இந்தத்தேர்தலில் அதிகம் இழக்கப் போகிறவர்கள்....!

கோரா தளத்தில் ஒருவாரம் முன்பு ராஜகோபாலன் K சூரியநாராயணன் என்பவர் இந்தக் கேள்விக்கு சுருக்கமாக விடையளித்திருந்ததைப் பார்த்தேன். அவருடைய கணிப்பின் படி, அதிக இழப்பைச் சந்திக்கப் போகிற கட்சிகள்......

முதலாவது இடத்தில், அரவிந்த் கேசரிவாலுவின்  ஆம் ஆத்மி கட்சி  

ஆம் ஆத்மி கட்சி இந்த நாடாளுமன்றத் தேர்தல்களில்  சுத்தமாகத் துடைத்தெறியப் படும் என்று மதிப்பிடுகிறார். கடந்த நான்காண்டுகளில் ஆம் ஆத்மி கட்சி வாக்காளர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. இந்தத் தேர்தலுடன் AAP கதை முடிந்துவிடும் என்கிறார். 

இரண்டாவதாக,         நார சந்திரபாபு நாயுடுவின் தெலுகு தேசக் கட்சி  


தன்னை ஹைடெக் முதல்வராக நினைத்துக் கொள்ளும் சந்திரபாபு நாயுடுவின் அரசியல் கணக்கெல்லாம் தப்பாகித் தோல்வியை சந்திக்கும் தேர்தல் இது. மாநிலத்தில் ஆட்சியை இழப்பதோடு, நாடாளுமன்றத்திலும் TDPயின் இடங்கள் கணிசமாகக் குறைகிற தேர்தலாகவும் இது இருக்கிறது.

மூன்றாவதாக மம்தா பானெர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 


மம்தா பானெர்ஜி இந்தத்தேர்தலில் ஆடிய ஆட்டத்தைப் போல   வேறெந்த மாநிலத்திலாவது நடந்திருக்குமா என்பது சந்தேகமே. ஆடினகால்கள் சலித்து விழுகிற தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கும் என்பதில் நானும் முழுக்க உடன்படுகிறேன்.

நான்காவதாக சோனியா Gயின்  காங்கிரஸ்


ஒப்பீட்டளவில் 2014 தேர்தலை விட காங்கிரசுக்கு இந்தத் தேர்தலில் கொஞ்சம் கூடுதல் சீட்டுகள் கிடைக்கலாம். 60 முதல் 70 சீட்டுகள் கிடைக்க வாய்ப்பிருந்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் எதிர்காலம் கேள்விக்குறிதான்!  காங்கிரசும் தன்னுடைய தேசிய அந்தஸ்தை இழந்து ஒரு சில மாநிலங்களில் மட்டுமே ஜீவிக்க முடிகிற மாநிலக்கட்சியாகி விட வேண்டியதுதான் என்கிறார்.

ஐந்தாவதாக, உதிரிக் கட்சிகள் 


சரத் பவாருடைய NCP, லல்லு பிரசாத் யாதவின் RJD உள்ளிட்ட நிறைய  உதிரிகள் ஏற்கெனெவே அவரவர் மாநிலங்களில் பலவீனப்பட்டுக் கிடக்கிறார்கள் என்பதால் இந்தத் தேர்தலில் அவர்களுடைய இழப்பு என்ன என்று ஆராயவில்லை என்று முடிக்கிறார்.

உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது?
    
       

13 comments:

  1. சரியான கணிப்பு என நினைக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. இதற்கான சரியான காரணங்கள், தரவுகளோடு சொல்லப்படவில்லை. கணிப்பு சரியா இல்லையா என்பது இன்னும் ஒரேவாரத்தில் தெரிந்துவிடும் பந்து! உதாரணத்துக்கு AAP தேர்தலோடு முடிந்துவிடும் என்ற கணிப்பு, எனக்கும் உடன்பாடு என்றாலும் காளான்கள் அவ்வளவு சீக்கிரமாக ஓய்ந்துவிடுவதில்லையே!

      Delete
  2. ம்ம்தா -சென்ற தேர்தலில் பெற்றதில் அதிக இழப்பு இருக்காது, காங்கிரஸ் 100க்குமேல் நிச்சயம் வரும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. மம்தாவுக்கு சென்ற முறை கிடைத்த அளவு நிச்சயமாக இந்தத் தேர்தலில் கிடைக்காது நெல்லை! அம்மணியின் அதிரடி ஆட்டங்களுக்கு அநேகமாக இந்தத் தேர்தலோடு முடிவுகட்டப்படும் என்றே நம்புகிறேன். அதற்காகவாவது பிஜேபி அங்கே அதிக சீட்டுகளில் ஜெயிக்க வேண்டுமென்று கூட விரும்புகிறேன்.

