Showing posts with label ஆ.ராசா. Show all posts
Showing posts with label ஆ.ராசா. Show all posts

சண்டேன்னா மூணு! #அரசியல் #ஆராசா #ஆபாசராசா

2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் தயாநிதி மாறனையும் தூக்கி சாப்பிட்டு உலகமகாஊழல் சாதனை படைத்த ஆ.ராசா. ஆபாச ராசாவாகவும் இந்தத்தேர்தல் பரப்புரையில் சாதனை படைத்திருக்கிறார் என்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை! ஏனென்றால் திமுகவினரின் வரலாறு அப்படி!


  Stanley Rajan 16நி  

பெண்மையினை தாய்மையினை கொச்சை படுத்துவது ஒன்றும் திமுகவுக்கு புதிதல்ல, இதை முதலில் தொடங்கி வைத்தவன் அவர்களின் பிதாமகன் ஈரோட்டு ராம்சாமி
அவனே புனிதமான சீதை, பாஞ்சாலி, கண்ணகி என விமர்சித்து தொடங்கி வைக்க அவனின் அடிப் பொடியான பெரும் மூடன் அண்ணாதுரையும் அவனின் சீட கோடியான கருணாநிதியும் காமாட்சி, மீனாட்சி என தெய்வங்களை விமர்சிக்க தொடங்கினார்கள்
அது அவர்களின் அரசியலும் தொடர்ந்தது
இலங்கை பிரதமர் ஸ்ரிமாவோ பண்டார நாயகாவில் தொடங்கி, காமராஜரின் தாய், இந்திரா, ஜெயலலிதா என யாரும் இவர்களின் மகா மட்டமான கீழான பேச்சுக்கு தப்பவில்லை
நாம் ஆட்சிக்கு வரமாட்டொம் என எதையோ பேசிய அண்ணாதுரை ஆட்சிக்கு வந்ததும் தன் இயல்பான தந்திரத்தால் பதுங்கினான்
ஆனால் கருணாநிதி பதுங்கவில்லை, சட்டசபையில் "நாடாவினை அவிழ்த்து" என மிக மட்டமாக பேசிவிட்டு எப்படி என் இலக்கிய பேச்சு என அசிங்கமாக சிரித்தவர் அவரே
காமராஜரின் தாயினை நோக்கி "அவள் கருவாடு விற்றவள்" என கடுமையாக கருணாநிதி சாட, என் தலைவனின் தாய் கருவாடு மட்டும், ஆம் கருவாடு "மட்டும்" விற்றாள் என கண்ணதாசன் அழுத்தி சொல்ல அப்படியே அமைதியானார் கருணாநிதி
ஆம் அஞ்சுகம்மாள் என்ன விற்றார் என்பது கண்ணதாசனுக்குத்தான் தெரிந்திருந்தது
அதன் பின்னும் கருணாநிதி திருந்தவில்லை, விதவைக்கு மறுவாழ்வு என்றும் , திமுகவினரால் தாக்கபட்ட இந்திராவின் தலையில் வடிந்த ரத்ததை மிக மிக கொச்சைபடுத்தி பெண்குலத்தையே கடுமையாக அவமானபடுத்தியதெல்லாம் வரலாறு
அதே தாக்குதல் ஜெயா மேலும் தொடர்ந்தது, பின்பு அது எடுபடாததால் கைவிடபட்டது
அப்படிபட்ட திமுகவினரிடம் அதுவும் வெற்றிகொண்டான் போன்ற இசட் கிரேடு ஆபாச பேச்சாளர்களையும் அவர்களை விட இசட்‍‍‍ பேச்சினை பேசிய கருணாநிதியினை தலைவனாக கொண்ட கட்சியில் ஆ.ராசா பேசுவதெல்லாம் ஆச்சரியமில்லை
ஆ.ராசா எப்பொழுதுமே சர்ச்சைகுரிய நபர், இவரை முதலில் கடுமையாக எச்சரித்தது பாமகவின் காடுவெட்டி குரு குருவின் மிரட்டலை தொடர்ந்து நீலகிரி மலையில் தஞ்சமடைந்த ராசா இன்னும் மலையில் இருந்து இறங்கவில்லை
சுருக்கமாக சொன்னால் திருமாவின் இரட்டை பிறப்பு இந்த ராசா, இவரை வளர்த்துவிட்ட பெருமகன் திருவாளர் கருணாநிதி
அப்படிபட்ட ராசா பழனிச்சாமி தாயாரை கடுமையாக விமர்சிப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை என்றாலும் இதெல்லாம் மிக மிக மோசமாக கண்டிக்கபட வேண்டிய விஷயங்கள்
தண்டிக்கபட வேண்டிய விஷயங்கள்
ஒரு பாராளுமன்ற எம்பி, ஒரு முன்னாள் அமைச்சரின் தரம் இவ்வளவுதான் என்பதுதான் அருவெருப்பின் உச்சம், திமுகவின் மிச்சம்
சிம்புவுக்கும் இன்னும் பலருக்கும் கொடி பிடித்த மாதர் சங்க அமைப்புகளை பழனிச்சாமியின் மறைந்த தாய்க்கு அவமானம் நிகழும் பொழுது காணவில்லை
இன்னும் பல பெண் உரிமை போராளிகள் சத்தமே இல்லை
கருணாநிதியின் ஆபாச பேச்சுக்கள் உலகறிந்தவை, உதயநிதியின் சசிகலா மேலான விமர்சனம் எல்லோரும் அறிந்தது
இதில் ராசாவும் தன்னை யார் என்றும் எதற்கும் காடுவெட்டி குரு தன்னை விரட்டியடித்தார் என்பதையும் நிரூபித்து கொண்டிருக்கின்றார்
நமது சந்தேகமெல்லாம் பழனிச்சாமி தாயாரே இப்படி அவமானபடும் பொழுது திமுக பிரிய காரணமான மணியம்மை எப்படி எல்லாம் திமுகவினரால் விமர்சிக்கபட்டிருப்பார் என்பதுதான்

