மம்தா பானெர்ஜி! கான் மார்க்கெட் #ஊடகவிபசாரம்

அமித் ஷா உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு வலுவான நியாயங்களும் எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானெர்ஜியின் அதீத மமதையும்  கிறுக்குத் தனமும்  எந்த அளவுக்கு முற்றிப்போய் இருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வரலாம்! மம்தா வீழ்ச்சியை சந்திக்க 2021 சட்டமன்றத் தேர்தல்கள் வரைகூடக் காத்திருக்கவேண்டாம் போலத் தான் தெரிகிறது.


தமிழக ஊடகங்களுடைய அராஜகமான திரிசமன் வேலைகள் இன்னும் ஓயவில்லை. அதிமுகவுக்கு மந்திரிசபையில் இடம் இல்லை என்பது உண்மையிலேயே இவர்களுடைய கவலையா என்ன? எதையாவது கொளுத்திப் போடவேண்டியது, அது         நமத்துப் போனதும் வெட்கமே இல்லாமல் இன்னொன்றைக் கொளுத்திப் போடவேண்டியது Presstitutes என்ற கேவலமான அடைமொழிக்குப் பொருத்தமானவர்கள்தான் இவர்கள்!


ஆனந்த விகடன் உட்பட இங்கே பெரும்பாலான ஊடகங்கள் யோக்கியதை இதுதான்! #ஊடகவிபசாரம் 

#தில்லி #லட்யன்ஸ் #கும்பல் - அறிமுகம், விளக்கம்
( துக்ளக் 5-6-2019 இதழின் தலையங்கத்திலிருந்து )
------------------------------------------
தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக் கட்டத்தில் நரேந்திர மோடி , - ' நான் டெல்லி கான் மார்க்கெட் கும்பல் ( Khan Market Gang ) உருவாக்கிய தலைவன் அல்ல ' என்று கூறியபோது , பலருக்கு - குறிப்பாக தமிழக மக்களுக்கு அதன் அர்த்தம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.
டெல்லியில் பத்திரிகைகள், அறிவு ஜீவிகள் , இடைத்தரகர்கள், தொழிலதிபர்களின் பிரதிநிதிகள், முன்னாள் அதிகாரிகளைக் கொண்ட ஒரு கூட்டம்தான் டெல்லியில் பழம் தின்று கொட்டை போடும் கான் மார்க்கெட் கும்பல் என்பது. இந்தக் கும்பலுக்கு 'லட்யன்ஸ் டெல்லி கும்பல் ' என்கிற அடைமொழியும் உண்டு.
புதுடெல்லியை உருவாக்கிய எட்வின் லட்யன் என்கிற ஆங்கிலேய கட்டிட வடிவமைப்பாளரின் பெயரை வைத்து, புதுடெல்லியை லட்யன் தில்லி என்று அழைக்கிறார்கள். அதுவே இந்தக் கும்பலுக்கும் அடைமொழிப் பெயராக இருக்கிறது. உலக மயமாக்கல் காலத்தில் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் , வெளிநாட்டு அரசுகளுக்கும் வக்காலத்து வாங்குபவர்களும் இந்தக் கும்பலில் இணைந்தனர்.
புதுடெல்லியின் மையத்தில் இருக்கும் கான் மார்க்கெட் உணவகங்களில் அமர்ந்து, மணிக்கணக்கில் அரட்டை அடித்து, அக்கப்போர் செய்து, உண்மையும் பொய்யும் கலந்த வதந்திகளைப் பரப்புவதில் நிபுணத்துவம் பெற்றது அந்தக் கும்பல். அது மத்திய அரசுக்கும் , பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் , ஏன் நீதிபதிகளுக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ கருத்துக்களை உருவாக்க வல்ல , செல்வாக்கும், அறிவுக்கூர்மையும் கொண்ட கூட்டம் அது.
