Showing posts with label ஸ்ரீ அரவிந்தர். Show all posts
Showing posts with label ஸ்ரீ அரவிந்தர். Show all posts

ஸ்ரீ அரவிந்தர் திருவடிகளைச் சிந்திக்க வேண்டிய தருணம் இது!

அருட்பெரும் ஜோதியாம் பொன்னொளியை பூமிக்குக்  கொண்டு வருவதற்காக பகவான் ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய உடலையே அர்ப்பணித்து மகாசமாதிக்கு எழுந்தருளிய நாள் இன்று! டிசம்பர் 5. புதுச்சேரி ஸ்ரீஅரவிந்தாசிரமத்தில் அடியவர்கள் கூடி சமாதி அருகே கூட்டுத் தியானம் செய்கிற, தரிசன நாளாகவும்  இன்று டிசம்பர் 5 இருக்கிறது. இன்றைய தரிசன நாள் செய்தியாக!


ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய யோகம் பூர்த்தியாவதற்கு தன்னுடைய உடலையே த்யாகம் செய்த நாள் இன்று. டிசம்பர் 5.


அருட்பெருஞ்சோதி என்று ராமலிங்க வள்ளலார் பெருமானாலும்,அதிமானச ஒளி என்று ஸ்ரீ அரவிந்தராலும் அழைக்கப்பட்ட அருட்பேரொளி ஸ்ரீ அரவிந்தர் உடலில் ஐந்து நாட்கள் பொன்னொளியாக இறங்கிய நாள் இன்று.

மரணம் என்பது பொய்மையின் தற்காலிக வெற்றி தானே அன்றி நிரந்தரமானது அல்ல. மரணம் என்பது வெற்றி கொள்ளக் கூடியதே. தென் தமிழ்க் கோடியில் சித்தர்களாலும், ஞானிகளாலும் மிக ரகசியமாக வளர்க்கப் பட்ட வித்யை இது. ராமலிங்க அடிகள் என்று அழைக்கப்பட்ட வள்ளல் பெருமானும், ஸ்ரீ அரவிந்தரும் சற்றேறத்தாழ சம காலத்தில் அறிவித்த உண்மை இது.

இருபத்து நான்காயிரம் வரிகளில் சாவித்திரி என்கிற தன்னுடைய பெருங்கவிதையில் ஸ்ரீ அரவிந்தர் இந்த பூரண யோகத்தின் அனைத்து அம்சங்களையும் மிக நுட்பமாகச் செதுக்கியிருக்கிறார். "கண்டவர் விண்டிலர்;விண்டவர் கண்டிலர்" என்று வழக்கில் இருந்தாலும் உரை, மனம் கடந்த ஒரு சத்தியப் பெருக்கை, தன்னுடைய யோக சாதனையில் கண்டதை சாவித்திரி எனும் மகா காவியமாக ஸ்ரீ அரவிந்தர் படைத்திருக்கிறார். 'உரை மனம் கடந்த ஒரு பெருவளி அதன் மேல் அரைசு செய்தோங்கும் அருட்பெருஞ்சோதி' என்று வள்ளல் பெருமான் கூறாமல் கூறியதை சாவித்திரி ஒரு பெரும் மந்திரமாக தன்னைப் படிப்பவர்களுக்கு பேரானந்த நிலையை அருளும் தாயின் தயவாக, நமக்கெல்லாம் வழங்கியிருக்கிறார்.

இந்தப் பெருங்கருணைக்கு எப்படி கைம்மாறு செய்ய முடியும்? எப்படி நன்றி செலுத்த முடியும்?


Om Sri Aurobindo Mirra!

Open my mind, my heart, my life

to

your Light, your Love, your Power.

In all things may I see the Divine!

கை கூப்பி, சிரம் தாழ்த்தி வணங்குவதை அன்றிக்கு வேறென்ன செய்ய முடியும்?

ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் இருவருடைய திருவடிகளிலும் எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் சமர்ப்பணம் செய்கிறேன்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

ஸ்ரீ அரவிந்தரின் ஒளி பொருந்திய பாதையும் காரடையான் நோன்பும்!

இன்று காரடையான் நோன்பு. மாசியும் பங்குனியும் சந்திக்கிற வேளையில் திருமணமான பெண்கள், தங்களுடைய மாங்கல்ய பலத்துக்காக உருகாத வெண்ணெயும் ஓரடையும் நான் தருவேன் ஒருக்காலும் என் கணவர் என்னைவிட்டுப் பிரியாதிருக்க வரம் தா என்று பிரார்த்தனை செய்து கொள்கிற நாள்.  இதற்கு மகாபாரதத்தில் வரும் நூற்றுக்கணக்கான கதைகளில் ஒன்றான சத்யவான் சாவித்ரி கதை அடிப்படையாக இருக்கிறது. சாவித்ரி என்றால், எமனோடு போராடி கணவன் உயிரை மீட்ட பெண் என்ற அளவிற்காவது கதை தெரிந்திருக்கும். தெரியவில்லையா, இங்கேயே கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்து விடலாம், தவறில்லை!



மத்ரா தேசத்தின் அரசன் அஸ்வபதிஅவனது ஒரே மகள் சாவித்திரிதிருமண வயது நெருங்கியதும் தகுந்த மணவாளனைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிற சுதந்திரத்தை மகளுக்கு வழங்குகிறார் தந்தைமகளும்தனக்குப் பொருத்தமான மணாளனைத் தேடி வருகையில்அழகிய வாலிபன் ஒருவனைக் காண்கிறாள்அவன்சத்தியவானுடைய பண்பினால் கவரப்படும் சாவித்ரியும்சாவித்ரியின் அன்பினால் ஈர்க்கப்பட்ட சத்தியவானும் ஒருவரை ஒருவர் யாரென்று அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

சால்வ தேசத்தின் அரசன் த்யுமத்சேனன், உறவினர்களுடைய சதியால் அரசிழந்து, பார்வையும் இழந்து, தன்னுடைய மனைவி மற்றும் ஒரே மகனான சத்தியவானுடன், கானகத்தில் வசித்து வருகிறார் என்பதை சாவித்ரி அறிந்து கொள்கிறாள்.

தந்தையிடம் திரும்பும் சாவித்திரி, சத்தியவான் தான் தன் கணவனாக வரிக்கப் பட்டவன் என்பதைத் தெரிவிக்கிறாள். விசாரிக்கும் போது, சத்தியவானுடைய ஆயுள் இன்னும் ஒரு வருட காலம் தான் என்பது தெரிய வருகிறது. சாவித்ரியின் தாய் கலங்குகிறாள், மகளை முடிவை மாற்றிக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறாள். ஆனால், சாவித்திரி, சத்தியவானைத் தவிர வேறொருவரைக் கணவனாகக் கனவிலும் கூட ஏற்க முடியாது என்று உறுதியாக இருக்கிறாள்.

சாவித்திரி விருப்பப் படியே அவளுக்கும், சத்தியவானுக்கும் திருமணம் நடக்கிறது. கணவனோடு கானகத்தில் சந்தோஷமாக வாழ்கிறாள். அந்தக் குறிப்பிட்ட தருணமும் நெருங்குகிறது. ஆம், ஒரு வருடம் நிறைகிறது. கணவனும் மனைவியுமாக, கானகத்தில் கனி, கிழங்குகளை சேகரிக்கப் போகையில், கூற்றுவன் சத்தியவானுடைய உயிரைப் பறித்துச் செல்கிறான்.

