Showing posts with label தேர்தல் 2011. Show all posts
Showing posts with label தேர்தல் 2011. Show all posts

கட்டாய ஓய்வும் தேர்தல் முடிவுகளும்!

"தமிழ்நாட்டு மக்கள் எனக்கு ஓய்வளித்திருக்கிறார்கள்" என்று மு.கருணாநிதி கருத்து தெரிவித்திருக்கிறார்.அறுபது வயது என்பது சாதாரணமாக உழைப்பவர்களுக்கு ஒய்வு பெறும் வயதாக இருக்கையில், அரசியல்வாதிகளுக்கு மட்டும் சாகிற வரையில், அல்லது  தேர்தலில் இப்படிக் கேவலமாகத் தோற்கடிக்கப் பட்டு வீட்டுக்கனுப்பினால் தான் ஒய்வு பெறுவதைப் பற்றியே அவர்கள் யோசிக்கிறார்கள் என்பதை, ஜனங்களாகிய நாம் ஏன் யோசிப்பதே இல்லை?

இங்கே இந்தியத்  தேர்தல் முறைகளில் இருக்கும் மிகப்பெரிய கோளாறு இது!ஐந்து முறை முதல்வர், வாழ்நாள் முதல்வர், நிரந்தர முதல்வர், பிரதமர் என்பதெல்லாம் இந்தியத்  திருநாட்டில் மட்டும் தான்! ஒருவர் இருமுறைக்கு  மேல், முக்கியப் பொறுப்புக்களில் பதவி வகிக்கக் கூடாது என்று  ஏன் விதிமுறை வகுக்கக் கூடாது?

"ஐந்து மாநில சட்டமன்றத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. 2010 ஆம் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு ஊழலாக வெடித்துக் கிளம்பிக் கொண்டு, ஊழல்கள் வெளிவரும் ஆண்டாக இருந்தது, இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த ஐந்து மாநில தேர்தல்கள் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன."


இப்படி எழுதி சரியாக இரண்டு மாதங்கள் ஆகின்றன!  ஒவ்வொரு தேர்தலும் தன்னளவில் சில பொதுவான அம்சங்களையும் அதே நேரத்தில் வித்தியாசமான அம்சங்களையும் கொண்டிருப்பது தெரிந்திருந்தாலும், இரண்டையும் சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்வதில் தான் சரியான அணுகுமுறை, அனுமானங்கள் எல்லாம் கிடைக்கும் என்பதை இன்னொரு அழுத்தமாக இப்போது  நடந்து முடிந்த ஐந்து மாத சட்டசபைத்தேர்தல்கள் சொல்லியிருக்கும் செய்தி!

தேர்தல் முடியும் வரை ஒவ்வொருநாளும் நடப்பு நிலவரங்களைக் கவனித்துக் கொண்டே, இந்தியத் தேர்தல் முறைகளில் இருக்கும் கோளாறு,சீர் திருத்தங்களுக்கான அவசியம், அரசியல்வாதிகளைக் கொஞ்சம் அடக்கியே வைத்திருப்பதில் வாக்காளரின் தொடர்ந்த விழிப்புணர்வின் அவசியம் இவைகளையும் சேர்த்தே இந்தப் பக்கங்களில் கொஞ்சம் சொல்ல முயற்சித்திருந்தேன்.இதில் எந்த அளவுக்கு, என்னால் சொல்ல வந்த விஷயத்தைக் குழப்பமில்லாமல் எடுத்துச்சொல்ல முடிந்தது என்பதை வாசகர்களாகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

தேர்தல் முடிவுகளைப் பற்றிய அனலிசிஸ் இனிமேல்தான் ஆரம்பிக்கவேண்டும்! அனலைஸ் செய்தால் தான், இந்தத் தேர்தலில் என்ன விசேஷமான பாடம் கற்றுக் கொள்வதற்கு இருக்கிறது என்பதையே புரிந்து கொள்ள முடியும்.

அப்படி அனலிசிஸ் செய்வதற்கு முன்னால், சி ஃபி செய்திகள் வலைத் தளத்தில் நந்தினி கிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்த தொகுப்பு, தமிழகத் தேர்தல் களத்தை, இங்குள்ள தொலைகாட்சி ஊடகங்கள் எப்படிக் கையாண்டன என்பதை விலாவாரியாக சொல்லி
ருப்பதைப் படித்துப் பாருங்கள்! ஜெயா தொலைக்காட்சி தன்னுடைய தேர்தல் சிறப்பு நிகழ்ச்சிகளை வாஸ்து, ஜோதிடக்காரர்களைக் கொண்டு ஆரம்பித்தது, கலைஞர்  செய்திகளில் நக்கீரன் கோபால் "நடு நிலை தவறாத" தன்னுடைய கருத்துக் கணிப்புக்களோடு ஆரம்பித்து, முன்னணி நிலவரம் கலவரமானதாக வெளிப்படத் தொடங்கியதும், தேர்தலைப் பற்றிய ஒளிபரப்பை நிறுத்திவிட்டு விளம்பரங்களும் மானாட மயிலாட நிகழ்ச்சிக்குப் போனதாக நந்தினி கிருஷ்ணன் எழுதியிருக்கிற தமாஷைக் கொஞ்சம் பாருங்கள்

