் விவரமாகத் தெரிந்துகொள்ள இங்கே மற்றும் இங்கே 


 
நல்லவேளை மெரீனா தப்பித்தது!

 

எமெர்ஜென்சி! அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா?
இன்றைக்கு ஜெயலலிதாவைக் கேலி செய்கிறார்களே! அன்றைக்கு எந்தக் காங்கிரஸ்காரனுக்காவது, இந்திரா எதிரே உட்கார தைரியம் இருந்ததா?
 
INDIRA Gandhi suspended constitutional guarantees and imposed Emergency at midnight on June 25, 1975. This will be discussed yet again on Saturday in seminar halls across India. However, the equally important international context of the landmark event is not viewed as seriously.

Seen from the perspective of India’s internal dynamics, the day marks the 36th year since she put many of her opponents in jail. To heighten the irony or to perhaps flaunt feigned even handedness, she also incarcerated members of smuggling and assorted underworld syndicates.

Some newspapers held their ground for a while by leaving yawning white spaces instead of accepting censored news. But by large the media “crawled when they were asked to bend”. Mrs Gandhi’s political targets included ideologues of the Hindu, Sikh, Muslim right as well as Gandhian socialists. Some communists were jailed but several others supported her short-lived and miscalculated authoritarianism.

இப்படி சொல்லியிருப்பது டான் என்ற பாகிஸ்தான் நாளிதழின் டில்லி நிருபர்! ஜாவேத் நக்வி என்று பெயர்.

இந்திரா காண்டி 1975 ஆம் வருடம் ஜூன் மாதம் 25 ஆம் தேதி நள்ளிரவு, நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தி,அரசியல் சாசனம் வழங்கியிருந்த அடிப்படை உரிமைகளை ரத்து செய்தார். அவரை எதிர்த்தவர்கள் மட்டுமல்ல, எதிர்ப்பவர்கள் என்று கைகாட்டப் பட்டவர்களும் சேர்ந்தே நள்ளிரவுக் கைது  நடவடிக்கையில் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
 
வேடிக்கை என்ன என்றால், இங்கே மதுரையில் தீப்பொறி ஆறுமுகம் என்று ஒரு ஸ்தாபன காங்கிரஸ் பேச்சாளர்! திமுகவில் இருந்து ஸ்தாபன காங்கிரசுக்கு வந்த, கொச்சையாக, ஆபாசமாக அரசியல் மேடைகளில் பேசுகிறவர். திராவிட இயக்கங்களின் பரிணாம வளர்ச்சியே வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம் மாதிரி ஆபாசப் பேச்சாளர்களைச் சார்ந்தே இன்றைக்கும் இருந்து வருகிறது.(நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காமெடி நடிகர் வடிவேலு என்று ஒருத்தர், இந்த மாதிரி வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்கிக் கொண்ட கதையாகிப் போனாரே, நினைவுக்கு வருகிறதா?)

மதுரையைச் சேர்ந்த ஆர் வி சாமிநாதன் என்று ஒரு மத்திய இணை அமைச்சர்! அவரிடம் எவரோ போட்டுக் கொடுத்தார்கள், ஐயா, இந்த மாதிரி ஒருத்தர் அன்னை இந்திராவை ஆபாசமாகப் பேசுகிறார்....என்று! அவ்வளவுதான்! உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப்பட்ட  மிசாவின் (Maintenance of Internal Security Act)  கீழ் தீப்பொறி ஆறுமுகத்தைப் பிடித்து உள்ளே போட்டார்கள். தீப்பொறி ஆறுமுகத்தோடு கூடவே, திமுகவில் இன்னொருத்தர்! பாண்டியன் என்கிற தெருச் சண்டியர்!அவரையும் மிசாவில் பிடித்துப் போட்டார்கள், வெளியே வந்ததும் அவர் "மிசா" பாண்டியனாகிப் போனார்! 

ஆக, மிசா, எஸ்மா, அது  இது என்று ஏகதடபுடல்களுடன் தம்பட்டம் டிக்கப்பட்ட சட்டங்கள் கேணத்தனமாகத்தான் பயன் படுத்தப் பட்டன. கேவலம் தீப்பொறி ஆறுமுகம் மாதிரி ஆசாமிகளால் உள்நாட்டுப் பாதுகாப்பு குலைந்துவிடும் பிடித்துப் போடு உள்ளே என்று ஒரு அரசு செயல்படுமானால், அது ஒன்று கோழையிலும் கேடுகெட்ட கோழைத்தனம் உள்ளதாக இருக்க வேண்டும்!

அல்லது கேணைகள், கிறுக்கு மாய்க்கான்களால் நடத்தப் படுவதாக இருக்க வேண்டும்! எமெர்ஜென்சியில் இரண்டு விதமாகவும் இருந்தது என்பதுதான் வரலாறு!

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்! நேரு குடும்பம் பல்கலைக் கழகமல்ல! பலவிதக் குழப்பம்! கலப்படம்!
 