சாவித்திரி மனம் கலங்காமல் கூற்றுவனைப் பின் தொடர்கிறாள். உனது நாள் இன்னமும் இருக்கிறது, திரும்பிப் போய் விடு என்று கூற்றுவன் நயமாகவும், பயமாகவும் சொல்வதைக் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளாமல், தன்னுடைய கணவனுடைய உயிரை விட்டுப் பிரிய மாட்டேன், தொடர்ந்தே வருவேன் என்கிறாள்.இடையில், பல உலகங்களைக் கடந்தும் சாவித்ரி உறுதியாக இருப்பதைப் பார்க்கும் கூற்றுவன் பிடிவாதத்தை விட்டு விடு, நீ வேண்டிய வரங்களைத் தருகிறேன், திரும்பப் போய் விடு என்கிறான். என்ன வரம் வேண்டுமானாலும் தருவீரா என்கிறாள் சாவித்திரி! எதுவானாலும் கேள், தருகிறேன் என்கிறான் கூற்றுவன்.

தன் கணவனோடு கூடி நூறு வீரமும் கீர்த்தியும் நிறைந்த பிள்ளைகளையே வரமாகத் தரும் படி சாவித்திரி வேண்டுகிறாள்.

வரமோ, வாக்கோ எதுவானாலும், தருகிறேன் என்று சொன்னால் அதை நிறைவேற்றுகிற தெய்வங்களும், மனிதர்களும், ஏன் மிருகங்களும் கூட வாழ்ந்த புண்ணிய பூமி இது. என்ன சாபத்தினாலோ, வாக்குறுதி என்பது மீறப் படுவதற்காகவே, ஏமாற்றுவதற்காகவே என்று செயல்படும் அரசியல் தலைகளையும், அதிகார வர்க்கத்தையும் கொண்டதாகச் சிறுமைப் பட்டுப் போயிருக்கிறது இன்று.

'தந்தேன்' என்றான் எமன். பாசக்கயிற்றில் சிக்குண்டிருந்த சத்தியவானுடைய உயிர் மீண்டும் அவனது உடலில் புகுந்தது. சாவித்ரிக்கு அளிக்கப்பட்ட வரம், மாமனாருடைய பார்வையை மீட்டுக் கொடுக்கிறது, இழந்த ராஜ்ஜியம் மீண்டு வருகிறது என்று இந்தக் கதை முடிகிறது.

மஹாபாரதத்தில், போகிற போக்கில் சொல்லப் படும் நூற்றுக் கணக்கான கதைகளுள் ஒன்றான இந்த சத்தியவான்-சாவித்திரி கதையினுள் ஒரு மிகப் பெரிய ஆன்மீக ரகசியம் பொதிந்து கிடப்பதைக் கண்டார் ஸ்ரீ அரவிந்தர். இந்தக் கதை, வேதங்களின் திரண்ட உட்பொருளை, ஒரு சங்கேதமாகக் குறிப்பிடுவதாகவே ஸ்ரீ அரவிந்தர் கண்டார்.


சவித்ரு என்பது சூரியனின் பன்னிரு திருநாமங்களுள் ஒன்று. சாவித்திரி, சூரியனின் மகளாகவே கருதப் படுகிறாள். பன்னிரண்டே மாதங்களில், கணவனது ஆயுள் முடிந்து போகும் என்பது தெரிந்திருந்தும், மனம் கலங்காது உறுதியுடன் மரணத்தை எதிர்த்து வெற்றி கொள்கிறாள். அன்பே அவளது பலமாக இருப்பதைக் கதையின் ஒவ்வொரு வரியிலும் காண முடியும்.

ஸ்ரீ அரவிந்தர், 1901 வாக்கில் பரோடாவில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே இந்தக் கதையை மையமாக வைத்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். பின்னாளில் சாவித்ரியே அவரது தவமாகவும், யோக சாதனையாகவும் ஆனது. ஏறத்தாழ முப்பத்தைந்து கால ஞான வேள்வியாக, "சாவித்ரி" ஸ்ரீ அரவிந்தரின் பெரும் காவியமாக உருவெடுத்தது. 1930 களில் "சாவித்திரி- ஒரு கதையும் அதன் தரிசனமும் " என்று வெளியானது, தொடர்ந்து மெருகேறி, SAVITRI - A Legend and Symbol என ஏறத்தாழ 24000 வரிகளில் உருவானது.

"நான் சாவித்ரியை மனதளவில் துவங்கினேன்ஒவ்வொரு முறையும் நான் மேல் நிலையை அடையும்போது அந்த நிலையிலிருந்து மறுபடியும் எழுதினேன்உண்மையில் நான் சாவித்ரியை ஒரு செய்யுள் என்ற உணர்வில் எழுதி முடிக்க விரும்பவில்லைஆனால்ஒரு செய்யுளை ஒருவரின் யோகநிலையிலிருந்து எப்படியெழுதி அதை ஒரு சிறந்த சிருஷ்டியாக்க முடியும் என்ற மனதுடன் செயல்பட்டேன்."  என்று ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரியை எழுத ஆரம்பித்த அனுவவத்தை விவரிக்கிறார்.  ஏறத்தாழ நாற்பது ஆண்டு கால யோக சாதனையின் வெளியீடாக, "சாவித்திரிஎன்னும் பெரும் காவியம் இருக்கிறதுஇது வெறும் காவியம் என்றோஎழுதியவரின் அனுபவக் குறிப்பு என்கிற அளவோடோகுறுகி நின்று விடாமல்அதை படிக்கிற நமக்கும் ஒரு உன்னதமான ஆன்மீக அனுபவத்தை அளிக்கிற மந்திர சித்தியையும் கொண்டிருக்கிறது.


On Savitri

“If you are depressed, if you feel miserable, if you do not succeed in what you do or else if what happens is always the contrary of what you expect, however you try - if it has come to such a pass that you lose your temper, life becomes disgusting and you are unhappy, then immediately take Savitri and, after a moment's concentration, open it at any page and read. You will see that all your misery disappears like smoke. And you will have the strength to overcome the worst sorrows; you will no longer feel that which was tormenting you. Instead you will feel a strange happiness, a reversal of consciousness along with the energy and force to conquer everything, as though there were nothing impossible. And you will feel this inexhaustible joy that purifies all. 
 
Read just a few lines and that is enough to establish the contact with your inmost being. Such is the extraordinary power of Savitri.

Or else, after having read some lines, if you concentrate deeply, then too you will find the solution to what was tormenting you. You have only to open Savitri just at random without thinking and you will have the answer to your problems. Do this with faith and simplicity, the result is certain.”

The Mother  
5-11-1967  

சாவித்திரி காவியத்தைப் படிப்பதே ஒரு உன்னதமான அனுபவம் என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை! ஸ்ரீ அரவிந்தர் அரும்பாடு பட்டு இயற்றிய தவம், யோக சாதனைகளின் அனுபவம் சாவித்திரி காவியத்தின் ஒவ்வொரு வரியிலும் முழுமையாக நிறைந்திருக்கிறது. படிக்க ஆரம்பிக்கும்போது, நம்மிடம் மூடிக் கிடக்கும் கதவுகள் திறப்பதையும், அதுவரை விடைதெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த கேள்விகளுக்கு விடை வரிசையாகக் கிடைப்பதையும், மனச்சோர்வும் சலிப்பும் நிறைந்து நிராதரவாக நிற்கிற தருணங்களில், உற்ற துணையாகவும் பேராதரவாகவும் இருந்து வழி நடத்துவதையும், அனுபவத்தில் தான் கண்டுகொள்ள முடியும். அப்படி ஸ்ரீ அரவிந்தரது யோகத்தைத் துணைகொண்டு நடக்கும் பாதையை ஒளி பொருந்திய பாதை (Sunlit Path) என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.

காரடையான் நோன்பு என்பது, வெறும் சடங்கு அல்ல! மரணமில்லாப் பெருவாழ்வு என்று திருவருட்ப்ரகாச வள்ளலார் பெருமான் சொல்கிறாரே, அந்த மரணமில்லாப் பெருவாழ்வின் திறவுகோலும் கூட! வெறும் சடங்கு என்ற அளவோடு குறுகி நின்றுவிடாமல், அதன் உள்ளே பொதிந்துகிடக்கும் நுட்பத்தை அறிந்து கொள்ளத் தயாராக இருக்கும் எவருக்கும் ஒளிபொருந்திய பாதையாக முன்னே இருக்கிறது.

