Showing posts with label ஒரு புதன்கிழமை. Show all posts
Showing posts with label ஒரு புதன்கிழமை. Show all posts

புதன்கிழமை! கொஞ்சம் கொறிக்க! நிறையச் சிரிக்க!

இன்றைய நாளிதழ்களில் தேவே கௌடா, தலைப்புச் செய்தியாக இல்லாவிட்டாலும் கூட  பேசுபொருளாகி இருக்கிறார். இப்படி ஒருவர் இந்தியாவின் பிரதமராக இருந்தார் என்பதே இங்கே எத்தனைபேருக்குத் தெரியுமோ தெரியாதோ என்பதே ??குறிதான்!

symbolises a well-connected India. I thank Atal Bihari Vajpayee avaru, Dr. Manmohan Singh avaru and avaru for their immense contribution in completing a dream project of our Government.


We have had stand by PMs , Temporary PMs… but Deve Gowda was the sleeping PM… Metaphorically as well as literally

  

தேவே கௌடா பிரதமரானதே 1996 இல் நடந்த ஒரு அரசியல் விபத்துதான்! பிரதமராக இருந்ததும் கூட பதினோரு மாதங்களுக்கு சில நாட்கள் குறைவு தான்! அதிலேயே தூங்குமூஞ்சிப் பிரதமர் என்று கேலியாக அழைக்கப்பட்டவர். அவர்தான் நேற்று பிரம்மபுத்ரா நதி மேல் கட்டப்பட்ட போகிபீல் பாலத்திறப்பு விழாவுக்கு அழைக்கப்படாதது குறித்துப் பேசி, பேசுபொருளாகி  இருக்கிறார்.        

நேற்றுமுன்தினம் இவர் மகன், கர்நாடக முதல்வராக இருக்கும் குமாரசாமியின் முறை! இரக்கமே இல்லாமல் கொல்லுங்கள்! என்று அலைபேசியில் உத்தரவிடுகிறார்! எப்போதுமே இப்படித்தானா? காங்கிரஸ் கூட்டணிக்குப் பிறகா?


தேவே கௌடா புலம்பல், குமாரசாமி  உத்தரவு இதற்குப் பின்னால் இருக்கிற அரசியல் இவைகளை புரிந்து கொள்ள வேண்டுமா? எதனால் தேவே கௌடா பிரதமரானதே ஒரு அரசியல்விபத்து என்றானார்? புரிந்துகொள்ள கொஞ்சம் 1996 தேர்தலில் என்ன நடந்தது என்று பார்ப்போம். 

1996 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொங்குசபை என்று தான் மக்களுடைய தீர்ப்பாக இருந்தது. பிஜேபி 161 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக, அடுத்து காங்கிரஸ் 140. சரண்சிங்குக்குப் பின் பலப்பல பிரிவுகளாக சிதறிய ஜனதாதளம் (செகுலர்) 46, இடது முன்னணி 44, இதர மாநிலக்கட்சிகள் எல்லாம் சேர்த்து 100 என்று ஒரு குழப்பமான காம்பினேஷனில் ரிசல்ட்.

தனிப்பெரும் கட்சியாக இருந்த பிஜேபியை ஆட்சி அமைக்க வாஜ்பாய் அவர்களை ஜனாதிபதி அழைத்தார். அவரால் முடியவில்லை என்றானபோது அடுத்த வாய்ப்பு காங்கிரசுக்குப் போனது. கடந்தகால அனுபவங்களில் காங்கிரஸ்  இதர கட்சிகளின் தோள் மீதேறி சவாரி செய்யவே விரும்பியதில் முதல் தேர்வாக விபி சிங்கும், அடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோதிபாசுவும்  இருந்தனர். ஜோதிபாசுவுக்கு  விருப்பமிருந்தாலும், கட்சிக்கட்டுப்பாடு என்கிற கட்டாயத்தில் ஒதுங்கி கொண்டார். மூன்றாவதாக கருப்பையா மூப்பனார் பெயர் அடிபட்டதும் கருணாநிதி அதைக் கழித்ததும் #பழங்கணக்கு அடுத்து நாலாவதாக காம்ப்ரமைஸ் கேண்டிடேட்டாக தேவே கௌடா பிரதமரானது, ஒரு விபத்தா இல்லையா?