ஆனால், இந்தத் தேர்தல்களில், குறிப்பாகத்தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் பாராட்டப்பட வேண்டியது தேர்தல் ஆணையம் தான் என்பதில் இருவிதமான கருத்துக்களுக்கு இடமில்லை. சுவர் விளம்பரம், ஆர்ப்பாட்டமான ப்ளெக்ஸ் பானர்கள், திருட்டு மின்சாரம் எடுத்து ஒளிரும் கட் அவுட்டுகள், காதைக் கிழிக்கும் தேர்தல் பிரசாரங்கள், எதுவுமில்லாமல் நாற்பது, நாற்பத்தைந்து ஆண்டுகளில் நடந்த முதல் தேர்தல் இது. 
திருமங்கலம், பெண்ணாகரம் இடைத்தேர்தல்களில் கடைப்பிடித்த "தாராளத்தை"அப்படியே பின் பற்றுவதில் தேர்தல் ஆணையம் எடுத்த சில நடவடிக்கைகளே, முழுமையாகத் தடுத்து நிறுத்தாவிட்டாலும் கூட, குறைப்பதில் மிக உதவியாக இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழகத் தேர்தல் ஆணையாளர் பிரவீன் குமாருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

நாளை, பிறகு வெளியாகும் புள்ளிவிவரங்களைத் தொகுத்த பிறகு, தேர்தலுக்குப் பிந்தைய கண்ணோட்டமாகக் கொஞ்சம் எழுதலாம் என்ற எண்ணமிருக்கிறது. தொடர்ந்து அரசியலைப்பற்றியே எழுதிக் கொண்டிருப்பது அலுப்பாக இருந்தாலும் கூட, அவசியம் செய்ய வேண்டிய கடமையாகவே இதை நினைக்கிறேன்!

திமுக தேர்தலில் தோற்றதோடு, அதன் பிரச்சினைகள் முடிந்துவிடவில்லை!

நாளை, கனிமொழியின் ஜாமீன் விண்ணப்பத்தின் மீது சிபிஐ நீதி மன்றம் என்ன ம்சுடிவு சொல்லப் போகிறது என்பது கேள்விக் குறியாக, பின்தொடரும் நிழலாக இருக்கிறது. பி அமிர்தம் கொடுத்த வாக்குமூலம் நிலைமையை மேலும் சிக்கலாக்கலாம்.

அதற்குப் பிறகு பத்துநாளில், வருகிற இருபத்து நான்காம் தேதி, தயாளு அம்மாளின் பெயரை ஏன் விட்டார்கள் என்ற ஒரு தனியார் புகார் விசாரணைக்கு வருகிறது. அதைக் கொஞ்சம் அவகாசம் கேட்டு வாதாடினாலும், சிபிஐ அடுத்த துணைக் குற்றப்பத்திரிகையில் தயாளு அம்மாளின் பெயர் சேர்க்கப்படுவது அநேகமாகத் தவிர்க்க முடியாது என்றே தெரிகிறது.

ஓய்வு பெற நினைத்தாலும் முடியுமா? 






கனிமொழி, கருணாநிதி, கருத்துக் கணிப்புக்கள், குழப்பங்கள்! குழப்பத்தில் வரும் தெளிவு!

...


கவிஞராக மட்டும் இருந்திருந்தால் எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருந்திருக்க முடியுமோ?


சிபிஐ நீதிமன்றம் மே ஏழாம் தேதியன்று, நீதிமன்றத்தில் தினசரி ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்ற கனிமொழியின் விண்ணப்பத்தை நிராகரித்தது. நேற்று முன்தினம் மறுபடி விண்ணப்பித்ததில், மே 12, 13 இரண்டு நாட்கள் மட்டும்,அதுவும் சென்னையில்  12 ஆம் தேதி வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராவதற்காக மட்டும்,விலக்களித்து நேற்றைக்கு உத்தரவு பிறப்பித்தது. 'உடனடியாக டில்லி திரும்ப முடியாது' என்பதால் 13 ஆம் தேதியும் விலக்களித்து நீதிமன்றம் அனுமதித்தது.