திமுக என்னமோ மிசாவை எதிர்த்துப் பெரிதாகக் கிளர்ச்சி நடத்தியதாகக் கதை சொல்லுவார்கள். சென்னையில் முக ஸ்டாலின், சிட்டி பாபு இருவர் மீதும் அடக்குமுறை மிகக் கடுமையாக இருந்தது. மற்றப்படி எமெர்ஜென்சியின் முழு வீச்சையும், வெறித் தனமான ஆட்டத்தையும் தமிழ்நாடு முழுமையாகத்தெரிந்து கொள்கிற மாதிரி பெரிதாக இல்லை. பத்திரிகைகளின் வாய்க்குப் பெரிதாகப் பூட்டுப் போடப்பட்டது. தணிக்கை அதிகாரிகள், அரசையும் இந்திராவையும் எவராவது விமரிசிக்கத் துணிகிறார்களா என்று கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு தணிக்கை செய்தார்கள். 

அந்தத் தணிக்கையையும் தனக்கே உரித்தான துணிச்சலுடன் எதிர்கொண்ட ஒரே பத்திரிக்கை சோ நடத்திய துக்ளக் ஒன்று தான். அடுத்து, திரு ராம்நாத் கோயங்காவின் வழிநடத்தலில் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிகைக் குழுமம் எமெர்ஜென்சியை எதிர்த்துக் குரல் கொடுத்தது. குல்தீப் நய்யார் சொல்கிறபடி, கொஞ்சம் வளைந்துகொடு என்று இந்திரா சொன்னவுடன், ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று தங்களைப் பற்றிப் பீற்றிக் கொள்ளும் பத்திரிகைகள்,மண்டியிட்டுத் தவழ ஆரம்பித்த விநோதத்தை என்னவென்று சொல்வது?

நீதித்துறைக்கு மட்டும் முதுகெலும்பு  இருந்ததா? இந்திராவின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ள எந்த நீதிபதியுமே தயாராக இல்லை! எச் ஆர் கண்ணா ஒருவரைத் தவிர, அரசுக்கு எதிராக தீர்ப்பை எழுதுகிற தைரியம் உச்சநீதி மன்ற நீதிபதிகளில் எவருக்குமே இல்லை! அரசு அதிகாரிகள் கூழைக் கும்பிடு போட்டு, ஜனங்களை இன்னமும் கசக்கிப் பிழிந்தார்கள். முதுகெலும்போ சுயசிந்தனையோ இல்லாத அரசியல், அதிகார வர்க்கம் இந்திராவின் துதிபாடிகளாக இருப்பது மட்டுமே பிழைக்கும் வழி என்பதைக் கண்டுகொண்டார்கள். காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களின் கட்சியாக மாறிக் கொண்டே வந்தது. 

அன்றைக்கு தேவ காந்த பரூவா என்ற ஒருத்தர் மட்டுமே அறியப்பட்ட காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கானாக இருந்தார்! இன்றைக்குப் பரிணாம வளர்ச்சியில் திக் விஜய்சிங், அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல் என்று ஒரு பெரிய பட்டாளமே உருவாகிக் குழப்பிக் கொண்டிருக்கிறது!

கேரளாவைப் பொறுத்தவரை, எமெர்ஜென்சி தருணத்தில் அப்படியே சாஷ்டாங்க நமஸ்காரம் தான்! அதையும் மீறி நடந்த ஒரே ஒரு  விஷயம் ராஜன் என்ற மாணவரை போலீசார் தீவீரவாதி என்று கைதுசெய்து சித்திரவதை செய்ததில் அந்த இளைஞன் இறந்தே போனான்.அவனுடைய தந்தை, ஈச்சர வாரியர் நடத்திய தனிமனிதப் போராட்டம், எமெர்ஜென்சி நேரத்து அத்துமீறலைப் பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டியது;கேரளாவில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இருந்த, இந்திரா காந்திக்கே சவால் விடக்கூடியவர் என்று  சொல்லப்பட்ட கருணாகரனுக்கு மட்டுமே ஏழரை பிடித்தது.
 எமெர்ஜென்சி கொடுமைகளை விசாரிக்க ஷா கமிஷன் என்று ஒரு விசாரணைக் கமிஷன்! தங்களுடைய குற்றங்களை அம்பலப்படுத்தும் ஷா கமிஷன் அறிக்கையைக் காணாமல் போகச் செய்த மாயம் காங்கிரசுடையது! கூட்டணி தர்மத்தை ஒட்டி, திமுக தலைவர் தன் மீது குற்றச்சாட்டுக்களை விசாரித்த சர்க்காரியா கமிஷன் அறிக்கையையும் காணாமல் போகச் செய்த மாயமும் இங்கே நடந்தது.

