ஒரு பொருள் அல்லது தயாரிப்பு, தேவையின் நிமித்தம் தொழில் தெரிந்த எவராலோ உருவாகிறது. ஆரம்ப நிலையில், எந்த விதமான நகாசு, ஜிகினா வேலையும் இல்லாமல், எளிமையாகத் தான் அந்தப் பொருள், அல்லது தயாரிப்பு இருக்கிறது.
அடுத்து, கொஞ்சம் விவரமான ஒருவரிடம், அதே பொருள் வந்து சேரும்போது, நகாசு, ஜிகினா வேலைகள் எல்லாம் சேர்ந்து கொள்கிறது.
அப்புறம் கலை தெரிந்தவர்களிடம், சுருக்கமாகக் கலைஞர்களிடம், அந்தப் பொருள் வந்து சேருகிறது.
அவர்களிடம் இருந்து, எம்பிஏ மாதிரி மேலாண்மையைப் பாடமாகப் படிப்பவர்கள் கையில் அகப்பட்டுக் கொள்கிறது.
அப்புறம் ஒரு அரசு, நிர்வாகம் அல்லது ஒரு நிர்வாகியிடம் சிக்கிக் கொண்டு, படாத பாடுபட்டு, ஒன்றுக்குமே ஆகாததாகப் போய் விடுகிறது.
எர்னி கோவாக் மாதிரி காமெடியன்கள், ராட் ஸ்டெர்லிங் மாதிரி நிகழ்ச்சிகளை எழுதித் தயாரிப்பவர்கள் கைக்குப் போய், அப்புறம் சீரியல்களாக எடுத்துக்காசுபார்க்கும் ஆசாமிகளிடம் போய்க் கடைசியில், இதுவும் ஒரு பிழைப்பு என்ற அளவுக்கு வந்து நிற்கிறது என்று சேத் கோடின் சொல்வதை உள்ளூர் நிலவரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மெகா சீரியல்களாக அழுது ஒப்பாரி வைப்பதையே பிழைப்பாகக் கொண்டு இங்கே சானல்களும், அதை எபிசோட் தவறாமல் பார்த்து மூக்கைச் சிந்தும் தாய்க் குலங்களுமாக...!
....ம்ம்மம்ஹூம்! சிரிக்க முடியவில்லை! நம்மூர் தொலைக்காட்சிகள், நிகழ்ச்சிகளைப் பற்றி ஒன்று அல்லது இரண்டு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் "மொக்கை" "மரண மொக்கை" ரகம் தான்! பார்ப்பவர்கள் எல்லோருமே அடி முட்டாள்கள் என்ற நினைப்பில் தான் நிகழ்ச்சிகளையே தயாரிக்கிறார்கள்! அவர்களுடைய நம்பிக்கையைப் பார்ப்பவர்களுமே, தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்!
என்ன செய்ய?!
....ம்ம்மம்ஹூம்! சிரிக்க முடியவில்லை! நம்மூர் தொலைக்காட்சிகள், நிகழ்ச்சிகளைப் பற்றி ஒன்று அல்லது இரண்டு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் "மொக்கை" "மரண மொக்கை" ரகம் தான்! பார்ப்பவர்கள் எல்லோருமே அடி முட்டாள்கள் என்ற நினைப்பில் தான் நிகழ்ச்சிகளையே தயாரிக்கிறார்கள்! அவர்களுடைய நம்பிக்கையைப் பார்ப்பவர்களுமே, தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்!
என்ன செய்ய?!
ஒரே வார்த்தை சொல்லுங்கள்! ஓகோவென்று வாழுங்கள் என்று இதற்கு ஒரே வரியில் தீர்வு சொல்ல வேண்டுமென்றால்..நோ டிவி! நோ மெகா சீரியல் என்று இருந்துவிடுவதுதான்!
ஒரே மாதிரியான தயாரிப்புக்கள் தான்! தங்களை வித்தியாசப் படுத்திக் கொள்வதற்காக, ஒரு முத்திரையை தாங்கி வருவதே ப்ராண்ட் என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிடலாம்!
ஆனால் ப்ராண்ட் என்பது, அந்த மாதிரியான, பொத்தாம் பொது ஸ்டேஜை எல்லாம் தாண்டி, ஒரு வலிமையான சக்தி, செய்தி, வாக்குறுதியைத் தருவதாக உருமாற்றம் பெற்று நீண்ட நாட்களாகி விட்டது. MBA பட்டம் பெற்று, மார்கெடிங் துறையில் இருக்கும் ஒரு பதிவர், ப்ராண்ட் பற்றிப் பதிவுகள் எழுதிக் கொண்டிருந்ததைப் படித்த போது, இந்த தலைப்பில் பேச வேண்டியது இன்னமும் இருக்கிறது என்று தோன்றுகிறது!