காங்கிரஸ்கட்சியால் பிரதமர்பதவி ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்டதில் முதலாவது சரண்சிங்! இரண்டாவது சந்திரசேகர்! அடுத்தது தேவே கவுடா! ஆரம்பத்தில் PV நரசிம்மராவ் ஆதரவாளராக இருந்த கௌடாவை காரியமானதும்,  காங்கிரஸ் தலைவராக இருந்த சீதாராம் கேசரியை வைத்துக் கவிழ்த்தார்கள்! ஆம், பதவியில் இருந்தது   June 1, 1996, முதல் April 21, 1997 வரைதான்!  பிறகு சீதாராம் கேசரியைத் தள்ளி விட்டு  சோனியா காந்தி கட்சித் தலைமையைக் கைப்பற்றிக்  கொண்டதும் இருபது வருடங்களுக்குப் பிறகு மகன் ராகுல்காந்தியை  அந்த இடத்தில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருப்பதும்  நேற்றைய துரோகங்கள் மீது கட்டமைக்கப்பட்ட இன்றைய வரலாறு!         

    
அப்படியானால் சஞ்சய் பாரூ எழுதிய இந்தப்புத்தகம் மன்மோகன்சிங்கை #TheAccidentalPrimeMinister என்று சொல்லி இருப்பது தவறா? இல்லை! வேறொரு விதத்தில் அதுவும்  சரிதான் என்பதைக் கூட இந்தப்பக்கங்களில் முன்னமே பார்த்திருக்கிறோம்!

******* 
கொறிப்பதற்குகொஞ்சமல்ல நிறையவே நேற்றைய துரோகங்கள் இன்றைய வரலாறு  என்று பார்த்து விட்டோம், இல்லையா? சிரிப்பதற்கென்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? காங்கிரசின் வரலாறுதான் சிரிப்பாய்ச் சிரித்துக் கொண்டிருக்கிறதே!



2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் புத்துயிர் பெறுமா? எனும் கேள்வி ஒரு புறம் இருக்க, கட்சி தேர்தலுக்கான தயாரிப்பை துவக்கி விட்டது.










இதில் சிரிப்பதற்கென்ன இருக்கிறது? கொஞ்சம் யோசித்துத்தான் சொல்லுங்களேன்!     

பழசேதான் புதுசு! சும்மா ஒரு வெளம்பரந்தான்! #2

இன்றைய சந்தைப்படுத்துதலில், ப்ராண்ட் என்பது, ஒரு பொருளின், அதன் தயாரிப்பாளரின், ஒரு நிறுவனத்தின், அப்புறம் அன்றாடம் அதைப் பயன் படுத்துகிறவர்களின் அடிப்படைப் பண்பு எத்தகையது என்பதன் அளவீடாக இருக்கிறது. எங்கே இருந்தோம், எங்கே போகிறோம் என்பதன் வெளிப்பாடாகவும் மாறி வருகிறது.

ப்ராண்ட் என்பது ஏதோ ஏமாந்தவன் தொடையில் கயிறு திரிக்கிற விஷயமல்ல!


இதெல்லாம் லுலுளாயிக்குத்தான் என்றே இருந்தால் யாருக்கு நஷ்டம்? 

ப்ராண்ட் என்பது தரத்தின் வெளிப்பாடு! தொடர்ந்து உறுதிப் படுத்தும் அடையாளம்!
ப்ராண்ட் என்பது, தவறான சித்திரத்தையோ, பொய்யான வாக்குறுதியையோ அளிப்பதுமல்ல.
ப்ராண்ட் என்பது, பயன்படுத்துபவருடைய  நம்பிக்கை! அதைக் காப்பாற்கிற தயாரிப்பாளரின் முழு உத்தரவாதம்!
ஒரு நல்ல ப்ராண்ட் என்பது நேற்றைய காலத்தின் அடையாளமாக நின்று விடுவது அல்ல! நாளை வரும் நாட்களிலும் நிலைத்து நிற்பது! என்று இந்தப் பக்கங்களில்  எழுதி எட்டு வருடங்களுக்கும் மேலாகிறது. தேடித் தேடி வாசிப்பதும் வலைப் பதிவுகள் எழுதுவதும் சுவாசிப்பது போல என்னுடைய இருப்பின் வெளிப்பாடாக இருந்த தருணங்கள் அவை.

