Showing posts with label வெள்ளிக்கிழமைக் கேள்விகள். Show all posts
Showing posts with label வெள்ளிக்கிழமைக் கேள்விகள். Show all posts

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! பதில் சொல்வாரைத் தான் காணோம்!

எங்கள் கிரியேஷன்ஸ் blog இல் கௌதமன் செய்தியைச் சுடச்சுட சிறுகதையாக்கி விட்டார்! அதே நேரம்  சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது என்கிறார் சைபராபாத் போலீஸ் கமிஷனர் V C சஜ்ஜனார்! திஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 26 வயதான கால்நடை மருத்துவர் சில கயவர்களால் சிதைக்கப் பட்டு, அதன் பின் உயிருடன் எரித்துக் கொலை செய்யப் பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் இன்று காலை என்கவுன்டர் செய்யப்பட்டதைக் குறித்து நிருபர்களிடம் விளக்கியபோது சொன்ன வார்த்தைகள் சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. நாடாளு மன்றத்திலும் இந்த விவகாரம் ஒருமாதிரி ரகளையை உண்டாக்கியதென்றே சொல்லவேண்டும்.   


மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி ஈரானியைப் பேசவிடாமல் பாய்ந்து அடிக்க வருகிற மாதிரி காங்கிரஸ் உறுப்பினர் TN பிரதாபன் தன்னுடைய பிரதாபத்தைக் காண்பித்து இருக்கிறார். தெலுகு சினிமா நட்சத்திரங்கள் நாகார்ஜுனா, ராகுல் ப்ரீத் சிங், ஹன்சிகா மோத்வானி ஆகியோர் தெலங்கானா போலீசை வாழ்த்தியதோடு JUSTICE SERVED! என்று ட்வீட்டரில் செய்தி சொல்லியிருக்கிறார்கள். சட்டம், வழக்கு விசாரணை, நீதிபதிகள் எல்லாம் இனிமேற் கொண்டு வேண்டாம் போல இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்கள் இப்படிப் புகழஞ்சலிகள் நிறைய வரும்! ஒரு வேலை வெட்டியில்லாத ஆசாமி ஜெயா பச்சனுக்கு ஒரு திறந்த மடல் எழுதியிருக்கிறார்.  




கொலைகாரர்களைத் தப்புவிப்பதில் காங்கிரஸ் செம கில்லாடி. 1984 இல் என்ன நடந்தது என்று கொஞ்சம் கேளுங்கள்!

  
என்னென்னமோ சொல்லியிருப்பதில் கேள்விகளைக் காணோமே என்று திகைக்கிறீர்களா? பின்னூட்டத்தில் கேளுங்கள்! கேள்விகளைக்  கேட்கிறேன்! பதில் சொல்ல ரெடியா? 

மீண்டும் சந்திப்போம்.   

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! சிவசேனா! ஒரு அரசியல் தற்கொலை!

மகாராஷ்டிரா அரசியலில் ஒரேயடியாக வறட்டு இழுப்பாக சிவசேனா இழுத்துக் கொண்டே போவதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்கமுடியாமலும், புதிய அரசு அமைக்க முடியாமல் ஒரு இழுபறிநிலைமை நீடித்துக் கொண்டே போவதும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. சிவசேனாவால் outgoing Chief Minister என்று நக்கலடிக்கப்பட்ட தேவேந்திந்திர ஃபட்னவிஸ் தனது ராஜினாமாவை இன்று ஆளுநரிடம் கொடுத்து விட்டார்.


அப்படியானால் சிவசேனா ஆசைப்பட்டபடி சிவசேனா ஆசாமி ஒருத்தர்தான் மகாராஷ்டிராவின் முதல்வராக வரப் போகிறாரா? நிச்சயமாக இல்லை! 


உத்தவ் தாக்கரே, ஒரு கட்சித்தலைவராக, முன்னால் மின்று பேசியிருக்கவேண்டிய தருணங்களில் சஞ்சய் ராவத் மாதிரி அடிப்பொடியைப் பேசவிட்டதும். நெகிழ்வுத் தன்மை இல்லாமல் வரட்டுப் பிடிவாதத்திலேயே நின்றதும் ஒரு அரசியல் கட்சிக்குக் கொஞ்சமும் உதவாதவை. தங்களுடைய இருப்பு ஒரு மாநிலக்கட்சியாகத்தான்,  அதுவும் ஒரு பகுதி மக்களிடம் மட்டுமே எடுபடுகிற மாதிரி இருக்கும் போது, வெறும் பிடிவாதம் மட்டும் போதுமா? எனக்கு என்னவோ உத்தவ் தாக்கரே, harakiri ஒரு அரசியல் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துவிட்ட மாதிரி தோன்றுகிறது. முதலமைச்சராக நாங்கள் தான் இருப்போம் என்று இன்னமும் பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டிருப்பது பைத்தியக்காரத்தனத்தின் உச்சம்.
  