இதை பற்றி வீரமணி பின்பு விளக்குவார் என தமிழகம் எதிர்பார்க்கின்றது 


இசுடாலின் கூட பட்டும்படாமல் இந்தவிவகாரத்தில் ஏதோ கருத்து சொல்லியிருக்கிறாராம்! 

ஸ்டேன்லி ராஜனுக்கு ஆபாசராசா பேச்சின் மீதான கோபம் இன்னும் குறையவில்லை போல!

மக்களால் தேர்ந்தெடுக்கபடாதவர்களெல்லாம் முதல்வராவது "தவறானது" என்றால் வரலாற்றில் அப்படிபட்ட முதல் பிறப்பு கருணாநிதியே
அண்ணாதுரை இறந்ததும் தேர்தலை சந்திக்காமல் குறுக்குவழியில் முதல்வராகி வழிகாட்டிய உத்தமர் அவர்தான்.அதாவது முதல் "கள்ள குழந்தை" அல்லது "குறை பிரசவ குழந்தை" அவர்தான்
அதுதான் இந்திராவுக்கு பின் ராஜிவ் அப்படியே அமர்வது வரை வழிகாட்டியது. திமுக கூட்டணியினர் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறிவது நல்லதல்ல, இப்படித்தான் மொகரையெல்லாம் கிழியும் 

ஆராசா, உதயநிதி போன்றவர்களின் பொறுப்பற்ற ஆபாசமான பேச்சுக்கள் திமுகவின் தேர்தல் வாய்ப்பை எந்தவிதத்தில் பாதிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஏற்கெனெவே கொங்குமண்டலத்தில் 34 கொங்கு வெள்ளாளர் அமைப்புக்கள் சேர்ந்து திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டிருப்பது தெரியும்தானே!

மீண்டும் சந்திப்போம்.

என்னாது, ஆ!ராசா பிரதமரா? காமெடிக் கொடுமையே!