எமெர்ஜென்சியின் கடுமை ஹிந்தி பெல்டில் மட்டுமே அதிகமாக பாதித்தது என்று சொன்னால் இன்றைக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும் ஆனால் அதுதான் உண்மை. எமெர்ஜென்சி அடக்கு முறை அதிகமாக வெளிச்சம் போடப்படாத பகுதிகளில் காங்கிரஸ் 1977 தேர்தலில் அதிக சரிவை சந்திக்கவில்லை என்பதை சேர்த்துப் பார்த்தால் நிலவரம் புரிய வரும்.

ஜாவேத் நக்வி இந்தியர்களாகிய நம்மை வெட்கித் தலை குனிய வைக்கிற மாதிரி ஒரு கேள்வி கேட்கிறார். எமெர்ஜென்சி ஆட்டங்களை நினைவு வைத்திருக்க வேண்டியவர்கள் மறந்தே போய் விட்டோம்!வழிநடத்த வேண்டியவர்கள் தடம் மாறிப் போய் விட்டார்கள்! 

ஆக, தெரியாத தேவதையை விடத் தெரிந்த பிசாசே மேல் என்று இந்திரா காங்கிரஸ் என்று அறியப்பட்ட நாசகார பூதத்திடமே தலையைக் கொடுத்துவிட்டு, அதன் கருணைக்காகக் காத்திருக்கிறோம். இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல?

ஜார்ஜ் ஆர்வெல் என்பவர்  அனிமல் பார்ம் என்று ஒரு அரசியல் நையாண்டிக் கதையை எழுதினார்.  பல மிருகங்களும் கூடி வாழ்கிற ஒரு பண்ணையில், பன்றிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விடுகின்றன. அதிகாரத்துக்கு வந்ததும், பன்றிகள் ஒரு பிரகடனம் செய்கின்றன. "எல்லாப் பன்றிகளும் சமம்! ஆனாலும், சில பன்றிகள் மற்றவற்றை விட அதிக சமம்!" கம்யூனிஸ்ட் கட்சி மீது அதிருப்தியில் எழுதப்பட்ட இந்தக் கதை, கம்யூனிஸ்டுகளுக்குப் பொருந்தியதை விட, இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகமாகப் பொருந்துகிறது என்பதை இந்திரா காண்டி ஆள ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே இன்று வரை தொடர்கிற அவலம்.

ஜாவேத் நக்வி தன்னுடைய நக்கலை மறுபடி, அனிமல் பார்ம் நாவலில், ஜார்ஜ் ஆர்வெல் சொல்கிற ஒரு வரியை வைத்தே முடிக்கிறார்.

Reminds you of the famous lines from George Orwell’s Animal Farm? 

“The creatures outside looked from pig to man, and from man to pig, and from pig to man again; but already it was impossible to say which was which.”

வெளியே இருந்து பன்றிகளிடமிருந்து மனிதனை, மனிதனிடமிருந்து பன்றிகளை,மறுபடியும் பன்றிகளிடமிருந்து மனிதன்-மனிதனிடமிருந்து பன்றிகள் என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே, எது (பன்றி) எது (மனிதன்) என்று பிரித்துப் பார்க்க இயலாமலே போய் விட்டது! ஆம்! 

ஜெயப்ரகாஷ் நாராயணன் என்ற பழுத்த காந்தீயவாதி நடத்திய சம்பூர்ண கிராந்தி என்ற ஊழலுக்கெதிரான போராட்டம், இரண்டாவது விடுதலைப் போராட்டமாக ஆரம்பித்ததில் கவரப் பட்டு, அதில் முன்னணி வகித்த துடிப்பான இளைஞர்களாக உருவான ஜார்ஜ் பெர்னாண்டஸ்,ராம் விலாஸ் பாஸ்வான், நிதீஷ் குமார் இப்படி எவருமே, ஜெயப்ரகாஷ் நாராயணன் நம்பிக்கையைக் காப்பாற்றவில்லை. அது மட்டுமல்ல, ஊழலுக்கெதிரான ஜேபியின் போராட்டக் களத்தில் உருவான இவர்களே, பின்னாட்களில் பதவி சுகத்தைப் பார்த்ததும், ஊழல்வாதிகளாகவும் ஆனார்கள் என்பது கசப்பான படிப்பினை.

ஒன்று சொல்ல மறந்துபோய் விட்டேனே! எமெர்ஜென்சி தருணங்களில் ஒழுங்காக ஆபீஸ் நேரத்துக்கு வந்தவர்கள் அரசு ஊழியர்கள்! வேலை செய்தார்களா என்று மட்டும் கேட்காதீர்கள்!
எமெர்ஜென்சி தருணங்களில் நெஞ்சம் நிறைய அச்சத்தோடு வேலைக்கு வந்த ஒரே பிரிவு அரசு ஊழியர்கள் தான்!