பயணம் செல்லத் தயார் தானே!


**இது ஒரு மீள்பதிவு. கொஞ்சம் மாற்றி எழுதப்பட்டது.
 

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய !

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய !


Contemplation for The Day

But many-visaged is the cosmic Soul;
A touch can alter the fixed front of Fate.
A sudden turn can come, a road appear.
A greater Mind may see a greater Truth

Savitri B. II, C. X, P. 256



May I be nothing else any more than a flame of love!

“O THOU, sole Reality, Light of our light and Life of our life,

Love supreme, Saviour of the world, grant that more and more I may be perfectly awakened to the awareness of Thy constant presence.

Let all my acts conform to Thy law; let there be no difference between my will and Thine. Extricate me from the illusory consciousness of my mind, from its world of fantasies; let me identify my consciousness with the Absolute Consciousness, for that art Thou.

Give me constancy in the will to attain the end, give me firmness and energy and the courage which shakes off all torpor and lassitude.

Give me the peace of perfect disinterestedness, the peace that makes Thy presence felt and Thy intervention effective, the peace that is ever victorious over all bad will and every obscurity.

Grant, I implore Thee, that all in my being may be identified with Thee. May I be nothing else any more than a flame of love utterly awakened to a supreme realisation of Thee.”

The Mother

Prayers and Meditations  February 15, 1914

ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய யோகம் பூர்த்தியாவதற்கு தன்னுடைய உடலையே த்யாகம் செய்த நாள் இன்று. டிசம்பர் 5.

அருட்பெருஞ்சோதி என்று ராமலிங்க வள்ளலார் பெருமானாலும்,அதிமானச ஒளி என்று ஸ்ரீ அரவிந்தராலும் அழைக்கப்பட்ட அருட்பேரொளி ஸ்ரீ அரவிந்தர் உடலில் ஐந்து நாட்கள் பொன்னொளியாக இறங்கிய நாள் இன்று.

மரணம் என்பது பொய்மையின் தற்காலிக வெற்றி தானே அன்றி நிரந்தரமானது அல்ல. மரணம் என்பது வெற்றி கொள்ளக் கூடியதே. தென் தமிழ்க் கோடியில் சித்தர்களாலும், ஞானிகளாலும் மிக ரகசியமாக வளர்க்கப் பட்ட வித்யை இது. ராமலிங்க அடிகள் என்று அழைக்கப்பட்ட வள்ளல் பெருமானும், ஸ்ரீ அரவிந்தரும் சற்றேறத்தாழ சம காலத்தில் அறிவித்த உண்மை இது.

இருபத்து நான்காயிரம் வரிகளில் சாவித்திரி என்கிற தன்னுடைய பெருங்கவிதையில் ஸ்ரீ அரவிந்தர் இந்த பூரண யோகத்தின் அனைத்து அம்சங்களையும் மிக நுட்பமாகச் செதுக்கியிருக்கிறார். "கண்டவர் விண்டிலர்;விண்டவர் கண்டிலர்" என்று வழக்கில் இருந்தாலும் உரை, மனம் கடந்த ஒரு சத்தியப் பெருக்கை, தன்னுடைய யோக சாதனையில் கண்டதை சாவித்திரி எனும் மகா காவியமாக ஸ்ரீ அரவிந்தர் படைத்திருக்கிறார். 'உரை மனம் கடந்த ஒரு பெருவளி அதன் மேல் அரைசு செய்தோங்கும் அருட்பெருஞ்சோதி' என்று வள்ளல் பெருமான் கூறாமல் கூறியதை சாவித்திரி ஒரு பெரும் மந்திரமாக தன்னைப் படிப்பவர்களுக்கு பேரானந்த நிலையை அருளும் தாயின் தயவாக, நமக்கெல்லாம் வழங்கியிருக்கிறார்.

இந்தப் பெருங்கருணைக்கு எப்படி கைம்மாறு செய்ய முடியும்? எப்படி நன்றி செலுத்த முடியும்?


Om Sri Aurobindo Mirra!

Open my mind, my heart, my life

to

your Light, your Love, your Power.

In all things may I see the Divine!

கை கூப்பி, சிரம் தாழ்த்தி வணங்குவதை அன்றிக்கு வேறென்ன செய்ய முடியும்?

ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் இருவருடைய திருவடிகளிலும் எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் சமர்ப்பணம் செய்கிறேன்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய !

ஸ்ரீ அரவிந்தரும் ஒளி பொருந்திய பாதையும்!

இன்று நவம்பர் 24. ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் வெற்றித் திருநாள் (Sidhdhi Day) என்று அழைக்கப்படுகிற தரிசன நாள். 1926 இல் ஸ்ரீ அரவிந்தருக்குள்  ஸ்ரீ கிருஷ்ண சைதன்யம் புகுந்து நிறைந்த தினம். கிருஷ்ணனுடைய ஒளி ஒரு மானுட உடலில் புகுந்து நிறைந்ததான அந்த அனுபவமே ஸ்ரீ அரவிந்தர் அடுத்த 24 ஆண்டுகள் மேற்கொண்ட தவமாக விரிந்து அதிமானச ஒளி Supramental Light ஸ்ரீ அரவிந்தருடைய ஸ்தூல உடலில் தங்கிய அற்புதமாகவும் ஆகியது.
இன்று புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் வழங்கப் பட்ட தரிசன நாள் செய்தியின் முகப்பு. உள்ளே   இந்த நாளுடைய அருமையை, ஸ்ரீ அரவித்தருடைய பூரண யோகத்தை, ஆசிரமம் தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட விதத்தை   சுருங்கச் சொல்வதாகவும்  இருக்கிறது. ஒளி பொருந்திய பாதை (Sunlit Path) என்று ஸ்ரீ அரவிந்த அன்னை சொன்ன ஸ்ரீ அரவிந்தருடைய பூரண யோகம் உருவாக ஒரு துவக்கமாகவும் இருந்த நாள் இது என்றுகூடச் சொல்லலாம்.  


இந்த நாளுடைய அருமை என்ன என்பதைப் பிந்தைய நாட்களில் ஸ்ரீ அரவிந்தர் சொன்னது இப்படி 

    From the beginning of November 1926 the pressure of the Higher Power began to be unbearable. Then at last the great day, the day for which the Mother had been waiting for so many long years, arrived on 24 November. The sun had almost set, and everyone was occupied with his own activity – some had gone out to the seaside for a walk – when the Mother sent round word to all the disciples to assemble as soon as possible in the verandah where the usual meditation was held. It did not take long for the message to go round to all. By six o'clock most of the disciples had gathered. It was becoming dark. In the verandah
on the wall near Sri Aurobindo's door, just behind his chair, a; black silk curtain with gold lace work representing three Chinese dragons was hung. The three dragons were so represented that the tail of one reached up to the mouth of the other and the three of them covered the curtain from end to end. We came to know afterwards that there is a prophecy in China that the Truth will manifest itself on earth when the three dragons (the dragons of the earth, of the mind region and of the sky) meet. Today on 24 November the Truth was descending and the hanging of the curtain was significant.
There was a deep silence in the atmosphere after the disciples had gathered there. Many saw an oceanic flood of Light rushing down from above. Everyone present felt a kind of pressure above his head. The whole atmosphere was surcharged with some electrical energy. In that silence, in that atmosphere full of concentrated expectation and aspiration, in the electrically charged atmosphere, the usual, yet on this day quite unusual, tick was heard behind the door of the entrance. Expectation rose in a flood. Sri Aurobindo and the Mother could be seen through the half-opened door. The Mother with a gesture of her eyes requested Sri Aurobindo to step out first. Sri Aurobindo with a similar gesture suggested to her to do the same. With a slow dignified step the Mother came out first, followed by Sri Aurobindo with his majestic gait. The small table that used to be in front of Sri Aurobindo's chair was removed this day. The Mother sat on a small stool to his right.

