Showing posts with label தரிசனநாள் செய்தி. Show all posts
Showing posts with label தரிசனநாள் செய்தி. Show all posts

ஏப்ரல் 24 :: தரிசன நாள் செய்தி!.

ஏப்ரல் 24! ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்க வந்த நாள்! 1920 ஏப்ரல் 24 அன்று பாண்டிச்சேரிக்குத் திரும்பிய அன்னை, ஸ்ரீ அரவிந்தருடைய  சேவையிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டதன் தொடக்கமாக, ஒவ்வொரு வருடமும் பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் தரிசனநாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. தரிசன நாளன்று அன்னையின் செய்தியும் மலர்ப்பிரசாதமும் அடியவர்களுக்குக் கிடைக்கும் என்பது இந்தப்பக்கங்களுக்கு வருகிறவர்கள் அறிந்த செய்திதானே!


 

 


ஸ்ரீ அரவிந்த அன்னையின் செய்தியைச் சிந்தித்து இருப்பதே இன்றைய தியானமாகவும்!

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே 
  

ஸ்ரீ அரவிந்தர் திருவடிகளைச் சிந்திக்க வேண்டிய தருணம் இது!

அருட்பெரும் ஜோதியாம் பொன்னொளியை பூமிக்குக்  கொண்டு வருவதற்காக பகவான் ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய உடலையே அர்ப்பணித்து மகாசமாதிக்கு எழுந்தருளிய நாள் இன்று! டிசம்பர் 5. புதுச்சேரி ஸ்ரீஅரவிந்தாசிரமத்தில் அடியவர்கள் கூடி சமாதி அருகே கூட்டுத் தியானம் செய்கிற, தரிசன நாளாகவும்  இன்று டிசம்பர் 5 இருக்கிறது. இன்றைய தரிசன நாள் செய்தியாக!


ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய யோகம் பூர்த்தியாவதற்கு தன்னுடைய உடலையே த்யாகம் செய்த நாள் இன்று. டிசம்பர் 5.


அருட்பெருஞ்சோதி என்று ராமலிங்க வள்ளலார் பெருமானாலும்,அதிமானச ஒளி என்று ஸ்ரீ அரவிந்தராலும் அழைக்கப்பட்ட அருட்பேரொளி ஸ்ரீ அரவிந்தர் உடலில் ஐந்து நாட்கள் பொன்னொளியாக இறங்கிய நாள் இன்று.

மரணம் என்பது பொய்மையின் தற்காலிக வெற்றி தானே அன்றி நிரந்தரமானது அல்ல. மரணம் என்பது வெற்றி கொள்ளக் கூடியதே. தென் தமிழ்க் கோடியில் சித்தர்களாலும், ஞானிகளாலும் மிக ரகசியமாக வளர்க்கப் பட்ட வித்யை இது. ராமலிங்க அடிகள் என்று அழைக்கப்பட்ட வள்ளல் பெருமானும், ஸ்ரீ அரவிந்தரும் சற்றேறத்தாழ சம காலத்தில் அறிவித்த உண்மை இது.

இருபத்து நான்காயிரம் வரிகளில் சாவித்திரி என்கிற தன்னுடைய பெருங்கவிதையில் ஸ்ரீ அரவிந்தர் இந்த பூரண யோகத்தின் அனைத்து அம்சங்களையும் மிக நுட்பமாகச் செதுக்கியிருக்கிறார். "கண்டவர் விண்டிலர்;விண்டவர் கண்டிலர்" என்று வழக்கில் இருந்தாலும் உரை, மனம் கடந்த ஒரு சத்தியப் பெருக்கை, தன்னுடைய யோக சாதனையில் கண்டதை சாவித்திரி எனும் மகா காவியமாக ஸ்ரீ அரவிந்தர் படைத்திருக்கிறார். 'உரை மனம் கடந்த ஒரு பெருவளி அதன் மேல் அரைசு செய்தோங்கும் அருட்பெருஞ்சோதி' என்று வள்ளல் பெருமான் கூறாமல் கூறியதை சாவித்திரி ஒரு பெரும் மந்திரமாக தன்னைப் படிப்பவர்களுக்கு பேரானந்த நிலையை அருளும் தாயின் தயவாக, நமக்கெல்லாம் வழங்கியிருக்கிறார்.

இந்தப் பெருங்கருணைக்கு எப்படி கைம்மாறு செய்ய முடியும்? எப்படி நன்றி செலுத்த முடியும்?


Om Sri Aurobindo Mirra!

Open my mind, my heart, my life

to

your Light, your Love, your Power.

In all things may I see the Divine!

கை கூப்பி, சிரம் தாழ்த்தி வணங்குவதை அன்றிக்கு வேறென்ன செய்ய முடியும்?

ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் இருவருடைய திருவடிகளிலும் எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் சமர்ப்பணம் செய்கிறேன்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

புத்தாண்டு குதூகலங்கள், தரிசன நாள் செய்தி,, பின்னே நானும்!



வ்வொரு புத்தாண்டு தினமும் ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும் தரிசன நாள். ஸ்ரீ அரவிந்த அன்னை ஸ்தூல உடலில் இருந்த நாட்களில் ஆசிரமத்தில் இருந்த சாதகர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த வருட காலண்டர், மற்றும் புத்தாண்டு செய்தியுடன் வாழ்த்து அட்டை, எப்போதும் போல அவரவர் பக்குவத்துக்கேற்ப மலர்கள் என்றுஅன்னையின் திருக்கரங்களாலேயே பெறுவார்கள்.


ஸ்ரீ அன்னையை ஆராதிப்பவர்கள், தவமிருந்து அவளுடைய செய்தியை, ஆசியைப் பெறுவதற்காகக் காத்திருக்கும் பொழுது இது.

 
ஸ்ரீ அரவிந்த அன்னையே! உ ன் திருவடிகளை வணங்குகிறேன்.



இரண்டு நாட்களாகவே இணையத்தில் நுழையவே முடியாதபடி, மோடம், கணினி இரண்டுமே படுத்திக்கொண்டிருந்தன.நேற்றிரவே வலையேற்றம் ஆகியிருக்க வேண்டிய இந்தப் பதிவு சுமார் பதினான்கு மணி நேரம் தாமதமாக.இது ஒரு புறம்! இரண்டு வருடங்களாக ஒரு இட ஆக்கிரமிப்புப் பிரச்சினை, உடல்நல குறைவு இப்படி  எல்லாம் சேர்ந்து ஒரு  சோதனையை அனுபவித்தே தாண்டியாக வேண்டிய நேரம்..போதாக்குறைக்கு, நான் சொல்து ஒன்று, அது அர்த்தப் படுத்தப் படுது வேறாக, அதைத் தொட்டு எழும் மனச் சலிப்பு போனஸ் அல்லது இலவச இணைப்பாக! கர்மவினை என்பது இதுதான்!!

என்செயலாவதொன்றுமில்லை என்பதை எனக்கு உணர்த்துவதற்காகவே இத்தனையும் சேர்ந்து நடக்கிறதோ?.

எது எப்படியாகினும், அவளே எல்லாம் என்று இருகைதூக்கி, என்னால் ஆவதொன்றுமில்லை, நீயே பார்த்துக் கொள் என்று ஸ்ரீ அரவிந்த அன்னையிடம் தஞ்சம் புகுந்தாயிற்று.
 



http://www.aurosociety.org/Admin/fckeditor/editor/filemanager/connectors/aspx/fckeditor/userfiles/file/ny2013.jpg