முதலில் குழப்பத்துக்கு வித்தாக இருக்கும் கருத்துக் கணிப்புக்கள் என்ன சொல்கின்றன என்பதைக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்!

ப்படி ஒரு கணிப்பு! தேர்தலுக்குப் பிந்தைய வாக்காளர் மனநிலையைத் தொட்டு சிஎன்என்-ஐபிஎன்- சிஎஸ்டிஎஸ் எடுத்தது. 
தில் பிஜேபி கட்சிக்கு மூன்று சதவீதம் வாக்காளர்கள் ஆதரவு என்பது கொஞ்சம் ஆச்சரியமான செய்தி மட்டுமல்ல,மாறிவரும் வாக்காளர் மனநிலையை பிரதிபலிப்பதாகவும் இருக்கிறது. இதர வகையில் 2006 தேர்தலில் பதினைந்து சதவீதமாக இருந்தது இந்த எக்சிட் போல் எடுக்கும் போது பத்து சதவீதமாக சுருங்கிவிட்டதாம்!
த்துத் தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு தெரிகிறது என்று பிஜேபியின் இல. கணேசன் சொன்னாராமே! எங்கே என்று தேடுகிறீர்களா? இப்போதுள்ள தேர்தல் முறையில் ஒரு கட்சி வாங்குகிற வாக்கு சதவீதத்துக்கும், ஜெயிக்கிற தொகுதிகளின் எண்ணிக்கைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை!

ஹெட்லைன்ஸ்டுடே-ஒ ஆர் ஜி கருத்துக் கணிப்பு இதற்கு  உல்டாவாக திமுக அணிக்கு 115-130 வரை கிடைக்கும் என்றும், அதிமுக அணி 105-120 வரை சட்டமன்றத்தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் சொல்கிறது.

துவரை அதிகம் அறியப்படாத, சி- வோடர்ஸ்  சர்வே என்ற அமைப்பு அதிமுக கூட்டணி 168-176 இடங்கள் வரையிலும், திமுக அணி 54-62 இடங்களையும் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பை வெளியிட்டிருப்பதாக, ஹிந்து நாளிதழில் வெளியாகி இருக்கும் இந்த செய்தி சொல்கிறது.

ந்தக் கருத்துக் கணிப்புக்கள், ஒரு சிறுபகுதி வாக்காளர்களிடம் தேர்தலுக்குப் பின் நடத்திய கருத்துக் கணிப்புக்களின் அடிப்படையில் சொல்லப்படுபவை. உண்மை நிலவரத்தைப் பிரதிபலிப்பவை என்று எடுத்துக் கொள்ள முடியாதவை.

இன்னும் நியூஸ் எக்ஸ், ஆசியாநெட் சர்வேக்களும் அதிமுகவுக்குத் தான் அதிக இடங்கள் கிடைக்கும் என்று சொல்வதாக, இப்படிக் கருத்துக் கணிப்புக்களைப் பற்றிய ஒட்டு மொத்த சித்திரத்தை எக்ஸ்ப்ரெஸ் நாளிதழ் தருகிறது 

ஆனால், ஒரு விஷயம் மட்டும் தொடர்ந்து உறுதிப்பட்டுக் கொண்டே வருகிறது. 


உதயசூரியனாக கருதப்பட்டு வந்த திமுக அஸ்தமன சூரியனாகிக் கொண்டிருக்கிறது.


சென்ற சட்ட மன்ற தேர்தல்களிலேயே வெறும் 96  தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது, ஜெயலலிதா வார்த்தைக்கு வார்த்தை மைனாரிட்டி திமுக அரசு என்று சொன்னது பொய்யில்லை. காங்கிரஸ் முட்டுக் கொடுத்து வந்தன் அடிப்படையில் மட்டுமே திமுக, மெஜாரிட்டி அந்தஸ்தில் இந்த ஐந்தாண்டுகளைக் கடக்க முடிந்தது. இப்போது  நடந்து முடிந்த தேர்தலில் முட்டுக் கொடுத்த காங்கிரஸ், காணாமல் போய்விடுகிற சாத்தியம் அதிகமாகி இருப்பதோடு, திமுக தன்னுடைய சொந்தக் காலில் நிற்க முடியாத அளவுக்குப் பலவீனமாகிவிட்டது என்பது மட்டும், தேர்தல் முடிவுகள்  காட்டப்போகும் உண்மை.

துவரை தமிழகத்தில் தனிக்கட்சி ஆட்சிக்கே வாக்காளர்கள் ஆதரவு தந்து வந்திருக்கிறார்கள் என்று திமுக தலைவரும், அதிமுக அம்மாவும் சொல்லிக் கொண்டு வந்தது, இனிமேல் உண்மை நிலவரம் அப்படி இல்லை என்பதை நிரூபிப்பதாக இருக்கிறது.

........நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், தெய்வம் ஏதுமில்லை!
 

"நான் கலைஞர் தொலைக்காட்சியில் டைரக்டர் இல்லை, எந்த முடிவையும் எடுக்கவில்லை, எதிலும் கைஎழுத்திடவுமில்லை" என்று கனிமொழி தரப்பில் வாதிடப்பட்டாலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுரையின் பேரிலேயே கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குனராக நீடிக்க முடியவில்லை என்பதை சிபிஐ தரப்பில் அதன் வழக்கறிஞர் லலித் சிபிஐ நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார். தயாளு அம்மாளைக் துணைக் கு ற்றப்பத்திரிகையில் சேர்க்காமல் விட்டு விட்டாலும் கூட, தயாளு அம்மாளும் கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குனர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவே ஆவணபூர்வமான ஆதாரம் இருப்பதாக இந்த செய்தி சொல்கிறது.ஜூலை மாத இறுதிக்குள் 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்துத் தனது விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் சிபிஐ இருக்கிறது. இன்னும் இரண்டு துணைக் குற்றப்பத்திரிகைகள் சமர்ப்பிக்கப் படும் என்று சிபிஐ தெரிவித்திருக்கிறது. 

ஆக, சுப்பிரமணியன் சுவாமி சொன்னது போல மூன்றாவது குற்றப் பத்திரிகையில் தயாளு  அம்மாள் பெயரும் சேர்க்கப்படுமா என்பது இந்தத் தேர்தல் முடிவுகளைப் பெரிதும் சார்ந்திருக்கும் இன்னொரு கேள்வி! விடை, எப்போதும் போல வெறும் ஒன்பது ரூபாய் நோட்டுத் தான்!


"மே 13 இல் என்ன தெரிந்துவிடும் என்று நினைக்கிறீர்கள்? இந்தக் கூட்டணி அல்லது அந்தக் கூட்டணி என்று எதுவந்தாலும் ஜனங்களுக்கு விடிவு வரப் போவதில்லை. அதற்குக் காரணம், ஒரு தவறு நடக்கும்போது அதைத் தட்டிக் கேட்கிற தைரியம் இல்லாத ஊமைச் சனங்களாகவே நாம் குறுகிப் போய்க் கிடப்பதுதான்!
வாக்காளர்களிடம் விழிப்புணர்வு! முதலில் வாக்குச் சீட்டு என்பது மூணு சீட்டு மாதிரியோ, குறைந்தபட்சம் லாட்டரிச்சீட்டு மாதிரியோ கூட இல்லை அதற்கென்று சில கடமைகளும் பொறுப்புணர்வும் தேவைப்படுகிற ஒன்று என்ற அளவிலாவது புரிந்துகொண்டிருக்கிறோமா? ஜனநாயக்காவலர் நேரு முதற்கொண்டு எந்தத்தலைவராவது ஜனங்களை ஜனநாயகத்துக்குத் தயார் செய்திருக்கிறார்களா?

தலைவர்கள் தான் சரியில்லை, போய்த்தொலையட்டும், தன் கையே தனக்குதவி அல்லது நமக்கு நாமே என்று ஜனங்களாவது தங்கள் பொறுப்பை உணரத் தலைப்பட்டிருக்கிறார்களா? சினிமாவாகட்டும், நடப்பு வாழ்வாகட்டும், எதிலும் யாரோ ஒரு ஹீரோ வந்து தான் இவர்கள் வீட்டில் சேர்கிற குப்பைகளைப் பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தால் எப்படி?

சுதந்திரம், ஜனநாயகம் என்பதெல்லாம் அதைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே! குறைந்தபட்சம் இந்த செய்தியையாவது ஜனங்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டாமா?"

இந்தப்பதிவுக்கு வந்த பின்னூட்டத்திற்குப் பதிலாக எழுதியது இது.

தொடர்ந்து பேசுவோம்!




 

 

........இப்போ கனிமொழி! அப்புறம் சோனியாவா?



அங்குசம் மிக மிகச் சின்னது தான்!ஆனாலும் கூட ஒரு பெரிய யானையையே அடக்கி மண்டிபோட வைத்துவிடுகிற வலிமை அங்குசத்திற்கு இருக்கிறது.அதே மாதிரித் தான், சில தனிநபர்களும்! அவர்களை எவ்வளவு எள்ளி நகையாடினாலும், முட்டைகளை வீசி எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்பினாலும், எள்ளல், வெறுப்புக் கலந்த பிரசாரத்துக்கு உட்படுத்தப் பட்டாலும் கூட, அதெல்லாம் அவர்களைக் கண்டு எழும் அச்சத்தினால் தான் என்பது வெள்ளிடைமலை.

டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி!

பெயரைச்சொல்லும்போதே, இன்னதென்று சொல்ல முடியாத உணர்வை ஏற்படுத்தக் கூடியவர்.தமிழக அரசியல் வாதிகளால், வெறும் கோமாளியாகவும், எதிலும் எப்போதும் சேர்த்துக் கொள்ளப்படக் கூடாத, முடியாத ஒரு சக்தியாகவும் சித்தரிக்கப் பட்டவர். எப்படி ஒரு சிறிய அங்குசம், பெரிய யானையை மண்டியிட வைத்துக் கொண்டு இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு முன்னால், இன்றைய தினமணி நாளிதழில் திரு எஸ் குருமூர்த்தி, ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சிந்தனையைத் தூண்டுகிற,  ஒரு செய்திக் கட்டுரையை எழுதி இருக்கிறார்! அதைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்.


நாட்டு மக்கள் அனைவரும் சொல்லிவிட்டார்கள், இத்தோடு போதும் என்று; அப்போதுதான் யாரும் எதிர்பாராதது நடக்கிறது. யாராலும் நெருங்க முடியாதவர்கள் என்று கருதப் பட்டவர்கள், தீண்ட முடியாதவர்கள் என்று நினைக்கப்பட்டவர்கள் நீதித்துறையின் நெடிய கரங்களில் சிக்க ஆரம்பிக்கின்றனர்.

அப்படி இப்போது சிக்கியிருக்கும் மிகப்பெரிய விலாங்கு மீனாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி. ஃபோர்பஸ் பத்திரிகையில் வந்துள்ள கட்டுரைப்படி பார்த்தால் உலகிலேயே மிகவும் செல்வாக்கான மனிதர்கள் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருப்பவர்.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பவர் என்று அவரை யார் சொல்வது? சுப்பிரமணியன் சுவாமியா? நானா? இல்லை. அப்படிச் சொல்வது கிளியோ பாஸ்கல்.

ஹஃபிங்டன் போஸ்ட் செய்தி இணையதளத்தில் எழுதுகிறவர்தான் இந்த கிளியோ பாஸ்கல். அவர்தான் கூறுகிறார் சோனியா காந்தி மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது என்று.  ""உலகின் செல்வாக்கான மனிதர்கள் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருப்பவர் மீதுதான் ஊழல் குற்றச்சாட்டு கூறப்படுகிறது - அவர் வீழ்ச்சி அடைவாரா?'' என்று!

 ஹஃபிங்டன் போஸ்டில் 2011 ஏப்ரல் 25-ம் தேதி அவர் இதை எழுதியிருக்கிறார்.  யார் இந்த கிளியோ பாஸ்கல்?

சிறந்த பத்திரிகையாளருக்கான விருதுகளைப் பெற்றவர். லண்டனில் உள்ள சர்வதேச விவகாரங்களுக்கான ராயல் கழகத்தில் அவர் உறுப்பினர். அமெரிக்க வெளியுறவுத்துறையில் கெüரவமிக்க உறுப்பினர்.
அமெரிக்க எரிசக்தித்துறை, அமெரிக்க ராணுவக் கல்லூரி, பிரிட்டிஷ் ராணுவத்துறை, பிரிட்டிஷ் வெளியுறவு, காமன்வெல்த் அலுவலகம், பிரிட்டிஷ் ராணுவ அகாதெமி, ஐரோப்பிய யூனியன், நேடோ, பாதுகாப்பு - ஒத்துழைப்புக்கான ஐரோப்பிய அமைப்பின் ஆலோசகர்.

ஹஃபிங்டன் போஸ்ட் செய்தி இணையதளம் உலகிலேயே 3-வது இடத்தில் இருக்கிறது. 3 கோடியே 80 லட்சம் பேரால் படிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அதைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 50 கோடி. 2005-ல் தொடங்கப்பட்ட இந்தச் செய்தி இணைய தளம் உடனடியாக உலக அளவில் புகழ்பெற்றுவிட்டது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏ.ஓ.எல். என்ற நிறுவனம் ரூ.1,450 கோடி கொடுத்து இந்த இணையதளத்தை வாங்கியிருக்கிறது.

2008-ம் ஆண்டு இந்த இணையதளத்தைத்தான் உலகின் மிகச்சிறந்த செய்தி இணையதளமாக லண்டனிலிருந்து வெளிவரும் "தி அப்சர்வர்' மதிப்பிட்டிருக்கிறது.