Silence absolute, living silence – not merely living but overflowing with divinity. The meditation lasted about forty-five minutes. After that one by one the disciples bowed to the Mother.
She and Sri Aurobindo gave blessings to them. Whenever a disciple bowed to the Mother, Sri Aurobindo's right hand came forward behind the Mother's as if blessing him through the Mother. After the blessings, in the same silence there was a short meditation.
In the interval of silent meditation and blessings many had distinct experiences. When all was over they felt as if they had awakened from a divine dream. Then they felt the grandeur, the poetry and the absolute beauty of the occasion. It was not as if a handful of disciples were receiving blessings from their Supreme Master and the Mother in one little comer of the earth; the significance of the occasion was far greater than that.
It was certain that a Higher Consciousness had descended on earth. In that deep silence had burgeoned forth, like the sprout of a banyan tree, the beginning of a mighty spiritual work. This momentous occasion carried its significance to all in the divine dynamism of the silence, in its unearthly dignity and grandeur and in the utter beauty of its every little act. The deep impress of divinity which everyone got was for him a priceless treasure.
Sri Aurobindo and the Mother went inside. Immediately Datta was inspired. In that silence she spoke: "The Lord has descended into the physical today."
That 24 November should be given an importance equal to that of the birthdays of Sri Aurobindo and the Mother is quite proper because on that day the descent of the Higher Power symbolic of the victory of their mission took place. The Delight consciousness in the Overmind which Sri Krishna incarnated – as Avatar – descended on this day into the physical rendering possible the descent of the Supermind in Matter.
Of this descent Sri Aurobindo wrote on several occasions afterwards. In October 1935 he wrote as follows:
"It [the 24th November 1926] was the descent of Krishna into the physical. "Krishna is not the supramental Light. The descent of Krishna would mean the descent of the Overmind Godhead preparing, though not itself actually bringing, the descent of Supermind and Ananda. Krishna is the Anandamaya; he supports the evolution through the Overmind leading it towards his {{0}}Ananda."[[Cf. Sri Aurobindo, On Himself, p. 136.]]
The names of those disciples who were present on 24 November 1926:
(1) Bijoy Kumar Nag, (2) Nolini Kanta Gupta, (3) K. Amrita, (4) Moni (Suresh Chakravarty), (5) Pavitra (Phillippe Barbier Saint-Hilaire), (6) Barindra Kumar Ghose, (7) Datta (Miss Hodgson), (8) K. Rajangam, (9) Satyen, (10) Purani, (11) Lilavati (Purani's wife), (12) Punamchand, (13) Champa Ben (Punamchand's wife), (14) Rajani Kanta Palit, (15) Dr. Upendra Nath Banerjee, (16) Champaklal, (17) Kanailal Gangulee, (18) Khitish Chandra Dutt, (19) V. Chandra Sekharam, (20) Pujalal, (21) Purushottam Patel, (22) Rati Palit, (23) Rambhai Patel, (24) Nani Bala.
THE LIFE OF SRI AUROBINDO BY A B PURANI  



இந்த நாளைப்பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை சொன்னது இது:

To follow Sri Aurobindo in the great adventure of his integral Yoga, one needed always to be a warrior, now that he has left us physically, one needs to be a hero.
*

-The Mother

(A message given by the Mother for 24 November 1952 on occasion of siddhi day)
Words of The Mother vol.15, pg.197. 

ஸ்ரீ அரவிந்த சரணம் மம  மா மிரா சரணம் மம 

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிகளைச் சரண் அடைகிறேன். ஸ்ரீ அரவிந்தருடைய திருவடிகளைச் சரண் அடைகிறேன்.   

ஆகஸ்ட் 15! ஸ்ரீ அரவிந்தர் பிறந்த நாளும் கூட!

சுற்றி நில்லாதே பகையே! துள்ளி வருகுது வேல்!

"O India, land of Light and spiritual knowledge, wake up to your true mission in the world. Show the way to union and harmony."
-ஸ்ரீ அரவிந்த அன்னை.

இன்றைக்கு ஸ்ரீ அரவிந்தருடைய பிறந்தநாள்! புதுச்சேரி ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்தில் தரிசனநாள் செய்தியாக இன்றைக்கு வழங்கப்பட்ட  செய்தி இது.
 

வெள்ளத்தனைய மலர் நீட்டம் - மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு.

இப்படி ஒருவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயேசொல்லிவிட்டுப் போனது செலக்டிவாகமறந்து போய்விடும். அய்யன் திருவள்ளுவருக்கு நூற்று முப்பத்து மூன்றடிக்குச் சிலைவைத்து விட்டதுபோதாதா?சிரமப்பட்டு, ஆவர் எழுதிய ஆயிரத்து முன்னூற்று முப்பது குறளையும் படித்துக் கொண்டிருக்கவேண்டுமா என்ன?

ஆனால், இப்படியெல்லாம் அருமை தெரியாமல் இருந்துவிடுவார்களோ, எவன் எப்படி போனால் நமக்கென்ன என்றோ இருந்துவிடாமல், வீராவேசத்தோடு சுதந்திரப் போராட்டத்தில் ஆயிரம் ஆயிரம்தியாகிகள் பங்கேற்றார்கள், ஜனங்களைத் திரட்டினார்கள், "ஆயிரம் உண்டிங்கு சாதி-இதில் அந்நியன்வந்து புகல் என்ன நீதி?"என்று, சொந்தச் சகோதரர்களுக்குள்ளே பஞ்சாயத்துப் பண்ண வரும்நரிகளையும், அடக்குமுறையைக் கையிலெடுத்த அந்நிய அரசையும் எதிர்த்துப் போராடினார்கள்.

பிரிட்டிஷ் சாம்ராஜியத்தில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை என்று எப்போது சொல்ல ஆரம்பித்தார்களோ, அப்போதே அஸ்தமனமும் ஆரம்பமாகி விட்டது. சந்தையைப் பிடிப்பதில்வியாபாரிகளுக்குள்ளே நடந்த சண்டையில், நரிகளைப் போல, பிரித்து ஆளுவதையே தங்களுடையமூலதனமாகக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, தோற்றுப் பின்வாங்க வேண்டி வந்தது. ஆண்டுவந்தபகுதிகளுக்குச் சுதந்திரம் வழங்க வேண்டிய நிர்பந்தமும் வந்தது.

கடந்தகாலத்தில் நடந்தது என்ன என்பதைத் தெரிந்துகொள்ள கொஞ்சம் முயற்சி, வாசித்தல் இதெல்லாம் தேவையா என்றிருப்பவர்களுக்காக, இங்கே சுருக்கமாக.

நாடு பிரிவினையாவதை காந்தியுமே விரும்பவில்லை. ஆனால், அவரது பிரியத்திற்குப் பாத்திரமாக இருந்தநேரு அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. பிரிவினையை ஒப்புக் கொண்டு, ஆகஸ்ட் பதினான்காம் தேதிநாட்டுக்கு விடுத்த முதல் செய்தி, "இந்தியா இந்த நாளுக்காக, விதியோடு செய்துகொண்ட ஒப்பந்தம்...." என்று ஆரம்பித்தது. பதினைந்து வருடங்களுக்குப் பின்னால், சீன ஆக்கிரமிப்பின்போது, அக்சாய்ச்சின்பகுதியைச் சீனர்கள் ஆக்கிரமித்துக் கொண்டதைப் பற்றி சர்வ அலட்சியமாக 'ஒரு புல் கூட முளைக்காதகட்டாந்தரை' என்று அதே நேரு பாராளுமன்றத்தில் சொல்ல முடிந்தது. 

