Showing posts with label நம்பிக்கை. Show all posts
Showing posts with label நம்பிக்கை. Show all posts

மெய்ப் பொருள் காண்பதறிவு...!


Golden Drops of Light

Hidden in an earthly garment that survives,
I am the worldless being vast and free.
-Sri Aurobindo

March 1, 1914

“IT is in one’s own self that all the obstacles lie,

IT is in one’s own self that all the difficulties are found,

IT is in one’s own self that there is all the darkness and ignorance.

Were we to travel throughout the earth, were we to go and bury ourselves in some solitude, break with all our habits, lead the most ascetic life, yet if some bond of illusion held back our consciousness far from Thy absolute Consciousness, if some egoistic attachment cut us off from the integral communion with Thy divine Love, we would be no nearer Thee despite all outer circumstances.

Can any circumstances be considered more or less favorable? I doubt it; it is the idea we have about them which enables us to profit much or little by the lessons they give us.

O Lord, I implore Thee! Grant that I may be perfectly conscious and master of all that constitutes this personality, so that I may be delivered from myself and Thou alone mayst live and act through these multiple elements.


To live in Love, by Love, for Love, indissolubly united to Thy highest manifestation....


Always more light, more beauty, more truth!”

-The Mother
“Prayers and Meditations”

தமிழிலே ஒரே விஷயத்தை இரண்டு கோணங்களில் இருந்து எடுத்துச் சொல்லும்  அழகான முதுமொழிகள்  உண்டு:

"தீதும் நன்றும் பிறர் தர வாரா"
 

"எண்ணம் போல வாழ்வு"

நம்முடைய துயரம், வறுமை, நோய் முதலான எல்லாம் வெளியில் இருந்தே வருவதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். அது போலவே, மகிழ்ச்சி முதலானவையும் வெளியில் இருந்து வருவதாக எண்ணி மயங்கிக் கிடக்கிறோம். உண்மையில், சந்தோஷமோ, துக்கமோ வெளியில் இருந்து வருவதில்லை. தீது, நன்று எனப் பேதப்படுத்திப் பார்க்கிற எதுவும் நமக்கு வெளியிலிருந்து வருவதுமில்லை.

காளிப் பாட்டிலே பாரதி அருமையாகச் சொன்னான்:


"யாதுமாகி நின்றாய் காளி! எங்கும் நீ நிறைந்தாய்!
தீது நன்மை எல்லாம் நின்றன் செயல்களன்றி இல்லை!"


இதுவரை இவனுக்கு இந்த நுட்பம் ஏனோ தெரியாமலே போயிற்று.  தன்னைச் சுற்றி உள்ளவர்களுடைய குறைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தருணத்திலும், தன்னுடைய முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல, இவனது அகத்தில் இருந்த அழுக்குத் தான் பிறரிடத்தில் இவன் பார்த்துக் கொண்டிருந்தது என்பது புரியாமலேயே போயிற்று.


தன்னைச் சுற்றியிருக்கிற உலகத்தைப் புரட்சிகரமாக சீர்திருத்தம் செய்யப் போகிறேன் என்று கிளம்பிய இவனுக்கு  சீர்திருத்தம் என்பது முதலில் தன்னிடத்தில் இருந்து தான் தொடங்குகிறது என்பது ஏனோ புரியவே இல்லை. புரட்சி என்று பகட்டான வார்த்தையில் சொல்லப் படுவது, ஒவ்வொரு தனி மனிதனும் தன்னளவிலே நடத்திக் காட்ட வேண்டிய திருவுரு மாற்றம் என்பதோ, அப்படிப் பட்ட மாற்றம், வெறும் ஆவேசத்தினாலோ, வார்த்தை ஜாலங்களினாலோ, எதையோ ஒன்றை கரித்துக் கொட்டுவதாலோ, வெறுப்பை உமிழ்வதாலோ சண்டை, சச்சரவுகள், கலகங்கள், ரத்தக் களறிகளாலோ நிகழ்வதில்லை என்கிற உண்மையை ஒரு விதமாகப் புரிந்து கொள்ளவே  இவ்வளவு நாட்கள் ஆயிற்று.


உண்மையைத் தெரிந்து கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை. அதிகப் பகட்டோடு வரும் பொய்கள் திசை திருப்புவதில் மயங்குகிற போது, எது உண்மை என்பதைப் புரிந்துகொள்வதில் மயக்கம் வருவது இயற்கைதானே!


அனுபவ சாத்தியமாகிற வரைக்கும், உண்மை என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத் தானிருக்கும் என்பதும், நிறையவே பட்டும், சுட்டும் கொண்ட பிறகு தான் புலப்பட தொடங்கியது.

"குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை" என்பது நிதர்சனமாகத் தெரியத் தொடங்கின நேரத்தில், பழைய பழக்கங்களில் ஊறிப் போன பிடிமானமும், வெளிச் சூழ்நிலைகளும் சேர்ந்து,'மாறப் போகிறாயா என்ன? ஒன்ணும் காமெடி கீமடி பண்ணலையே" என்று வடிவேலு ரேஞ்சுக்கு ரேக்கி விட்டுப் போய்க் கொண்டிருப்பதையும், கொஞ்சம் தாமதமாகத்தான் புரிந்து கொள்ள முடிந்தது.


“Can any circumstances be considered more or less favorable? I doubt it; it is the idea we have about them which enables us to profit much or little by the lessons they give us.”

ஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய இந்த பிரார்த்தனையை மறுபடி படிக்கிற போது தான் சில வெளிச்சக் கீற்றுக்கள் இருண்ட மனத்தின் ஏதோ ஒரு மாற மறுக்கிற பகுதியின் மேல் விழுவதை உணர முடிகிறது. 


பத்து வருடங்களுக்கு முன்னால் என்னுடைய இடத்தை அடுத்த மனைக்காரர் ஆக்கிரமித்து,  அந்தப் பிரச்சினையின் தன்மை பரிமாணம் என்ன என்பதே இப்போது தான் வெளிப்படத் தொடங்கி இருக்கிறது. காசு பணம் இருந்தால் எதைவேண்டுமானாலும் செய்து விடலாம் என்ற துணிவோடு ஒரு குடும்பமும் , காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் ஒரு கும்பலும் சேர்ந்து கொண்டு கொக்கரிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பதற்றத்தைத் தவிர்க்க முடியவில்லை என்ற பலவீனம் ஒரு புறம், என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை ஒருபுறம், உதவமுன்வந்த சில மனிதர்களுமே கூட, ஒரு எல்லைக்கு மேல் எதையும் செய்ய முடியாமல் நின்று விடுவதையும், நியாயம் கேட்டு எடுத்திருக்கும் முயற்சிகள் ஒரு விதமான மந்தத் தன்மையோடு தொடர்வதையும் பார்த்த பிறகு,நம்பிக்கைக்கும் அவ நம்பிக்கைக்கும் இடையில் ஊசலாடுகிற என்னுடைய இயல்பை முதலில் சோதித்து, சரி செய்து கொண்டாக வேண்டியதை உணர்கிறேன்.





இந்தப் பிரச்சினை கூட, எனக்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துவதற்காகவே வந்திருக்கலாம். என்னை சோதனை செய்து கொள்ளவேண்டிய ஒன்றை நினைவு படுத்துவதற்காக வந்திருக்கலாம்.

"என்னை எனக்கறிவித்தருள் செய்து" என்று விநாயகர் அகவலில் அவ்வைக் கிழவி சொல்லி வைத்ததற்கும் ஒரு விசேஷமான பொருள் இருப்பதை ஒருவிதமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உனது திருவடிகளைச் சரண் அடைகிறேன்.


எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.

உனது ஒளியினால் இவனது அகமும், புறமும் நிறைவு செய்யப் படட்டும், உனது எல்லையற்ற கருணையினால், பழக்கங்களின் அடிமையாகவே இருக்கச் சோம்பிக்கிடக்கிற பகுதிகளும், உனது ஒளியினால் தூய்மை பெறட்டும்.

தடைகளை அகற்றுவாய் தாயே! த்ரிதேக சுத்தியை அருள்வாய்.

உனது சித்தப்படி இயங்குகிற கருவியாக இவனை ஏற்றுக் கொள்வாய் தாயே!


"உன்னை விட்டு ஒருபோதும் விலகி இருப்பதில்லை. ஏனென்றால் நானே நீ! நீயே நான்!" என்ற உறுதியை அளித்திருக்கிறாய்!



"Look for the inner causes of disharmony much more than the outer ones. It is the inside which governs the outside."

The Mother

Words of The Mother, Vol.II



ஸ்ரீ அரவிந்த அன்னையே! நீ கூட இருக்கிறாய் என்ற ஒரு நினைப்பே எவ்வளவு பெரிய வலிமையாக இருக்கிறது!! 





இரவு வரும் பகலும் வரும்! கிரகணமும் வரும்! தாயத்து விற்கும் நேரம்!