      Delete
  3. ADMK should be number one in the list

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். 37 சீட், தனியாளாக வாங்கித்தந்த ஜெ. இல்லாத தேர்தல்... அவருடைய எண்ணத்துக்கு மாறான கூட்டணி... அதுவும்தவிர, சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமே செய்திராத அதிமுக எம்பிக்கள் (திருச்சி சிவா-அதிமுக எம்பி குஜால் கதைகளைத் தவிர). ஒற்றை இலக்கமே வருமா என்பது சந்தேகம்.

      Delete
    2. ரஹிம் பாய்! பிளாக்கருக்குப் புதிது வரவேற்கிறேன். அதிமுக பட்டியலில் முதலாவதாக இருக்கவேண்டும் என்பது உங்கள் ஆசை போலவே எனக்குத் திமுக முற்றொட்டாக ஓய்க்கப்படவேண்டுமென்கிற ஆசை. நீங்களோ நானோ ஆசைப்படுவதாலேயே நடந்துவிடுமா சொல்லுங்கள்! இங்கே ராஜகோபாலன் வரிசைப் படுத்திய பட்டியலுக்கு அவர் சுருக்கமாகக் காரணங்கள் சொல்லியிருக்கிறார். உங்களுக்கு, அப்படியான காரணங்கள் அதிமுக மீது இருந்தால் அதைச் சொல்லுங்களேன்!

      Delete
    3. அதிமுக #ஜெ இல்லாமலேயே இரண்டு வருடங்களுக்கு மேலாகவே தாக்குப் பிடித்துவிட்டது நெல்லை! 37 எம்பிக்கள் ஒன்றும் செய்து கிழிக்கவில்லைதான்! ஆனால் இதே குற்றச்சாட்டை காங்கிரஸ் உள்ளிட்ட எல்லாக் கட்சிகள் மீதும் சொல்ல முடியும். இங்கே ஜனங்கள் அதிமுகவுக்கு விரும்பி ஒட்டுப் போட்டார்கள் என்பதை விட திமுகவைப் பிடிக்கவில்லை என்பதை பிரதானமாக நினைத்ததாலேயே அதிமுக 37சீட்டுகளை ஜெயித்தது என்பதை மறந்துவிட வேண்டாம்.

      Delete
    4. //திமுகவைப் பிடிக்கவில்லை என்பதை பிரதானமாக நினைத்ததாலேயே அதிமுக 37சீட்டுகளை ஜெயித்தது என்பதை மறந்துவிட வேண்டாம்.// - அப்படி இல்லை என்று நினைக்கிறேன். பெருவாரியான இஸ்லாமிய மற்றும் கிறித்துவர்களின் வாக்குகள் அதிமுகவுக்கு சேர்ந்ததனாலும், ஊழல் திமுக+காங்கிரஸ் வெறுப்பு நடுநிலை பொதுமக்கள் அதிமுக பக்கம் சேர்ந்ததனாலும்தான் அதிமுக கனவிலும் நினைக்கமுடியாத வெற்றியைப் பெற்றது. இந்த முறை அதே காரணத்தால், திமுக+காங்கிரஸ் வெற்றிபெறும் என்றே இன்னமும் நம்புகிறேன்.

      Delete
    5. /என்றே இன்னமும் நம்புகிறேன்.// - அதாவது இப்போ ஜெ. இருந்து, அதேபோல தனியாக நின்றிருந்தால், அதிமுக 25 சீட்டுகளாவது குறைந்த பட்சம் பெற்றிருக்கும் (ஆண்டி இன்கும்பன்சி வாக்குகள் போவதால்)

      Delete
  4. சரி.. பிஜேபிக்கு மட்டும் வெற்றி வாசல் சுலபமாகத் திறந்திருக்கிறதா?.. ஏன் இந்த நிலை?..

    தேர்தல்கள் முடிந்த நிலையில் காரணங்களை அடுக்குங்களேன்... வளர வேண்டிய இயக்கம். மூடி மறைப்பதால் எந்தப் பயனும் அந்த இயக்கத்திற்கு இல்லை.

    ReplyDelete
  5. என்னால் கணிக்கவே முடியவில்லை. அறிந்து கொள்ள 23 ஆம் தேதிக்காகக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்தத் தேர்தல் முடிவுகள் சில மாநில அளவிலான உதிரிக்கட்சிகளை ஒய்த்துவிடும் என்று ராஜகோபாலன் நம்புகிறார் என்பதைப்பதிவின் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தேனே ஸ்ரீராம்! முந்தைய பதிவுகளில்கூடத் தொடர்ச்சியாக இங்கே தமிழகத்திலும் விசிக மதியூக இடதுசாரிகள் பாமக முதலான உதிரிகளை முற்றொட்டாக நிராகரிக்கவேண்டும் என்று சொல்லி வந்திருக்கிறேனே!

      கணிப்பது அவ்வளவு கடினமான ஒன்று இல்லை.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!