அதே நேரம் திருச்சி வானொலியில், விடுதலைப் போராட்டத்தில், காந்தியின் வருகைக்கு முன்னால், தீவீரமாகப் போராட்டத்தை நடத்தியவர்களுள் ஒருவரான ஸ்ரீ அரவிந்தர் உரையாற்றியதும் நடந்தது. அகண்ட பாரதத்தைத் தன்னுடைய தாயாகவே வழிபட்ட தேசபக்தரான ஸ்ரீ அரவிந்தர், அரசியலில் இருந்துஒதுங்கி ஆன்மீக சாதனையில் ஈடு படுத்திக் கொண்டிருந்த வேளையிலும் கூட, வெள்ளையனே வெளியேறுஇயக்கத்திற்கு முன்னால், சர் ஸ்டாஃபொர்ட் கிரிப்ஸ் கமிஷனின் பரிந்துரைகளில், சாதகமான அம்சம்கள்நிறைய இருக்கிறது, ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அன்றைய காங்கிரஸ் தலைமைக்குச் சொன்னபோதிலும், காங்கிரஸ் தலைமை அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னால் நாடு பிரிவினைக்குள்ளாவதற்குமுன்னோடியாகவே காங்கிரஸின் நிராகரிப்பு அமைந்து போனதில் ஸ்ரீ அரவிந்தருக்கு மிகுந்த வருத்தமே.

ஆனாலும், ஆகஸ்ட் பதினான்காம் தேதி, திருச்சி வானொலியில் அவர் ஆற்றிய உரை இப்படிஆரம்பிக்கிறது:

August 15th, 1947 is the birthday of free India. It marks for her the end of an old era, the beginning of a new age. But we can also make it by our life and acts as a free nation an important date in a new age opening for the whole world, for the political, social, cultural and spiritual future of humanity. August 15th is my own birthday and it is naturally gratifying to me that it should have assumed this vast significance. I take this coincidence, not as a fortuitous accident, but as the sanction and seal of the Divine Force that guides my steps on the work with which I began life, the beginning of its full fruition. Indeed, on this day I can watch almost all the world-movements which I hoped to see fulfilled in my lifetime, though then they looked like impracticable dreams, arriving at fruition or on their way to achievement. In all these movements free India may well play a large part and take a leading position. The first of these dreams was a revolutionary movement which would create a free and united India. India today is free but she has not achieved unity. At one moment it almost seemed as if in the very act of liberation she would fall back into the chaos of separate States which preceded the British conquest. But fortunately it now seems probable that this danger will be averted and a large and powerful, though not yet a complete union will be established. Also, the wisely drastic policy of the Constituent Assembly has made it probable that the problem of the depressed classes will be solved without schism or fissure.

But the old communal division into Hindus and Muslims seems now to have hardened into a permanent political division of the country. It is to be hoped that this settled fact will not be accepted as settled for ever or as anything more than a temporary expedient. For if it lasts, India may be seriously weakened, even crippled: civil strife may remain always possible, possible even a new invasion and foreign conquest. India’s internal development and prosperity may be impeded, her position among the nations weakened, her destiny impaired or even frustrated. This must not be; the partition must go.

Let us hope that that may come about naturally, by an increasing recognition of the necessity not only of peace and concord but of common action, by the practice of common action and the creation of means for that purpose. In this way unity may finally come about under whatever form — the exact form may have a pragmatic but not a fundamental importance. But by whatever means, in whatever way, the division must go; unity must and will be achieved, for it is necessary for the greatness of India’s future. Another dream was for the resurgence and liberation of the peoples of Asia and her return to her great role in the progress of human civilisation. Asia has arisen; large parts are now quite free or are at this moment being liberated: its other still subject or partly subject parts are moving through whatever struggles towards freedom. Only a little has to be done and that will be done today or tomorrow. There India has her part to play and has begun to play it with an energy and ability which already indicate the measure of her possibilities and the place she can take in the council of the nations.The third dream was a world-union forming the outer basis of a fairer, brighter and nobler life for all mankind. That unification of the human world is under way; there is an imperfect initiation organised but struggling against tremendous difficulties. But the momentum is there and it must inevitably increase and conquer. Here too India has begun to play a prominent part and, if she can develop that larger statesmanship which is not limited by the present facts and immediate possibilities but looks into the future and brings it nearer, her presence may make all the difference between a slow and timid and a bold and swift development. A catastrophe may intervene and interrupt or destroy what is being done, but even then the final result is sure. For unification is a necessity of Nature, an inevitable movement. Its necessity for the nations is also clear, for without it the freedom of the small nations may be at any moment in peril and the life even of the large and powerful nations insecure. The unification is therefore to the interests of all, and only human imbecility and stupid selfishness can prevent it; but these cannot stand for ever against the necessity of Nature and the Divine Will. But an outward basis is not enough; there must grow up an international spirit and outlook, international forms and institutions must appear, perhaps such developments as dual or multilateral citizenship, willed interchange or voluntary fusion of cultures. Nationalism will have fulfilled itself and lost its militancy and would no longer find these things incompatible with self-preservation and the integrality of its outlook. A new spirit of oneness will take hold of the human race.Another dream, the spiritual gift of India to the world has already begun. India’s spirituality is entering Europe and America in an ever increasing measure. That movement will grow; amid the disasters of the time more and more eyes are turning towards her with hope and there is even an increasing resort not only to her teachings, but to her psychic and spiritual practice. The final dream was a step in evolution which would raise man to a higher and larger consciousness and begin the solution of the problems which have perplexed and vexed him since he first began to think and to dream of individual perfection and a perfect society. This is still a personal hope and an idea, an ideal which has begun to take hold both in India and in the West on forward-looking minds. The difficulties in the way are more formidable than in any other field of endeavour, but difficulties were made to be overcome and if the Supreme Will is there, they will be overcome. Here too, if this evolution is to take place, since it must proceed through a growth of the spirit and the inner consciousness, the initiative can come from India and, although the scope must be universal, the central movement may be hers. Such is the content which I put into this date of India’s liberation; whether or how far this hope will be justified.

இன்று ஸ்ரீ அரவிந்தருடைய பிறந்த நாள், மன உருக்கத்தோடு, தன்னுடைய பிறந்த நாளன்று வந்த இந்திய சுதந்திரத்தை, இறைவன் தனக்கு அளித்தபெரும் கொடை என்றே கொண்டாடும் தெய்வப்பெருந்தகை ஸ்ரீ அரவிந்தரை வணங்குவோம்!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய 
ஸ்ரீ அரவிந்த சரணம் மம 

மீண்டும் சந்திப்போம்.
 
.

"ஜயமுண்டு பயமில்லை மனமே !"

கபாலி சாஸ்திரியார், பிறந்தது சென்னையில், 1886 ஆம் வருடம், செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி. திருமயிலை கபாலீஸ்வரனுடைய பெயரையே, மகனுக்குச் சூட்டி மகிழ்கிறார் விஸ்வேஸ்வர சாஸ்திரிகள். கன்னிமாரா நூலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். ஐந்து வயதிலேயே மகனுக்கு ஸ்ரீ வித்யா மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தார். சம்ஸ்க்ருதம்,பூஜை பாராயணம், ஜபம் எல்லாவற்றையும் தந்தையிடமிருந்து கற்றுக் கொண்ட கபாலி சாஸ்திரி, பன்னிரண்டு வயது நிறைவதற்கு உள்ளாகவே, வால்மீகி ராமாயணம் முழுவதையும் பன்னிரண்டு தடவை பாராயணம் செய்து முடித்து விட்டார்.


மயிலாப்பூர் ஹிந்து ஹை ஸ்கூலில் தான் கல்வி. ரைட் ஹானரபில் V S ஸ்ரீனிவாச சாஸ்திரியார் தலைமை ஆசிரியர். அந்த நாட்களில், ஸ்ரீனிவாச சாஸ்திரியாரது ஆங்கில மொழியின் ஆளுமை ரொம்ப பிரசித்தம். அப்படிப்பட்டவரது மாணவர், ஆங்கில வழிக் கல்வியிலும் சிறந்து விளங்கியதில், வியப்பு ஒன்றுமில்லை தான்.