இப்பத்தான் டீ குடிக்கற கப்புல சுனாமி வருமா வராதான்னு ஒரு பதிவு போட்ட மாதிரி இருக்கு! அதுக்குள்ளேயே டீ குடிக்குற கப்புல மட்டுமல்ல,டீன்னு சொன்னாலே சுனாமி  வரலேன்னாலும் , வேற விதமான தோஷம்  வரும், தொந்தரவு வரும், பரிகாரம் பண்ணிக்க நான் சொல்றதை அப்படியே கவனமாக் கேட்டு உருப்போடுங்க, அப்பத்தான் உருப்படுவீங்கன்னு ஜெயா டிவியில ஒருத்தர், எம் வி அனந்த பத்மனாபாசாரியர்னு பேரு, சொல்ல ஆரம்பிச்சிருக்காரு! எத்தனைபேர் அதைப் பாத்தாங்க, கவனமா உருப்போட ஆரம்பிச்சிருக்காங்கன்னு எனக்குத் தெரியாது!

டீன்னு சொன்னாக்க உதடு ஒட்டாது, நாக்கு மேலண்ணத்துல  தான் ஓட்டும் சரி! இவர் இப்படி திடீர்னு பீலா உடறது ஏன்?

அடுத்து அடுத்துப் பதினைந்து நாட்களுக்குள்ளேயே இரண்டு கிரகணம் வந்து விட்டதாம்! போன பௌர்ணமிக்கு சந்திர கிரகணம், வருகிற பதினைந்தாம் தேதி சூரிய கிரகணம் வருகிறதாம்! போதாதா, பீதியைக் கிளப்ப!தாயத்து விற்பனை சூடு பிடிப்பது, இப்படிப் பயம் காட்டுவதில் தான்!



கிரகணங்கள், இயற்கையாக நிகழ்பவை. பூமியும் அதைச் சுற்றிவரும் சந்திரனும், சூரியனைச் சுற்றும் வட்டப்பாதையில் ஒரே நேர்க் கோட்டில் வருகிற தருணத்தில், இடையில் வரும்போது நிழல், பூமியிலோ சந்திரனிலோ விழுவதே கிரகணம் என்ற விந்தையாகச் சொல்லப் படுகிறது. எந்த ஒரு வருடத்தை எடுத்துக் கொண்டாலும், குறைந்தது நான்கு அல்லது  ஐந்து கிரகணங்கள் ஏற்படுவது சகஜம். பல, முழு அளவு இருப்பதில்லை, அல்லது நீடிக்கும் நேரம் வெகு குறைவாகத் தான் இருக்கும்!

சென்ற ஆண்டு ஜூலை இருபத்திரண்டாம் தேதி நிகழ்ந்த கிரகணம் தான் இந்த நூற்றாண்டிலேயே அதிக நேரம் நீடித்த கிரகணம்! அதனால் தானோ என்னவோ, சுனாமி வரப் போகிறது என்ற கூக்குரலும் நிறையவே கேட்டது.

இப்போது சுருதி மாறி  அடுத்தடுத்து இரண்டு கிரகணங்கள்! அதனால் இதை உருப்போடுங்கள் என்று தாயத்து விற்கிற வேலையும் ஆரம்பித்தாயிற்று!

நாசா (அமெரிக்க  விண்வெளி மையம்) வெளியிட்ட இந்த வீடியோவைப் பாருங்கள்! கிரகணத்தின் ஒவ்வொரு படிநிலையையும் கொஞ்சம் புரிந்து கொள்கிற மாதிரி! இடையில் இரண்டு கொக்கிகள் வேறு பக்கத்திற்கு வரச்சொல்லி விளம்பரமாக வரும்! சட்டை பண்ணாமல் பாருங்கள்!


வருகிற 15 ஆம் தேதி, நாளை மறுநாள் ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு அருகில் உள்ளவர்கள், இந்த வருடத்தின் முதல் நீண்ட சூரிய க்ராகனம்மான இதில், சூரியனை சந்திரன் மறைக்கும் போது, தீ வளையங்களாக சூரியன் தகதகப்பதைக் கண்டு களிக்கலாம்!


Rings of Fire! சூரியனின் தீ வளையங்கள்! அப்படி என்றால் என்ன?


பூமியில் இருந்து பார்க்கும்போது சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன. அப்படி வரும் போது சந்திரன் அளவில் சிறியதாக இருப்பதால், சூரியனை ஒரு அளவுக்குத்தான் மறைக்க முடிகிறது. வெளி விளிம்புகளில் சூரிய ஒளி தீப்பிழம்புகள் போலத் தகதகக்கிறது. இயற்கையின் அற்புதமான விந்தை, அங்கே கிரகணமாக நிகழ்கிறது! இந்த மாதிரி, இந்தியாவிலிருந்து பார்க்க முடிகிறமாதிரி, 22 நவம்பர் 1965 இல் நிகழ்ந்ததற்கு அப்புறம், இப்போது தான், சூரியனின் தீப்பிழம்பு வளையங்களைப் பார்க்கிற வாய்ப்பு, நாற்பத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னால்நடக்கிறது! 

இந்தியப் பெருங்கடல் பகுதியின் மீது விழும் இந்த கிரகண நிழல், அதிகபட்சமாக தெற்கே தனுஷ்கோடி மற்றும் பக்கத்தில் உள்ள இடங்களில், கிரகணம் பத்து நிமிடங்களுக்கு மேலாக நீடிக்கிறது. கிரகணத்தின்  மொத்த கால அளவு பதினோரு நிமிடம் எட்டு வினாடிகள். இந்த ஆண்டு ஏற்படும் கிரகணங்களில் , அதிக நேரம் நீடிப்பது இது தான் என்பதால், இதுவே இந்த ஆண்டின் மிகப் பெரிய கிரகணமாகவும் கால அளவில் சொல்லப் படுகிறது.



வடக்கே தில்லி, பக்கத்தில் உள்ள பகுதிகளில் இது பாதி நேரமாகத் தான் இருக்கிறது. முழு அளவிலான கிரகணமும்  அங்கே இல்லை.


காலை பத்துமணி நாற்பத்துநான்கு நிமிடங்களுக்குச் சந்திரனின் நிழல் ஆப்பிரிக்காவின் மீது படிய ஆரம்பித்து, அப்படியே  சாட், மத்திய ஆப்பிரிக்கா, காங்கோ,  உகாண்டா, கென்யா சோமாலியா என்று பரவி இந்தியப் பெருங்கடலில் படிக்கிறது. கிரகண பாதை அப்படியே இந்தியாவின் தென்கோடி, வங்காளதேசம், மியான்மார் என்று சீனா வரை விரிகிறது. இந்தப் பாதையின் மத்தியில், இந்தியாவிலும் வங்காளதேசத்திலும் ஓரளவேயான  கிரகணமாக பார்க்க முடியும்!

விஞ்ஞானத்தை வளக்கப் போறேண்டி! இது கலைவாணர் ஏன் எஸ் கிருஷ்ணன் நகைச்சுவையோடு, கொஞ்சம் சிந்திக்கவும் தூண்டுகிற விதத்தில் பாடிய பாட்டு!

அதோடு சரி! கிரகணம் வந்தாலும் சரி, பல்லி கத்தினாலும் சரி சில பேர் தாயத்து விற்க ஆரம்பித்து விடுகிறார்கள்! வேறு சிலபேர் ஜெபகோபுரங்கள் கட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்! பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் புத்தகம் விற்கிறார்கள்! என்றோ எதையோ தொட்டுப் பேசியது, இன்றைக்குப் பொருத்தமாக இருக்குமா அல்லது அறிவைத்தான்  வளர்க்குமா என்பதைப் பற்றிய சிந்தனை கூட இல்லை! இங்கே எவரும் எதையும் புதிதாக முயற்சிப்பதில்லை. பழைய விஷயங்களே, கல்லாக் கட்டப் போதுமானவையாய்இருக்கின்றன!

விஞ்ஞானம், தானே வளர்ந்தால் தான் உண்டு! அப்படித்தானே!
 

டிஸ்கி ஒன்று: வால்பையன் சுட்டிக் காட்டிய மாதிரி ப்ளாக்கர் நான் பதிவு எழுதுகிறேன், இதையும் அவர் சொல்கிற இடத்தில் சேர்த்துப் படிக்கவும்:-)) 





 

ஈயம், பித்தாளைக்குப் பேரீச்சம்பழம்! பிராண்ட், இமேஜ் என்றால் என்னாங்க?


ஒரு பொருள் அல்லது தயாரிப்பு, தேவையின் நிமித்தம் தொழில் தெரிந்த எவராலோ உருவாகிறது. ஆரம்ப நிலையில், எந்த விதமான நகாசு, ஜிகினா வேலையும் இல்லாமல், எளிமையாகத் தான் அந்தப் பொருள், அல்லது தயாரிப்பு இருக்கிறது.

அடுத்து, கொஞ்சம் விவரமான ஒருவரிடம், அதே பொருள் வந்து சேரும்போது, நகாசு, ஜிகினா வேலைகள் எல்லாம் சேர்ந்து கொள்கிறது.

அப்புறம் கலை தெரிந்தவர்களிடம், சுருக்கமாகக் கலைஞர்களிடம், அந்தப் பொருள் வந்து சேருகிறது.

அவர்களிடம் இருந்து, எம்பிஏ  மாதிரி மேலாண்மையைப் பாடமாகப் படிப்பவர்கள் கையில் அகப்பட்டுக் கொள்கிறது.