அந்தக் கும்பல் அக்கப்போர்களையும், வதந்திகளையும் டெல்லியில் உருவாக்கி , அதை செய்தியாக மாற்றி , நாடு முழுதும் பரப்புவதற்கு , அதனுடன் இணைந்த பிரபல பத்திரிக்கையாளர்களை அது பயன்படுத்துகிறது. அவர்களை குஷிப்படுத்தாத யாரும் நிம்மதியாக இருக்க முடியாது.
பிரதமர்களும், அமைச்சர்களும் தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்கு அவர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். அவர்கள் சிபாரிசு செய்பவர்களையும் சந்திக்க வேண்டும். அதைக் கண்டு அஞ்சாத அரசோ, பிரதமரோ, அரசியல் கட்சியோ, தலைவரோ, அதிகாரியோ, ஏன் நீதிபதியோ கூடக் கிடையாது.
லட்யன்ஸ் கும்பலின் வாயில் புகாமல் இருக்கவே அனைவரும் முயற்சிப்பார்கள். இப்படிப்பட்ட வர்க்கத்தை அப்படியே ஓரம் கட்டினார் மோடி. அவர்களுக்கு இருந்த எல்லாச் சலுகைகளையும் நீக்கினார். பெரிய பத்திரிக்கையாளர்கள் கூட்டம் அரசாங்க செலவில் வெளிநாடுகளுக்கு சொகுசுப் பயணம் செல்வதை நிறுத்தினார். அவர்களை சந்திப்பதை அறவே தவிர்த்தார். அதனால் அவர்களின் மவுசு குறைந்தது. ஆத்திரம் அடைந்த அவர்கள் , மோடிக்கு எதிராக நாடு முழுவதும் செய்திகளை பரப்பினர்.
மோடியின் சாதனைகளை மறைத்து, அவரைப் பற்றி அவதூறு கூறி, அங்கும் இங்குமாக நடந்த சிறு சிறு நிகழ்வுகளை பெரிதுபடுத்தினர். நாட்டின் பன்முகத்தன்மை அழிக்கப்பட்டு, அதன் சகிப்புத்தன்மை குறைந்து, மக்களின் அடிப்படை உரிமைகள் பறிபோய் நாடே மாறிவிட்டது என்றெல்லாம் கூறி , மோடியின் ஐந்தாண்டு ஆட்சிக்காலம் முழுவதும் அவர்கள் அக்கப்போர் செய்து வந்தனர். வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களுடன் இணைந்து உலக அளவில் நாட்டையே தலைகுனிய வைத்தனர். அந்த லட்யன்ஸ் கும்பலைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள்தான் '2019 தேர்தலில் மோடி தோற்றுவிடுவார் ' என்கிற தோற்றத்தை நாடு முழுவதும் ஏற்படுத்தினர்.
எதிர்க்கட்சிகளும் அதை நம்பி , அப்படியே பகற்கனவு கண்டனர். முடிவில் , தோற்றது எதிர்கட்சிகள் மட்டுமல்ல, லட்யன்ஸ் கும்பலும்தான். 

இங்கே தமிழகத்திலும் ஒரு கும்பல் லட்யன்ஸ் கும்பல் மாதிரியே செயல்படுகிறது. கொட்டம் அடக்கப்பட  வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கிறதா? 


புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் எந்த ஊரு என்ன சாதி என்றெல்லாம் கேள்விகேட்டு ஒரு சர்ச்சையில் சிக்கினார். இதே மாதிரி சிலவாரங்கள் முன்பு அன்புமணி ராமதாசும், பிரேமலதா விஜய்காந்தும் சிலநிருபர்களுடைய விஷமத்தனமான கேள்விகளை எதிர் கொள்ள வேண்டிவந்தது நினைவிருக்கலாம். 
      உண்மையைத் திசைதிருப்பும் ஊடகங்களைக் கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது. 

மீண்டும் சந்திப்போம் 

#GoBackModi பலூன்கள் சாதித்தது என்ன? யோசித்துச் சொல்லுங்கள்!

