Showing posts with label Sri Aurobindo Ashram. Show all posts
Showing posts with label Sri Aurobindo Ashram. Show all posts

மனித்தப் பிறவியும் வேண்டுவதே! இப்படி வீணாக்கிக் கொள்ள அல்ல!



புதுச்சேரியில் இருக்கும்  ஸ்ரீஅரவிந்தாசிரமம் வம்பர்களால் மட்டுமல்ல அன்பர்களாலும்கூட   மீண்டும் மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாக்கப் படுவது புதிதல்ல என்பதை இந்தப்பக்கங்களில்  ஏற்கெனெவே எழுதியிருக்கிறேன் 

ஆனந்தவிகடனில் வா.மணிகண்டன் என்பவர் எழுதியிருக்கும் இந்த வம்புச் செய்தியையும் படிக்க நேர்ந்தது,அரவிந்தரும் அன்னையும் திரும்ப வந்தாலும் கூட அழிக்கவே முடியாத கறை!.என்று முத்தாய்ப்பாக உச்சுக் கொட்டி இருப்பதைத் தவிர இந்த செய்தியை எழுதியவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே தளிவாக இல்லை. போகிற போக்கில் சேற்றை வாரி இறைத்து விட்டுப் போயிருக்கிறார் என்பது மட்டும் எழுத்தில் வெளிப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம், அதுபோக சம்பந்தப்பட்ட சகோதரிகளே தங்களுடைய வலைப்பதிவுகளில் தொடர்ந்து ஆசிரமத்தைப் பற்றியும்  உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் கடுமையாகச் சாடி எழுதிக் கொண்டிருந்ததை எல்லாம் இங்கே படிக்கலாம்,  இவர்களுக்காக ஆதரவுக்குரலென்ற போர்வையில் இங்கேயும்.  உண்மையைக் கண்டறியக் கொஞ்சமும்  அலட்டிக் கொள்ளாத வா.மணிகண்டனைப்போல, புதுச்சேரியில் உள்ள பெரியாரிஸ்டுகளும் ஆசிரமத்தின் மீதுள்ள வெறுப்பைக் கல்லெறிதல் முதலான வக்கிரங்களாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து ஒரு விசாரணைக் கமிஷன் நியமிக்கப் பட்டிருக்கிறது.  



இதற்கு முந்தைய புத்தக சர்ச்சையைப் போலவே இந்த விவகாரமும் ஊதி ஊதிப் பெரிதாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் வேண்டுமென்றே! . 

In spite of all the ill-saying and ill-doing never have the five sisters been denied food and accommodation –  until the legal case came to a close with the verdict, not of the Trustees, but of the Supreme Court.  They chose the Legal Way. Why did they not accept the Legal Verdict?
We all know that life is not such an easy matter to deal with. One part of us wants something, while another wants just the opposite. One part sees mostly the dark side of life, while another marvels at the miracle the Earth is. Sadly, the Prasad sisters tended to see more and more the dark side of their life here, and they ended in the dark. But why drag into this obscurity those who wish to live in the light?
To those who feel so unhappy here, so bitter, so negative, the world has still many wonderful things to offer. Instead of harming the life of others, and in the end their own, instead of wasting their lives in destructive criticism, the sisters could have gathered their self-respect and courage and begin a new life, build something, whatever it may be : a farm, a school, why not the ideal ashram of their dreams! The earth is vast, and there are countless opportunities to serve the Future. And Mother India. And Mother Earth. என்று இந்தப் பக்கங்களில்  சொல்வதையும் பார்த்தேன்.ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் என்று இன்று பரவலாக அறியப் பட்டிருக்கும் அமைப்பு, உண்மையில் மனித குலத்தை, ஸ்ரீ அரவிந்தர் கண்ட பூரண யோக சாதனை வழியாக சத்திய ஜீவியத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு பரிசோதனைக் கூடமாகவே ஸ்ரீ அரவிந்த அன்னையால் உருவாக்கப் பட்டது. ஆசிரமத்தைத் தன்னுடைய சரீரமாகவே பாவித்து ஸ்ரீ அன்னை சொன்னதும் உண்டு. பரந்த இந்த பூமியில், நிலவும் ஒவ்வொரு குணமும் சூழலும் ஆசிரமத்தில் பரிசோதனைக்காகவும், திருவுரு மாற்றத்திற்காகவும் பிரதிநிதித்துவப்படுகிற சூக்ஷ்மத்தை ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் பலநேரங்களில் சொன்னதுண்டு.
ஸ்ரீ அரவிந்த அன்னையின் செயலாளராக இருந்து  நிறைய  நூல்களை எழுதியவரான திரு எம் பி பண்டிட் ஸ்ரீ அன்னையுடன் நடத்திய ஒரு உரையாடலை இந்தப்பக்கங்களில் ஏற்கெனெவே சுட்டியிருக்கிறேன். மாற்றம் என்பது தானாகப் பழுத்து வெளிப்பட வேண்டியது. எவரும் எவர்மீதும் திணிக்க முடியாதது, இறைவனும் தன்னுடைய விருப்பத்தைத் தன்னுடைய சிருஷ்டி மீது திணிப்பதில்லை.  
தன்னை முதலில் மாற்றிக் கொள்ளத்தயாராக இல்லாதவர்களால் கொஞ்ச நேரப் பரபரப்புச் செய்தியாகமட்டுமே இந்த சகோதரிகளைப் போல யாருடைய கைப்பாவையாகவோ இருக்க  மட்டுமே முடியும் என்பதுதான் பரிதாபம். 
தமஸோ மா ஜ்யோதிர் கமய 

பொன் ஒளியாய் வரும் அருட்பெரும் ஜோதி!

Golden Day - 29 February 2012
ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிகளைச் சரணடைகிறேன்!
ஓம் ஆனந்தமயி, சைதன்ய மயி, சத்யமயி பரமே!
 

மா மிரா சரணம் மம! ஸ்ரீ அரவிந்த சரணம் மம!
ஓம் சத்யம் ஞானம் ஜ்யோதி: அரவிந்த!