உச்சநீதிமன்றம் ராகுல் காண்டியை ஒரு கொட்டு வைத்து மண்டியிட வைத்திருக்கிறது. நீதிமன்றத்தை தொடர்புபடுத்தி பிரசாரக் கூட்டங்களில் சௌகிதார் சோர் ஹை என்று தொடர்ந்து பேசிய விவகாரத்தில் ராகுல் காண்டி முதலில் வருத்தம் தெரிவித்தார். அதில் திருப்தி அடையாத உச்சநீதிமன்றத்துக்கு 22 பக்க ப்ரமாணபத்திரத்தில் மறுபடியும் வருத்தம் மட்டுமே தெரிவித்ததில் நீதிமன்றக்  கொட்டுக்குப் பிறகே ராகுல் காண்டி  மன்னிப்புக் கோரியிருக்கிறார். சோனியா வாரிசுகளின் திமிரும் தலைக்கனமும் ஊரறிந்த ரகசியம்தான்!


நீதிமன்றத்தின் கருணையில் ஜாமீனில் வெளியே இருக்கிற கணவர் ராபர்ட் வாத்ராவுடன் பிரியங்கா      

The Gandhi family has been showing signs of immense frustration as the 2019 Lok Sabha election progresses. With out-on-bail Rahul Gandhi being forced to apologise by the Supreme Court for attributing the ‘chowkidaar chor hai’ slogan to the SC and its judgement on Rafale, the Congress campaign has just as well come to a halt.
Even with the Supreme Court bringing Congress down to its knees, the arrogance of the Congress party has not been diminished. A video surfaced on Social Media where Priyanka Gandhi Vadra, who chickened out of battling PM Modi in Varanasi, was seen watching in amusement as little kids, coached by Congress workers, were abusing Prime Minister Modi.
5:30 PM - Apr 30, 2019  என்று மோடிக்கெதிராக சிறுவர்களைக் கோஷமிட வைத்து மகிழும் பிரியங்காவின் சின்னத்தனத்தைக் காட்டுகிறது என்று சொல்கிறது OpIndia தளச் செய்தி  200 ரூபாய்க்காக களப்பணியாற்ற உபிக்கள் இருப்பதுபோல, சிறுவர்களை ரெடிசெய்கிறார்கள் போல   


எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அதிகமாக அரசியல் பேசி நான் பார்த்ததில்லை. அவரையும் 200 ரூ இணையதள உபிக்கள் அளவுக்கு மீறிச் சீண்டி இப்படி கணிப்பு,ஆரூடம் சொல்ல வைத்துவிட்டார்கள் போல!

புதுச்சேரி காங்கிரஸ் முதல்வர் நாசா நீதி வென்றது எனப் புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருப்பது இவருக்குப் பொறுக்கவில்லையா என்ன?

Banu Gomes 
''அன்றாட நிர்வாக பணிகளில் . பாண்டிச்சேரி லெஃப்ட்டினன்ட் கவர்னர் தலையிடக் கூடாது. அரசு எடுக்கும் முடிவுகளை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அரசு பணியாளர்களுடையது.
கவர்னருக்கும், முதல்வருக்கும் நிர்வாகம் குறித்து முடிவெடுப்பதில் கருத்து வேறுபாடு ஏற்படின்...அது ...ஜனாதிபதிக்கு அனுப்பப் பட்டு..தீர்க்கப் படவேண்டும்'' - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு.
இதில் நாராயணசாமியும், கெஜ்ரியும் கொண்டாடுவதற்கு ஒன்றுமில்லை.
சற்றே கூர்ந்து கவனித்தால்..யூனியன் பிரதேசங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக வரையறுக்கப் பட்டுள்ள கவர்னருக்கான நிர்வாக அதிகாரம் தொடர்கிறது. நீதிமன்றத்தால் எல்லாம் அதை மாற்ற இயலாது.
அன்றாட நிர்வாக பணிகளில் தலையிட கூடாது என்பதிலும் அதே நிலை தான். முரண் ஏற்பட்டால்..ஜனாதிபதியிடம் போக வேண்டுமே தவிர ..மாற்றமில்லை.
கூடுதலாக ..
பாண்டிச்சேரி கவர்னருக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து ...முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் இந்நாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான இந்திரா பானர்ஜீ '' Unlike the President of India or the Governor of a State, the Administrator of a Union Territory has powers to act independently ..irrespective of the advice given by the Council of Ministers headed by the Chief minister''
என்று அளித்த தீர்ப்பிலும் இது தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கிறது.
மதுரை கிளையின் தீர்ப்பு chocolate coated version.அவ்வளவு தான். மற்றபடி ..பாண்டிச்சேரி லெஃப்ட்டினன்ட் கவர்னருக்கான அதிகாரம் மாறவில்லை. மாற்றவும் இயலாது.
அடிப்படை மாறாத நிலையில்..மாற்ற முடியாத நிலையில்.. அதன் மேலாக கொடுக்கப் படும் தீர்ப்புகளில் வார்த்தை ஜாலங்கள் இருக்கலாமே தவிர பொருள் என்னவோ ஒன்று தான்.
tug-of-war நிற்கப் போவதில்லை .
இந்த இணையதளத்தைப் பற்றி