இரண்டாவது முறையாக நரேந்திர மோடியின் தலைமையில் மத்தியில் அமைச்சரவை நேற்று  பதவியேற்றிருக்கிறது. சில குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள், பலருக்கு ஏமாற்றங்கள் என இந்தப் பதவியேற்பு விழா நடந்து முடிந்திருக்கிறது. தமிழக மக்கள் பிஜேபிக்கு வாக்களிக்காவிட்டாலும், இரண்டு தமிழர்கள், திருமதி நிர்மலா சீதாராமன், திரு D ஜெய்சங்கர் கேபினெட் அமைச்சர்களாகப் பதவியற்றிருக்கிறார்கள்  என்பதை இங்கே எவரும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இருவருக்குமே திருச்சிதான் பூர்வீகம். விகடன் தளம் கூட  `போச்சே.. போச்சே.. !' - ஓ.பி.ரவீந்திரநாத் ஒதுக்கப்பட்ட கதை என்று விஷமத்துடன் செய்தி வெளியிடுகிறதே தவிர கண்முன் தெரிகிற ஒன்றை, நிதர்சனத்தை மறைத்துத்தான் எழுதுகிறார்கள்.  


பிரதமர் உள்ளிட்டு 25 கேபினெட் அமைச்சர்கள், 24 ராஜாங்க அமைச்சர்கள்  மற்றும் 9 தனிப்பொறுப்புடன் ராஜாங்க அமைச்சர்கள் என்று 58 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்றிருக்கிறது என்பதில் முக்கியமாக  இந்திரா குடும்ப வாரிசு, சஞ்சய் காண்டியின் மனைவி மனேகா காண்டி பெயர் இடம்பெறவில்லை என்பதை நிறையப் பேர் கவனிக்கத் தவறியிருப்பார்கள். காண்டி வாரிசுகளுடைய தேவை காங்கிரசுக்கு இருக்கிறதோ இல்லையோ, பிஜேபிக்கு இனி தேவையில்லை என்றாகி இருப்பது என்பது  மிகவும் நல்ல விஷயம். 


இந்த விவாதம் கூட  புளித்துப்போன ராகுல் காண்டி ராஜினாமா பற்றித்தான் என்றாலும், இதுவரை விவாதங்களில் பங்கேற்பாளராக மட்டுமே பார்த்து வந்த பானு கோம்ஸ் இதில் விவாதக்களத்தை முன்னெடுக்கும் நெறியாளராகவும்! எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். 
  

உபிக்கள் தம்பட்டமடித்தபடி ஜூன் 3 அன்று முதல்வர் பதவியில் இசுடாலின் என்பது பொய்யாகிப்போனது என்பதில் ரொம்பவுமே அப்செட் ஆகியிருக்கிறவருக்கு இந்த நிகழ்ச்சி கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்குமா? 

#GoBackModi பலூன்கள் சாதித்தது என்ன? யோசித்துச் சொல்லுங்கள்!   

மீண்டும் சந்திப்போம்.

திமுகவுக்கு அழைப்பில்லை சரி! எதற்காகப் புலம்புகிறீர்கள்?

திமுக ஆதரவாளர்கள் தடுமாறுகிறார்கள்!  நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைப்பில்லையே என்கிற சிறு விஷயத்தை எப்படித் திசைமாற்றுவது என்று தவிக்கிறார்கள். #ModiGoback என்று கருப்பு பலூன் ஊதியவர்கள், ஐயோ மோடி அழைக்கவில்லை, தமிழ்நாட்டை அவமதித்துவிட்டார், தமிழ் நாடு புறக்கணிக்கப்படும் என்பதற்கான அறிகுறி என்றெல்லாம் புலம்பித்தவிப்பது, கேவலமாக இருக்கிறது.


அழைப்பு வந்திருந்தாலும் இசுடாலின் என்ன செய்திருப்பார்? திமுகவின் சார்பில் TR பாலு மற்றும் இன்னொருவர் கலந்து கொள்வார்கள் என்று திமுகதரப்பே செய்தி பரப்பியதே, அதற்கு என்ன சொல்வார் சுபவீ என்று பார்த்தால் செட்டியார் முழுப்பூசணியையும் வாதத்தால் மறைத்துப் பசப்புகிறார்.  

காத்திருந்து காத்திருந்து... ஸ்டாலின் `அப்செட்!'- பதவியேற்புக்கு மோடி அழைக்காததற்கு என்ன காரணம்? விகடன் என்னமோ புருடா விடுகிறதே! 