December 5 ஸ்ரீ அரவிந்த சரணம் மம



மரணத்தை வெல்லவேண்டும்!இதுவே மனித குலத்தின் நீண்டநாள் கனவாகவும், தவிப்பாகவும், தவமாகவும் இருந்து வந்தது.மரணத்தை வெல்ல முடியும் என்று காட்டியவர்கள் வெகுசிலரே.

பகவான் ஸ்ரீ அரவிந்தர்,உரை,மனம் கடந்து அரைசு செய்தோங்கும் அருட்பெரும் ஜோதியை இந்த மண்ணில் கொண்டு வருவதற்காகத் தன்னுடைய உடலைத் தியாகம் செய்த நாள் இன்று. டிசம்பர் 5.

ஓம் நமோ பகவதே ஸ்ரீஅரவிந்தாய 

தத் சவிதுர்  வரம் ரூபம் ஜ்யோதிர் பரஸ்ய தீமஹி
யன்ன சத்யேன தீபயேத் 

இன்றைக்கு, நாள் நல்ல நாள்! தரிசன நாள்!

ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தின் இன்றைய தரிசன நாள் செய்தி!

ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னையை வணங்கும் அடியவர்களுக்குச் சில நாட்கள் ஒவ்வொரு வருடமும் மிக விசேஷம்! 

திருவிழா மாதிரித் தான், ஆனால் கொஞ்சம் கூட ஆரவாரம், ஆர்ப்பாட்டம் இல்லாமல், தரிசன நாட்கள் என்று கொண்டாடப் படும் இந்த நாட்களில், ஆன்மீக அனுபவத்தை மிகச் சிறப்பாக அனுபவிக்கும் தினங்களாக இருக்கிறது.

ஒவ்வொரு புத்தாண்டு தினமும், அதை அடுத்து பெப்ருவரியில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் அவதார தினமும் (February 21), லீப் வருடமாக இருந்தால், பெப்ருவரி இருபத்தொன்பதாம் தேதி, அதிமானசப் பேரொளியின் வருகை தினமாகவும், (Golden Day-the manifestation of the Supramental Light upon earth) கொண்டாடப் படுகிறது.

அதை அடுத்து, ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாக தங்கிய நாள், ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் தரிசன நாளாகவும், அன்பர்கள் அன்னையின் அருளில் திளைக்கும் நாளாகவும் வருகிறது.

இந்த வருட ஏப்ரலுக்கு இரண்டு விதமான கூடுதல் சிறப்பு இருக்கின்றன! இந்த வருடம் ஏப்ரல் நான்காம் தேதி, ஸ்ரீ அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வந்த நூற்றாண்டு நிறைவாக இருந்தது. சென்ற வருடம், ஒரு அற்புதமான தருணம் தொடங்கும் நூற்றாண்டின் தொடக்கமாக இதைப் பற்றி சில படங்களுடன் பதிவு ஒன்று இந்தப்பக்கங்களில் இருக்கிறது. 

அதே மாதிரி, அன்னை என்னும் அற்புதப் பேரொளியாக அடியவர்கள் கொண்டாடும் ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்க வந்த நாளுடைய தொண்ணூறு ஆண்டுகள் நிறைவான தருணமாகவும், இன்றைய தினம் இருக்கிறது. ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் இன்றைக்கு தரிசன நாள். அன்னையைத் தேடி வரும் அவளுடைய குழந்தைகள் ஒன்று கூடி அவளை வணங்கிப் பிரார்த்தனை செய்யும் சிறப்பான தருணமாகவும் இருக்கிறது

ஸ்ரீ அரவிந்த அன்னையைத் தேடி இந்தப் பக்கங்களுக்கு வரும் நண்பர்களுக்கு, சுருக்கமாக இந்த நாளின் விசேஷம் என்ன என்பதை கொஞ்சம் பார்ப்போமா?

ஸ்ரீ அரவிந்தர், இறைவனது கட்டளையை ஏற்று, பாண்டிச்சேரிக்கு வந்த நூறாவது ஆண்டு, இந்த ஏப்ரல் 4 அன்று நிறைவடைந்தது  

ஸ்ரீ அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வந்தவுடனேயே, அவரை அரசியல் தலைவராகவும், சுதந்திரப் போராட்டத்தின் தளபதியாகவும் அறிந்திருந்தவர்கள் தேடி வர ஆரம்பித்தார்கள். "இந்தியாவின் அரசியல் விடுதலை என்பது ஏற்கெனெவே நிச்சயமான ஒன்று, நீ உனக்கிடப் பட்ட பணியை மேற்கொள்வாய்" என இறைவன் விதித்தபடியே, அரசியலை விட்டு விட்டு, ஆன்மீக சாதனையைத் தொடங்கின நேரம், அங்கேயிருந்து ஆரம்பித்தது.

"He who chooses the Infinite has been chosen by the Infinite" என்று ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரி மகா காவியத்தில் சொல்கிறார். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி எனச் சிவ புராணத்தில் மணிவாசகப் பெருமான் சொல்வது போல, ஸ்ரீ அரவிந்தரோடு, ஸ்ரீ அரவிந்தரது பூரண யோகத்தில் பங்கு பெற விதிக்கப் பட்டவர்கள், ஒவ்வொருவராகப் பாண்டிச்சேரிக்கு வர ஆரம்பித்ததும் தொடங்கியது.

"Without Him I exist not;without me he is unmanifest" என்று ஸ்ரீ அரவிந்த அன்னை தானும் ஸ்ரீ அரவிந்தரும் ஒருவரே என்றும், ஒருவரில்லாமல் மற்றொருவர் இல்லை என்பதாக ஓரிடத்தில் சொல்கிறார்.

1878 இல் பாரிஸ் நகரத்தில் பிறந்து, சிறிய வயதிலேயே தான் மிகப் பெரிய ஒன்றைச் சாதிக்க வந்தவர் என்கிற விழிப்பு நிலையுடன் இருந்து, வெவ்வேறு ஆன்மீகப் பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் போது, ஒரு இந்தியர், மிக மோசமாக பிரெஞ்சில் மொழி பெயர்க்கப் பட்ட பகவத் கீதையின் பிரதி ஒன்றை அன்னைக்கு அளிக்கிறார். 