ஆனால் கடந்த ஐந்து வருடங்களில் என்னுடைய செயல்பாடுகளை டயபடீஸ், டிஸ்க் ப்ரோலாப்ஸ் கோளாறுகள் அனேகமாக முடக்கி வைத்து விட்டன என்றே சொல்ல வேண்டும். உடல் உபாதைகள் அப்படியே இருந்தாலும் அவைகளை ஒதுக்கி வைத்து விட்டு என்னுடைய கவனத்தை மறுபடியும் வாசிப்பில், அதைத்தொட்டு எழுதுவதில் இப்போதுதான் செலுத்த முடிந்திருக்கிறது. இந்தப்பக்கங்களில் இந்த ஆண்டில் எழுதும் எட்டாவது பதிவு இது.

எழுதத்தூண்டுதலாக இருந்தது இந்து தமிழ் நாளிதழில் நான்கு வருடங்களுக்கு முன்  படித்த இந்தக் கட்டுரை  

சர்ஃப் கொடுத்த பதிலடி  என்ற தலைப்பில் மிகவும்  மேலோட்டமாக எழுதப் பட்ட கட்டுரையாக இது  தோன்றினாலும் வாசித்ததைத்தாண்டி யோசிக்க வைக்கிற விஷயம் இது. கட்டுரையாளர் நிர்மா வாஷிங் பவுடர் கொடுத்த கடுமையான போட்டியை எப்படி சர்ஃப் சமாளித்தது என்று சொல்லிப் போவதில் மிகவும் முக்கியமானது brand positioning என்ற அம்சம். அதைக் கொஞ்சம் பார்ப்பதற்கு முன்னால் பதிலடி கொடுப்பது எப்படி  என்பதை கோல்கேட் - பெப்சொடெனட் இடையில் நடந்த விளம்பர யுத்தம் ஒன்றை விரிவாகவே பேசியிருப்பதை முடிந்தால் ஒருதரம் வாசித்து விடுங்கள். 

 

சுருக்கமாகச் சொன்னால் கூட்டத்தில் தனித்துத் தெரிகிற வித்தைக்குப் பெயர்தான் brand positioning. தனித்துத் தெரிய வேண்டியது விளம்பரப்படுத்தப் படுகிற பொருளாகத்தான் இருக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை. விளம்பரத்தைப் பார்க்கிற உங்களுடைய மனதில் போட்டியாளர் தரும் பொருளைப் பற்றி ஒரு சின்ன சந்தேகத்தை ஏற்படுத்த முடிவதில் கூட உங்களுடைய தயாரிப்பைக் குறித்து ஒரு உயர்வான பிம்பத்தை ஏற்படுத்துவது தான் brand positioning.

According to Jack Trout and Al Ries in their bestseller from 1981 “Positioning: The Battle for your mind”, brand positioning is a battle for “the minds of your customers”.
”Positioning starts with a product. A piece of merchandise, a service, a company an institution, or even a person. Perhaps yourself. But positioning is not what you do to a product. Positioning is what you do to the mind of the prospect. That is, you position the product in the mind of the prospect”.
In other words it’s not what you do to a product, it’s how ,you position that product in the mind of your customers.
பழைய திரைப்படங்களைக் கொஞ்சம் நினைவு படுத்திக் கொண்டு கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கதாநாயகனை மிகவும் உத்தமனாகக் காட்டிக் கொண்டே இருக்க  வேண்டிய அவசியமே இல்லை. மற்றக் கதா பாத்திரங்களை குறிப்பாக வில்லன் மற்றும் கோஷ்டியை கொஞ்சம் கெட்டவர்களாக, கேணையர்களாகச் சித்தரிக்க முடிந்தாலே இங்கே போதுமானது. இப்போது தான் அதெல்லாம் ரொம்ப மாறிப்போச்சே! #நான்ரொம்பக்கெட்டவன் என்றே சொல்லிக்கொள்கிற காலமாகிவிட்டதே என்கிறீர்களா? அடிப்படை அம்சம் என்னவோ அதே பழைய டெக்னிக் தான்!  

#இருகோடுகள் படத்தின் ஆரம்பக்காட்சி நினைவுக்கு வருகிறதா? 

ரொம்பவுமே பழைய  டெக்னிக்காக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா?

பழசுதான்! ஆனால் புதுசை எல்லாம் தூக்கிச்சாப்பிட்டு விடுகிற டெக் னிக். என்ன சொல்கிறீர்கள்? 