     

ஆந்திரா மாநிலத்தின் புதிய முதல்வராக ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸைச்சேர்ந்த ஜெகன்மோகன் ரெட்டி இன்று பதவி ஏற்கிறார். அவரது பதவி ஏற்புவிழாவில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்கிறது விகடன் தளச் செய்தி. ஆனால் இசுடாலினுடைய  நண்பர் சந்திரபாபு நாயுடு ஜெகன் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட அழைப்பை நிராகரித்து விட்டதாக செய்திகள் சொல்கின்றன.  


அரசியலில்மட்டுமல்ல பொதுவாகவே  மரியாதை என்பது கொடுத்து வாங்கப்படுவது, கேட்டு வாங்குவதல்ல என்பதை சுபவீ செட்டியார்களுக்குப் புரிய வைக்க முடியாதா என்ன? #Prayforsubavee 


முகநூல் ட்வீட்டர் எங்கு பார்த்தாலும் ஒரே நேசமணி புராணம்!
தமிழன் வீணாய்ப்போவதற்கென்றே வெட்டி அலம்பல்கள்! சுபவீ செட்டியார்கள் கடைதிறப்பதற்கு வேறென்ன வேண்டும்? சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம். 
 
    

ஒரு புதன்கிழமை! அரசியல்! #செய்திக்கலவை

அட போங்கப்பா! தற்போதைக்கு காங்கிரஸ் தலைவராக ராகுல் காண்டியே தொடர்வாராம்! அதுவும்  மூன்று  நான்கு மாதங்களுக்குள் இன்னொரு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரைதானாம்! சரியான போங்காட்டமாக இருக்கிறதே!  


காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை சீதாராம் கேசரியைத் தள்ளிவிட்டு சோனியா G ஏற்றுக் கொண்ட பிறகு 18 ஆண்டுகள் தன் வசம் வைத்துக் கொண்டிருந்து, பட்டத்து இளவரசர் ராகுலுக்கு முடிசூட்ட சரியான தருணம் பார்த்திருந்து இரண்டு வருடங்களுக்கு முன்னால் தான் ராகுல் காங்கிரஸ் தலைவரானார் என்ற கதை ஞாபகமிருந்தால் இந்த கார்டூன் என்ன சொல்லவருகிறது என்பதும் புரியும்! இருபது வருடங்களாக தலைமைப்பொறுப்புக்கு ஆள்தேட முடியாதவர்கள் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் தேடிக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று நம்ப நீங்களோ நானோ காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான் இல்லையே!

   
இந்த ராஜினாமா நாடகங்களுடைய யோக்கியதைதான் என்ன என்பதை இன்னொரு பழைய கார்டூன், RK லக்ஷ்மண் வரைந்த ஒன்றைப் பார்த்தாலேயே புரியும்.

   
இதோ என் ராஜினாமா! பரிசீலனைக்கு அனுப்பாதே! ராஜினாமா கொடுக்கப் பட்டது,  நிராகரிக்கப்பட்டது என்று file இல் போட்டுவிடு என்று இன்றைய நிலவரத்துக்கு அர்த்தப் படுத்திக் கொள்ளலாமா? 

நம்மூர் ஊடகங்களுடைய யோக்கியதை, ஒருபக்கச் சார்பு. பொய்களுக்கே முதலிடம் கொடுத்து ஊதிப்பெரிதாக்குவது இப்படியான அவலங்களை அம்பலப்படுத்துகிற ஒரு கேள்வி 


தமிழகத்தில் அதையும் பிஜேபி, H ராஜாதான் வந்து கேட்க வேண்டியிருக்கிறது. இதன் மீது உங்களுடைய அபிப்பிராயம் என்ன? கொஞ்சம் சொல்லுங்களேன்!

மனுஷ்ய புத்திரன் வாங்குகிற காசுக்கு மேலேயே 
கூவுகிற ரகம்! 

மார்க்சிஸ்ட்டுகளின் படுதோல்விக்குக் காரணம் என்ன?