கிளியோ பாஸ்கல் யார், அவர் எழுதும் ஹஃபிங்டன் போஸ்ட் இணைய தள செய்திப் பத்திரிகை எத்தகையது என்று பார்த்தோம். சோனியா காந்தி குறித்து அவர் என்ன எழுதியிருக்கிறார் என்று இனி பார்ப்போம்.

"கணவருக்கு அடங்கிய, குடும்ப பாரத்தை விரும்பிச் சுமக்கிற இந்திய மருமகளாக, இப்போது கணவரை இழந்த பெண்ணாகத் திகழ்கிறார்.
சந்தேகிக்கத்தக்க சில வர்த்தக நடவடிக்கைகள் மூலம் சோனியா காந்தியுடைய, அவருடைய குடும்பத்தாருடைய சொத்துகளின் மதிப்பு பல மடங்காக உயர்ந்து வருவது குறித்து ஆங்காங்கே முணு முணுப்புகள், புருவ நெறிப்புகள், கேள்விக்கணைகள் எழுந்துள்ளன.

1995-ம் ஆண்டிலேயே எம்.டி. நளப்பாட் என்கிற பத்திரிகையாளர் "தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேட்டில் சோனியா காந்தி குறித்து திடுக்கிடவைக்கும் சில கட்டுரைகளை எழுதினார்.

எதுவுமே தெரியாத சாதாரண குடும்பப் பெண் போல அவர் காட்சி தருவதெல்லாம் வெறும் வெளிவேஷம், அவருக்குள் தீவிரமான அரசியல் அபிலாஷைகள் இருக்கின்றன என்று அப்போதே அவர் எழுதினார். பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை சோனியா ஏற்றபோது நளப்பாட் எழுதியது வெறும் வார்த்தைகள் அல்ல என்று நிரூபணம் ஆயின.

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றதற்குக் காரணம் தன்னுடைய கணவரின் தாய் நாடு வளம் பெற்று முன்னேற வேண்டும் என்ற பொதுநல நோக்கு அல்ல என்பது அவருடைய தனிப்பட்ட சொத்தும், அவருடைய குடும்பத்தாருடைய சொத்துமதிப்பும் ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்ற பிறகு1984- லிருந்து கற்பனைக்கு எட்டாத வேகத்தில் அதிகரித்தபோது நிரூபணம் ஆயின.

நளப்பாட் எழுதிய அரசியல் கட்டுரைகளில் யாரும் குறை சொல்ல முடியாதபடி இருந்தாலும் 1998-ல் பத்திரிகைத் தொழிலைவிட்டே நளப்பாட் விலக நேர்ந்தது. சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரானார்.

போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் சுவீடன் நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம் நடத்திய விசாரணை அடிப்படையில் எழுந்த பல அடிப்படையான கேள்விகளை பாஸ்கல் தொட்டுக்காட்டுகிறார். போஃபர்ஸ் பீரங்கி பேரத்துக்குப் பிறகு ஆட்டோவியோ குவாத்ரோச்சியின் நிறுவனங்களுக்கு எப்படிப் பெரும் தொகை கிடைத்தது என்பதை காந்திகள் - அதிலும் குறிப்பாக சோனியா காந்தி - விளக்க வேண்டும் என்று கேட்கிறார்.

சோனியா காந்தி குடும்பத்தாருக்கும் குவாத்ரோச்சிக்கும் என்ன உறவு என்று கேட்கிறார் லிண்ட்ஸ்ட்ராம். குவாத்ரோச்சியையும் அவருடைய ஏ.இ. சர்வீசஸ் என்ற நிறுவனத்தையும் போஃபர்ஸ் பீரங்கி பேர நிறுவனத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தது யார் என்றும் லிண்ட்ஸ்ட்ராம் கேட்கிறார்.

இதிலிருந்து ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிகிறது. பீரங்கி பேர கமிஷனின் ஒரு பகுதி குவாத்ரோச்சிகளுக்குக் கிடைத்திருக்கிறது. அதற்குக் காரணம் சோனியா காந்தி என்று எல்லா ஆவணங்களும் சுட்டுகின்றன என்று லிண்ட்ஸ்ட்ராம் கூறுகிறார்.

அர்த்தமுள்ள இந்தக் கேள்விகளுக்கு சோனியா காந்தி இதுவரை பதில் அளிக்கவில்லை; அது மட்டும் அல்ல, இந்த விவகாரத்தில் கமிஷன் வாங்கியது குவாத்ரோச்சிதான் என்பது சந்தேகம் அறத் தெரிந்துவிட்ட போதிலும் அவரால் இந்தியாவில் வழக்கைச் சந்திக்காமல் தப்பிக்க முடிகிறது. மேலும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் முடக்கிவைக்கப்பட்ட அவருடைய வங்கிக் கணக்கையும் திறக்க உத்தரவிடப்பட்டு அவர் கணக்கில் இருந்த பணத்தையும் அவரால் எடுத்துக்கொள்ள முடிந்திருக்கிறது.