இந்த கால கட்டத்தில், கனவு நிலையில் தன்னை ஒருவர் வழிநடத்துவதை ஸ்ரீ அன்னை உணர்கிறார்-அவரை கிருஷ்ணா என்ற பெயரிலேயே ஸ்ரீ அன்னை குறிப்பிடுகிறார்.

மிரா ரிச்சர்ட் என்று அறியப்பட்ட அந்த காலத்தில், அவருடைய கணவர் பால் ரிச்சர்ட், 1910 ஆம் ஆண்டு வாக்கில் பாண்டிச்சேரிக்கு வந்த போது ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிக் கேள்விப் பட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை மிராவிடம் சொல்ல, அவரை சந்திக்க வேண்டும் என்கிற எண்ணம் வலுவடைகிறது. அரசியல் கனவுகளோடு இருந்த பால் ரிச்சர்ட், 1914 ஆம் ஆண்டு பாண்டிச்சேரிக்கு வந்து ஆதரவு திரட்ட முடிவு செய்து, மிராவுடன், காக மோரு என்கிற ஜப்பானியக் கப்பலில், காரைக்காலுக்கு வந்து சேர்கிறார்.

1914 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி மதியம், மிரா, ஸ்ரீ அரவிந்தரை முதன் முதலாக சந்திக்கிறார். கிருஷ்ணா என்ற பெயரில் அறிந்ததும், தன்னைக் கனவில் வழிநடத்தி வந்தவரும் ஒருவரே என்பதை அறிந்து கொண்டு அவரை வணங்குகிறார்.

"உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரிபூரணமான சரணாகதி இருக்கமுடியும் என்பதை அப்போது தான் நேரடியாகக் கண்டு கொண்டதாக" இதைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுகிறார். 

பால் ரிச்சர்டும், மீராவும் பாண்டிச்சேரியிலேயே தங்கி இருந்தது சில காலம். பால் ரிச்சர்ட், ஸ்ரீ அரவிந்தர் நடத்திய "ஆர்யா" பத்திரிகையின் பொறுப்பேற்றுக் கொண்டு செயல் படுகிறார்.

1915 ஆம் ஆண்டு மிரா பாரிசுக்குத் திரும்புகிறார், அங்கிருந்தே 1916 ஆம் ஆண்டு ஜப்பானுக்குப் பயணப் படுகிறார். நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு, முதல் உலகப் போரின் தாக்கங்கள் குறையத் தொடங்கிய பிறகு, 1920 ஆம் ஆண்டு மிரா, பாண்டிச்சேரிக்கு மறுபடி திரும்பிய நாள் ஏப்ரல் 24.

ஸ்ரீ அரவிந்தருடைய யோக சாதனையில் பங்கு பெறுவதற்காக, மிரா ரிச்சர்ட் என்று அன்று அறியப்பட்ட ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்கிய நாளாக ஏப்ரல் 24 இருப்பதனால், இது ஆசிரமத்தின் தரிசன நாட்களில் ஒன்றாக ஆனது. 

மிரா ரிச்சர்ட் என்றறியப்பட்ட இந்த பிரெஞ்சு மாது, தங்களைப் போலவே ஸ்ரீ அரவிந்தரின் மற்றொரு சீடர் என்றே ஸ்ரீ அரவிந்தரோடு அன்றைக்கு அணுக்கமாகவே இருந்த சாதகர்கள் கூட, நினைத்துக் கொண்டிருந்தபோது, "மானுட வடிவம் தாங்கி வந்திருக்கிறாளே என்று மயங்கி விடாதே, தெய்வீக அன்னையே இவள்" என்று ஸ்ரீ அரவிந்தரால், ஸ்ரீ அன்னை என்று அழைக்கப் படுகிற காலமும் விரைவிலேயே வந்தது.1926 இல் ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் என்ற அமைப்பு ஸ்ரீ அன்னையினாலேயே சாத்தியமானது.

அன்னையும் தங்களைப் போல சாதகர் தானோ  என்ற சந்தேகம் டி வி  கபாலி சாஸ்திரியாருக்கும் வர, ஸ்ரீ அரவிந்தர் "அன்னையின் நான்கு சக்திகள்" என்ற விளக்கமான கட்டுரையை அவர் படிக்கக் கொடுக்கிறார். ஸ்ரீ அரவிந்த அன்னையைப் பராசக்தியின் வடிவமாகவே, தேவி உபாசகரான கபாலி சாஸ்திரியார் உணர்ந்து கொண்டதையும், தன்னுடைய குரு காவ்ய கண்ட கணபதி முனியையும் ஆசிரமத்திற்கு அழைத்து வந்து, அன்னையை அறிந்து கொண்டதையும் சின்ன நாயனா என்றே அழைக்கப் பட்ட கபாலி சாஸ்திரியாரை பற்றி முந்தைய சில பதிவுகளில் பார்த்திருக்கிறோம்! நாயனா, சின்ன நாயனா, ரமணர் என்ற குறியீட்டுச் சொற்களை வைத்து, இந்தப் பதிவுகளில் தேட, மேற்சொன்ன பதிவுகள் படிக்கக் கிடைக்கும்.
ஸ்ரீ அரவிந்த அன்னையை எப்படி தியானிப்பது, எப்படி அவரது அருளைப் பெறுவது என்பதை ஸ்ரீ அரவிந்தருடைய வார்த்தைகளிலேயே பார்க்கலாம்!

The sadhana of inner concentration consist in:
 
1. Fixing the consciousness in the heart and concentrating there on the idea, image or name of the Divine Mother, whichever comes easiest to you.

2. A gradual and progressive quieting of the mind by this concentration

3. An aspiration for the Mother's presence in the heart and the control by her of mind, life and action. But to quiet the mind and get the spiritual experience it is necessary first to purify and prepare the nature.