மின்னம்பலம் தளத்தில் சேது ராமலிங்கம் கொஞ்சம் அரைகுறைத் தகவல்களோடு முக்கியமான ஒரு விஷயத்தை அலசியிருக்கிறார். மார்க்சிஸ்டுகள் நகர்ப்புற அளவிலானதாகச் சுருங்கிவிட்டனர் என்ற உண்மையை உரக்கச் சொல்லும் முதல் அலசல்  இது. இந்துதமிழ்திசையில் தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் அ.குமரேசன் இன்று எழுதியிருக்கிற கட்டுரை கூட இவ்வளவு உடைத்துச் சொல்லவில்லை.

மீண்டும் சந்திப்போம்.  
   

எல்லாப் புகழுமே இசுடாலினுக்குத்தானா? அட போங்கப்பா !

வெற்றிக்கு சொந்தம் கொண்டாட ஆயிரம் பேர் இருந்தாலும் தோல்விக்கு சொந்தம் கொண்டாட எவருமில்லை என்பதை 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அம்பலப்படுத்திய மாதிரி வேறெந்தத் தேர்தலிலாவது நடந்திருக்குமா என்பது சந்தேகமே! இடதுசாரிகளின் சரிவைப் பலமுறை இங்கேயும் இன்னொரு வலைப்பக்கத்தில் எழுதிவந்தாலும், நண்பர்கள் எவரும் இடதுசாரிகளைப் பொருட்படுத்தாத மாதிரியே அந்தப் பதிவுகளையும் பொருட்படுத்தாத மாதிரித்தான் தெரிகிறதோ?  


  
வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் இங்கே உரையாடுவதைக் கொஞ்சம் கேளுங்கள்! போராட்டங்களே வாழ்க்கை என்றிருந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஒருசிலர் சோறு கண்ட இடமே சொர்க்கம் என்று ஒதுங்கிய கதையை,
இடதுசாரி இயக்கம் சீரழிய ஆரம்பித்த விதத்தை ஒருவாறாக அனுமானிக்க முடிகிற ஒரு பேச்சு. ஏன் நல்லகண்ணு ஒருவர் தாண்டி இன்னொரு நல்ல இடதுசாரியை வலதுகம்யூனிஸ்ட் கட்சியில் காணமுடியவில்லை என்பதைக் கூட உங்களால் புரிந்துகொள்ள முடியலாம்! இசுடாலின் உபயத்தில் இரண்டு எம்பி சீட் ஜெயித்துவிட்ட பெருமிதத்தில், கம்யூனிஸ்டுகளால் சாதிக்க முடியாததை இசுடாலின் சாதித்துவிட்டார் என்கிறார் தா. பாண்டியன்! அப்படி என்ன சாதித்துவிட்டார் இசுடாலின்?

‪திமுகவின் வெற்றியால் எந்த பயனும் இல்லை என்று சொல்வது அரசியல் நிர்ணய சட்டத்திற்கும் ஜனநாயத்திற்கும் எதிரானது ‬
‪- கே. பாலகிருஷ்ணன் சிபிஎம் ‬

‪ஷோல்டரை இறக்குங்க தோழரே. இவ்வளவு பெரிய வெற்றியால எந்த பயனும் திமுகவுக்கு இல்லைனுதானே சொல்றோம்
இப்படியெல்லாம் எல்லாப்புகழும் இசுடாலினுக்கே என்று சொல்லிக் கொண்டிருப்பதாலோ என்னவோ ராகுல் காண்டி முருங்கை மரத்திலிருந்து இறங்க மறுக்கிறார் போல! மீண்டும் காங்கிரஸ் கமிட்டி கூடித்தான் பஞ்சாயத்தை முடிக்க வேண்டுமோ?! 

      

இன்றைய சிறந்த கருத்துக் படமாக 

மீண்டும் சந்திப்போம். 
     