ஆனால் சோனியா காந்திக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இப்போது பிரதமரின் மேஜை மேலே காத்துக் கொண்டிருக்கிறது. ஊழலுக்காக சோனியா காந்தி மீது வழக்குத் தொடர பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதலைக் கேட்டு சுப்பிரமணியன் சுவாமி அளித்திருக்கும் மனுதான் அந்த அச்சுறுத்தல்.

சுப்பிரமணியன் சுவாமி அளித்திருப்பது வெறும் அனுமதி கோரும் கடிதம் அல்ல; மிகவும் நுணுக்கமாகத் தகவல்களைச் சேகரித்து ஆராய்ந்து எழுதப்பட்ட 200 பக்கங்களுக்கும் மேற்பட்ட ஆவணங்களைக் கொண்டது அந்தக் கடிதம். 1972 முதல் இந்தியாவில் நடந்த ஊழல்களில் சோனியா காந்திக்கு உள்ள பங்குகள் எவை என்று தோலுரித்துக் காட்டும் ஆவணங்கள் அவை.

1986-ல் போஃபர்ஸ் பீரங்கி பேர விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் சோனியா காந்தி அடைந்ததாகக் கருதப்படும் பணப் பயன்கள் பற்றிய தகவல்களும் அதில் உள்ளன.

1991-ம் ஆண்டு முதல் பல நூறு கோடி ரூபாய்கள் இந்தியாவைச் சேராத வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தபோது உணவுக்குப் பதில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் என்ற திட்டத்தின் கீழ் இராக்கிலிருந்து கச்சா பெட்ரோலிய எண்ணெயை வாங்கி விற்ற விதத்தில் சோனியா காந்தி கோடிக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் பனிப்போர் நடந்த காலத்தில் ரஷியாவின் கே.ஜி.பி. என்ற உளவு அமைப்பு மூலம் பணம் பெற்ற தகவல்களும் கிடைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

பிரதமரின் மேஜை மீதுள்ள புகார் மனுவை பாஸ்கல் வெகு கவனமாகப் படித்துப் பார்த்திருக்கிறார். இந்த மனுவை ஏற்கவோ, நிராகரிக்கவோ பிரதமருக்கு 3 மாதங்கள் அவகாசம் உள்ளது. அதன் பிறகு அவரிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் போனால் உச்ச நீதிமன்றத்தை அணுகி அதனிடம் அனுமதி பெற சுவாமிக்கு உரிமை இருக்கிறது.

 உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இப்போது இருக்கும் எஸ்.கே. கபாடியா இந்த மாதிரி வழக்குகளை உடனுக்குடன் அனுமதித்து விடுவார். உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் முக்கியத்துவத்தின் பின்னணியில் பார்க்கும்போது, சோனியா மீது வழக்குத் தொடர சுவாமி அனுமதி கோரியிருப்பது வெறும் இந்திய அரசியல் விவகாரம் இல்லை, உலகில் ஊழல் ஒழிய வேண்டும் என்று நினைக்கும் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விவகாரம் என்று முடித்திருக்கிறார் பாஸ்கல். சோனியா காந்தி மீதான ஊழல் புகாருக்கு சர்வதேசத் தன்மை இருக்கிறது என்கிறார் பாஸ்கல்.

இந்தியாவில் நடப்பவற்றை இப்போது நாம் பார்ப்போம். இந்தியாவில் உள்ள பத்திரிகைகளும் செய்தி ஊடகங்களும் சோனியா காந்தியின் பின்னணி பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக மறைக்கவே பார்க்கின்றன. சோனியா காந்தியின் ஊழல்குறித்து பாஸ்கல் எழுதுவது என்னவென்றே இந்தியர்களுக்குப் புரிவதில்லை. சோனியா பதவியை விரும்பாத தன்னலமற்ற தலைவி என்றும், ஊழலுக்கு எதிரான தேவதை என்றும்தான் இந்தியர்களில் பலர் பார்க்கின்றனர். அதனால்தான் ஊழலை என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது என்று பெரிய நேர்மையாளரைப் போல அவரால் வேஷம் போட முடிகிறது.