எமெர்ஜென்சிக்கு முன்னாலும் சரி, அதற்குப் பின்னாலும் சரி,அரசு ஊழியர்கள் அப்படி பன்க்சுவலாக அலுவலகம் வந்ததும் இல்லை! ஏதோ தேறினவரைக்கும் சரி என்று  லஞ்சத்தை, இப்போது கறாராகக் கசக்கி வாங்குவது போல அல்லாமல் கொஞ்சம் தணிந்தே வாங்கினார்கள் என்பது எமெர்ஜென்சியின் ஒரே நல்ல அம்சம்.

அந்த கறுப்பு தினத்தின் முப்பத்தாறாவது நினைவு ஆண்டான இன்றைய தினத்தை மறக்க முடியுமா? மறந்து இருந்து விட முடியுமா?

எமெர்ஜென்சி, அதன் தழும்புகள், கற்றுக் கொள்ளத்தவறிய பாடங்கள் என்று தொடர்ந்து பேசுவோம்!

தொடர்புடைய பதிவு ஒன்று இங்கே 

தலைப்புச் செய்திகள்! கனிமொழி, கருணாநிதி, தயாநிதி அப்புறம் சுப்பிரமணியன் சுவாமி!''மிக மிக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த கலைஞர் டி.வி. சரத்குமாரால் திகாருக்குள் பொழுதைக் கழிக்கவே முடியவில்லை. ஆ.ராசா மூன்று வேளையும் சிறை உணவு சாப்பிடப் பழகிவிட்டார். கனிமொழி ஒருவேளை மட்டும் சிறை உணவு சாப்பிடுகிறார். ஆனால், சரத்குமாருக்கு சிறை உணவு ஒப்புக்கொள்ளவே இல்லை. டெல்லியில் 42 டிகிரிக்கு மேல் அடிக்கும் அனலும் திகாருக்குள் வெம்மையை உண்டாக்கி இருக்கிறதாம். வேனல் கட்டிகள் உருவாக, அதன் எரிச்சல் தாங்க முடியாமல் தவிக்கிறாராம் சரத்.


டெல்லியின் மத்தியப் பகுதியில் வசிக்கும் சரத்குமாரின் சகோதரிதான் தினமும் தன் வீட்டுச் சாப்பாட்டை திகாருக்குக் கொண்டுவருகிறார். சமீபத்தில் அவர் சாப்பாடு கொண்டுவந்தபோது, தி.மு.க-வின் எம்.பி ஒருவர் திகாருக்கு வந்தாராம். 'சரத்துக்கும் கலைஞர் டி.வி-க்குக் கைமாறிய 200 கோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பணம் கைமாறிய தேதியில் சரத் அதிகாரப்பூர்வமாக கலைஞர் டி.வி-யில் அங்கம் வகிக்கவே இல்லை. இதை எல்லாம் சொன்னால், கலைஞர் குடும்பத்துக்கு சிக்கலாகிவிடும் என்பதால்தான் சரத் அமைதியாக இருக்கிறார். ஆனால், உணவு, உடல் உபாதைகளை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. செலவுக்குக்கூடப் பணம் இல்லாத அளவுக்குத் தவிக்கும் எங்களை, உங்கள் கட்சியும் கைவிட்டுவிட்டது. இனியும் சரத் அமைதியாக இருக்க மாட்டார்!’ என ஆவேசமாக வெடித்தாராம்.''


''அப்புறம்..?''


சரத்தை எப்படியாவது அப்ரூவர் ஆக்கிவிட வேண்டும் என்பதில் சி.பி.ஐ. உறுதியாக இருக்கிறது. 

'200 கோடி கைமாறியதில் உங்களின் பங்களிப்பு இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். அதே நேரம் உங்களை நிர்ப்பந்தித்த ஆட்களைப்பற்றி நீங்கள் ஸ்டேட்மென்ட் கொடுக்க வேண்டும்!’ என வற்புறுத்தும் சி.பி.ஐ., அதற்கு 
கைம்மாறாக சரத்தின் ஜாமீன் கோரிக்கைக்கு உதவுவதாகச் சொல்கிறதாம். 

சிறையின் சூழ்நிலை பிடிக்காமல் தவிக்கும் சரத், எந்த நேரத்திலும் அப்ரூவர் ஆக வாய்ப்பு இருக்கிறது. அவர் வாய் திறந்தால், தி.மு.க-வின் மிக முக்கியத் தலையே  திகாரை நோக்கி வரக்கூடிய இக்கட்டு உருவாகுமாம்!''


''சரத்தை சமாதானப்படுத்தும் படலம் தொடங்கி இருக்குமே?''

''யாருடைய சமாதானத்தையும் ஏற்கிற நிலையில் சரத் இல்லை. தயாநிதி மாறனையே 'பார்க்க மாட்டேன்’ எனச் சொல்லி திருப்பி அனுப்பிய சரத், கருணாநிதியின் சந்திப்பின்போதும் பெரிதாக ஏதும் பேசவில்லையாம். 'எனக்கும் 200 கோடிக்கும் என்ன சம்பந்தம்?’ என சரத் கேட்க, 'இதே கேள்வியைத்தான் என் மகளும் கேட்கிறார். உங்களுக்கே தெரியும்... சினியுக் கம்பெனியில் கடன் வாங்கிய விஷயமே கனிக்கு தெரியாது. அதனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து நாம் ஆலோசனை நடத்திய போதுதான், கனிமொழிக்கு விஷயம் தெரியும். உங்க இரண்டு பேருடைய சூழ்நிலையும் ஒன்றுதான்!’ என உருகினாராம் கருணாநிதி. 