இன்றைக்கு உச்சகட்ட உச்சகட்ட காமெடி இதுதான்! 


     

2G ஸ்பெக்ட்ரம் ஊழலும், இணையப் பரப்புரைகளும்! #செஞ்சது சரியா சொல்லு ராசா!



.ராசா, ஜாமீனில் வெளியே வந்து, சில நாட்களில் புதிய தலை முறை தொலைக் காட்சிக்கு, தான் எந்தத் தவறுமே செய்யவில்லை என்ற ரீதியில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.உடனே 2G வழக்கும், திரு.ஆ.ராசா அவர்கள் நேர்காணலும் பின்னே ஒரு புஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆன மாய பலூனும்! தகத்தகாய சூரியன் புறப்பட்டு விட்டார், ஊடகங்களின் பொய்யைக் கிழித்தெறிந்து விட்டாரென்ற ரீதியில் சில திமுக நண்பர்கள் கூகிள் ப்ளஸ், முகநூல் முதலான சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்ய ஆரம்பித்தார்கள். 

இணையத்தில் கட்சி  வளர்ப்பதோடு, இணையத்திலேயே ஆ.ராசாவைக் குற்றமற்றவர் என்று நிரூபிக்க அவர்கள் செய்த பரப்புரை முயற்சிகள், கொஞ்ச நாட்களிலேயே சுருதி குறைந்து, சுத்தமாகக் காணாமலும் போய்விட்டது! ஆ.ராசா பேட்டியை அடுத்து அடுத்து, நாடாளுமன்றக் குழு முன்னால் சிபிஐ, அமலாக்கத் துறை  கொடுத்த அறிக்கையில் கலைஞர் தொலைக் காட்சிக்குப் பணம் வந்த விதம் லஞ்சமாகத்தான் என்றும், கனிமொழி, தயாளு இருவரையும் கைது செய்ய முகாந்திரம் இருப்பதாகச் சொன்னதில் சுருதிப்பெட்டியே தொலைந்து விட்டதோ என்னவோ! 

அப்புறம் ரிசர்ச் அண்ட் அனலிசிஸ்  விங் எனப்படும் இந்திய உளவுத் துறை ஆராசா  சட்டவிரோதமாக ஹவாலா மோசடி செய்து சுமார் நூற்றுப்பத்துக் கோடி ரூபாய் வெளிநாட்டில் முதலீடு செய்தார் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டது! இப்போது அதன் மீது சிபிஐ விசாரனை தொடங்கியிருப்பதில் சென்னையை சேர்ந்த ராஜேஷ் ஜெயின் என்பவர் கொஞ்சம் வித்தியாசமாக அலறியிருக்கிறார்.

ஆ.ராசா அவரது  நண்பரோ, உறவினரோ, கூடப் படித்தவரோ, ஒரே பொதுவான மொழி பேசுபவரோ, ஒரே மதத்தை சேர்ந்தவரோ இல்லையாம்! ஊழல் என்பது இதையெல்லாம் கடந்தது, கூட்டாளிகளாக்குவது என்பது இவருக்குத் தெரியாதோ?