இந்தக்கேள்வியுடன் எழுதப்பட்ட மீள்பதிவுதான்! பதில்களைத் தேடி மறுபடியும்! சொல்லுங்களேன்! பதில்களின் மீது மேலும் விரிவாகப் பேசுவோம்!  

ஒரு புதன்கிழமை! கொறிக்கலாம்! சிரிக்கலாம்!

#Idiot என்று கூகிளில் தேடினால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் படம் வருகிறதே! எப்படி? எப்படி?

கூகிள் நிறுவனத்தின் #CEO சுந்தர் பிச்சையிடம் அமெரிக்க காங்கிரஷனல் விசாரணைக்குழு  
(நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மாதிரி) நடத்திய விசாரணையில் கேட்கப்பட்ட கேள்வி இது!

அல்கோரிதம், keyword search என்று பல ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் Google கொஞ்சமல்ல நிறையவே குசும்பு பிடித்த நிறுவனம் என்பதைச் சொல்லத்தேவையே இல்லை! கூகிள் பயனர்களுடைய தனிப்பட்ட விவரங்கள், தேடுதல்கள், தெரிவுகள் இப்படி எல்லாவற்றையும் கண்காணிக்கிறது என்பது தெரியும் தானே!   

கோபம் வருகிறதா? கோபம் தீர ஒரு குட்டிக் கதையைப் பார்க்கலாமா? 

ஸ்டாலினுக்குப் பிந்தைய நாட்கள்  மாஸ்கோ வீதியில் ஒரு ஆசாமி திடீரென்று குருஷேவ் ஒரு முட்டாள்! குருஷேவ் ஒரு முட்டாள்! என்று கூவிக்கொண்டே ஓடினான். ஆளைப்பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரித்தார்கள். கூவினது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்ட பிறகு நீதிபதி இப்படித் தீர்ப்புச் சொன்னாராம்: "தெருவில் அநாகரீகமாகக் கூவிக் கொண்டு ஓடியதற்காக ஒருவாரம் சிறை! அரசாங்க ரகசியத்தை பகிரங்கப் படுத்தியதற்காக ஏழு வருடக் கடுங்காவல்!"  

*****
#கேள்விக்கென்னபதில் நிகழ்ச்சியில் கேள்விக்கு அசட்டையாக பதில் சொன்னதில் ஜெயலலிதாவின் அதிருப்திக்கு ஆளானதையும் மீண்டு வர தந்திடிவி நிர்வாகத்திடம் பேசி தொடர் நேர்காணல்களுக்கு ஏற்பாடு செய்து உதவியதும் ரங்கராஜ் பாண்டே என்று நெகிழ்கிறார் நாஞ்சில் சம்பத். நல்ல பேச்சாளர். அதிமுகவில் ஐக்கியமான பிறகு இன்னோவா சம்பத் என்ற அடைமொழியுடன் காமெடிப்பீசாகிப் போனது காலம் செய்கிற கோமாளித்தனங்களில் ஒன்று. 

*****   
ஊடகங்கள் பிரபலங்களை வைத்துக் காமெடி செய்வதுண்டு. சமயங்களில் தாங்களே காமெடிப் பீசாகி நிற்கிற தருணங்களும் உண்டு. நடிகர் விஜய் சேதுபதியை மடக்குவதாக எண்ணிக் கொண்டு தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டிருந்த நிருபர் பல்பு வாங்குவதை பாருங்கள்!  

அடுத்த புதனன்று கூடுதல் கொறிப்புகளுடன் சந்திக்கலாம்!   

பீர்பால் கதைகள் -7 ஒரு புதன்கிழமைக் கலாய்த்தல்கள்!