சிறையில் கனிமொழியுடன் மட்டுமே சரத் பேசுகிறாராம். ஆ.ராசாவின் முகத்தை அவர் திரும்பிக் கூட பார்ப்பது இல்லை. 

 நன்றி! மிஸ்டர் கழுகு! ஜூனியர் விகடன் 29-06-2011 இதழ்

 ******

னதா கட்சியின் தேசியத் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, அடுத்த ஏழு வாரங்களுக்கு கௌரவப் பேராசிரியராக அவதாரம் எடுக்கப்போகிறார். (அப்பாடா! ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கியவர்கள் பெருமூச்சு​விடலாம்!) 
ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறையில், சம்மர் கோர்ஸ் நடத்துவதற்காக சுவாமி செல்வது வழக்கம். அதற்காக, கடந்த புதன்கிழமை கிளம்பியவரை சென்னை விமான நிலையத்தில் சந்தித்தோம்.

'2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகப் போகிறதே? அதில் இடம் பெறப்போகும் வி.ஐ.பி-க்கள் பட்டியல் பற்றி சொல்லுங்​களேன்?''

''இந்தக் கேள்விக்கு என்னுடைய '2ஜி ஸ்பெக்ட்ரம் ஸ்காம்' புத்தகத்தில் விரிவாகப் பதில் எழுதி இருக்கிறேன். அதிகாரத்தில் உள்ளவர்கள், அவர்களின் பினாமிகள், உறவினர்கள், நண்பர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் இந்த ஊழலில் சிக்கி இருக்கிறார்கள். 

இந்த வி.ஐ.பி-க்கள் எல்லோரையும் சினிமாவில் வருவதுபோல், ஒரே ஃப்ரேமில் கைது செய்துவிட முடியாது. இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே மூன்றாவது குற்றப் பத்திரிகையில் இடம்பெறுவார்கள்

எனக்குக் கிடைத்த தகவல்படி, அடுத்தடுத்து 11 குற்றப் பத்திரிகைகள் வரை தாக்கல் ஆகப்போகின்றன. ஸ்பெக்ட்ரம் ஊழலில் விரைவில் சிக்குவார் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன். அடுத்து சிக்கப்போகிறவர், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.  

இவருக்குப் பிறகு, மிகப் பெரிய பெயர் வரும். அது யார் என்று இப்போது நான் வெளியே சொல்ல மாட்டேன்!''


''அவர் தமிழகத்தைச் சேர்ந்தவரா?''


''நிச்சயமாகத் தமிழகத்தில் இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க-வில் முக்கியமானவர்கள் எல்லாம் சிக்கிவிட்டார்கள். கருணாநிதிக்கு ரொம்ப வயதாகி​விட்டது. அவரை எந்த முறையில் கொண்டு​வரலாம் என்று ஆலோசித்து வருகிறோம். தயாளு அம்மாள், சாட்சிகள் வரிசையில் வருகிறார். ராஜாத்தி அம்மாளின் பெயரும் இருக்கிறது. இவை எல்லாம் பெரிய சமாசாரம் இல்லை. அதைவிட உயர் பதவியில் இருப்பவர்களை வளைத்துப் பிடிப்பது தான் விஷயம். ஸ்பெக்ட்ரம் உரிமத்தால் பலன் பெற்றவர்கள் என்கிற பட்டியலும் தயார் ஆகும்போது, அதில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் சிலர் சிக்கலாம். கடைசியில், சோனியா காந்தி பெயரும் வரும். 

இவர்களை எப்போது வழக்கில் கொண்டுவருவேன் என்பதை நான்தான் முடிவு செய்வேன்(!). ஏனென்றால், இதை சி.பி.ஐ. செய்யாது. ஆட்சியில் இருப்பவர்களை அது நெருங்காது. காலம் வரும்போது, நான் நீதிமன்றம் மூலம் இதே சி.பி.ஐ-யை வைத்து சோனியாவை விசாரிக்கச் சொல்வேன். 

சோனியாவுக்கு இரண்டு தங்கைகள். அனுஷ்கா, நாடியா. இருவரும் அவரவர் கணவரைவிட்டுப் பிரிந்தவர்கள். இருவரும் அடிக்கடி துபாய்க்குப் போய் வருகிறார்கள். ஸ்பெக்ட்ரம் டீலிங்கில் வந்த பணத்தை இவர்கள் சீனாவில் 'மக்காவ்' என்கிற இடத்தில் உள்ள வங்கியில் பதுக்கிவைத்து இருக்கிறார்கள். எவ்வளவு தெரியுமா? 35 ஆயிரம் கோடி. 