காவ்ய கண்ட கணபதி முனி என்றும், வாசிஷ்ட கணபதி முனி என்றும் "நாயனா" என்று அன்போடு ரமணர் அழைத்த மாதிரியே, அன்பர்களால் அழைக்கப் பட்ட மகா தபஸ்வி, இளம் கபாலி சாஸ்திரிக்கு, வேதம், உபநிஷத்துக்களின் உட்பொருளை விளங்கச் சொல்லிக் கொடுக்கிறார். ரமண மகரிஷியின் தரிசனமும், ஹஸ்த தீக்ஷயும் கிடைக்கிறது. ரமணரின் "நான் யார்" என்கிற விசார மார்கத்திலும் நல்ல பரிச்சயம் ஏற்படுகிறது.

ஸ்ரீ ரமணருடன் நாயனா 

ஆனாலும் கபாலி சாஸ்திரியாரின் தாகம் தீருவதாயில்லை. ரமண வழி முடிவானதாக அவருக்குத் தெரியவில்லை. அந்த நாட்களில் ஸ்ரீ அரவிந்தர் "ஆர்யா" என்ற பத்திரிகையில் The Secret of Veda, Life Divine என்ற தலைப்புகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார். ஆர்யா பத்திரிகையில் ஸ்ரீ அரவிந்தர் எழுதி வந்ததைப் படித்த கபாலி சாஸ்திரியாருக்குப் புதிய தரிசனம் கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். அது வரை வேதத்தின் உட்பொருளாக, மரபு ரீதியாகக் காலம் காலமாகச் சொல்லப் பட்டதற்கும் அப்பால், புதிய சிந்தனை இழை ஸ்ரீ அரவிந்தரிடமிருந்து தொடங்குவதைத் தன்னை அறியாமலேயே, கபாலி சாஸ்திரியார் உணர்ந்த தருணங்கள் அவை.


ஸ்ரீஅரவிந்தர் 

ஸ்ரீ அரவிந்தர், பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரியில் இருக்கிறார் என்பது தெரியும். அரசியலை விட்டு ஒதுங்கி ஆன்மீக சாதனையில் தீவீரமாக இருக்கிறார் என்பதும் தெரியும். அவரைச் சந்திக்க வேண்டும் என்கிற ஆர்வம். எப்படி, எப்போது என்பது தான் தெளிவாகத் தெரியவில்லை. அதற்கும் ஒருசரியான தருணத்தை, இறைவன் ஏற்படுத்திக் கொடுக்கிறான்!

1917 ஆம் ஆண்டில் சங்கர ஜெயந்தியை ஒட்டிப் பாண்டிச்சேரிக்கு வருகிற வாய்ப்பு, கபாலி சாஸ்திரியாருக்குக் கிடைக்கிறது. மகாகவி சுப்ரமணிய பாரதியும் அந்த நேரத்தில் பாண்டிச்சேரியில் தான் இருந்தார். 


ஏற்கெனெவே, திருவல்லிக்கேணியிலும், நண்பர்கள் மூலமாகவும் நன்கு அறிமுகமானவரான, பாரதியைச் சந்திக்க முடியுமோ? பாரதிக்கும், ஸ்ரீ அரவிந்தருக்கும் நெருங்கிய பழக்கம் இருக்கிறதென்று சொல்லக் கேள்வி. பாரதியார், ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க உதவக் கூடுமோ?

பாரதியார் புதுவையில் தங்கியிருந்த வீட்டைத் தேடி வருகிறார் கபாலி சாஸ்திரி. மாடிப் படிகளேறி வரும் போதே மகாகவி பெரும் குரலில் பாடிக் கொண்டிருந்தார்:

"ஜயமுண்டு பயமில்லை மனமே! - இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு"

பரஸ்பர குசலம் விசாரித்துக் கொண்ட பிறகுபாரதி சென்னை நண்பர்கள் சிலரைப் பற்றி விசாரித்து விட்டு மறுபடி பாட ஆரம்பித்தார்:

"குருவே! பரமன் மகனே
குஹையில் வளரும் கனலே!"

கபாலி சாஸ்திரிக்கு பெரிய ஆச்சரியம்குகன் என்ற சொல்தகராகாசமாகிய ஹ்ருதயமென்னும் குகையில் வளரும் கனல்குமரனான முருகனையும் குறிப்பதுவேதத்தின் மிக ஆழ்ந்த கருத்தாக இருப்பதுஇதை எப்படிக் கண்டீர்கள் என்று பாரதியிடம் கேட்கிறார்.

"ஸ்ரீமான் அரவிந்த கோஷுடன் ரிக் வேத ஆராய்ச்சி சிலகாலம் பண்ணிக் கொண்டிருந்த போது கண்டது இது" என்கிறார் பாரதி.

ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிய பிரஸ்தாபம் எழுந்தவுடனேயேகபாலி சாஸ்திரியார்தான் அவரைச் சந்திக்கும் ஆர்வத்திலேயே பாண்டிச்சேரிக்கு வந்திருப்பதையும் சொல்லிபாரதி அதற்கு உதவ முடியுமா என்று கேட்கிறார். அந்த கால கட்டங்களில்ஸ்ரீ அரவிந்தர்சாதாரணமாக எவரையும் சந்திப்பதில்லைஎன்றாலும்ஸ்ரீ அரவிந்தருடன் தங்கியிருக்கும் ஒரு அன்பருக்குச் சீட்டுக் கொடுக்கிறார் பாரதிஇன்னார்ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்கிற மாதிரி.
அன்று மாலையேஆறு மணிக்கு ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்கஅனுமதியும் அழைப்பும் கிடைக்கிறது!

கவிதையோடு படமும் இணையத்தில் கிடைத்தது நன்றி


இன்றைய த்யானத்திற்கான ஸ்ரீ அரவிந்தரின் அமுத மொழி:

"Not to impose one's mind and vital will on the Divine but to receive the Divine's will and follow it, is the true attitude of sadhana. Not to say, "This is my right, want, claim, need, requirement, why do I not get it?" but to give oneself, to surrender and to receive with joy whatever the Divine gives, not grieving or revolting, is the better way. Then what you receive will be the right thing for you."

- Sri Aurobindo [SABCL, 23:597]

அவுட்லுக் வார இதழில் காங்கிரஸ் கட்சி மஹாத்மா காந்திக்கும், சுதந்திரப் போராட்டத்திற்கும் தாங்களே மொத்தக் குத்தகைதாரர் என்கிற மாதிரி, ஸ்ரீ அரவிந்தர் முதலான தலைவர்களை மறந்து போன அவலத்தைப் பற்றி ஒரு சிறு கட்டுரை வெளியாகியிருக்கிறது.

இங்கே படிக்கலாம் 

நாளை மறுநாள் ஆகஸ்ட் 15  ஸ்ரீ அரவிந்தருடைய பிறந்தநாள்! அதை ஒட்டி 2009 ஆகஸ்டில் எழுதியதன் மீள்பதிவு.

காரடையான் நோன்பு! ஒளி பொருந்திய பாதை!

இன்று காரடையான் நோன்பு!   

உருகாத வெண்ணையும்ஓரடையும் நான் தருவேன் என்று சொல்லிப் பெண்கள், இனிப்பு அடை , கொழுக்கட்டை, வெண்ணெய் முதலானவற்றைப் படையலிட்டு, தங்களுடைய மாங்கல்ய பலம் நீடித்திருக்ப் பிரார்த்தனை செய்து கொள்ளும் நாள். ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்றெல்லாம் வசனம் பேசிக் கொண்டிராமல், ஆணும் பெண்ணும் சேர்ந்தே வாழ வேண்டியது தான் வாழ்க்கைஎன்பதைக் கொஞ்சம் நினைவு படுத்துகிற நாளும் கூட!