அப்புறம் ஒரு அரசு,  நிர்வாகம் அல்லது ஒரு நிர்வாகியிடம் சிக்கிக் கொண்டு, படாத பாடுபட்டு, ஒன்றுக்குமே ஆகாததாகப் போய் விடுகிறது.

ஊடகங்கள் பற்றிய இந்தப் பரிமாணத் தேய்மானத்தை, சேத் கோடின் தன்னுடைய பதிவில் மெல்லிய நகைச் சுவையோடு எழுதியிருக்கிறார். தொலைக் காட்சி  எப்படி, காமெராவைக் கையாள, ஒளிபரப்பத் தெரிந்தவர்களிடமிருந்து, 

எர்னி கோவாக் மாதிரி காமெடியன்கள், ராட்  ஸ்டெர்லிங் மாதிரி நிகழ்ச்சிகளை எழுதித் தயாரிப்பவர்கள் கைக்குப் போய், அப்புறம் சீரியல்களாக எடுத்துக்காசுபார்க்கும்  ஆசாமிகளிடம் போய்க் கடைசியில், இதுவும் ஒரு பிழைப்பு என்ற அளவுக்கு வந்து நிற்கிறது என்று சேத் கோடின் சொல்வதை உள்ளூர் நிலவரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மெகா சீரியல்களாக அழுது ஒப்பாரி வைப்பதையே பிழைப்பாகக் கொண்டு இங்கே சானல்களும், அதை எபிசோட் தவறாமல் பார்த்து மூக்கைச் சிந்தும் தாய்க் குலங்களுமாக...!

....ம்ம்மம்ஹூம்! சிரிக்க முடியவில்லை! நம்மூர் தொலைக்காட்சிகள், நிகழ்ச்சிகளைப் பற்றி ஒன்று அல்லது இரண்டு  வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் "மொக்கை"  "மரண மொக்கை"  ரகம் தான்! பார்ப்பவர்கள் எல்லோருமே அடி முட்டாள்கள் என்ற நினைப்பில் தான் நிகழ்ச்சிகளையே தயாரிக்கிறார்கள்! அவர்களுடைய நம்பிக்கையைப் பார்ப்பவர்களுமே, தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்!

என்ன செய்ய?!

ஒரே வார்த்தை சொல்லுங்கள்! ஓகோவென்று வாழுங்கள் என்று இதற்கு ஒரே  வரியில் தீர்வு சொல்ல வேண்டுமென்றால்..நோ டிவி! நோ மெகா சீரியல் என்று இருந்துவிடுவதுதான்!

ஒரு ப்ராண்ட் என்பது என்ன என்பதை இங்கே கொஞ்சம் பார்த்திருக்கிறோம்!

ஒரே மாதிரியான தயாரிப்புக்கள் தான்! தங்களை வித்தியாசப் படுத்திக் கொள்வதற்காக, ஒரு முத்திரையை தாங்கி வருவதே ப்ராண்ட் என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிடலாம்!

ஆனால் ப்ராண்ட் என்பது, அந்த மாதிரியான, பொத்தாம் பொது ஸ்டேஜை எல்லாம் தாண்டி, ஒரு வலிமையான சக்தி, செய்தி, வாக்குறுதியைத் தருவதாக உருமாற்றம் பெற்று நீண்ட நாட்களாகி விட்டது. MBA பட்டம் பெற்று, மார்கெடிங் துறையில் இருக்கும் ஒரு பதிவர், ப்ராண்ட் பற்றிப் பதிவுகள் எழுதிக் கொண்டிருந்ததைப் படித்த போது, இந்த தலைப்பில் பேச வேண்டியது இன்னமும் இருக்கிறது என்று தோன்றுகிறது!

கூகுளில் define: brand என்று தேடிப்பாருங்கள்! எத்தனை எத்தனை தேடல் முடிவுகள்!

ஆரம்ப நாட்களில், தன்னுடைய பொருளைப் பற்றி, அதன் தயாரிப்பாளர் அளந்து விடுவது தான் ப்ராண்ட் என்று இருந்தது உண்மை! தன்னுடைய தயாரிப்பை, வாடிக்கையாளர் எப்படிபார்க்க  வேண்டும் என்று தூண்டுகிற மாதிரி மறைமுகமாக மூளைச் சலவை செய்கிற மாதிரி?) சொல்வது மிகப் பழைய  முறை! ஒரு காலத்தில், ஒரு சோப் விளம்பரம், சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப் என்றே அறிமுகப் படுத்தப் பட்டது.

தன்னுடைய குரல்வளத்தால் தமிழ்நாட்டு ரசிகர்களை, அந்த நாட்களில் கட்டிப் போட்டிருந்த  எம் கே தியாகராஜா பாகவதர், வாசனைத்திரவியங்களுக்காகச் செலவழித்த தொகை, தன்னுடைய ப்ராண்டாகக் குரலை விட, வாசனையையே நம்பியிருந்ததாகச் சொல்லக் கேள்வி! இமேஜ்! ப்ராண்ட்! என்ன பாடு படுத்துகிறது?!

இப்போது கூட, ஒரு வாசனை ஸ்ப்ரே விளம்பரம், அதை உபயோகித்தால், வாசனையில் மயங்கி அத்தனை பெண்களும் மேலே விழுந்து மொய்ப்பார்கள் என்ற முட்டாள்தனமான கற்பனையை விதைப்பதாக ...!

முத்தாலிக் மாதிரிக் கலாசாரக் காவலர்களுக்கு பிங்க் கலர் ஜட்டியை அனுப்பிய ரசிகர்களும், பெண்ணீயம் பேசுபவர்களும் சும்மாத்தானே இருக்கிறார்கள்?

ஆக ஒரு ப்ராண்ட், தன்னிடமில்லாத ஒன்றை  இருப்பதுபோல பாவலா காட்டுவது நீண்ட நாட்கள் எடுபடாது என்பதை, சந்தையில் உருவான போட்டிகளே தீர்மானித்தன. போட்டியில் ஏற்பட்ட அடுத்த நல்ல விஷயம், ப்ராண்ட் என்பது தரத்தைச் சொல்வதாகவும் இருக்க வேண்டும் என்றாகிப் போனது!

தரமே இல்லாமல், வெறும் விளம்பரங்களிலேயே ஓட்டிவிடலாம் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை, நிறையவே சமீபகால சந்தைப் பொருளாதாரம்காட்டிவருகிறது.


பயன் படுத்துபவர் பார்வையில் இருந்து ப்ராண்ட் என்பது, தன்னை நாணயமான முறையில் அறிமுகப் படுத்திக் கொள்வது என்பதில்  ஆரம்பித்து-------


இன்றைய நிலையில், ப்ராண்ட் என்பது, ஒரு பொருளின், அதன் தயாரிப்பாளரின், ஒரு ஸ்தாபனத்தின், அப்புறம் அதைப் பயன்படுத்துகிறவரின் அடிப்படைப் பண்பு எத்தகையது என்பதன் அளவீடாக இருக்கிறது. எங்கே இருந்தோம், எங்கே போகிறோம் என்பதன் வெளிப்பாடாகவும் மாறி வருகிறது.

ப்ராண்ட் என்பது ஏமாந்தவன் தொடையில் கயிறு திரிக்கிற விஷயமல்ல!
 
ப்ராண்ட் என்பது தரத்தின் வெளிப்பாடு! தொடர்ந்து உறுதிப் படுத்தும் அடையாளம்!
 
ப்ராண்ட் என்பது, தவறான சித்திரத்தையோ, பொய்யான வாக்குறுதியையோ அளிப்பதுமல்ல.
 
ப்ராண்ட் என்பது, பயன்படுத்துபவருடைய  நம்பிக்கை! அதைக் காப்பாற்றும் தயாரிப்பாளரின் உத்தரவாதம்!
 
ப்ராண்ட் என்பது நேற்றைய காலத்தின் அடையாளமாக நின்று விடுவது அல்ல! நாளை வரும் நாட்களிலும் நிலைத்து நிற்பது!

அறியாமையும், இருளும் கூடிய தொடக்கத்தில் நம்பிக்கை ஒன்றே துணையாக!



ஃபிளெமிங், ஒரு ஏழை விவசாயி! ஸ்காட்லாந்து பகுதியில் டார்வேல் என்ற கிராமப் பகுதி, அன்றாட ஜீவனத்திற்கே மிகவும் கஷ்டம்!

ஒரு நாள்  யாரோ, அபாயத்தில் சிக்கி உதவி கேட்டுக் கூச்சலிடுவது கேட்டது.

போய்ப் பார்த்தபோது, ஒரு இளைஞன், புதைசகதியில் இடுப்பளவு சிக்கி, வெளியே வர முடியாமல் பயத்தோடு கத்தித்  தவித்துக் கொண்டிருந்ததை  அந்த  விவசாயி பார்த்தார். புதை சகதியில் இருந்து அந்த இளைஞனை மெல்ல விடுவித்து, தேற்றினார். அந்த விவசாயி, சரியான நேரத்தில் உதவிக்கு வராமல் இருந்திருந்தால், அந்த இளைஞன் கத்தி கத்தியே, பயம் பாதி சகதிக்குள் முழுகுவது மீதி என்று கதை முடிந்திருக்கும்.