மண்டேன்னா ஒண்ணு! அரசியல்! அஞ்சறைப்பெட்டி #4

தமிழ்நாட்டில் இதரஊடகங்கள்,  சேனல்களுக்கு கொஞ்சம்கூடக்  குறையாமல் வெறும் விவாத அக்கப்போர்களில் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா தளமும் போட்டி போட்டுக் கொண்டு விவாதங்கள் நடத்த ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமான போக்கா? அல்லது இது தான் தமிழகத்தின் தலைவிதியா? • கர்நாடகம், குஜராத், ஒரிசா, மே.வங்கம், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்கள் எல்லாம் இந்தி பேசும் மாநிலங்களா? கிணற்றுத் தவளை.
  Quote Tweet
  ·
  #BIGNEWS "இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே இந்தியா அல்ல; அனைத்து தேசிய இனங்களையும் மத்திய அரசு அரவணைத்துச் செல்ல வேண்டும்!" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ns7.tv | @mkstalin | #HindiStates | #CentralGovt | @PMOIndia
  11:25 PM · May 25, 2019 · Twitter for Android  

  இதற்கு H ராஜாவின் கமெண்ட், ஒருவிதத்தில் சரிதான்! ஆனால் ஸ்டாலின் பேச்சின் உள்ளர்த்தம் ஏதோ கொஞ்சம் ஜெயித்திருக்கிறோம்! ஆதரவு தேவை இல்லாவிட்டால் கூட, ஏதோ கொஞ்சம் பார்த்து அனுசரணையாகச் செய்யுங்கள் என்பதாக மட்டுமே இருக்கிறது. பழையபடி திமுக, அடைந்தால்  திராவிடநாடு இல்லையேல் இடுகாடு என்று முருங்கை மரம் ஏற ஆரம்பித்து விடவில்லை.
    
      
  தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பு என்கிற சிக்கலை எதிர்கொள்ளும் கட்சிகளின் தலைமைகள் அனைத்தும் ஒரே தந்திரத்தையே கையாள்கின்றன.
  ராகுல், மம்தா, மாயாவதி, கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு, லாலு, அகிலேஷ்,.. என்று மிக நீளமானது இந்த பட்டியல் .
  இந்தப் பக்கமிருந்து...கட்சியின் தலைமையாக .. தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா என்று பேசுவதும்...அந்தப் பக்கமிருந்து கட்சியின் உயர்மட்டக் குழுவின் தலைமையாக இருந்து ..தன் ராஜினாமாவை தானே நிராகரித்துவிடுவதுமாக ...நல்ல நகைச்சுவை.
  கூடுதல் நகைச்சுவையாக... கட்சியிலுள்ள பிற இரண்டாம் நிலை -மூன்றாம் நிலை அரசியல்வாதிகள்.. கட்சி தலைமை ராஜினாமா செய்தால்....தொண்டர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று தப்பித்து கொள்கிறார்கள். சம்பிரதாயமாகக் கூட...தாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று சொல்வதில்லை.
  சுருக்கமாக சொல்வதானால்..தலைமை பதவி வேறு யாருக்கும் கிடையாது. கட்சியின் இரண்டாம் நிலை அரசியல்வாதிக்கு தொண்டன் எப்படியோ..அது போல தான்..தலைமைக்கு ..இரண்டாம் நிலை அரசியல்வாதி!
  காங்கிரஸ், திரிணாமுல் கட்சிகளில் நடந்த ராஜினாமா நாடகங்களை இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே பார்த்து இருக்கிறோம்!  
  பித்தம் தெளிய மருந்தில்லையாம்! 

  இத்தனை பார்த்துவிட்டு உள்ளூர் காமெடி ஒன்றைப்  பார்க்க வேண்டாமா? வைகோ ஆதரவாளர்கள் போஸ்டர் ஒன்றை இப்படி மதுரையில் தெறிக்க விட்டிருப்பதாக!


  வைகோவின் ராசி எப்பூடி என்று கேட்கிறார்கள்! பாவம்! அதில் கூட ராசி முக்கியமில்லை என்று தான் சொல்ல முடிகிறதே தவிர வைகோ ராசியானவர்தான் என்று சொல்ல முடியவில்லையே! 

  மீண்டும் சந்திப்போம்.
       

  சண்டேன்னா மூணு! ராஜினாமா நாடகம் இரண்டு! ஓடமுயன்ற ராபர்ட்வாத்ரா!