MLAs being 'moved' in Maharashtra. This is what happens if you neighbour Karnataka...some of the politics rubs off on you :-) #ResortPolitics in #Maharashtra
7:12 PM · Nov 8, 2019

ANI செய்தி நிறுவனத்தின் எடிட்டராம்! சரத் பவார் கட்சி MLAக்களைத் தவிர, காங்கிரசும் சிவசேனாவும் தங்கள் கட்சி சமஉக்களை, பத்திரப்படுத்தி வைக்க ஆரம்பித்து விட்டதாக செய்திகள் சொல்கின்றன.

அரசியல் என்றால் அக்கப்போர்கள் இல்லாமலா? வாக்களித்த ஜனங்களை கேணைகளாக்குகிற போக்கை என்னவென்று சொல்வது?Winner takes all என்கிற Westminster தேர்தல்முறைகளில் உள்ள கோளாறுகளைப் பற்றி இந்தப்பக்கங்களில் பல முறை பேசியிருக்கிறோம். 

எங்கே போகிறோம்? என்ன செய்யப்போகிறோம்?

மீண்டும் சந்திப்போம்.               

           

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! செய்திகளில் இன்று!

நம்மைச் சுற்றிவரும் செய்திகளில் முக்கியமான சில செய்திகளை முதலில்  பார்த்துவிடலாம்! ஏனெனில் இவை நேரடியாகவோ மறைமுகமாகவோ நம்மையும் பாதிக்கக் கூடியவைகளாக இருக்கின்றன.  உலகமயமாக்கல் என்பது ஜனநாயகத்தின் உச்சம் என்று சொல்லப்பட்ட காலம் மலையேறி விட்டது. நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில் டொனால்ட் ட்ரம்ப் America First என்று முழங்குவதும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறத் தவிப்பதும், இந்தியாவில் நரேந்திரமோடி முன்வைக்கும் தேசியவாதம் பெரும் ஆதரவைப் பெறுவதும் தற்செயலானதோ ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதவையோ அல்ல. 


brexit  வெளியேறுவதில் உடன்பாடு ஏற்பட்டு விட்டதாம்!
போரிஸ் ஜான்சன் நடராளுமன்றத்தின் ஒப்புதலைப் 
பெற்றாக வேண்டும்! வட அயர்லாந்து இதை ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. வீடியோ 11 நிமி.  

உலகமயமாக்கலை முன்னெடுத்த அமெரிக்கா சூடுபட்ட பூனையாக, உலகம் எக்கேடு கெட்டுப் போனாலும் போகட்டும், எங்களைப் பார்த்துக் கொண்டாலே போதும் என்று வேகமாக ஒதுங்குவதில் இருந்தே உலகமயமாக்கல் என்கிற கோட்பாடு செத்து விட்டது என்பதைப்புரிந்துகொள்ள முடியும். இன்னும் கொஞ்சம் விரிவாகத் தெரிந்து கொள்ள விரும்பினால் இங்கே  நேர்மாறாக, உலகமயமாக்கலில் முழுப்பயனையும் அனுபவித்தது சீனா என்பதில், எப்படி சீனர்கள் அதை  ஒருவழிப் பாதையாக்கி, தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள் என்பதையும் பார்த்தாலொழிய, புரிந்து கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கலாம். அமெரிக்கா சீனாவுக்கிடையே ஆன வர்த்தகப் போரும் கூட, பிரச்சினையை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். டொனால்ட் ட்ரம்ப், நரேந்திர மோடி, ஷி ஜின்பிங் இப்படித் தனிமனிதர்கள் அல்ல, ஒருநாட்டின் ஒட்டு மொத்தமான உணர்வே  எந்தத் திசையில் தேசத்தை இழுத்துச் செல்கிறது  என்பதற்கான தெளிவான அடையாளமாகவும்  இருக்கிறது. ஆனால்  மன்மோகன் சிங்,  ரகுராம் ராஜன் மாதிரியான  தோசானாமிக்ஸ் மேதாவிகள் வேறுவிதமாகத் தான் சொல்வார்கள். ஒரு 61 நிமிட வீடியோ இங்கே.   


வீடியோ 20நிமி .
The United States and Turkey have agreed to a ceasefire in northeastern Syria, a week after President Donald Trump withdrew US troops from the Kurdish-held area and effectively cleared the way for a Turkish military operation against the KurdsBut the terms of the ceasefire, which Vice President Mike Pence announced Thursday after meeting with Turkish President Recep Tayyip Erdoğan in Ankara, are still unclear, as is how it will actually be implemented.
Turkey isn’t even calling it a ceasefire — it’s calling it a win. துருக்கி ஐந்து நாட்களுக்கு சிரியா மீதான தாக்குதலை நிறுத்திவைக்கச் சம்மதித்திருக்கிறது, இது மேலோட்டமாகச் சொல்லப்படுகிற செய்தி என்றாலும், எந்த அளவுக்கு உண்மை?    
This is a great day for civilization. I am proud of the United States for sticking by me in following a necessary, but somewhat unconventional, path. People have been trying to make this “Deal” for many years. Millions of lives will be saved. Congratulations to ALL!
11:43 PM · Oct 17, 2019    

டொனால்ட் ட்ரம்ப் வேறு எப்படிச் சொல்வாராம்?