சுவிஸ் வங்கியில்கூட பணம் போட்டு இருப்பவர் ஒரு கிரிமினல் என்று தெரிந்தால், அவரது முதலீடு விவரங்களை வெளியே சொல்லிவிடுவார்கள். மக்காவ்வில் இந்த வசதி இல்லை. என்ன குற்றம் செய்து இருந்தாலும், அங்கு இருந்து ஒரு 'பிட்' தகவலைக்கூட பெற முடியாத அளவுக்கு சீக்ரெட் பாங்க் அது. அதன் விவரங்கள் விரைவில் வெளிவரப்போகிறது.


மத்தியில் நிதித் துறை அமைச்சராக இருந்தபோது, ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயித்த கமிட்டியில் ஒருவராக இருந்த ப.சிதம்பரம், ஆ.ராசாவுடன் இணைந்துதான் முடிவு எடுத்து இருக்கிறார். இதை ஒரு ஃபைலில் ஆ.ராசாவே குறிப்பிட்டு இருக்கிறார். (அதன் நகல்களை நம்மிடம் காட்டுகிறார்) பல பேட்டிகளில் ஆ.ராசாவும், சிதம்பரத்தின் பெயரைக் குறிப்பிட்டு இருக்கிறார் என்பதற்கு, பத்திரிகை 'கட்டிங்'குகளே சாட்சிகள். இப்படி இருக்கும்போது, ஆ.ராசா மட்டும் திகார் ஜெயிலில் இருக்க... இன்னொரு காரணகர்த்​தாவான அவர் மட்டும் மத்திய மந்திரியாக நீடிப்பது எந்த வகையில் நியாயம்? 

நிதித் துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மீது வழக்குப் போட பிரதமரிடம் அனுமதி கேட்டேன். ஆனால், அந்தத் துறையில் இருந்து சிதம்பரம் மாற்றப் பட்டுவிட்டார். ஆகவே, எனக்கு இப்போது பிரதமரின் அனுமதி தேவைப் படாது. இது தொடர்பாக நான் நீதிமன்றத்தில் போட்ட வழக்கு ஆகஸ்ட் 24-ல் வருகிறது. 

இதோ... நான் உங்களிடம் காட்டும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். அவற்றைப் பரிசீலித்து நல்ல முடிவு சொல்வார்கள் என்று காத்துக் கொண்டு இருக்கிறேன். சி.பி.ஐ. விசாரணை நடக்கும் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 26-ம் தேதி, கோ-அக்யூஸ்டாக ப.சிதம்பரத்தைச் சேர்க்க வேண்டும் என்கிற விவாதம் வரப்போகிறது. அதுவரை பொறுத்திருங்கள்!'' என்று சிரித்தார்.


இப்போதைக்கு ஸ்பெக்ட்ரம் புயல் அடங்​காதோ!

- ஆர்.பி./நன்றி! ஜூனியர் விகடன் 29-06-2011 இதழ் 

ஜூவி,குமுதம் உள்ளிட்ட வாரப்பத்திரிகைகளைப் படிப்பதை நிறுத்தியே பல வருடங்களாகிவிட்டது! முன்புபோல சிறுகதைகள், தொடர்கதைகள் அதிகம் வெளிவருவதில்லை, வாசகர்களுடைய ரசனை மேலோட்டமாகக் கொறித்து விட்டுப்  போய்விடுகிற செய்திகளின் மீதுதான் அதிகமாக இருக்கிறது என்பதாலோ என்னவோ!

இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் என்பது தமிழில் கொஞ்சம் விகாரப்பட்டுத்தான் இருக்கிறது  என்பதென்னவோ உண்மை!

******

தயாநிதி மாறன் தானாக முன்வந்து ராஜினாமா செய்யாவிட்டால், ஜூலை முதல்வாரத்தில் மத்திய அமைச்சரவையில் செய்யப்படவிருக்கும் மாற்றத்தில் கழற்றி விடப்படுவார் என்று காங்கிரஸ்கட்சி தொடர்ந்து செய்திகளைக் கசிய விட்டுக் கொண்டே இருக்கிறது. தயாநிதி கழன்று கொள்கிற மாதிரிக் காணோம்! 

பதவி என்பது நாங்கள் தோளில் போட்டிருக்கும் மேல்துண்டைப் போல என்று வசனம் பேசுகிற கழக அமைச்சர் எவரும், அவ்வளவு சுலபமாக தோளில் போட்டிருக்கும் மேல்துண்டை உதறி விட மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்து, சிரிப்பாகிப் போன விஷயம், இதற்குப் போய் இவ்வளவு முக்கியத்துவமா என்கிறீர்களா?


அதுவும் சரிதான்! 

சண்டேன்னா மூணு! படித்ததும் பிடித்ததும்!ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்!