Sri Aurobindo

இந்த நல்ல நாளில் ஸ்ரீ அரவிந்த அன்னையே, நீ எங்கள் இதயத்திலும் நிலையாகத் தங்கியிருப்பதை உணர்ந்து, உனது பிரியத்துக்கு உகந்த குழந்தைகளாகும் தகுதியை வரமாக அருள்வாய்!

ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி, சத்யமயி பரமே!

இது சென்ற வருடம் எழுதியதன் மீள்பதிவு தான்! தேவைப்படுகிற இடங்களில் சிறு மாற்றங்களுடன்!




Open yourself to the New Light and walk with a joyful step!


ஸ்ரீ அரவிந்த அன்னை, ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் என்றவுடனேயே நம்மில் நிறையப் பேருக்கு உடனே நினைவுக்கு வருவது, Blessing Packet உம், பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியும் தான்.ஆசிரமத்திற்குச் செல்லும் பொழுதோ, ஒரு சிறு காணிக்கையை அனுப்பி வைக்கும் பொழுதோ, ஆசிரமத்தில் இருந்து, ஒரு Message Card-ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னை உருவப்படமோ, சின்னமோ, அவர்களுடைய அமுதமொழிகளில் ஏதோ ஒரு பகுதியைத் தாங்கி, அப்புறம், ஒரு குட்டி பாக்கட், சமாதி மேல் அலங்காரம் செய்யப் பட்டிருந்த பூக்களின் காய வைத்த இதழ்கள் பெரும்பாலும் ரோஜா இதழ்கள் தான், பெறுவதைப் பலர் அறிந்திருக்கக் கூடும்.

மலர்களைப் பிரசாதமாக அருளுவது அனேகமாக, எல்லாக் கோவில்களிலும் நடைமுறையில் இருந்து வரும் பழக்கம் தான். இதில் என்ன புதுமை இருக்கிறது என்கிறீர்களா?

இருக்கிறது!

மலர்கள் ஒவ்வொன்றும் ஒரு செய்தியை, அருளைத்தாங்கி வருகின்றன என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை. மலர்களும் அவைகளின் சேதியும் என்ற தலைப்பில் ஏறத்தாழ எண்ணூறு மலர்களுக்கும் மேலாக, அவை தாங்கி வரும் செய்தியை, அவ்வப்போது அன்பர்களுக்கு சொன்னதைத் தொகுத்து ஒரு நூலே வெளி வந்திருக்கிறது.

தன்னைப் பார்க்க வருகிற குழந்தைகளுக்கு ஒரு மலரைத் தருவது ஸ்ரீ அன்னையின் பழக்கமாக இருந்தது. அதுவே, அவர்களது பிறந்த நாள் என்றால், இரண்டு மலர்கள் கிடைக்கும்ரோஜா மலரைத் தருவதும் ஆரம்பமாயிற்று. 1927 ஆம் அண்டு முதலே தொடங்கிய இந்த முறை,எப்போது பிறந்தநாள் வாழ்த்துச் செய்திகளோடு மாறியது என்பதை நினைவு கூற முடியவில்லை என்கிறார் சம்பக்லால் என்கிற அடியவர்.

மலர்களோடு, ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை உரையாடல்களில் இருந்து, சிறு பகுதிகள், படங்களோடு கூடிய மடல்களும், மலர்களோடு சேர்ந்து கொண்டன. அன்னையிடம் ஆர்வத்தோடு வருகிற குழந்தைகளுக்கு இன்னும் ஏதாவது தரவேண்டும் என்கிற ஆர்வத்தோடு சம்பக்லால் தன் கைகளினாலேயே தயார் செய்த வாழ்த்து மடல்கள் தான் இவற்றுக்கு முன்னோடி.

மலர்களைத் தரும் அன்னை, இன்னொன்றும் சொல்கிறார். மனிதனுக்கு, அலை பாய்கிற மனத்தை உடையவனாய் இருப்பதால் தேடி வருகிற இறையருளை உணரவோ, இறையருளுக்கு இசைந்து நடக்கவோ முடிவதில்லை. மலர்களோ, ஒளியை,அருளை முழுதுமாக ஏற்கிற தன்மை உடையனவாய் இருக்கின்றன. அதனால் தான், எனது அருளையும், ஆசீர்வாதத்தையும் மலர்கள் வழியாகத் தருகிறேன் என்கிறார் ஸ்ரீ அன்னை.

அப்படி வரும் ஒரு செய்தியை, அருள் ஒளியைப் பார்க்கலாமா?

A Birthday message and blessings given to a devotee...!

The Mother on birthday card


Let this day of your birth be for you an occasion to give yourself a little more, a little better to the Divine. Let your consecration be more total, your devotion more ardent, your aspiration more intense.


Open yourself to the New Light and walk with a joyful step on the path.


Resolve on this day that it may be thus and the day will not have passed in vain.


Blessings.

The Mother

காலை எழுந்தவுடன் காப்பி பின்பு படிக்கக் கொஞ்சம் பேப்பர்!


"வைகறை" விடியலுக்கு ஒரு அதியற்புதமான தமிழ்ச் சொல்.
காலை எழுந்தவுடன் காப்பி பின்பு படிக்கக் கொஞ்சம் பேப்பர் என்று தொடங்கும் சராசரி பொழுதைச் சொல்வது அல்ல இது.

உஷத்காலம் என்று சொல்லப் படுகிற இந்த "வைகறை" பொழுது, வேத மரபில் ஒரு நுண்ணிய பொருளை உணர்த்துவது- ஆன்ம விழிப்பைச் சுட்டுவது- அறிவு நிலையின் விழிப்பைச் சுட்டுவது.