ஆனால் பிபிசி தமிழ் செய்தி வேறுவிதமாக டிரம்பின் அரசியலுக்கு சிரியா முடிவுரை எழுதுமா?  என்று கேள்வியை எழுப்புகிறது. 

மீண்டும் சந்திப்போம். 

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! தலைப்புச் செய்திகளில் இருந்து!

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களோடு சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு தமிழக அரசு சென்னை விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுத்திருக்கிறது. இங்கே சீன அதிபரின் விஜயத்துக்கு இத்தனை ஆரவாரங்களோடு நேரலையில் ஒளிபரப்பு சுடச்சுட  செய்திகள் என ஊடகங்களும் சேனல்களும் முக்கியத்துவம் கொடுத்த அளவில் ஒரு சிறு பகுதியாவது  சீன ஊடகங்களோ அல்லது வேறு சர்வதேச ஊடகங்களோ கொடுத்திருக்கின்றனவா என்று நானும் தேடித்தேடிப் பார்த்ததில், என்ன ரிசல்ட் வந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
   
   
எந்த நேரத்தில் எதைப்பேசவேண்டும் என்கிற விவஸ்தையே இல்லாத உளறுவாயர்களின் கட்சி சோனியாG காங்கிரஸ் தான் என்பதை மனிஷ் திவாரி நேற்றைக்கு மிகவும் தெளிவாக நிரூபித்திருக்கிறார்.    ராஜீய உறவுகளில் சிக்கலை ஏற்படுத்துகிற விதத்தில் அவருடைய பேச்சும் ட்வீட்டர் சீண்டல்களும் இருந்தன.

Ye so right Sino - India is not Saas Bahu. That is why NDA/BJP Howdy Xi Jingping’s need to walk the talk AND speak up.
Quote Tweet
Smita Prakash
@smitaprakash
·
Maybe because it isn’t saas-bahu ladai. #justsaying twitter.com/manishtewari/s
19
92
406
All are blow hards in NDA/ BJP talk about taking POK& Gilgit-Baltistan back from Pak but none of them have gumption to say that we will take Askai- Chin back from the Chinese that was illegally ceded to it by Pakistan in 1963. Will raise return of Askai Chin with Xi ??
257
291
1.2K
Xi Jingping says he is watching Kashmir but why does @PMOIndia/MEA not say 1)We are watching Pro Democracy protests muzzled in Hong Kong. 2 )We are watching human rights violations in Xinjiang. 3 )We are watching continued oppression in Tibet 4 )We are watching South China Sea
1.5K
2.8K
9.5K
Warner’s remarks are important as he is the co-chair of the Senate India caucus and a staunch supporter of close US-India ties, who has.......
அக்சாய்  சின்  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பாகிஸ்தான், ஜின்ஜியாங் மாநிலத்தில் உய்கர் முஸ்லிம்கள் சீன அரசின் அடக்குமுறைக்கு ஆளானது எல்லாமே காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் தொடங்கியதுதான்! ஹாங்காங் விவகாரம் 2014இல் ஆரம்பித்தது என்பதால் அதைக்கூட விட்டுவிடலாம். காங்கிரஸ் ஆட்சி செய்தபோது என்ன செய்தார்களாம்? கேள்விகள் இன்னும்  நிறையக் கேட்கலாம்தான்! ஆனால் அவர்களுடைய அரசியல் இந்த அளவுக்கு கீழே இறங்கி விட்ட பிறகு ஒழிந்துபோ காங்கிரசே! என்று  இவர்களை மீண்டும் தலையெடுக்க விடாதபடி செய்வது ஒன்றுதான் சரியான அரசியல் செயல்பாடாக இருக்கும் என்பதற்குமேல் என்ன சொல்ல முடியும்?  


சீனாவுடன் கைகுலுக்குவது அல்லது முண்டாதட்டி சவால் விடுவது இதைச் செய்வதானாலும், முதலில் சீனா இன்றைக்கு ஆசியாவின் வஸ்தாதாக வளர்ந்த கதையைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? 

டேனி ரோட்ரிக் எழுதிய இந்த செய்தி அலசலில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இழுபறி பற்றியது தான்! ஆனாலும்  பலவிஷயங்கள் இந்திய சீன உறவுகளுக்கும் பொருந்தி வருவதாக இருக்கிறது.  கொஞ்சம் யோசித்துப் பார்க்க விரும்புகிறவர்களுக்காக. அமெரிக்காவுடன் ஒப்பீட்டளவில் சீனா எப்படி இன்று இருக்கிறதோ அதே மாதிரி சீனாவுடன் ஒப்பீட்டளவில் இந்தியா இன்று இருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு வாசிக்க வேண்டியிருக்கும். வீண்வேலை!    அதெல்லாம் நமக்கெதுக்கு என்றிருக்க நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கின்றன தொல்லைக்காட்சி சீரியல்கள்! 

என்ன சொல்கிறீர்கள்?

வெள்ளிக்கிழமைக் கேள்விகளாக இன்றைய தலைப்புச் செய்திகளில் இருந்து.  மீண்டும் சந்திப்போம்.