அவர் உண்மையிலேயே நேர்மையானவர்தானா என்று ஆராய்வதற்குப் பதிலாக, ஊழலை ஒழிப்பதில் அவர் கொண்டுள்ள உறுதியைப் பாராட்டி மகிழ்கிறது. இந்தியர்கள் பேராசை பிடித்தவர்களாகி விட்டார்கள், அவர்களுடைய தார்மிக உலகு சுருங்கிவிட்டது என்று அவர் இந்தியர்களையே வசை பாடுகிறார், "", சோனியா எப்படி வெளிப்படையாகப் பேசிவிட்டார்'' என்று அகமகிழ்கின்றன இந்திய செய்தி ஊடகங்கள்!.

ஊழல் ஒழிப்புச் சட்டம் தேவை என்ற கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்த காந்தியவாதி அண்ணா ஹசாரேவுக்குத் தனது ஆதரவு உண்டு என்று சோனியா அறிவித்தவுடன், அவரே அகமகிழ்ந்து சோனியாவுக்கு நன்றி தெரிவிக்கிறார், பாராட்டுகிறார்.

சோனியா அத்தோடு சும்மா இருக்கவில்லை, அண்ணா ஹசா ரேவின் ஆதரவாளர்களான சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண் ஆகியோர் என்ன யோக்கியமா, அவர்களுடைய வண்டவாளங்கள் தெரியாதா, அவர்களை வைத்துக்கொண்டு ஊழலை ஒழிக்கச் சட்டத் தயாரிப்பா என்று கபில் சிபல்கள், திக்விஜய் சிங்குகள், திவாரிகளை விட்டு வசைமாரிப் பொழிய கண்ஜாடை காட்டிவிட்டார்.

சோனியா பாராட்டும்போது அவருடைய தொண்டரடிப்பொடிகளால் எப்படி அண்ணா ஹசா ரேவின் ஆதரவாளர்களைத் திட்டித் தீர்க்க முடிகிறது என்று பத்திரிகைகள் கேள்வி கேட்கவில்லை.

அவ்வளவு ஏன், இந்தியாவின் பிரபல பத்திரிகைகளும் தொலைக் காட்சி ஊடகங்களும் சுப்பிரமணியன் சுவாமி மிகுந்த முயற்சி எடுத்துத் தயாரித்துள்ள 200 பக்கங்களுக்கும் மேற்பட்ட அந்த முக்கிய ஊழல் புகார் குறித்து சிறிதளவுகூட செய்தி வெளியிடவில்லை.

கிளியோ பாஸ்கல் எழுதிய கட்டுரைக்கு நன்றி தெரிவித்து இந்திய வாசகர் எழுதிய கடிதத்துக்குப் பிறகே இது பலரின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது.இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம்--:

ஊழல் விவகாரங்களில் சிக்கி, சந்தேகத்துக்கு உரியவராகத் திகழும் சோனியா காந்தி, ஊழலை ஒழிக்க வந்த தேவதையாக இந்தியப் பத்திரிகைகளால் சித்திரிக்கப்படுகிறார்.


அப்பா பொது நல வழக்கு என்று தொடருவார். மகன் உள்ளே புகுந்து, அதில் இருந்து எப்படி விடுபடுவது என்று சொல்லித்தருகிறேன் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பை அணுகுவார் என்று சாந்தி பூஷன்-பிரசாந்த் பூஷன்களைப் பற்றிக் கூட சமீபத்தில் சில திரித்துச் சொல்லப்பட்ட செய்திகள் வந்தன.

எது எப்படியோ, ஸ்பெக்ட்ரம் ஊழலாகட்டும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்த ஊழலாகட்டும், டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, மற்றும் சாந்திபூஷன் தொடுத்த வழக்குகளின் அடிப்படையிலேயே, யானை மாதிரி மதம் பிடித்துத்திரிந்த ஊழல் அரசியல்வாதிகள், நீதிமன்றத்தின் கண்காணிப்பில் மண்டியிட்டு நிற்கிற மாதிரி ஆயிற்று என்பது தான் உண்மை!

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு ஆ.ராசாவை மட்டும் பலிகடாவாக ஆக்கியதோடு நின்றுவிடாமல், அதில் சம்பந்தப்பட்ட பெருந் தலைகளையும் குடும்பத்தோடு இப்போதுதான் தொட ஆரம்பித்து இருக்கிறது. 

ஊழல் கூட்டணி தர்மத்தில், போபார்ஸ் வழக்கு ஆரம்பித்து எதிலும் சிக்காமல் உத்தம அன்னையாக சித்தரிக்கப்படும் சோனியாவையும் நீதியின் கரங்கள் தொடுகிற காலம் இப்போது தான் முதன்முதலாக நெருங்கி வந்திருக்கிறது.

அங்குசங்கள் சிறியவைதான்! மதம் பிடித்து அலைகிற யானைகளை மண்டியிடச் செய்ய அங்குசங்கள் வேண்டும்!

வரவேற்போம்!