டில்லிப் பாதுஷாக்கள்  என்றாலே கொஞ்சம் கேணத்தனமான, விபரீதமான, வித்தியாசமான சந்தேகங்கள் தினசரி வருவதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் என்பதை இந்தப் பக்கங்களில் பீர்பால் கதைகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பாதுஷாக்களுக்கு சந்தேகம் வந்துவிட்டால் நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி என்று தண்டோரா எல்லாம் கிடையாது! அதற்குத் தான் முட்டாள் மந்திரி, பிரதானி, அப்புறம் கலைச் சேவை செய்கிறவர்கள், ஏதோ ஒரு காரணத்தை வைத்துப் பாராட்டு விழா ஏற்பாடு செய்கிறவர்கள்   என்று ஒரு பெரிய துதிபாடிக் கும்பலே இருக்கிறதே!  இப்படிக் கேணத்தனமான கூத்தை வேடிக்கை பார்க்க மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டு வரத்தயாராக இருக்கிற  மக்களுக்கு இலவசமாகக் கொஞ்சம் அனுமதி வழங்கி கலைச் சேவை "காட்டுகிற"  தர்பாரும் உண்டு! இது போதாதா?

ந்தேகப் பட்டு சந்தேகப்பட்டு மூளைக்கு வேலை  கொடுக்கிற மாதிரிக் காட்டிக் கொண்டதிலேயே அலுப்பு வந்து விட்டதோ என்னவோ! ஒரு நாளைக்கு, பாதுஷா அக்பருக்கு, அது கனவில் வந்தது! கனவில் வந்த சந்தேகம் கொஞ்சம் பயமுறுத்துகிற மாதிரியும் இருந்தது! புரியாத விஷயங்கள் எல்லாமே பயமுறுத்துபவைதானே!  பாதுஷா மட்டும் விதி விலக்கா?

னவில், தனக்கு ஒரே ஒரு பல்லைத் தவிர மற்ற எல்லாப் பல்லும் விழுந்து விடுகிற மாதிரிக் கனவு வந்தால், குழப்பம் வருமா வராதா? இங்கே ஏதடா சாக்கு என்று எது கிடைத்தாலும், அடிவருடிகளை வைத்துப் பாராட்டு விழா நடத்தி, தானே நம்ப முடியாதபடிக்கு  இந்திரனே சந்திரனே மனு நீதி சமூகநீதி சமத்துவம் கண்ட நாயகனே என்னைப் பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப் போடுவேன் என்ற அளவுக்குப் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருப்பதைப் போல, பாதுஷாவுக்குக் குழப்பம் வந்தால் என்ன செய்வார்கள்?

கூப்பிடு தர்பாரை! உத்தரவு பறந்தது! டில்லி குரல் கொடுத்தால் தர்பார் கிடு கிடுக்காதோ!?

னவுக்குப் பொருள் தெரிந்து கொண்டாக வேண்டுமே! நாடி, கைரேகை, ஜாதகம், கிளி, எலி ஜோசியம், முகத்தைப் பார்த்தே ஆரூடம் சொல்லும் ஆரூடக்காரர்கள், சோழியை உருட்டிப் போட்டுப் ப்ரச்னம் பார்த்து பலன் சொல்லிப் பல்லை இளிப்பவர்கள், இப்படி எல்லோரிடத்திலும்  பாதுஷாவுக்கு வந்த கனவுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டாயிற்று!

னேகமாக எல்லோருமே ஒன்று சேர்ந்தார்போல, ஒரே  விஷயத்தைத் தான் சொன்னார்கள். பாதுஷாவின் உறவினர்கள் அத்தனை பேரும், பாதுஷாவுக்கு முன்னாலேயே பரலோகம் போய்விடுவார்கள்!

ப்படிப் பலனைக் கேட்டதும் பாதுஷாவுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்பதிலேயே சற்றுக் குழப்பம் வந்து விட்டது! தனக்கு முன்னாலேயே, நெருங்கிய உறவினர்கள் அத்தனைபேரும் பரலோகம் போய்விடுவார்கள் என்ற செய்தியைக் கேள்விப் பட்டதற்காக வருத்தப் படுவதா, இல்லை அது எப்படி இவர்கள் எல்லோரும் தன்னுடைய உத்தரவு இல்லாமலேயே முந்திப் போய்விடுவார்கள் என்பதற்காகக் கோபப் படுவதா? நவரசத்தில் எந்தரசம் இந்த சீனுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லையே!

பாதுஷாவுக்குக் கோபம் கோபமாக வந்தது! பின்னே, இவ்வளவு யோசிக்க விட்டால்....! குழப்பம் அதிகமாகுமா இல்லையா?