இன்றைய தினமணி தலையங்கம், இணைய உளுந்துகள் பரப்புரை முயற்சியை தவிடுபோடியாக்கியிருக்கிறது. கொஞ்சம் அல்ல! மொத்தமாகவே!
கலையும் ஒப்பனைகள்..!

First Published : 09 Aug 2012 01:52:58 AM IST



2ஜிஅலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டது என்பது சுத்தப் பொய். இது தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (சி.ஏ.ஜி.) கற்பனைக் கணக்கு' என்று வாதம் செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள், தற்போது அது கற்பனை அல்ல, உண்மைதான் என்று ஒப்புக்கொள்ளும் நிலைமைக்கு ஆளாகியுள்ளன.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற பாஜக அரசின் கொள்கை முடிவின்படியே அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது என்று ஐக்கிய முற் போக்குக் கூட்டணிக் கட்சிகள் கூறின. ஆனால், முதலில் விண்ணப்பம் கொடுத்தவர்கள் என்ற அடிப்படையை, முதலில் பணம் அல்லது காசோலை கொடுத்தவர்கள் என்று மாற்றியது தவறு என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டதால், இதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் மத்திய அரசு திணறிக் கொண்டிருக்கும் வேளையில், இப்போது சி.ஏ.ஜி. போட்ட கணக்கில் தவறில்லை என்பதைச் சொல்லாமல் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

செல்போன் நிறுவனங்களின் 122 உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததால், அந்த அலைக்கற்றைகளுக்கு மறுஏலம் நடத்தவுள்ள மத்திய அரசு, தற்போது நிர்ணயித்துள்ள அடிப்படைத் தொகை ஜிஎஸ்எம் (குளோபல் சிஸ்டம் ஆப் மொபைல்) சேவைக்கு 5 மெகாஹெர்ட்ஸ் ரூ.14,000 கோடி! சிஎம்டிஏ (கோட் டிவிஷன் மல்டிபிள் அக்ஸஸ்) சேவைக்கு ரூ.18,200 கோடி!

சிஏஜி போட்ட கணக்கு முழுக்க முழுக்க சரி என்பதை இதன் மூலம் நாம் அளவிட முடியும். தற்போது ஜிஎஸ்எம் சேவைக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ள கட்டணத்தின்படி 1,800 மெகா ஹெர்ட்ஸ் விற்பதால் அரசுக்குக் கிடைக்கக் கூடிய அடிப்படைத் தொகை ரூ. 2.52 லட்சம் கோடி.

2008-ல் நடந்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில், ஒரு மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ரூ.1,658 கோடிக்கு விற்கப்பட்டது. 1,800 மெகா ஹெர்ட்ஸ் மூலம் அரசுக்குக் கிடைத்த வருவாய் ரூ.1.02 லட்சம் கோடி மட்டுமே! ஆனால் தற்போது, 1.50 லட்சம் கோடி அரசுக்கு கூடுதலாக கிடைக்கிறது.

இன்னும் சொல்லப்போனால், இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் பரிந்துரைத்த தொகை, ஜிஎஸ்எம் சேவையில் 5 மெகா ஹெர்ட்சுக்கு ரூ.18,000 கோடி. இதை அப்படியே நிர்ணயம் செய்திருந்தால் அரசுக்குக் கிடைத்திருக்கக்கூடிய தொகை ரூ. 3.24 லட்சம் கோடி!

 2010-ல் மத்திய அரசு 3ஜி அலைக்கற்றைக்கு நிர்ணயித்த தொகையை அடிப்படையாகக் கொண்டு, 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் இந்திய அரசுக்கு ரூ.1.39 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், உரிமம் பெற்ற நிறுவனங்கள், ஒதுக்கப்பட்ட 6.2 மெகா ஹெர்ட்சுக்கும் கூடுதலாக அலைக்கற்றையைப் பயன்படுத்தியதற்கான கட்டணம் வசூலிக்காத வகையில் அரசுக்கு இழப்பு ரூ.36,000 கோடி என்றும், ஆக மொத்தம் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு' என்று இதைத்தானே தலைமைக்கணக்குத் தணிக்கைத் துறையினரும் சரியாகக் கணக்கிட்டுச் சொன்னார்கள்!