இந்த காரடையான் நோன்பு என்பது தமிழ் நாட்டிலும்
, கர்வா சௌத் என்கிற பெயரில் வடக்கிலும்பெண்கள் தங்களுடைய மாங்கல்ய பலம் நீடித்திருக்க வேண்டும், கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையோடு மேற்கொள்கிற விரதம் தான் இது.  

கதையாகச் சொல்லி, அதன் உட்பொருளைப் புரிந்து கொள்வதற்காகவே அதை ஒரு சடங்காகவும், விரதமாகவும் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்த வழி வழியாகத் தொடருகிற மரபு. காலப் போக்கில், கதைகள் அங்கே அங்கே கொஞ்சம் திரிந்து, வெறும் சடங்காக மட்டுமே குறுகிப் போய் நிற்கிறது.

மாசியும் பங்குனியும் சந்திக்கும் வேளையில்அதாவது மாசி மாதம் முடிவடைகிற நேரத்திற்கும்,பங்குனி மாதம் பிறக்கும் நேரத்திற்கும் இடைப்பட்ட வேளையில்திருமணமான பெண்கள் விரதம் இருந்துகார் அரிசியில் செய்யப்பட்ட இனிப்பு அடையும்வெண்ணையும் நிவேதனம் செய்துநோன்புச் சரட்டினைக் கட்டிக்கொள்கின்றனர்சரடைக் கட்டிக்கொள்ளும் போது பிரார்த்தனையாக'உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் தருவேன்ஒருக்காலும் என்னைவிட்டு என் கணவர் பிரியாதிருக்க வேண்டும்' என்று வேண்டிக் கொள்வது மரபு.

அப்புறம், காலப்போக்கில் அங்கே அங்கே கொஞ்சம் இடைச் செருகல்கள் , இது காமாக்ஷியை நினைத்துச் செய்யப் படுவது...அப்படி இப்படி என்று localise பண்ணுவதும், பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்கிற ஒரு தரப்பு இதெல்லாம் வெறும் மூடப் பழக்கங்கள், பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்வதற்காக, இட்டுக் கட்டிய கட்டுக் கதை என்று கீறல் விழுந்த கிராமபோன் ரெகார்ட் போல சொல்லிக் கொண்டிருப்பதுமாகச் சுருங்கிப் போயிருக்கிறது.


" மாசிச் சரடு பாசி படரும்என்பதற்கேற்பபுதியமாங்கல்யச் சரடை அன்றைய தினம் திருமணமான பெண்கள் அணிந்து கொள்வதும்கன்னிப் பெண்கள் தங்கள் மனதிற்கேற்ற மணவாளன் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வதும் நம்முடைய மரபு.

மாங்கல்ய பலம் வேண்டிப் பெண்கள் மேற்கொள்ளும் இந்த விரதத்திற்குப் பின்னணியாக ,மஹாபாரதத்தில் வரும் சத்தியவான் சாவித்திரி கதை இருக்கிறதுசாவித்திரி என்றவுடனேயே எமனிடமிருந்து கணவனைப் போராடி மீட்ட பெண் என்ற அளவுக்காவது நம்மில் பலருக்கு அந்தக் கதை கொஞ்சம் தெரிந்திருக்கும்.

மத்ரா தேசத்தின் அரசன் அஸ்வபதி அவனது ஒரே மகள் சாவித்திரிதிருமண வயது நெருங்கியதும் தகுந்த மணவாளனைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிற சுதந்திரத்தை மகளுக்கு வழங்குகிறார் தந்தை.மகளும்தனக்குப் பொருத்தமான மணாளனைத் தேடி வருகையில்அழகிய வாலிபன் ஒருவனைக் காண்கிறாள்அவன்சத்தியவானுடைய பண்பினால் கவரப்படும் சாவித்ரியும்சாவித்ரியின் அன்பினால் ஈர்க்கப்பட்ட சத்தியவானும் ஒருவரை ஒருவர் யாரென்று அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

சால்வ தேசத்தின் அரசன் த்யுமத்சேனன் உறவினர்களுடைய சதியால் அரசிழந்துபார்வையும் இழந்துதன்னுடைய மனைவி மற்றும் ஒரே மகனான சத்தியவானுடன்கானகத்தில் வசித்து வருகிறார் என்பதை சாவித்ரி அறிந்து கொள்கிறாள்.

தந்தையிடம் திரும்பும் சாவித்திரி சத்தியவான் தான் தன் கணவனாக வரிக்கப் பட்டவன் என்பதைத் தெரிவிக்கிறாள்விசாரிக்கும் போதுசத்தியவானுடைய ஆயுள் இன்னும் ஒரு வருட காலம் தான் என்பது தெரிய வருகிறதுசாவித்ரியின் தாய் கலங்குகிறாள்மகளை முடிவை மாற்றிக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறாள்ஆனால்சாவித்திரிசத்தியவானைத் தவிர வேறொருவரைக் கணவனாகக் கனவிலும் கூட ஏற்க முடியாது என்று உறுதியாக இருக்கிறாள்.

சாவித்திரி விருப்பப் படியே அவளுக்கும் சத்தியவானுக்கும் திருமணம் நடக்கிறதுகணவனோடு கானகத்தில் சந்தோஷமாக வாழ்கிறாள்அந்தக் குறிப்பிட்ட தருணமும் நெருங்குகிறதுஆம்ஒரு வருடம் நிறைகிறதுகணவனும் மனைவியுமாககானகத்தில் கனிகிழங்குகளை சேகரிக்கப் போகையில்கூற்றுவன் சத்தியவானுடைய உயிரைப் பறித்துச் செல்கிறான்.

சாவித்திரி மனம் கலங்காமல் கூற்றுவனைப் பின் தொடர்கிறாள் உனது நாள் இன்னமும் இருக்கிறது,திரும்பிப் போய் விடு என்று கூற்றுவன் நயமாகவும்பயமாகவும் சொல்வதைக் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளாமல்தன்னுடைய கணவனுடைய உயிரை விட்டுப் பிரிய மாட்டேன்தொடர்ந்தே வருவேன் என்கிறாள். 

இடையில்பல உலகங்களைக் கடந்தும் சாவித்ரி உறுதியாக இருப்பதைப் பார்க்கும் கூற்றுவன் பிடிவாதத்தை விட்டு விடுநீ வேண்டிய வரங்களைத் தருகிறேன்திரும்பப் போய் விடு என்கிறான்.என்ன வரம் வேண்டுமானாலும் தருவீரா என்கிறாள் சாவித்திரிஎதுவானாலும் கேள்தருகிறேன் என்கிறான் கூற்றுவன்.

வரமோவாக்கோ எதுவானாலும்தருகிறேன் என்று சொன்னால் அதை நிறைவேற்றுகிற தெய்வங்களும்மனிதர்களும்ஏன் மிருகங்களும் கூட வாழ்ந்த புண்ணிய பூமி இது. என்ன சாபத்தினாலோவாக்குறுதி என்பது மீறப் படுவதற்காகவேஏமாற்றுவதற்காகவே என்று செயல்படும் அரசியல் கட்சிகள், தலைவர்கள்,  கொஞ்சம் கூடப் பொறுப்போ, அக்கறையோ இல்லாத அதிகார வர்க்கத்தையும், எங்கே என்ன நடந்தால் நமக்கென்ன என்று விட்டேற்றியாக இருந்து விட்டுப் போய்விடுகிற மக்களையும்  கொண்டதாகச் சிறுமைப் பட்டுப் போயிருக்கிறது இன்று.

தன் கணவனோடு கூடி நூறு வீரமும் கீர்த்தியும் நிறைந்த பிள்ளைகளையே வரமாகத் தரும் படி சாவித்திரி வேண்டுகிறாள்.