மறுநாள், அந்த விவசாயியைத் தேடி, வண்ணச் சாரட் வண்டியில், ஒரு பெருந்தனக்காரர் வந்திறங்கினார். " என் பெயர் ரண்டால் ஃப் ! நேற்று நீங்கள் காப்பாற்றிய இளைஞன், என் மகன்!  அவனுடைய உயிரைக் காப்பாற்றியதற்காக என்னுடைய நன்றியைத் தெரிவித்துப் போக வந்தேன், உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்! என்னிடம் இருப்பதைத் தருகிறேன்." என்று தழுதழுத்தார்.

ஸ்காட்லாந்து மக்களே கொஞ்சம் பெருமிதமும், சுயகௌரவமும் பார்க்கிற  மக்கள். ஒரு உயிரைக் காப்பாற்றுவது மனிதனுடைய கடமை!  ஆபத்தில் இருப்பவன் எதிரியே ஆனாலும் காப்பாற்ற வேண்டும், அப்படியிருக்க செய்த உதவிக்குக் கைம்மாறு எதிர்பார்ப்பதா? அந்த விவசாயி, பணிவோடு பெருந்தனக்காரருடைய  உதவியை மறுத்தார். அந்த நேரம் ஒரு சின்னப்பையன்,   ஃபிளெமிங்குடைய மகன், அங்கே வந்தான்.  விவசாயி, அவனைத் தன்னுடைய மகன் என்று அறிமுகம் செய்து வைத்தார்.பிரபு அவனைப் பார்த்துவிட்டுச் சொன்னார்.

"இதையாவது கேளுங்கள்! இவனை நான் அழைத்துப் போகிறேன், நன்றாகப் படிக்க வைக்கிறேன்!  உங்களுடைய நல்ல குணம் இவனிடம் இருக்குமானால், நீங்களே பார்த்துப் பெருமிதப்படுகிற மாபெரும் மனிதனாக இவன் வருவான்!"


அதே மாதிரி, அந்தச் சிறுவன், லண்டனில் இருந்த பிரபுவோடு அனுப்பப் பட்டான். லண்டனில், செயிட் மேரி மருத்துவப் பள்ளியில் படித்துப் பெரிய மருத்துவராகவும், கண்டுபிடிப்பாளராகவும் உயர்ந்தான். பின்னால் சர் அலெக்சாண்டர்  ஃபிளெமிங் என்று உலகம் முழுக்க அறியப்பட்ட மருத்துவர். பெனிசிலின் தடுப்பு  மருந்தைக் கண்டுபிடித்தவர்.

ரண்டால் ஃப் பிரபுவின் மகன்,  முன்னால் ஸ்காட்லாந்து விவசாயியால் புதை சகதியில் இருந்து காப்பற்றப் பட்டவன், நிமோனியா காய்ச்சல் வந்து அவதிப்பட்டபோது, காப்பாற்றியது பெனிசிலின் தடுப்பு மருந்தால் தான்!

அப்படி, தகப்பன், மகன் இருவராலும் இரு வேறு தருணங்களில் காப்பாற்றப்பட்ட அந்த இளைஞனின் பெயர் வின்ஸ்டன் சர்ச்சில்! பின்னாட்களில் இங்கிலாந்துப் பிரதமராகவும் பதவி வகித்த, அதே வின்ஸ்டன் சர்ச்சில்!

சர் அலெக்சாண்டர்  ஃபிளெமிங் நோய்த் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கத் தீவீரமாகப் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோதிலும், பெனிசிலின் கண்டுபிடிக்கப் பட்ட விதம்,  ஒரு தற்செயலான தருணத்தில் தான்! கிருமிகளால் ஏற்படும் நோய்கள், மரணத்திற்கு எதிராக மருந்தே இல்லை என்ற நிலையை மாற்றப் பிறந்த முதல் ஆண்டிபயாடிக் மருந்து  பெனிசிலின்! நடந்தது 1928 ஆம் ஆண்டு! அடுத்த ஆண்டில்,   ஃபிளெமிங் முழுமையான ஆராய்ச்சிக் குறிப்புக்களை வெளியிட்டார்,

ஒரு சிக்கலான தருணத்தில் தான் அதற்குத் தீர்வும் பிறந்தது!.

அதற்கும் பதினான்கு  ஆண்டுகளுக்கு முன்னால், அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சியாளனுடைய அத்தனை உபகரணங்களும், குறிப்புக்களும் தீயில் கருகிச் சாம்பலாயின. மறுநாள், அந்த அழிவைப் பார்த்து விட்டு, அந்த மனிதர் சொன்னார்,

"இந்த அழிவிலும் பெரிய வரம் இருக்கிறது. நம்முடைய எல்லா முட்டாள்தனங்களும் அழிக்கப் பட்டு விட்டன! ஆண்டவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, இனிமேல் நாம் புதிதாகத் தொடங்கலாம்!"

அதற்கடுத்த மூன்றாவது வாரம், அந்த கண்டுபிடிப்பாளர்,  தனது புதிய கண்டுபிடிப்பான  போனோக்ரா ஃப் (கிராமபோன்)-ஐ அறிமுகம் செய்தார்! அந்த விந்தை மனிதரின் பெயர் தாமஸ் ஆல்வா எடிசன்!


வெற்றி, சாதனை என்பதெல்லாம், பேரிடர், சோதனை, சிக்கல்கள்   என்பதில் இருந்து தான் பிறக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா?

இளம் பருவ சர்ச்சில், இன்னும் சிறிது நேரம் கவனிக்கப் படாமல் இருந்தால், முக்கிப் போயிருக்க வேண்டியது. பயம் ஆட்டிப் படைத்த நேரத்திலுமே கூட உதவி கோரிக் கூச்சல் எழுப்புவது ஒன்று தான் அந்த நேரத்தில் செய்ய முடிந்தது. அதைச் செய்தபோது, யாரோ ஒருவரது கவனத்தை ஈர்க்கவே வந்து காப்பாற்றுகிறார்.

அதே மாதிரி, பாக்டீரியாக்களால், நோயாளிகள் மரணமடைந்து கொண்டிருந்த நேரம், காரணம் என்ன என்பது புரிகிறது, ஆனால், மருந்து என்ன என்பது தெரியவில்லை! அதே சிந்தனையாக இருந்த  ஃபிளெமிங் கண்ணில், கிருமிகள்  இருந்த தகட்டில் ற்செயலாக, பூசனம் பிடித்த  ஒரு தகட்டில் இருந்த ஒரு விஷயம், கிருமிகளை அறவே காலி செய்து விட்டது படுகிறது. ஆக, இந்த நுண்ணுயிர்க் கொல்லியாக ஒன்று இருக்க முடியும், மருந்தாகப் பயன்பட முடியும் என்பது தெரிய வருகிறது. அடுத்தடுத்த சோதனைகளில் உறுதிப் படுகிறது.

விபத்து எதிர்பாராமல் நடப்பது! அது விளைவிக்கும் சேதமும் கூட அப்படித்தான்!

ஆனால் ஒரு மனிதர், தான் அது வரை மேற்கொண்ட ஆராய்ச்சியில் உருவாக்கிய விஷயங்கள், குறிப்புக்கள் எல்லாமே எதிர்பாராத தீ விபத்தில் மொத்தமாகப் பறி கொடுத்த தருணத்திலும் கூடக் கலங்கவில்லை.
எல்லா முட்டாள்தனங்களும் தடையமே இல்லாமல் ஒழிந்தன என்று சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார். இனிமேல் புதிதாகத் தொடங்கலாம் என்று சந்தோஷப் பட்டுக் கொள்கிறார்! அவர் சந்தோஷப் பட்டுக் கொண்ட மாதிரியே, நூற்றுக்கணக்கான கண்டுபிடிப்புக்கள் தொடர்ந்துவருகின்றன.  


இதே மாதிரித் தான், மின்சாரத்தினால் எரியும் (ஒளிர்விடும்) பல்ப் ஒன்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், தாமஸ் ஆல்வா எடிசன் தொடர்ச்சியாகத் தோல்வியையே சந்தித்துக் கொண்டிருந்தார். தோல்வி மாதிரியே முயற்சியும் தொடர்ந்தது. வெவ்வேறு விதமான இழைகள், அதில் கடைசியாக ஜப்பானிய மூங்கிலில் இருந்து தயார் செய்யப்பட இழைகளும் அடங்கும்! கடைசியாக டங்க்ஸ்டன் உலோக இழை பொருத்தமாக இருப்பது கண்டறியப்பட்டது. இன்றைக்கும் உலகம் முழுவதும் டங்க்ஸ்டன் இழை கொண்ட குண்டு பல்ப் புழக்கத்தில் இருக்கிறது. இப்போது கூட, உங்களால் ஒரு சிறந்த பல்பை உருவாக்க முடியுமானால், உங்களுக்கு ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் பரிசாகக் காத்திருக்கிறது! ரீல் அல்ல! நிஜம் தான்!

சோதனை முடிவுகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான தோல்விகளை, எடிசன் எடுத்துக் கொண்ட விதமே அலாதி! " ஒரு விஷயத்தை எப்படியெல்லாம் செய்யக் கூடாது என்பதைப் பத்தாயிரம் முறைகளில் இருந்து கற்றுக் கொண்டேன்!"


இங்கே துணுக்குகளாகப் பேசப்பட்டசம்பவங்கள் சொல்வது என்ன?