" இத்தனை எழுதித்தள்ளிவிட்டோமே என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் வேறு வழியில்லை. எழுதாவிட்டால் அத்தனை நூல்களையும் நான் உள்ளே அல்லவா வைத்திருக்க வேண்டும்!"

ஒருஎழுத்தாளர் குப்பை கொட்டுவதைப் பற்றி இப்படிப் பெருமிதமாகச் சொன்ன வார்த்தைகளைப்  படித்துவிட்டு, குப்பை  சுமக்கிறவர்கள் மேல் பரிதாபம் மேலிட்டு கவிதை மாதிரி ஒன்றைக் கிறுக்கித் தள்ளிய பழைய பதிவு இது!

இங்கே குப்பை கொட்டாதீர் என்று ஒவ்வொருவரும் கதறிக் கொண்டே, அடுத்தவரிடத்தில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறோம்!அடுத்தவர் போடுவது குப்பை என்று உறைக்கிற அளவுக்கு, தான் போடுவதும் அதுதான் என்பது இங்கே எவருக்கும் புரிவதே இல்லை!

குப்பைகளைப் பற்றி, குப்பை கொட்டுவதைப் பற்றி ஸ்ரீரங்கம் வி.மோகன ரங்கன் தமிழ்வாசல் கூகிள் வலைக் குழுமத்தில் எழுதியிருந்த கவிதை ஒன்று இன்றைக்குக் கண்ணில் பட்டது! மனிதனைக் குப்பை கொட்டும் பிராணி என்றே உருவகப்படுத்தியிருந்தவிதம் நெற்றியில் அறைகிற மாதிரி...! 


முழுக் கவிதையும் இங்கே!


ரோடு பொறுக்குபவனின் ஸாலிலக்கி 

அப்பப்பா! எவ்வளவு குப்பைகள்! 
ஜனங்கள் சர்வ சாதாரணமாகக் 
குப்பை போடுகின்றனர். 

வேண்டாமா தூர எறி. 
விழுந்துடுத்தா விட்டுத்தள்ளு. 

என்ன வேகம்! என்ன அவசரம்! 

கண்ணாடி வளையல் கைக்குட்டை 
பொம்மை பர்ஸ் உதட்டுச் சாயம் 
அட்டைப் பெட்டி ப்ளாஸ்டிக் கூடை 
மருதாணி பாக்கட்டு மண்ணடைந்த ஊதல் 
கால் கொலுசு கலர் பென்சில் 
செய்தித்தாள் எண்ணைக் குப்பி 

காலில் மிதிபட 
கால்களுக்கிடையில் உருள்பட 
நாய் மோந்து நக்கிக் கால்தூக்கி 
கல்லடியில் நாய் குதிக்க 
உருண்டு, காலில் மிதிபட்டு, உதைபட்டு.. 

பொருள்:..பொருள்..பொருள்.. 
உருக்குலைந்து உருமாறி உருவிழந்து 

உரு இன்னும் இருந்து 
உலக நடை நெடுக மக்களைப் போலவே .. 

மூட்டை கனக்கிறது. 

மீண்டும் ஒருமுறை வரவேண்டும் 

பென்சில் பால்பாயிண்ட் பேனா 
கைகடியாரம் விழுந்தது கூட தெரியாம ஓட்டம்  

காலில் மிதிபட்டு உருள்பட்டு நசுங்கி 
அப்பப்பா! 
மனுசன் ஒரு குப்பை போடும் பிராணி 

அடடா! இது என்ன டிபன் மூட்டை 
யார் சாப்பிடப் போகிறார்கள்? 
காலில் மிதிபட்டு... 

ராத்திரி பிடித்த எலியை அடித்து 
தெருவில் தூக்கி எறிந்ததை 
காக்கை அவசரத்தில் கொத்தியது போக 
நாய் மோந்து பூனை பார்த்து 
காலில் மிதிபட்டு நசுங்கி..... 

மனிதன் ஒரு குப்பை போடும் பிராணி. 

அட! இது என்ன? அதிசயமாய் இருக்கிறது! 
இதுவரையில் காணாத பொருள்! 
யார் இதை இங்கே போட்டது? 
என்ன வினோதம்! 
யார் காலிலும் மிதிபடாமல் 
நாய் மோக்காமல், காக்கை கொத்தாமல் 
உரு மாறாமல் மழுங்காமல் 
என்ன இது? அப்பா! யாருடையது? 

உங்களுதா?..... இல்ல 
உங்களுதா...... இல்லப்பா ஆளைவிடு. 

சார்..நீங்கள்....நகருய்யா...வழியில 
நின்னுகிட்டு 

ஐயா இது உங்களுடையதா? 


ஏனய்யா கிண்டலா 

சரி வாங்க அவன்கிட்ட என்ன பேச்சு? 

யாருதும் இல்லயா? சரி நமக்கென்ன? 
தூக்கி எறிவோம்..ஏன்? மூட்டையில போடுவோம் ...வேணாம் .. 
வினோதமா இருக்கே! 