' தந்தேன்' என்றான் எமன்

பாசக்கயிற்றில் சிக்குண்டிருந்த சத்தியவானுடைய உயிர் மீண்டும் அவனது உடலில் புகுந்தது .சாவித்ரிக்கு அளிக்கப்பட்ட வரம்மாமனாருடைய பார்வையை மீட்டுக் கொடுக்கிறதுஇழந்த ராஜ்ஜியம் மீண்டு வருகிறது என்று இந்தக் கதை முடிகிறது.

மஹாபாரதத்தில்போகிற போக்கில் சொல்லப் படும் நூற்றுக் கணக்கான கதைகளுள் ஒன்றான இந்த சத்தியவான்-சாவித்திரி கதையினுள் ஒரு மிகப் பெரிய ஆன்மீக ரகசியம் பொதிந்து கிடப்பதைக் கண்டார் ஸ்ரீ அரவிந்தர்இந்தக் கதைவேதங்களின் திரண்ட உட்பொருளைசிருஷ்டியின் ரகசியத்தை ஒரு சங்கேதமாகக் குறிப்பிடுவதாகவே ஸ்ரீ அரவிந்தர் கண்டார். அதன் விளைவாக, சாவித்திரி மகாகாவியம் சற்றேறக் குறைய 24000 வரிகளில்  உருவானது. 

சாவித்திரி மகா காவியத்தை இணையத்தில் படிக்க இங்கே!

சவித்ரு என்பது சூரியனின் பன்னிரு திருநாமங்களுள் ஒன்று சாவித்திரிசூரியனின் மகளாகவே கருதப்படுகிறாள்பன்னிரண்டே மாதங்களில்கணவனது ஆயுள் முடிந்து போகும் என்பது தெரிந்திருந்தும்மனம் கலங்காது உறுதியுடன் மரணத்தை எதிர்த்து வெற்றி கொள்கிறாள்அன்பே அவளது பலமாக இருப்பதைக் கதையின் ஒவ்வொரு வரியிலும் காண முடியும்.

ஸ்ரீ அரவிந்தர் 1901 வாக்கில் பரோடாவில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே இந்தக் கதையை மையமாக வைத்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார்பின்னாளில் சாவித்ரியே அவரது தவமாகவும்,யோக சாதனையாகவும் ஆனதுஏறத்தாழ முப்பத்தைந்து கால ஞான வேள்வியாக, "சாவித்ரிஸ்ரீ அரவிந்தரின் பெரும் காவியமாக உருவெடுத்தது1930 களில் "சாவித்திரிஒரு கதையும் அதன் தரிசனமும் என்று வெளியானது 
தொடர்ந்து மெருகேறிSAVITRI - A Legend and Symbol என ஏறத்தாழ 24000 வரிகளில் உருவானது.

"நான் சாவித்ரியை மனதளவில் துவங்கினேன்ஒவ்வொரு முறையும் நான் மேல் நிலையை அடையும்போது அந்த நிலையிலிருந்து மறுபடியும் எழுதினேன்உண்மையில் நான் சாவித்ரியை ஒரு செய்யுள் என்ற உணர்வில் எழுதி முடிக்க விரும்பவில்லைஆனால்ஒரு செய்யுளை ஒருவரின் யோகநிலையிலிருந்து எப்படியெழுதி அதை ஒரு சிறந்த சிருஷ்டியாக்க முடியும் என்ற மனதுடன் செயல்பட்டேன்."

என்று ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரியை எழுத ஆரம்பித்த அனுவவத்தை விவரிக்கிறார்ஏறத்தாழ நாற்பது ஆண்டு கால யோக சாதனையின் வெளியீடாக, "சாவித்திரிஎன்னும் பெரும் காவியம் இருக்கிறதுஇது வெறும் காவியம் என்றோஎழுதியவரின் அனுபவக் குறிப்பு என்கிற அளவோடோகுறுகி நின்று விடாமல்அதை படிக்கிற நமக்கும் ஒரு உன்னதமான ஆன்மீக அனுபவத்தை அளிக்கிற மந்திர சித்தியையும் கொண்டிருக்கிறது.

ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்ட கவிஞர்கள் கூட, இவ்வளவு விரிவாகக் கவிதை இயற்றியதில்லை! மானுடம் சந்தித்த தத்துவார்த்தக் கேள்விகள் அத்தனையையும் ஒரு சேரத் திரட்டி விடை காண முயற்சித்த நூல் எதுவுமில்லை.  வெறும் புனைவு, ஊகம் என்பதில் இருந்து விலகி, இங்கே சாவித்ரி மகாகாவியம், ஸ்ரீ அரவிந்தரின் தவத்தில் விளைந்த அனுபவங்களின் திரட்டு என்றே சொல்லக் கூடிய அளவில் நம் முன்னால் விரிந்து கிடக்கிறது.  ஆன்மீக அனுபவத்தைப் பெற விரும்பும் எவருக்கும், உதவுகிற படிக்கட்டுக்களாக சாவித்திரி மகா காவியம் இருக்கிறது.


On Savitri 

If you are depressed, if you feel miserable, if you do not succeed in what you do or else if what happens is always the contrary of what you expect, however you try - if it has come to such a pass that you lose your temper, life becomes disgusting and you are unhappy, then immediately take Savitri and, after a moment's concentration, open it at any page and read. You will see that all your misery disappears like smoke. And you will have the strength to overcome the worst sorrows; you will no longer feel that which was tormenting you. Instead you will feel a strange happiness, a reversal of consciousness along with the energy and force to conquer everything, as though there were nothing impossible. And you will feel this inexhaustible joy that purifies all. 
  
Read just a few lines and that is enough to establish the contact with your inmost being. Such is the extraordinary power of Savitri.
Or else, after having read some lines, if you concentrate deeply, then too you will find the solution to what was tormenting you. You have only to open Savitri just at random without thinking and you will have the answer to your problems. Do this with faith and simplicity, the result is certain.”

The Mother
5-11-1967

 
சாவித்திரி காவியத்தைப் படிப்பதே ஒரு உன்னதமான அனுபவம் என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை! ஸ்ரீ அரவிந்தர் அரும்பாடு பட்டு இயற்றிய தவம், யோக சாதனைகளின் அனுபவம் சாவித்திரி காவியத்தின் ஒவ்வொரு வரியிலும் முழுமையாக நிறைந்திருக்கிறது. படிக்க ஆரம்பிக்கும்போது, நம்மிடம் மூடிக் கிடக்கும் கதவுகள் திறப்பதையும், அதுவரை விடைதெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த கேள்விகளுக்கு விடை வரிசையாகக் கிடைப்பதையும், மனச்சோர்வும் சலிப்பும் நிறைந்து நிராதரவாக நிற்கிற தருணங்களில், உற்ற துணையாகவும் பேராதரவாகவும் இருந்து வழி நடத்துவதையும், அனுபவத்தில் தான் கண்டுகொள்ள முடியும். அப்படி ஸ்ரீ அரவிந்தரது யோகத்தைத் துணைகொண்டு நடக்கும் பாதையை ஒளி பொருந்திய பாதை (Sunlit Path) என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.

காரடையான் நோன்பு என்பது, வெறும் சடங்கு அல்ல! மரணமில்லாப் பெருவாழ்வு என்று திருவருட்ப்ரகாச வள்ளலார் பெருமான் சொல்கிறாரே, அந்த மரணமில்லாப் பெருவாழ்வின் திறவுகோலும் கூட! வெறும் சடங்கு என்ற அளவோடு குறுகி நின்றுவிடாமல், அதன் உள்ளே பொதிந்துகிடக்கும் நுட்பத்தை அறிந்துகொள்ளத் தயாராக இருக்கும் எவருக்கும் ஒளிபொருந்திய பாதையாக முன்னே இருக்கிறது. 

பயணம் செல்லத் தயார் தானே!


**இது ஒரு மீள்பதிவு. கொஞ்சம் மாற்றி எழுதப்பட்டது.