"வைகறை" என்கிற பெயரிலேயே ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தின் வெளியீடாகத் தமிழில் ஒரு காலாண்டிதழ வெளிவந்துகொண்டிருக்கிறது.அச்சு அமைப்பு, உள்ளீடுகள், மொழிபெயர்ப்பில் காணப் படும் கரடுமுரடுகள் என்று பல குறைகளுடன் இருந்ததால், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், சிறிது காலம் வாங்கிப் படித்ததோடு சரி. அப்புறம் இந்த இதழை மறந்தே போய் விட்டேன். தற்செயலாக, கூகிள் ஆண்டவர்உபயத்தில் மேலே படத்தில் காண்கிற வலைப் பக்கத்தைக் கண்டேன். வலைத்தளம் இன்னமும் வடிவமைக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன என்ற அறிவிவிப்பு அடியில் செய்தியாக ஓடிக் கொண்டே இருக்கிறது. வேறு பல மொழிகளில் காட்டிய ஆர்வத்தை, தமிழில் ஆசிரம நிர்வாகிகளோ, ஸ்ரீ அரவிந்த யோகத்தைப் பயிலும் தமிழறிந்த அன்பர்களோ காட்டவில்லை என்ற மனக் குறை எனக்கு நீண்ட நாட்களாகவே இருக்கிறது.

ஸ்ரீ அரவிந்தர் புதுவைக்கு வந்த புதிதில், குள்ளச்சாமியோடு பழகிய அனுபவங்கள் [பாரதியின் கவிதைகளில், குள்ளச்சாமியைப் பற்றிப் படிக்கலாம்], பாரதியோடு ரிக் வேத ஆராய்ச்சி செய்தது இப்படிப் பல விஷயங்கள், கவியோகி சுத்தானந்த பாரதியார், ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் இருந்த போது, ஒவ்வொரு நாளும் ஒரு பாமாலையைத் தொடுத்து, ஸ்ரீ அன்னையிடத்தில் சமர்ப்பித்தது, இப்படிப் பல தேடல்கள் இன்னமும் இவனுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. ஸ்ரீ அரவிந்த அன்னையின் அருளால், இவனது தேடல்களுக்கு உதவியாக இந்த வலைத்தளம் வளர வேண்டும் என்பது வெறும் ஆசை மட்டும் அல்ல, ஸ்ரீ அன்னையிடம் சமர்ப்பிக்கப் படும் இன்றைய பிரார்த்தனையும் கூட.

இனி "வைகறை"யைப் பற்றி - The Symbol Dawn in Savitri....

ஸ்ரீ அரவிந்தர் இயற்றிய நெடும்தவத்தின் பலனாக விளைந்தது "சாவித்திரி" எனும் அற்புதக் காவியம். மகாபாரதத்தில் ஒரு துணைக் கதையாக வரும் சத்தியவான் - சாவித்திரி கதையையே அதன் உள்ளார்ந்த பொருளில், தன்னுடைய யோகத்தில் கண்டதை விவரிக்கும் பெரும் காப்பியமாக ஏறத்தாழ 24000 வரிகளில் ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரியை எழுதினார். யோக சாதனையில் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய பரிமாணத்தைக் கண்டு, அதற்கேற்ப சாவித்ரியையும் பலமுறை திருத்தி அமைத்திருக்கிறார். ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் கூட இவ்வளவு பெரிய கவிதையை வடித்ததில்லை. மொழி ஆங்கிலம் என்றாலும், இந்திய தத்துவ மரபின் படியே ஸ்ரீ அரவிந்தரின் "சாவித்திரி" பெரும் காப்பியம் அவர் கண்ட உண்மைகளை, ஒரு புதிய தொடக்கத்தின்வருகையை, மனிதன் தன்னுடைய விலங்கிற்கும் கடவுளுக்கும் இடைப்பட்டதான நிலையிலிருந்து இன்னொரு படி முன்னேறி, ஸ்ருஷ்டியின் அடுத்த கட்ட வளர்ச்சியை அறிவிக்கும் கட்டியமாக இருக்கிறது.

"உரை மனம் கடந்த ஒரு பெரு வளி- அதன் மேல்

அரைசு செய்தோங்கும் அருட்பெரும் ஜோதி"

என்று திருவருட் பிரகாச வள்ளலார் அறிவித்தபடி, வாக்கு, மனம் கடந்த நிலையில் அதிமானச புருஷன் வருகைக்குத் தயார் செய்யும் பணியில் ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய உடலையே த்யாகம் செய்தார். அதிமானசப் பொன்னொளி இந்த பூமியில் இறங்கினாலும் கூட, அதைத் தாங்குவதற்குத் தகுந்த பாத்திரம் இல்லை. தேடிவந்த பெரும் அருளை உணர்வார் இல்லை என்ற நிலையில், ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய உடலையே அது இறங்கிச் செயல் படுவதற்காகத் தந்தார். வேறு எந்த மனிதரும் தயாராக இல்லாத நிலையில், ஸ்ரீ அரவிந்த அன்னை, தன்னுடைய உடலையே ஒரு பரிசோதனைக் களமாக்கி இயற்றிய பெரும் தவம் Agenda வில் 6000 பக்கங்களில் ஓரளவுக்கு விவரிக்கப் பட்டிருக்கிறது.

"நூறு இளைஞர்களைத் தாருங்கள். ஒரு புதிய பாரதத்தை உருவாக்கித் தருகிறேன்" என்றார் சுவாமி விவேகானந்தர்.

தன்னலமில்லாத, முழுமையாக இறைவனுடைய சித்தத்திற்கே தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் 12 பேர் போதும், புதிய தொடக்கத்தைச் சாதித்து விடலாம் என்று ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் உறுதியாக இருந்த போதிலும், பழக்கங்களின் அடிமையாகவே இருக்கத் தவிக்கும் இந்த உலகம், திருவுரு மாற்றத்திற்குத் தயாராகாமல் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறது.

ஆனாலும், இந்த உலகம், படைப்புக்கள் அனைத்தும் ஒரு திருவுருமாற்றத்திர்காகத் தயாராகிக் கொண்டு தான் இருக்கிறது. ஆர்வத்தோடு பங்கேற்கிறவர்கள் சிலரே ஆயினும், இறையருள், எதிர்மறைப் போக்குகளையே தனது கருவிகளாகக் கொண்டு, செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. நம்மை அறியாமலேயே, ஒரு மிகப் பெரிய மாற்றத்திற்கு நாம் தயார் செய்யப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

சாவித்ரி மகா காவியத்தைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை சொன்னார்:

“Savitri, this prophetic vision of the world's history, including the announcement of the earth's future.