தோல்வியே வெற்றிக்கு அடிப்படை! அடுத்த படிக்கட்டு!

அதான் எனக்குத் தெரியுமே என்று "அறிவாளி" திரைப்படத்தில் முத்துலட்சுமி திரும்பத் திரும்பச் சொல்லி, டணால் தங்கவேலுவை வெறுப்பேற்றுகிற காமெடியாக மட்டும் பார்த்துவிட்டுப் போய்விடுவதால் எதையும் தெரிந்துகொள்ள முடிவது இல்லை.

வாழ்க்கையில் எதிர் கொள்ளும் ஒவ்வொரு சம்பவத்தையும் நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் மட்டுமே அதன் வெற்றியோ, தோல்வியோ தீர்மானிக்கப் படுகிறது.

இன்றைக்குப் பொருளாதார மந்தம், ஒரு பக்கம் வளர்ச்சி என்பது, மற்ற விஷயங்களை வெகு பள்ளத்தில் தள்ளிவிடுவதாக ஆக்கிக் கொண்டிருக்கும் ஒழுங்கு முறை எதுவுமில்லாத போக்கு, வேலைவாய்ப்புக்கள் சுருங்கிக் கொண்டே போவது, எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் இப்படி ஏராளமானவற்றை ஒவ்வொருவரும் எதோ ஒரு விதத்தில் சந்தித்தாக வேண்டியிருக்கிறது. பார்க்கும் விஷயங்கள், அத்தனையுமே மன நிறைவைத் தருவதாக இல்லை. பல விஷயங்கள் மன நிம்மதியைக் குலைப்பது போலத் தான் இருக்கின்றன.

அதனால் என்ன? நமக்குப் பிடித்தமான விளையாட்டில், ஆர்வத்தோடு பங்குபெறும் பொது, இப்படி எதிர்மறையான விஷயங்களைப் பற்றி யோசிக்கிறோமா? அங்கே நம்முடைய  அடுத்த மூவ் என்னவாக இருக்க வேண்டும் என்பதிலும், அதைச் செயல்படுத்துவதில் மட்டுமே கவனத்தை வைத்திருக்கிறோம் அல்லவா!

அதே மாதிரித் தான், எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினையும், சோதனையும், தன்னுள் ஏராளமான வாய்ப்புக்களைச் சுமந்து கொண்டு தான் வருகிறது என்பதைப் புரிந்து கொண்டாலே, வருகிற வாய்ப்புக்களைத் தவறவிடக் கூடாது என்பதில் மட்டுமே நம்முடைய கவனம் இருக்கும்.

இரண்டாவது உலகப் போருக்குப் பின்னால், மிகப் பெரிய அழிவை ஜப்பான் சந்தித்தது. அணுகுண்டு வீசப்பட்டது மட்டுமல்ல, அவர்களுடைய தேசீயப் பெருமிதமே பெரும் சரிவைச் சந்தித்தது. தன்னை விடப் பெரிய வஸ்தாத் எவனுமில்லை என்று இறுமாப்போடு அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்த ஒருவன், அவனுடைய  ஆணவத்தின் மீது, பெருமிதத்தின் மீது விழுகிற அடி மாதிரிக் கொடுமையான அனுபவம், பிரச்சினை வேறு ஒன்று இருக்க முடியுமா?

ஜப்பானிய மக்கள் துவண்டு விடவில்லை. தங்களுக்கு விழுந்த அடியை, வலியை ஏற்றுக் கொண்டார்கள். அழிவில் இருந்து மீண்டு வருவதற்கு உறுதி கொண்டார்கள்


அடித்துத் துவம்சம் செய்து விட்டு அப்புறம் தடவிக் கொடுப்பது போலப் பொருளாதார உதவிகளை, அமெரிக்கா செய்தது. உற்பத்தி செய்யப் படும் பொருட்களை வாங்கிக் கொள்ளக் கதவைத் திறந்தது.

ஆனால், ஆரம்ப காலங்களில் மேற்கத்திய மக்களுடைய விருப்பங்கள், தேவைகள் என்ன என்பது, அவர்களுடைய ஆங்கில மொழி போலவே, ஜப்பானியர்களுக்குப் புரியவில்லை. தயாரித்து விற்பனை செய்த பொருட்கள் எல்லாம், தரக் குறைவாக, கேலிக்குரியவைகளாக இருந்தன.  

ஜப்பானிய மக்கள், அந்த ஏளனத்தையும் சகித்துக் கொண்டார்கள். சகித்துக் கொண்ட விதம், வேறு வழியில்லை என்ற விரக்தியின் வெளிப்பாடாக இல்லை! தம்முடைய குறைகள் என்ன என்பதை, பதறாமல் சிந்தித்தார்கள். தயாரிப்பதில் ஏற்டும் குறைகள் என்ன என்பதை, தயாரிக்கப் படும் கட்டத்திலேயே கண்டுபிடித்து அங்கேயே சரி செய்தது மட்டுமல்ல, முன்னை விட இன்னும் அதிகம் பயனுள்ளதாக, ஒரு வளர் நிலை மாற்றத்தை, இயல்பான பண்பாடாகவே வளர்த்துக் கொண்டார்கள். ஜப்பானியத் தயாரிப்பு என்றாலே தரம் மிகுந்தது என்ற உத்தரவாதத்தை, மிகக் குறைந்த காலத்திலேயே சாதித்துக் காட்டினார்கள்.


இங்கே நாம் பார்க்க வேண்டிய முக்கியமான அம்சம், என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியாமல் நம்மைத் திகைக்க வைக்கிற, முடக்கிப் போட்டுவிடுகிற சூழ்நிலைகள் அவ்வப்போது வந்துகொண்டே தான் இருக்கும்! 2012  இல் உலகம் அழிந்து விடப் போகிறது  என்று ஒரு கற்பனை உலவிக் கொண்டிருக்கிறது அல்லவா, அதே மாதிரி! கொஞ்சம் நிதானித்துப் பார்த்தீர்களேயானால், இதற்கு முன்னாலும் கூட இதே மாதிரி அச்சம், பீதி ஏதோ வடிவத்தில் கிளப்பி விடப்பட்டுக் கடைசியில்  ஒன்றுமே இல்லாமல் போயிருப்பதைப் பார்க்க முடியும்! 


இத்தனைக்கும் ஆதார சுருதியாக இருப்பது நம்பிக்கை! நம்மால் முடியும் என்கிற தன்னம்பிக்கை! கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது என்றோ எவனோ வேலையில்லாமல் எழுதி வைத்துப் போனதல்ல, கூடி வாழும்போது மட்டுமே மனிதர்களால் உன்னதமான தருணங்களை எட்டிப் பிடிக்க முடிகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிவது தான்!



நானும் நீங்களும் வேறுபட்டுத் தனித்தனியாக நிற்பதற்கு தனித்தனியாக ஆயிரம் ஆயிரம் காரணங்களைச் சொல்ல முடிகிற போது, நாம் ஏன் ஒன்றாக இருக்கமுடியாது என்பதற்கு ஒரே ஒரு காரணத்தையாவது கண்டுபிடிக்க முடியாதா என்ன! வேறுபாடுகளை வளர்த்துக் கொண்டு, பகைமையை, வெறுப்பை வளர்த்துக் கொண்டு போவது மிருகங்களுக்கு வேண்டுமானால்  இயல்பானதாக இருக்கலாம்.

மனிதர்களுக்கு......!

"In the ignorance and darkness of the beginning, faith is the most direct expression of the Divine Power which comes to fight and conquer. "



அறியாமையும்
, இருளும் கூடிய தொடக்கத்தில், நம்பிக்கைஒன்றே மனிதனுக்குத் துணையாக வழங்கப்பட்ட சாதனமாக இருக்கிறது, என்று ஒரு உரையாடலில்  ஸ்ரீ அரவிந்த அன்னை தெளிவுபடச்சொல்கிறார். இன்னொரு இடத்தில், இன்னும் கொஞ்சம் விரிவாக,

“Faith is the movement of the soul whose knowledge is spontaneous and direct.

Even if the whole world denies and brings forward a thousand proofs to the contrary, still it knows by an inner knowledge, a direct perception that can stand against everything, a perception by identity.

The knowledge of the psychic is something which is concrete and tangible, a solid mass. You can also bring it into your mental, your vital and your physical; and then you have an integral faith - a faith which can really move mountains.”


 -ஸ்ரீ அன்னை 




ஆசை இருக்கு தாசில் பண்ண....!


மாஸ்லோ சொல்லும் மனிதனின் தேவைகள்அடுக்கு !

எத்தனை காலம் ஆனால் தான் என்ன? கி.மு., கி.பி என்று சகாப்தங்களையும் தாண்டி, மனிதனுடைய சில அடிப்படையான தாகங்கள், தேவைகள், தேடல்கள், தவிப்புக்கள் என்று எத்தனை வார்த்தைகளில் சொல்ல முனைந்தாலுமே கூட, இந்த இரண்டு தான் மிக முக்கியமாக இருக்கிறது.

என்ன அந்த இரண்டு?

