புத்தாண்டு குதூகலங்கள், தரிசன நாள் செய்தி,, பின்னே நானும்!வ்வொரு புத்தாண்டு தினமும் ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும் தரிசன நாள். ஸ்ரீ அரவிந்த அன்னை ஸ்தூல உடலில் இருந்த நாட்களில் ஆசிரமத்தில் இருந்த சாதகர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த வருட காலண்டர், மற்றும் புத்தாண்டு செய்தியுடன் வாழ்த்து அட்டை, எப்போதும் போல அவரவர் பக்குவத்துக்கேற்ப மலர்கள் என்றுஅன்னையின் திருக்கரங்களாலேயே பெறுவார்கள்.


ஸ்ரீ அன்னையை ஆராதிப்பவர்கள், தவமிருந்து அவளுடைய செய்தியை, ஆசியைப் பெறுவதற்காகக் காத்திருக்கும் பொழுது இது.

 
ஸ்ரீ அரவிந்த அன்னையே! உ ன் திருவடிகளை வணங்குகிறேன்.இரண்டு நாட்களாகவே இணையத்தில் நுழையவே முடியாதபடி, மோடம், கணினி இரண்டுமே படுத்திக்கொண்டிருந்தன.நேற்றிரவே வலையேற்றம் ஆகியிருக்க வேண்டிய இந்தப் பதிவு சுமார் பதினான்கு மணி நேரம் தாமதமாக.இது ஒரு புறம்! இரண்டு வருடங்களாக ஒரு இட ஆக்கிரமிப்புப் பிரச்சினை, உடல்நல குறைவு இப்படி  எல்லாம் சேர்ந்து ஒரு  சோதனையை அனுபவித்தே தாண்டியாக வேண்டிய நேரம்..போதாக்குறைக்கு, நான் சொல்து ஒன்று, அது அர்த்தப் படுத்தப் படுது வேறாக, அதைத் தொட்டு எழும் மனச் சலிப்பு போனஸ் அல்லது இலவச இணைப்பாக! கர்மவினை என்பது இதுதான்!!

என்செயலாவதொன்றுமில்லை என்பதை எனக்கு உணர்த்துவதற்காகவே இத்தனையும் சேர்ந்து நடக்கிறதோ?.

எது எப்படியாகினும், அவளே எல்லாம் என்று இருகைதூக்கி, என்னால் ஆவதொன்றுமில்லை, நீயே பார்த்துக் கொள் என்று ஸ்ரீ அரவிந்த அன்னையிடம் தஞ்சம் புகுந்தாயிற்று.
 http://www.aurosociety.org/Admin/fckeditor/editor/filemanager/connectors/aspx/fckeditor/userfiles/file/ny2013.jpg

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!