The importance of Savitri is immense. Its subject is universal. Its revelation is prophetic. The time spent in its atmosphere is not wasted.”


இங்கே "வைகறை" ஒரு புதிய விடியல் என்று உருவகப்படுத்துவது வெறும் கவிதைச் சுவைக்காக இல்லை. ஒரு புதிய உலகத்தின் பிறப்பைச் சொல்ல வந்த செய்தி. வேதங்கள் எப்படி சில குறியீடுகளை, உருவகங்களைக் கொண்டிருந்தனவோ, அதே மாதிரி 23,813 வரிகளில், கவனச் சிதறல் இல்லாமல் இருந்தால், தான் கண்ட அதே அனுபவங்களையும், உண்மையையும் படிப்பவருக்கும் கொடுக்கும் மந்திர சித்தியுடன் கூடினதாய் ஸ்ரீ அரவிந்தர் நமக்கு அருளியிருக்கிறார் என்கிறார் ஸ்ரீ அன்னை.

ஸ்ரீ அரவிந்த அன்னையே!

உன்னை வணங்குகிறேன். உன்னைச் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ அரவிந்தர் அருளமுதமான "சாவித்ரி"யைப் புரிந்து கொள்கிற உணர்வின் விழிப்புநிலையை வரமாக அருள்வாய். ஒவ்வொரு தருணத்திலும், உன்னிடத்திலிருந்து கிடைக்கிற அருளை நன்றியோடு நினைவிற்கொள்ளும் மனப்பாங்கினை வரமாக அருள்வாய்.ஒவ்வொரு செயலிலும், விளைவிலும் உனது அருளே வெளிப்படுகிறது, வழி நடத்துகிறது, என்பதை மறந்து விடாமல், உனது கருணைக்குத் தகுதியானவனாக வரம் தருவாய்.

எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.

பொய்மையிலிருந்து, உண்மைக்கு வழிநடத்துவாய், தாயே!

இருட்டிலிருந்து, வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வாய் தாயே!

அகம், புறம் இரண்டிலும் நிறைந்துகிடக்கும் பகையிலிருந்து என்னை மீட்பாய் தாயே!

ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி, சத்யமயி பரமே!

That was Her way and that is also the Divine's way!



Peter Heehs என்பவர் எழுதிய ஒரு புத்தகம் "The Lives of Sri Aurobindo" ஆசிரமவாசிகள், ஆரோவில் வாசிகள். ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னையை ஏற்றுக் கொண்ட அடியவர்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.

Peter Heehs இந்தப் புத்தகத்தில் ஸ்ரீ அரவிந்தரைக் கொச்சைப் படுத்திவிட்டார், ஆசிரம நிர்வாகிகள் பொறுப்பற்ற முறையில் இந்த விஷயத்தை கையாண்டிருக்கிறார்கள் என்று ஒரு தரப்பு கொதித்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் வரையிலும் இந்தப் பிரச்சினை எடுத்துச் செல்லப் பட்டிருக்கிறது. இந்தியாவில் இந்த நூலைத் தடை செய்ய வேண்டும், நூலாசிரியரை ஆசிரமத்திலிருந்து வெளியேற்ற வேண்டும், என்று தீவீரமாக இவர்கள் இருக்கும் அதே நேரம்,

இன்னொரு தரப்போ நூலாசிரியர் எந்த தவறும் செய்யவில்லை, அவரது கருத்து சுதந்திரத்தை மதிக்க வேண்டும், இது கிழக்கும் மேற்கும் கலாசார ரீதியாகப் பிரித்துப் பார்ப்பதினால் வந்த கோளாறு என்று சூடான விவாதங்கள் நடத்திக் கொண்டே இருக்கின்றன.

Peter Heehs எழுதியதில் பெரிதாகக் குற்றம் காண்பதற்கு ஒன்றும் இல்லை என்று வாதிடும் இவர்கள், முந்தின தரப்பின் மேல் பல குற்றச் சாட்டுக்களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள். குறிப்பாக,ஒரு புதிய மதம் உருவாக்கப் படுகிறதா, ஸ்ரீ அரவிந்தரின் தெய்வீகத் தன்மை திணிக்கப் படுகிறதா, சிறுபான்மையினரின் கருத்துச் சுதந்திரம் மதிக்கப் படுகிறதா, ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம் பக்தியின் எல்லைக்குள் குறுக்கப் படுகிறதா, என்றெல்லாம் நூலாசிரியர் கூடக் கற்பனை செய்யாத கேள்விகளை எல்லாம் வாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வளர்ந்து கொண்டே போகும் இந்த அக்கப் போரைப் பற்றி, வாத-பிரதி வாதங்களைப் பற்றிக் கருத்துச் சொல்கிற அளவுக்கு எனக்கு தத்துவ விசார அனுபவமோ, தவமோ இல்லை. ஆனால், எந்தவொரு இயக்கத்திலும் ஏற்படுகிற ஒவ்வொரு முரண்பாடும், வளர்ச்சியின் படிக்கட்டுக்களே என்பதைப் புரிந்துகொள்கிற அளவு அறிவு இருக்கிறது.

ஸ்ரீ அரவிந்த ஆசிரம வரலாற்றில் இது போல முன்னொரு தடவையும் நடந்திருக்கிறது. சத்ப்ரேம் என்கிற அடியவர், பல வருடங்களில் ஸ்ரீ அன்னையுடன் நடத்திய உரையாடல்களின் தொகுப்பாக, 13 பாகங்களில் சுமார் 6000 பக்கங்களில் "The Mother's Agenda " என்ற புத்தகமாக வெளியிட முனைந்த போது, ஆசிரமத்தில் இருந்த சிலரால் அது தடுக்கப் படும் என்று கருதிய சத்ப்ரேம் தன்னுடைய குறிப்புக்களையும், ஒலி நாடாக்களையும் ரகசியமாக வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்று வெளியிட்டபோது, இதே மாதிரி விவாதங்கள் கிளம்பின. ஸ்ரீ அன்னை மகா சமாதி அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்னாலேயே, சத்ப்ரேம் ஸ்ரீ அன்னையை சந்திப்பது தடுக்கப் பட்டது.