தன்னை எல்லோரும் கவனிக்க வேண்டும் என்பது முதலாவது! எல்லோருக்கும் தெரிந்த ஆளாக, பிரபலமாக இருக்க வேண்டும் என்பது அடுத்தது! மிக இயல்பான இந்த தேவைகளை நம்மில் நிறையப் பேர், ச்சே ச்சே நான் அப்படியில்லைப்பா என்று மறைத்துக்  கொள்ள விரும்பினாலுமே கூட, நம்முடைய செயல்கள், வார்த்தைகள் காட்டிக்  கொடுத்து விடுவதை, எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா?

சின்னப்பிள்ளைகள், வகுப்பறையில் பாடத்தில் நாட்டம் இருக்காது, நல்ல மதிப்பெண்களும் பெற முடியாது, கொஞ்சம் ராவடி செய்வதைப் பழக்கமாகக் கொண்டிருக்கும். ஒரே காரணம், ஒரேயடியாகக் கவனிக்கப்படாமலேயே போய்விடுவதை விட, ராவடி, வால்தனம், ரவுசு செய்வது மிகவும் எளிது என்பது தான்! இப்படி ராவடி, ரவுசு செய்துகொண்டிருக்கும் குழந்தைகளிடம் கொஞ்சம் கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டாலே போதும், ரவுசு கட்டி ஆடுகிறவர் சாதுவாய் மாறிப்போவார்! வாத்திமாரைக் கேட்பதை விட, இதை அம்மாக்களிடம் கேட்டுப்பாருங்கள்!

கவனிக்கப்படவேண்டும் என்பதற்காகவே ஆரம்பிக்கிற குழந்தைத்தனமான இந்த வீம்பு, வளர்ந்த பின்னாலுமே கூட வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு தருணங்களில் வெளிப்படுவதை, கொஞ்சம் கவனிக்கப் பழகினோமானால், நம்மிடத்திலேயே காணமுடியும்! எப்போதாவது, முயற்சித்துப் பார்த்திருக்கிறீர்களா?

தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள விரும்பும் எவருமே புறக்கணித்து விடமுடியாத விஷயங்களாக, மனிதனின் இந்த இரண்டு அடிப்படைத் தேவைகள் இருக்கின்றன. இந்த இரண்டு தேவைகளைச் சரியான முறையில் பயன்படுத்தத் தெரிந்துகொள்ளும்போது, தலைவனாக இருப்பவன், அதிகமாகச் சாதிக்கிறான்!



வேலை செய்கிற இடமாக இருக்கட்டும், நட்புவட்டம், குடும்பம் என்று சமூகச் சூழலிலாகட்டும், இந்த இரண்டு அடிப்படைத் தேவைகளே, மற்றவற்றை முடிவு செய்கின்றன. அல்லது முடிவு செய்வதற்குப் பலமான காரணிகளாக இருக்கின்றன.

வேலை செய்கிற இடத்தை முதலில் பார்ப்போம். உங்களுடன் ஒரு பத்துப் பேர் பணியாற்றுகிறார்கள். உங்களுடைய மேலாளர், உங்களிடம், உடன் பணிபுரிபவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பது உங்களுடைய வேலைத் திறமையைப் பாதிக்கிறது. எப்படி?

உங்களுடைய மேலாளர், அல்லது உடன் பணி செய்கிறவர்கள், உங்களைப் புறக்கணிப்பதாக, அல்லது உங்களுக்கு உரிய முக்கியத்துவம், கவனத்தைக் கொடுப்பதில்லை என்று, அது நிஜமாகவோ, அல்லது மிகைப்படுத்தப் பட்ட கற்பனையாகவோ கூட இருக்கலாம், அப்படி ஒரு எண்ணம் வந்துவிட்டால், உங்களுடைய குணமே பாய்ந்து பிராண்டுவதாக, மாறிப்போய்விடுகிறது.

முன்னால் பார்த்தோமே, சிறு குழந்தைகள், அதே மாதிரி, ஒரு முரட்டுத் தன்மையோடு, எதையுமே ஆக்ரோஷமாக நிராகரிக்கிற, மறுக்கிற தன்மையாக ஆகிவிடுகிறது. ஆரம்பத்தில், சிறிதாக வெளியே தெரியாத இறுக்கமாக ஆரம்பிக்கும் இந்தக் குணம், பின்னால் மாற்றிக் கொள்ள முடியாத அளவுக்கு, ஒரு வெட்டி வீம்பாகவே மாறிவிடுகிறது.

வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஒரு காட்சி, தரையைத் துடைத்துச் சுத்தம் செய்கிற தொழிலாளியாக வீராச்சாமி, எல்லோருடனும் முறைத்துக் கொண்டு சண்டை போடுகிறவராக ஒரு காட்சியில் அறிமுகமாவார். கமல் அவரிடம், அவருடைய வேலையை சிலாகித்துப் பேசியவுடனேயே, வீராச்சாமி உருகி, முரசக்குணம் மாறி,  தேம்புவார். அடுத்து வருகிற ஒருவர், இவர் துடைத்த இடத்தை மிதித்துக் கடந்துபோகவேண்டும், பயந்து நிற்பார். வீராச்சாமி அவரிடம் மிகவும் தன்மையாக, 'நீங்க போங்க, உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும், எனக்கு இதைத் துடைக்கிறது ஒண்ணு மட்டும் தானே வேலை' என்பார். தமிழ் சினிமாப்படங்களில் கூட, அவ்வப்போது, இந்த மாதிரி வாழ்க்கையின் யதார்த்தத்தைச் சொல்லும் ஒன்றிரண்டு காட்சிகள் வந்து விடுகின்றன.

இந்த இடத்தில், தான் முகமற்ற ஒரு நபர், தன்னை எவருமே சட்டை செய்வதில்லை என்ற எண்ணம் வீம்பாக வெளிப்படுவதும், தன்னையும் ஒருவர் மதித்து அங்கீகரிக்கிறார் என்ற நிலையில் அந்த வீம்பு,  சண்டைக் குணம் மாறிவிடுகிறது, அல்லது அதற்கு இடமே இல்லாமல் போய் விடுகிறது என்பதைப் பாருங்கள்!

மதிப்பது, அங்கீகரிப்பது என்பது மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள், விருதுகள் வழங்குவதெல்லாம்  இல்லை. சாதாரணமான, எளிய, சின்னச் சின்ன விஷயங்களே  கூடப் போதும். சின்னச்  சின்ன முறுவல்கள், முகமன்கள், நலமாக இருக்கிறீர்களா என்ற விசாரணைகள், குடும்பம், பிள்ளைகள் பற்றிய சிறு விசாரணைகள்  இப்படி மிகவும் எளிதான விஷயங்களிலேயே, மனிதமனம், தன்னையும் மதித்து, கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று திருப்தி அடைந்து விடுகிறது. திருப்தி அடைந்த மனித மனம், குரங்கு போல அங்கே இங்கே தாவுவதில்லை, மேலே விழுந்து பிராண்டுவதில்லை, வாலாட்டுவதுமில்லை!

Getting noticed கவனத்தை ஈர்ப்பது என்ற முதல் தேவை சரி! அது என்னென்ன விதங்களில் வெளிப்படும் என்பதைக் கூட, ஒரு நான்கைந்து ரகங்களாக வகைப்படுத்திச் சொல்லிவிடலாம். சின்னச் சின்ன விஷயங்களிலேயே, நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள் என்பதைச் சொல்லிவிடலாம்! திருப்தி செய்து விடலாம்!அடுத்து வருகிறதே, எல்லோருக்கும் தெரிந்த பிரபலமாக ஆவதென்ற ஆசை, தேவை, இதை எப்படிப் பூர்த்திசெய்வது? 


"தெரிந்து வைத்துக் கொள்வது"  இது கொஞ்சம் எளிதானதல்ல.இது கொஞ்சம் நேரமும் முயற்சியும் தேவைப் படுகிற சமாசாரம்!மறுபடியும் வேலை செய்கிற சூழலையே எடுத்துக் கொள்வோம்! நம்முடன் பணிபுரிபவர்களைப் பற்றி நாம் எந்த அளவு தெரிந்து வைத்திருக்கிறோம்? நமக்கு உடனே தெரிவது, அவர்களுடைய குற்றம் குறைகள் தான்! அடுத்து அவர்களைப் பற்றி நாமாகவோ, மற்றவர்கள் சொல்கிற அபிப்பிராயங்களை வைத்து, ஒரு கலர்க் கண்ணாடி வழியாகவே, அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்! அது தான் நாம் அவர்களைப் புரிந்து கொண்டதாகவும், தெரிந்து கொண்டதாகவும் இருக்கிறது! ஆனால் அவர்களிடம் இருக்கும் திறமை, நல்ல அம்சங்களைப் பார்க்க விடாமலேயே தடுத்தும் விடுகிறது!

மறுபடியும், முதலில் பார்த்த வசூல் ராஜா எம்பிபிஎஸ் படக் காட்சியையே எடுத்துக் கொள்வோம்! வீராச்சாமி, தன்னையும் ஒருவர் கவனிக்கிறார், தன்னுடைய வேலையைப் பாராட்டுகிறார் என்று தெரிந்து கொண்ட உடனேயே, அது வரை மூடி மறைத்து வைத்திருந்த அவருடைய நல்ல குணங்கள் வெளிப்படுகிற தருணமாக அது ஆகி விடுகிறது என்பதைப் பார்த்தோமல்லவா!  ஒரு நல்ல நிர்வாகி, மேலாளர் அல்லது குழுத்தலைவராக இருப்பவருடைய திறமையே, இந்த இடத்தில் தான் மிகவும் முக்கியமானதாக ஆகிறது!