  2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் உடனடி விளைவாக சோனியா காங்கிரஸ் கட்சிக்குள் நிறைய காமெடி சீன்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன! படுதோல்விக்காக ராகுல் காண்டி ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும் காரியகமிட்டி ஒருமனதாக அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாகவும் நேற்று அரங்கேறிய நாடகத்தை சுர்ஜீவாலா பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். 2014 இலும் கூட இதே மாதிரி ராகுல் ராஜினாமா செய்ய முன்வந்ததும், நிராகரிக்கப்பட்டதுமான காட்சி அரங்கேறியதே!

    
  காங்கிரசிலிருந்து பிரிந்தாலும்  திரிணாமுல் காங்கிரஸ் என்றே பெயர் வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டு வரும் மம்தா பானெர்ஜியும் கூட காங்கிரஸ் கட்சிமாதிரியே டிராமா ஒன்றை அரங்கேற்றியிருக்கிறார் என்பது இந்தத் தேர்தலின் புதுசு கண்ணா புதுசு ரகம்!  முதல்வர் பதவி வேண்டாமாம்! கட்சித்தலைவர் பதவியே போதுமாம்! மம்தா   பானெர்ஜி ஆங்கிலத்திலேயே சொல்கிறார். 


  மம்தா பானெர்ஜியின் ராஜினாமா நாடகத்தை பிஜேபி கேலிசெய்ததில் தவறிருப்பதாகத்  தெரியவில்லை. 

  ஆக காங்கிரஸ் என்ற வார்த்தைக்கு பிராக்டிகல் அர்த்தமாக ட்ராமா பார்ட்டி என்பது மட்டும் தானென்று  இந்தத்தேர்தலில் தெளிவாக நிரூபணம் ஆகியிருக்கிறதே! நாடகங்களைக் கவனிக்கிறீர்களா? 


  தோல்விக்கு சொந்தங்கள் இல்லை! மத்திய பிரதேச முதல்வர் பதவி தனக்கே கிடைக்குமென்று ஜோதிராதித்ய சிந்தியா நம்பிக்கொண்டிருந்தபோது கிழட்டுப் பெருச்சாளி கமல்நாத் இடையில் புகுந்து தட்டிப்பறித்துக் கொண்டார்! 2019 தோல்விகள் மறுபடியும் சிந்தியா தரப்பு கலகக் குரல் எழுப்ப வாய்ப்பளித்திருக்கிறது. ஆக கமல்நாத்தும் ராஜினாமா நாடகம் ஆடுகிறாரோ?    

  இது இப்படியென்றால் சோனியாவுக்கு வாய்த்த மணியான மாப்பிள்ளை ராபர்ட் வாத்ரா மட்டும் கேணத்தனத்தில் குறைந்தவரா என்ன?


  எக்சிட் கணிப்புகளில் காங்கிரஸ் பலத்த அடிவாங்குமென்ற செய்தி வந்ததுமே சோனியாவின் மணியான மாப்பிள்ளை தன் அரசியல் கனவுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு வெளிநாட்டுக்கு ஓட முயன்றாராம்! அதுவும் நீதிமன்ற அனுமதியுடன்!

  இதேமாதிரி இந்திரா 1977 தேர்தலில் படுதோல்வி அடைந்தவுடன் இன்று தியாகசிகரமாகச் வர்ணிக்கப் படுகிற சோனியா G  புருஷன் ராஜீவ், குழந்தைகள் எல்லோரையும் கூட்டிக் கொண்டு இத்தாலியிலேயே குடியேற விரும்பினார் என்ற வீர சரித்திரம் சொல்லப்பட்டதால் சிவப்புச் சேலைவாழ்க்கையே அதிகாரத்தின் விலை ( The Red Saree: When Life is The Price of Power)  என்ற புத்தகத்தையே இந்தியாவில் தடைசெய்தார்களே!

  சண்டேன்னா மூணு! சிவப்புச் சேலையைக் கண்டு மிரளும் காங்கிரஸ்!அப்புறம்....!  இங்கே முழுதாய்ப் படிக்கலாம். 


  மீண்டும் சந்திப்போம்.