நாமே வச்சுக்குவோம் 
வலது கால் சராய் பை ஓட்டை 
இடது பையில போட்டுக்குவோம் 
என்ன இது! ஆச்சரியமா இருக்கு? 


சரி நம்ம வேலை...பொறுக்கு...பொறுக்கு 
பொறுக்கு....போய் போட்டுவிட்டு.. 
இன்னொரு நடை?... 

இல்ல இன்னிக்கு இதோடு போதும் 
காலம் முழுக்க பொறுக்கினாலும் 
அள்ளி முடியாது மனிதன் போட்ற குப்பை 

சாமீ!... 

யாரு? என்னய்யா? யாரைப் பார்த்து 
சாமீங்கற? தள்ளு குப்பையை எடுக்கணும்.. 


ஆஹா முகத்தைப் பாருங்கள்.. 
இப்படி ஒரு முகம் இதுவரையில் கண்டதில்ல 


யோவ்! என்ன கிண்டலா? 
வழியப் பார்த்துக்கிட்டுப் போ 
சும்மா...ரோடு பொறுக்கறவன பார்த்து 
வெட்டிப் பேச்சு வேணாம் 

என்ன தத்துவம்! என்ன உபதேசம்! 

யோவ் இது என்னய்யா வம்பா போச்சு 

யாரைக் கும்பிட்றானுக? 
பின்னால யாராவது வாரானா? 
என்னடா இது எல்லாம் கிறுக்கனுகளா? 
என்னாத்துக்கு இந்தக் கவல? 
நடையைக் கட்டு...குப்பை..குப்பை 
என்ன குப்பை போட்றானுக மனுசனுக! 

அப்பாடி! தூக்கி வை ... 
மூட்டைய அந்த ஓரத்துல... 
ஒரு டீ அடிச்சிட்டு பீடி வலிப்பமா? 
டீ கிடக்கட்டும்...இப்படி..சாய்ஞ்சுக்கினு 

உட்கார்ந்து...ஒரு தம்... 

தோ ஏரோப்ளேன் போறான் 
ஆமா அங்கன போயி 
இவனுக குப்ப போடுவானுகளே 
என்ன பண்ணுவானுக? 

ஏகப்பட்ட நட்சத்திரம்! 
எல்லாம் எவன் போட்ட குப்பையோ? 

பொறுக்காம கெடக்குது... 
மொத்தமா அள்ளிப் ..போடுவானுக 
போல... ஒரு நாளைக்கு 

இந்தப் பொருள் உன்னுதான்னு கேட்டா 
அந்த ஆளு அப்படி கத்துறான்! 
அந்த அம்மாவும் சொல்லுது.... 
அவங்கிட்ட என்ன பேச்சு?.... 

அட மறந்துட்டேன் இன்னும் இருக்கா? 
என்னாப் பொருளு அதிசயம்மா? 

பொறுமையா பிரிச்சா என்னன்னு தெரியுது 

என்னது.... அட....


மன அமைதி 

அதான் அந்த கும்பிடு கும்பிட்டானுகளா? 
இதப்பார்ரா...தங்கிட்ட இருக்கறத குப்பைல போட்டு...மத்தவன்ட்ட இருக்கறத கும்பிட்டுத் திரியுறானுக.... 


மனிசன் குப்ப போடும் பிராணி... !

பீடி இன்னிக்கு நல்லாவே இருக்கு.....!!ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கனுடைய மோகனத்தமிழைப் பற்றி இந்தப்பக்கங்களில் முன்னமேயே பார்த்திருக்கிறோம். குறிப்பாக, மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் அவர் "எது பக்தி" என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்த இழையில் அப்படியே அகம் கரைந்து உருகி நின்ற தருணங்களை இங்கே   பார்த்திருக்கிறோம். இப்போது எது பக்தி புத்தகவடிவிலும் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தத் தலைப்பில் எழுதிய முதல் இருபத்தொரு பத்திகளையும், வாசகர் சந்தேகங்களுக்கு விடையளித்த ஆறேழு பதிவுகளையும் இங்கே வரிசையாகப் படிக்கலாம்.

அதன்பின்னர் வந்த பகுதிகள்  ஒன்று, இரண்டு, மூன்று

 
மோகன ரங்கனும் மின்தமிழ் கண்ணனும் 
நேற்று முன்தினம் வரை வெளியிட்ட பகுதிகள் அத்தனைக்கும் தொடுப்பு இங்கே இருக்கிறது. அடுத்து வெளிவருவதையும் இங்கே பார்க்கலாம். மோகனத்தமிழில் கொஞ்சம் தோய்ந்துதான் பாருங்களேன்! பக்தி என்பதை இத்தனை சுவையாக, தெளிவாக பி ஸ்ரீ அவர்களுக்குப் பிறகு வேறெவரும் எழுதி நான் படித்ததில்லை.

அந்தவகையில், திரு மோகனரங்கனின் மோகனத்தமிழ் படித்ததும் பிடித்ததுமாக!