தன்னுடன் பணிபுரிபவரைப் புரிந்துகொள்வதற்குக் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்கிறார். அவரை விமரிசிப்பதற்கோ, மிரட்டுவதற்கோ அல்ல. உடன் வேலை செய்பவரின் சூழ்நிலை, பயங்கள், வேலை செய்வதில் உற்சாகமிழத்தல்  இவற்றைப் புரிந்து கொண்டு, முதலில் அவர் மேல் தான் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார், அடுத்து  சிநேகபூர்வமான பேச்சு, செயல்களால், பயத்தைப் போக்குகிறார், வேலை செய்வதில் ஒரு ஆர்வத்தை உண்டாக்குகிறார். இப்படிப்பட்ட ஒரு தலைமை, நிர்வாகி, அல்லது குழுத்தலைவருடன் வேலை செய்கிறவர்கள் முக மலர்ச்சியோடும், வேலை செய்வது ஒரு சந்தோஷமான அனுபவமாகவும், திறமையை வளர்த்துக் கொள்வதிலும், புதிய சவால்களை எதிர்கொள்வதிலும்  சிறந்தவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்களிடமிருக்கும் திறமையை வெளிக் கொணர்வதில், உற்சாகப்படுத்துவதில், நம்பிக்கையூட்டுவதில் தான்  நல்ல நிர்வாகியின் திறமையே இருக்கிறது! இந்த நிர்வாகி என்ற இடத்தில், நண்பர்கள், உறவு, குடும்பம், அப்புறம் சக பதிவர்கள் என்று எதை வைத்து வேண்டுமானாலும் வைத்து யோசித்துப் பாருங்கள்! இப்படி, சக மனிதர்களை அங்கீகரிக்கிற, புரிந்துகொள்ள முயல்கிற தன்மை, எவ்வளவு முக மலர்ச்சியையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது! தன்னை நேசிக்கிற அதே அளவு, தன்னைச் சேர்ந்தவர்களையும் நேசிக்கும் இயல்புவளருகிறது.

உற்சாகப்படுத்துவது என்பது ஒத்து ஊதுவது அல்ல!  கருத்து வேறுபாடு இருந்தாலுமே கூட அதையுமே ஒரு பண் பட்ட வகையில், இது என்னுடைய கருத்தாக இருக்கிறது என்ற அளவில் மட்டுமே நிறுத்திக் கொள்வது நம்மைப் பலவீனப்படுத்திவிடும் என்று நாமாகவே ஒரு முடிவு செய்துவிட்டு  ஆஹா விட்டேனா பார்  என்று  ஒரு எல்லைக்கு மீறி போய் விடும்போது,
நாம் சொல்ல வந்தது ஒன்றும், சொன்னது வேறாகவும் ஆகிப் போய் விடுகிற நிலையில், வரட்டுப் பிடிவாதம் மட்டுமே மிஞ்சி நிற்கும். அப்புறம் எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி என்று பாடிக்கொண்டு பாட்டிலுடன் திரிய வேண்டியதுதான்!


இங்கே ஒரு நல்ல நிர்வாகி அல்லது நண்பர் செய்வது, அவசரக் குடுக்கையாகப் பேராசையோடு இலக்கை நிர்ணயிப்பது அல்ல. சக மனிதரிடம் காண்பிக்கும் நல்லெண்ணம், அவரால் முடியும் என்று தெம்பு ஊட்டுகிற  நம்பிக்கை,  செய்து முடிப்பதற்கு துணையிருக்கிறது என்ற தைரியம் இவற்றைத் தருவதுதான்!

தனித்துவிடப்பட்டதாகவோ, புறக்கணிக்கப்பட்டதாகவோ எண்ணாமல், தான் ஆதரவோடு  இருப்பதை உணர வைப்பது   தான்! நான் தனித்து இல்லை என்கிற உத்தரவாதத்தை வேண்டியே, இப்படித் தான் கவனிக்கப்பட வேண்டும், பிரபலமாக வேண்டும் என்கிற தேவையும் தவிப்பும் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்!

மனிதன் ஒரு சமூகமாக வாழவே பிறந்தவன், சமூகப் பிராணி என்பதெல்லாம் இதைச் சொல்வதுதான்!





இருப்பதென்னவோ ஒன்றுதான்! ஆனால் எத்தனை, எத்தனை பார்வைகள்?


கடவுள் என்ன நேற்று முளைத்த காளானா என்று தலைப்பைக் கொஞ்சம் காட்டமாக, அல்லது உசுப்பேத்திவிடுகிற மாதிரி வைத்து, காட்டா குஸ்திக்குக் களம் ரெடி, குஸ்தி போட வாரவுங்கல்லாம் வாங்கன்னு, மட்டக்கிளப்பிலிருந்து யோகராஜா சந்திரகுமார் என்ற சந்ரு எல்லோருக்கும் தனித்தனியா அழைப்பிதழும் கொடுத்து விட்டார்.

அழைக்காமலேயே தேடி வந்து குஸ்தி போடுகிற பதிவுலகத்தில், வெத்திலை பாக்கு வச்சு அழைச்சு, குஸ்தி போடுங்கன்னு சொன்னா, யாராச்சும் விடுவாங்களா? பின்னூட்டத்தில் பின்னிப் பெடலேடுக்கிறது அல்லது பெடலேடுத்துப் பின்றது ரொம்ப அமர்க்களமாகவே ஆகிப் போச்சு! ஒரு கட்டத்துல, இதுக்குமேல என்ன பண்றதுன்னு தெரியாம சந்ரு அடுத்த களத்தை ரெடி பண்ணப் போயிட்டார்! எங்கேயிருந்து, எப்போது, எப்படிக் கழன்று கொள்வது என்பது தெரிந்தால் தான் பதிவுலகத்தில் சர்வைவ் பண்ண முடியும்னு நல்லாவே தெரிஞ்சும் வச்சிருக்காருங்க!

வழக்கம் போல நம்ம வால்ஸ் வந்து போணி பண்ணப்புறம் தான் கோதா விறுவிறுப்பா ஆரம்பிச்சுது! அதிலேயிருந்து கொஞ்சம் ஹைலைட்ஸ்!

நம்ம மதுரைக்கார பேராசிரியர், [அட நெசமாத்தாங்க] அழைப்புக்கு மரியாதை கொடுத்துக் கொஞ்சம் அடக்கியே வாசிச்சுட்டுப் போயிட்டாரு! மிச்சத்தை வால் பையன் பாத்துக்கிடுவார்னோ, வாத்தியாரா இருந்து ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதில் அலுப்பு வந்திட்டதோ என்னவோ, கோதாவுல வாலிபப் பசங்களே இறங்கி ஆடிக்கட்டும், அடிச்சுக்கட்டும்னு இருந்துட்டாருங்க! எதுக்கும் இங்க போயிப் பாத்துட்டு வந்துடுங்க! அதைத் தான் அவரும் சொல்றாருங்க.

தருமி சொன்னது

என் பதில் கேட்டு அழைப்பும் அனுப்பி விட்டீர்கள். நான் என்னங்க சொல்லப் போகிறேன். வால் சொல்வது சரி என்றுதானே சொல்வேனென்று தெரியாதா?

எதுக்கும் இதையும்கொஞ்சம் வாசிங்க பதிலும் சொல்லுங்க. எல்லாம் உங்க கேள்விகள்தான்!

//எப்படியோ சாஸ்திரம்னு சொன்னா நம்மாளுக மடங்கிடுவாங்கன்னு பெரியவங்களுக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு. நிறைய
விஞ்ஞான அடிப்படையான காரியங்களைக் கூட சாஸ்திரம் என்ற பெயரில் சொல்லிச் சென்று விட்டார்கள். //

அதோடு சம்பிரதாயங்கள் (வழக்கங்கள்) வாழ்க்கை ஒட்டியவை. எப்போதோ வந்திருக்கலாம். மதங்கள் (வால்ஸ் சொல்றது மாதிரி) ஏதோ ஒரு கால கட்டத்தைச் சார்ந்தது. இந்துமதம் என்பது ஒரு அவியல். அதனாலேயே ஆரம்பம் இல்லை என்கிறோம். ஆனால் ஏதோ ஒரு கால கட்டத்தை ஒட்டியதே.

ஒரே விஷயுமுங்க: எதையுமே சாமி பெயரோடு சேர்த்து சொன்னா சட்டுன்னு நீங்க நம்பிடுவீங்கல்ல ... அதான் சம்பிரதாயம்.

கூப்பிட்டிருக்க வேண்டாமேன்னு தோணுமோ .. ?!



கிருஷ்ணமூர்த்தி "கடவுள் நேற்று முளைத்த காளானா..." என்ற இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்:

வால்பையன் சொன்னது:
"நாகரிகம் வளர்ச்சியடையாத காலத்தில் அவன் இயற்கையை கண்டு தேவையில்லாமல் பயந்தான் என்பதை விட வேறென்ன தொடர்பு இருக்கிறது மனிதர்களுக்கும் கடவுளுக்கும்!"