அந்த அறிக்கையைத்தானே வெறும் கற்பனை என்று மத்திய அமைச்சர்கள் கூறினார்கள்! கூட்டணிக் கட்சியின் மேடைகளில் எள்ளி நகையாடினர்! முறைகேடு நடந்தபோது அதற்கு அனுமதி மறுக்காத அன்றைய நிதியமைச்சரும், இப்போது உள் துறையிலிருந்து மீண்டும் நிதித்துறை பொறுப்பேற்றிருக்கும் ப. சிதம்பரமும், ஏனைய அமைச்சர்களும், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் படாதபாடு பட்டார்கள்!

3ஜி அலைக்கற்றை விலையை 2ஜி விலையோடு ஒப்பிடலாமா, அம்பாஸிடர் காரையும் பிஎம்டபிள்யு காரையும் ஒப்பிட முடியுமா என்று கேலி பேசினார்கள்! மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சராக, ஆ.ராசாவுக்குப் பிறகு பொறுப்பேற்ற, கபில் சிபல், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் "இழப்பு ஒன்றுமே இல்லை' (ஜீரோ லாஸ்) என்று சொன்னாரே! ஆனால், இப்போது அதே அமைச்சர் இடம் பெற்றுள்ள மத்திய அமைச்சரவைதான் இந்தத் தொகையை நிர்ணயம் செய்திருக்கிறது!

ஜீரோ லாஸ் (இழப்பு ஒன்றுமே இல்லை) என்று அமைச்சர் கபில் குறிப்பிட்டாலும், ஏழைகளும் செல்போன் பயன்படுத்தவே குறைந்த கட்டணத்தில் விற்றோம் என்று ஆ. ராசா கூறினாலும், அந்த வாதங்கள் எடுபடவில்லை. ஏனென்றால், 2008 அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்றவர்கள் தங்கள் நிறுவனத்தின் பங்குகளை விற்று பல மடங்கு லாபம் பெற முடிந்தது.

ஸ்வான் டெலிகாம் 340 மில்லியன் டாலருக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்று, வெறும் 45% பங்குகளை 900 மில்லியன் டாலருக்கு விற்றது. யூனிடெக் நிறுவனம் 365 மில்லியன் டாலருக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்று, 60% பங்குகளை 1.36 பில்லியன் டாலருக்கு டெலினார் நிறுவனத்துக்கு விற்றது.

பொன்முட்டையிடும் வாத்து என்பது தெரிந்தே, அதைப் பற்றி கவலைப்படாமல் அல்லது அந்த உண்மையை வேண்டுமென்றே மறைத்து, சாதாரண வாத்துகளுக்கான விலைக்கு விற்றால், அதற்குப் பெயர் ஊழல் அல்லாமல் வேறென்ன?


 பிப்ரவரி 2012-ல் உச்ச நீதிமன்றம் 122 உரிமங்களை ரத்து செய்தது. இன்னமும் மத்திய அரசு ஏலம் நடத்தவில்லை. நடத்தவிடாமல் சில சுயநல சக்திகள் தடுக்கின்றன என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை. ஆகஸ்ட் 3-ம் தேதிதான் விலையை நிர்ணயித்துள்ளனர். ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களைத் தவிர, புதிய நபர்கள் யாரும் ஏலத்தில் பங்குகொள்ள முன்வரவில்லையே ஏன் என்பதும் புதிராக இருக்கிறது. இதுகூடக் கூட்டு சதியோ என்னவோ, யார் கண்டது?

இந்த ஏலம் மேலும் சில மாதங்கள் தள்ளிப்போகலாம் என்று சொல்லப் படுகிறது. ஒப்பனைகள் யாவும் கலைந்துபோன நிலையில், புது ஒப்பனையுடன் தோன்றுவதற்காக இந்தக் காலநீட்டிப்பு அவசியமாக இருக்கிறதோ என்னவோ?