கூகுளில் define: brand என்று தேடிப்பாருங்கள்! எத்தனை எத்தனை தேடல் முடிவுகள்!
ஆரம்ப நாட்களில், தன்னுடைய பொருளைப் பற்றி, அதன் தயாரிப்பாளர் அளந்து விடுவது தான் ப்ராண்ட் என்று இருந்தது உண்மை! தன்னுடைய தயாரிப்பை, வாடிக்கையாளர் எப்படிபார்க்க வேண்டும் என்று தூண்டுகிற மாதிரி மறைமுகமாக மூளைச் சலவை செய்கிற மாதிரி?) சொல்வது மிகப் பழைய முறை! ஒரு காலத்தில், ஒரு சோப் விளம்பரம், சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப் என்றே அறிமுகப் படுத்தப் பட்டது.
தன்னுடைய குரல்வளத்தால் தமிழ்நாட்டு ரசிகர்களை, அந்த நாட்களில் கட்டிப் போட்டிருந்த எம் கே தியாகராஜா பாகவதர், வாசனைத்திரவியங்களுக்காகச் செலவழித்த தொகை, தன்னுடைய ப்ராண்டாகக் குரலை விட, வாசனையையே நம்பியிருந்ததாகச் சொல்லக் கேள்வி! இமேஜ்! ப்ராண்ட்! என்ன பாடு படுத்துகிறது?!
இப்போது கூட, ஒரு வாசனை ஸ்ப்ரே விளம்பரம், அதை உபயோகித்தால், வாசனையில் மயங்கி அத்தனை பெண்களும் மேலே விழுந்து மொய்ப்பார்கள் என்ற முட்டாள்தனமான கற்பனையை விதைப்பதாக ...!
முத்தாலிக் மாதிரிக் கலாசாரக் காவலர்களுக்கு பிங்க் கலர் ஜட்டியை அனுப்பிய ரசிகர்களும், பெண்ணீயம் பேசுபவர்களும் சும்மாத்தானே இருக்கிறார்கள்?
ஆக ஒரு ப்ராண்ட், தன்னிடமில்லாத ஒன்றை இருப்பதுபோல பாவலா காட்டுவது நீண்ட நாட்கள் எடுபடாது என்பதை, சந்தையில் உருவான போட்டிகளே தீர்மானித்தன. போட்டியில் ஏற்பட்ட அடுத்த நல்ல விஷயம், ப்ராண்ட் என்பது தரத்தைச் சொல்வதாகவும் இருக்க வேண்டும் என்றாகிப் போனது!
தரமே இல்லாமல், வெறும் விளம்பரங்களிலேயே ஓட்டிவிடலாம் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை, நிறையவே சமீபகால சந்தைப் பொருளாதாரம்காட்டிவருகிறது.
பயன் படுத்துபவர் பார்வையில் இருந்து ப்ராண்ட் என்பது, தன்னை நாணயமான முறையில் அறிமுகப் படுத்திக் கொள்வது என்பதில் ஆரம்பித்து-------
இன்றைய நிலையில், ப்ராண்ட் என்பது, ஒரு பொருளின், அதன் தயாரிப்பாளரின், ஒரு ஸ்தாபனத்தின், அப்புறம் அதைப் பயன்படுத்துகிறவரின் அடிப்படைப் பண்பு எத்தகையது என்பதன் அளவீடாக இருக்கிறது. எங்கே இருந்தோம், எங்கே போகிறோம் என்பதன் வெளிப்பாடாகவும் மாறி வருகிறது.
ப்ராண்ட் என்பது ஏமாந்தவன் தொடையில் கயிறு திரிக்கிற விஷயமல்ல!
ப்ராண்ட் என்பது தரத்தின் வெளிப்பாடு! தொடர்ந்து உறுதிப் படுத்தும் அடையாளம்!
ப்ராண்ட் என்பது, தவறான சித்திரத்தையோ, பொய்யான வாக்குறுதியையோ அளிப்பதுமல்ல.
ப்ராண்ட் என்பது, பயன்படுத்துபவருடைய நம்பிக்கை! அதைக் காப்பாற்றும் தயாரிப்பாளரின் உத்தரவாதம்!
ப்ராண்ட் என்பது நேற்றைய காலத்தின் அடையாளமாக நின்று விடுவது அல்ல! நாளை வரும் நாட்களிலும் நிலைத்து நிற்பது!