உண்மை! தேவையில்லாமல் பயந்தான் என்ற இடத்தில் புரியாததால் பயந்தான் என்று மாற்றிப் பாருங்கள், மனிதனுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதற்கான விடை காணக் கிடைக்கும்.

இந்த எல்லையற்ற பிரபஞ்சத்திலே, நான் தனி இல்லை, தனித்து விடப் படவில்லை, பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும், அசைவிலும் என்னுடன் இடையறாத தொடர்பு இருக்கிறது என்பதை உணரத்தலைப்பட்ட நேரமே, பயமில்லாமல், புரிந்துகொள்ள ஆரம்பித்ததன் தொடக்கம்.

புரிந்துகொண்ட விதமே கூட அந்த இடத்தில் இரண்டாகப் பிரிந்து தான் நின்றது.

ஒன்று, இதைப் படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும், படைப்பிற்குள்ளும், வெளியிலும் பரந்து விரிந்திருக்க வேண்டும்! அதாவது நான் இருக்கிறேன் என்றால், என்னைப் பெற்ற தாயொருத்தி இருக்கிறாள், அவள் என்னுள்ளும் வெளியிலுமாக இருக்கிறாள் என்று சொல்வது, என்னிடமிருப்பதெல்லாம், அவளிடமிருந்து பெறப்பட்டதே, ஆனாலும் அவள் தனியாகவும் [வெளியிலும்] இருக்கிறாள் என்று உணர்வதைப் போலத் தான்.
உடனே ஒரு கேள்வி வரும், என்தாயை எனக்குத் தெரியுமே, நான் பார்த்திருக்கிறேனே என்று! இங்கும் கூட தெரிந்து கொள்ள முடியும், பார்க்க முடியும்!

இரண்டாவதாக, இந்தப் பிரபஞ்சமே ஒரு விபத்து. இதில் எந்தத் திட்டமிடுதலோ, ஒழுங்கோ இல்லை. அதே மாதிரி உயிர் என்பது கூட ரசாயனச் சேர்க்கையில் ஏற்பட்ட ஒரு தற்செயலான விபத்து தான்! ஏதோ ஒரு கட்டத்தில் தன்னைத்தானே mutate இருகூறாகப் பிளந்து கொள்கிற தன்மையுடன் ஒரு செல் உருவாக்கி, வளர்ந்து, வளர்ந்து, மாற்றங்களை அடைந்து, பரிணாம வளர்ச்சியில், இப்போதுள்ள மனிதன் ஈறாக உருவாகியிருக்கிறது. சில அறிவியல் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்து, உயிர் தோன்றியதே தற்செயலான விபத்து என்று சொல்லும் போது, எல்லாம் ஒரு இயற்கையான தேர்வால் natural selection என்று இருக்கும்போது, அங்கே கடவுள் என்று ஒன்று இல்லை,அது படைப்பது, காப்பது அழிப்பதான வேலைகளைச் செய்வதாக நினைப்பதெல்லாம் சும்மா ஒரு புருடா என்ற ரீதியில் இந்த சிந்தனையோட்டம் போகும்.

இந்த இரண்டு முரண்பாடான சிந்தனைகளுமே கூட ஓரிடத்தில் சந்திக்க நேரிடும் போது,

"நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை"
என்று பழைய திரைப்படப் பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறதா?

அங்கே வந்து ஆதிசங்கரர் நிறுவியதாகச் சொல்லப் படும் அத்வைதக் கோட்பாடு "ப்ரஹ்ம சத்யா ஜகன் மித்யா-பிரம்மமே உண்மையானது காணுகின்ற தோற்றமெல்லாம் பொய்யானது" என்று ஒரு தரப்பும், "கண்டதே காட்சி, அது உண்மை! அதைப் படைத்ததாகச் சொல்லப் படும் கடவுள் மாயை" என்று அதையே உல்டா அடித்துச் சொல்கிற இன்னொரு தரப்பும் முட்டிக் கொண்டு நிற்கத் தான் செய்யும்! இது நேற்றும் நடந்தது, இன்றும் நிகழ்கிறது, நாளையும் நடக்கும்!

சரி, வாதம், எதிர்வாதம் என்று மட்டுமே இருந்தால் எப்படி, அதன் முடிவு என்ன, எங்கே என்று கேட்கிறீர்களா?

தொடர்ந்து பேசுவோம்!


கிருஷ்ணமூர்த்தி "கடவுள் நேற்று முளைத்த காளானா..." என்ற இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்:

supersubra சொன்னது:
/மொத்த பிரபஞ்சத்தையும் ஒரு உருவகப்படுத்தும் விதமாகத்தான் கடவுளை அறிய வேண்டும். இதில் வால்பையனும் அடக்கம்/

ஐயா வாங்க! நேத்து ராத்திரி தான் நம்ம வால்சுக்கு, சிறந்த சரவெடிப் பதிவர் விருது கொடுத்து ஒரு பதிவு போட்டேன்! அந்தப் பதிவுல, நீங்க வால்பையனை அருமையா ரசித்துக் கொண்டிருக்கும் படமும் இருக்கிறது.

நீங்க சொல்கிற ஸமுஸ்கிருதமெல்லாம் நம்ம வால்பையனிடம் எடுபடாது. ஏனென்றால், அவர் தன்னைக் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே "வாலொடு" முன்தோன்றிய மூத்த குடியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்:-)

அவர் லாஜிக்கே தனி!
சாம்பிளுக்கு,
/இந்து மதம் ஆதியும், அந்தமும் அற்ற ஒன்றா? அப்போ மற்ற மதங்களும் அப்படி தானே இருக்க வேண்டும்!

கிருஸ்துவம் 2000 வருடம்
இஸ்லξம் 1700 வருடம்

இதுமட்டும் எப்படி!? /

இந்து மதம் என்று பரவலாக அழைக்கப் படுகிற தத்துவ தரிசனம், நாத்திகம் பேசும் சாங்கியம் உட்பட பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. இவை என்று பிறந்தவை என்பதை உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், மிகத் தொன்மையானவை.இவை காட்டும் இறைத்தன்மையைத் தான் ஆதியும் அந்தமும் இல்லாதது என்று சொல்லப்பட்டதே தவிர, இந்தத் தத்துவ மரபில் வந்த ஆசிரியர்கள், அவர்களைப் பின்பற்றி எழுந்த சமயங்களையும் ஆதி அந்தமில்லாததாக சொல்லவில்லை.அப்படி அவருக்கு யாராவது சொல்லியிருந்தால், அல்லது அப்படி வால்பையனாகப் புரிந்து கொண்டிருந்தால், அது முழுத் தவறு.

கிறித்தவம், இஸ்லாம் முதலான மதங்கள், வரலாற்றின் மிக சமீபத்தில் எழுந்தவை, அதுவும் கூட யூதர்களின் பழைமையான நூலாகிய பழைய ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, சில பொதுமைத் தன்மைகளை, முன்னவர்களைக் கொண்ட ஆப்ரகாமைட் மதங்கள் என்று ஒரே சொல்லால் குறிக்கப் படுபவை.

ஒரு கருத்தை மறுப்பதற்கும், நிராகரிப்பதற்கும் எவருக்குமே உரிமை உண்டு. மறுப்பதற்கு முன்னால், தான் மறுக்கும் கருத்து என்ன என்பதைப் பற்றிய தெளிவு, அதில் எந்த இடத்தை, எதனால் மறுக்கிறேன், மாறுபடுகிறேன் என்பதையும் விளக்கிச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற ரீதியில், பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிட்டுப் போகிற மறுப்புக்களைப் பார்த்தால், வேடிக்கையாகவும் விநோதமாகவும் தான் இருக்கிறது!

நம்பிக்கை என்பது உணர்வின் வெகு ஆழத்தில் இருந்து வெளிப்படுவது. மேலோட்டமாகத் தெரிவதில் பார்த்து முடிவு செய்கிற அறிவால், நம்பிக்கையைப் புரிந்து கொள்ள முடியாது. நம்பிக்கை என்பது எவ்வளவு வலிமையானது என்பதையும் புரிந்துகொள்ள முடியாது.

"வீர சுதந்திரம் வேண்டி நின்றார்-பின்னர்
வேறொன்று கொள்வாரோ"
என்று ஆவேசத்துடன் விடுதலையை வேண்டிப் போராடிய தியாகிகளை நினைத்து வணங்க வேண்டிய தருணம் இது.

தியாகிகளை வணங்காவிட்டால் கூடப் பரவாயில்லை, இழிவுபடுத்தாமல் இருந்தாலே போதும் என்ற அளவுக்குத் தரம் தாழ்ந்து போன காலம் இதுவாகிப் போனதே!




“Break the moulds of the past, but keep safe its gains and its spirit, or else thou hast no future. “
Sri Aurobindo
Thoughts and Aphorisms- Aphorism 237


"The sceptic mind doubts always because it cannot understand, but the faith of the God-lover persists in knowing although it cannot understand. Both are necessary to our darkness, but there can be no doubt which is the mightier. What I cannot understand now, I shall some day master, but if I lose faith and love, I fall utterly from the goal which God has set before me."
Sri Aurobindo
Thoughts and Aphorisms-Aphorism 468