ஆனால், ஸ்ரீ அரவிந்த அன்னை, எத்தகைய ஆத்ம சாதனையை மேற்கொண்டார், அதில் எத்தனை கஷ்டங்களை எதிர்கொண்டார், அதிமானசத் தன்மை வெளிப்பட ஸ்ரீ அன்னை தன்னுடைய உடலையே ஒரு பரிசோதனைக் களமாக்கி, ஒவ்வொரு செல்லும் எப்படித் திருவுரு மாற்றத்திற்குத்தயாராகும்படி செய்தார் என்பதை ஒவ்வொரு கட்டமாக விவரிக்கும் முக்கியமான ஆவணமாக இன்று அது கொண்டாடப் படுகிறது. சத்ப்ரேமை ஒரு அசுரன், அவரை ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றுங்கள் என்று ஸ்ரீ அன்னை சொன்னதாக, அந்தக் கால கட்டத்தில் ஆதாரமில்லாத தகவல்களும் உண்டு.

ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் என்று இன்று பரவலாக அறியப் பட்டிருக்கும் அமைப்பு, உண்மையில் மனித குலத்தை, ஸ்ரீ அரவிந்தர் கண்ட பூரண யோக சாதனை வழியாக சத்திய ஜீவியத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு பரிசோதனைக் கூடமாகவே ஸ்ரீ அரவிந்த அன்னையால் உருவாக்கப் பட்டது. ஆசிரமத்தைத் தன்னுடைய சரீரமாகவே பாவித்து ஸ்ரீ அன்னை சொன்னதும் உண்டு. பரந்த இந்த பூமியில், நிலவும் ஒவ்வொரு குணமும் சூழலும் ஆசிரமத்தில் பரிசோதனைக்காகவும், திருவுரு மாற்றத்திற்காகவும் பிரதிநிதித்துவப்படுகிற சூக்ஷ்மத்தை ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் பலநேரங்களில் சொன்னதுண்டு.

ஸ்ரீ அரவிந்த அன்னையின் பிறந்த நாள் வருவதையொட்டி எனக்குள் எழுந்த சில கேள்விகளுக்கு விடை சொல்வது போல, திரு மாதவ் பண்டிட் அவர்கள் எழுதிய Commentaries on The Mother's Ministry என்கிற நூலில் No imposition என்கிற இந்தப் பகுதி இருந்ததை, திரு மாதவ் பண்டிட் அவர்களுடைய வார்த்தைகளிலேயே பார்ப்போமா:

No Imposition

“The Mother once told this writer that she could effect the desired changes in the Ashram collectivity in a trice but she did not wish to do so. She preferred to wait for the change to come about spontaneously, from within.

That was her way and that is also the Divine's way.

Changes imposed from above or outside are not natural. They do not last. When the
pressure is relaxed, things tend to swing back to their original rhythm. It is only when the necessity of a change is realised within oneself and the will is exerted accordingly that the change is accepted in the whole of the being and integrated with the general nature. Only so can the change cease to be artificial and superficial and become natural.

Besides it is a law of this manifestation to let everything evolve in full freedom.
Freedom is the law of growth. Even though all has issued from the Divine and is essentially maintained by the Divine, each is given full freedom to follow its own choice of direction and pace. The Oversoul never takes possession of the soul, it oversees, presides over its evolution but does not interfere with its liberty. It is the soul below that has to make the effort to come closer to the Oversoul, aspire for its union with the higher counterpart. The latter patiently waits for it to be ready and want to unite with it. Only so can the union be joyous culmination of a movement that proceeds spontaneously from the embodied soul. The initiative and the onus of the operation lies with the lower term.

So too with the world. The universe has indeed emanated the Being of the Supreme Lord. It has been released into manifestation with a purpose; to manifest the Divine Will. The details of the working out of the process, however, are left to the Soul in Becoming. And this Soul is multiple. There may be, and are, deviations from the main Intention, deformations in the process consequent on this departure from the central Truth. But the Divine does not interfere.

The Divine allows full scope for the consequences of such aberrations to be worked out; it waits for the movement—collective and individual—to correct itself and put itself in time with the higher Will. The Divine does not participate. The universe has to take steps to orientate its directs towards the Divine, feel the need to be restored to its Parent Divine, to be possessed by the Divine, before the Divine Lord responds by taking possession of it. The movement on the part of the universe or the individual has to be conscious, willed effort to become one with the Divine Lord.

In all this operation the Divine's help is of course there to be drawn upon; but it is not imposed. That would be contrary to the Law of manifestation. For the Divine is Freedom and any interference with the freedom of choice, freedom of action, of the evolving soul is against the Truth and Purpose of the manifestation.”


Excerpted from and acknowledge with thanks and gratitude:

“Commentaries on The Mother's Ministry” Part II by Sri M P Pandit, published by Dipti Publications, Sri Aurobindo Ashram, Pondicherry.

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!



www.searchforlight.org வலைத்தளத்தில் இன்றைய சிந்தனைக்கு என்கிற தலைப்பில் ஸ்ரீ அரவிந்தர் அருளமுதமான சாவித்ரியில் இருந்து இந்த வரிகளை படித்துக் கொண்டிருந்தேன்.

இந்த நான்கே வரிகளில் பரிணாம வளர்ச்சியை ஸ்ரீ அரவிந்தர் சுருங்கக் கூறி விளங்க வைத்திருப்பதை, திரு மாதவ் பண்டிட் போல வெகு சிலரால் தான் நம்மைப் போன்றவர்களுக்கு, மிக எளிமையான வார்த்தைகளிலேயே புரிய வைக்க முடியும். நீண்ட நாட்களுக்கு முன்னால் ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்திற்குச் சென்றிருந்த போது வாங்கிய புத்தகம் Commentaries on The Mother's Ministry. இரண்டு பகுதிகளாக வெளியான இந்த புத்தகத்தை. இப்போது மறுபடி படித்துக் கொண்டிருக்கையில் திரு மாதவ் பண்டிட் அவர்களுடைய எழுத்தாளுமை என்னைக் கொள்ளை கொண்டது.

இந்தத் தருணத்தில் அவருக்கு வழிகாட்டியாகவும், ஸ்ரீ அரவிந்த அன்னையிடம் அவரைக் கொண்டு சேர்த்தவருமாகிய கபாலி சாஸ்திரியார் சொன்னதாகப் படித்தது நினைவிற்கு வருகிறது.

அருட்பெரும் ஜோதி என்று திருவருட்ப்ரகாச வள்ளலாராலும், அதிமானச ஒளி [Supramental Light] என்று ஸ்ரீ அரவிந்தராலும் அழைக்கப் பட்ட, உன்னதமான இந்த ஒளியைப் பெறத் தகுதியான முதல் இருபத்தைந்து பேர்களுக்குள் திரு மாதவ் பண்டிட் அவர்களும் ஒருவர் என்று ஸ்ரீ அன்னை தெரிவித்ததைக் கபாலி சாஸ்திரியார் மிகப் பெருமிதத்தோடு சொல்வாராம்.

"மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே" என்றார் திருநாவுக்கரசர். அதைப் போல நமக்கு ஏற்படுகிற மயக்கங்களும் தேவை தான் என்ற தலைப்பில் திரு மாதவ் பண்டிட் அவர்கள் சுவையாக ஒரு நுட்பத்தைச் சொல்கிறார்.

ஓரடி முன்னால், ஈரடி பின்னால் என்ற பதிவில் ஏற்கெனெவே தொட்ட விஷயம் தான். அதில் இப்படி எழுதியிருந்தேன்: "ஒரு சிறு குழந்தையைப் போல, தட்டுத் தடுமாறி, குளறி, தடுக்கி விழுந்து, இப்படியாக trial and error ரீதியில் ஒவ்வொரு அனுபவமாக, அதன் படிப்பினையாக, பிறகு வேறொரு அனுபவம் அதன் மேல் படிப்பினை என்ற தொடர் சுழற்சியிலே, மனிதன் உண்மையை நோக்கி முன்னேறுகிறான்."

உண்மையைத் தேடுகிற முயற்சியில் இவனைப் போல முதலடி எடுத்து வைப்பவருக்கு, திரு மாதவ் பண்டிட் அவர்கள் எழுதிய இந்தப் பகுதி துணையாக இருக்கும்:

Illusions Are Necessary

“We have to enter Knowledge, says the Upanishad, through Ignorance. Ignorance is incomplete Knowledge and it is through this lower knowledge that we grow into the higher.

That is the nature of the evolutionary process in which we are involved. The knowledge that we are given is in proportion to the state of our consciousness. Knowledge grows out of experience and Mother Nature always grades the experience offered to us according to the capacity of our being.

The Mother remarks that in the longer-range perspective we find that every experience is just what is needed at the moment in order to push us to the next step in our growth. What we learn from it is exactly what we need to know at that stage. A few steps later that knowledge may prove to be imperfect, even faulty; but at the time we have it, it plays a useful part in our life. And despite its proving to be mistaken at a subsequent point of time, we do realise that it was a fruitful error.

We grow through errors, we learn from mistakes we profit by illusions. From this point of view the Mother says, illusions are necessary. They are an inevitable part of the mechanism of Nature to ensure our gradual growth. When we look back on our lives, we do realise the truth of this observation.

None can leap straight into the plenary orb of knowledge.

When we keep this law of growth in mind we become less intolerant, more understanding of the viewpoints of others. To each one his understanding is right. In his stage of evolutionary growth, he sees things from an angle that is appropriate to his locus. There is a purpose in his experiencing things as he does. We shall do well to respect this freedom, recognise his need for that freedom to pass through various stages of the development of knowledge. It will not do to tell him he is wrong and force on him a frame of knowledge without the necessary consent of experience. We have to wait till he completes the round of experiences that give him his knowledge and he outgrows it.

After all, one knows only what one is ready for. At the time we have a particular knowledge we are convinced that it is absolute. Otherwise we cannot function upon its basis. Tomorrow we may gain an added experience which may alter our knowledge. The previous one may prove to have been illusive. And yet that illusion has paved the way to the next knowledge which in turn may be convicted, still later, of being an error.

Thus do we move from one illusion to another, from one one partial truth to a fuller one. Till we arrive at the ultimate Truth all knowledge is relative, but each knowledge is necessary as long as it is relevant.”

excerpted from and acknowledged with thanks: “Commentaries on The Mother's Ministry II by Sri M P Pandit, published by Dipti Publications, Sri Aurobindo Ashram, Pondicherry.

ஒவ்வொன்றும் ஒரு காரணத்தோடு தான் நடக்கிறது. காரணத்தின் அடிப்படையிலேயே காரியங்கள் நடப்பதை நாம் அறிந்திருப்பதில்லை, அவ்வளவு தான். இதைத் தான் அபிராமி பட்டர் "நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை" என்று சொல்கிறார். காளிப் பாட்டில் பாரதியோ, "யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மை எல்லாம் நின்றன் செயல்களன்றி இல்லை" என்று பரவசப்படுகிறார்.

இவனது வாழ்விலும், என்ன நடக்கிறது என்பதை அனுமானிக்கும் முன்னமேயே பலப்பல நிகழ்வுகள் கடந்து போயின. ஏன், எதற்கு என்ற கேள்விகள் இப்போது இல்லை. நடந்த ஒவ்வொரு சம்பவமும், இவனைப் பக்குவப் படுத்தவும், அடுத்த நிலைக்குத் தயார் செய்யவும் உதவின என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஸ்ரீ அரவிந்த அன்னையே!

உன்னைச் சரண் அடைகிறேன்.

"Keep sheltered in my arms- they will protect you against everything

Open to my help it will never fail you."

என்று உறுதியளித்திருக்கிறாய்.

அந்த உறுதி இவனுக்கும் சேர்த்துத் தான் என்கிற நம்பிக்கையோடு உன்னைச் சரண் அடைகிறேன்.

ஓம் ஆனந்தமயி, சைதன்ய மயி, சத்யமயி பரமே!