வராவது இதற்குப் பரிகாரம், மாற்று என்று எதையாவது சொல்லிக் குழப்பத்தைப் தனிவிக்கிரார்களா என்று அக்பர் சபையின் இரு மருங்கும் ஏற இறங்கி  இப்படி அப்படியும், அப்படி இப்படியுமாகத் தலையைத் திருப்பிப் பார்த்தார்! ஒருத்தரும் பதில் சொல்வதாகக் காணோம்!

ன்ன தர்பார் இது! மொத்தமும் தண்டங்கள்! ஒரு குழப்பத்தைத் தீர்ப்பதற்கு யோசனை கேட்டால், இன்னொரு குழப்பத்தைக் கொண்டு வருகிறவனைஎல்லாம்தர்பாரில் நிரப்பி....அம்ம்ம்மா!  இப்போதே கண்ணைக் கட்டுகிறதே!

ந்த பீர்பால் இருந்தாலாவது ஏதாவது சொல்லியிருப்பானே! பீர்பாலையும் காணோம்! பாதுஷா இப்படிக் குழம்பிக் கொண்டிருக்கும்போதே  பீர்பால் சபைக்குள் நுழைந்தார்! அக்பருக்கு, தன்னுடைய சந்தேகத்துக்கு விடை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் பிறந்தது! தான் கண்ட கனவுக்கு என்ன அர்த்தம் என்று சொல்ல முடியுமா என்று பீர்பாலிடமும் அந்தக் கேள்வியை அக்பர் கேட்டார்.

கொஞ்சம் யோசித்து விட்டு பீர்பால் சொன்னார்: "அந்த ஒரு பல் மட்டும் விழாமல் இருந்ததாகக் கனவு கண்டது,  மற்ற எல்லோரையும் விட நீங்கள் அதிக ஆயுளோடிருப்பீர்கள் என்பது தான் ஹூசூர்! "

பாதுஷாவுக்கு மிகவும் சந்தோஷம்! ஒவ்வொரு கேள்விக்கும் பதிலை இந்த பீர்பால் எவ்வளவு சரியாகச் சொல்லி விடுகிறான்! வழக்கம்போல பீர்பாலைப் பாராட்டி விட்டுப் பரிசுகளும் அளித்துவிட்டு, தண்டத்துக்குக் கூடிய தர்பார் கலையலாம் என்று பாதுஷா உத்தரவு போட்டார்! இப்படி உத்தரவு போடுவது மட்டும் எவ்வளவு சுகமாக இருக்கிறது!

ரண்மனைக்குத் திரும்புகிற சமயத்தில் பாதுஷாவுக்குத் திடீரென்று ஏதோ பொறி தட்டியது மாதிரித் தோன்றியது! இப்படிப் பொறி தட்டுகிற சமயத்தில் எல்லாம், அடுத்த குழப்பம் தயாராக ஆரம்பித்துவிட்டது என்பது பாதுஷாவின் அனுபவம்!

ற்றவர்கள் சொன்னதைத் தானே, பீர்பால் கொஞ்சம் மாற்றிச் சொன்னான்! அதெப்படி, மற்றவர்கள் சொன்னபோது வருத்தமாக, கோபமாக வந்தது, அதையே பீர்பால் கொஞ்சம் மாற்றிச் சொன்னபோது சந்தோஷமாக இருந்தது?

மாற்றி யோசிப்பதா, யோசித்து மாற்றுவதா ன்று பாதுஷாவுக்கு டுத்த ந்தேகம்  ழக்கம் போயாராகி விட்டது!

oooOooo

வால் பையன்கள் காட்டும் பரிணாமம்!


எழுத வேறெதுவும் செமை மொக்கையாகக் கிடைக்காத தருணங்களில் எல்லாம், பரிணாமத்தைப் பிராண்டுவது என்ற நல்ல வழக்கத்தை நம்ம வால்ஸ் வைத்துக் கொண்டிருக்கிறார்! சேக்காளி ராஜன் வந்து அடக்கினால் தான் உண்டு போல!

பரிணாமத்துக்கு முதலில் கொஞ்சம் முன்னுரை, அப்புறம்
அந்த
முன்னுரைக்கே விளக்கவுரை, அப்புறம் கொஞ்சம் படங்களோடு என்று பரிணாமப் பிராண்டல்கள் ஆரம்பித்துவிட்ட பிறகு நான் மட்டும் சும்மா இருந்துவிட முடியுமா என்ன?


அதனால் ஒரே ஒரு படம் மட்டும்! இந்தப் படத்துக்கும் கோனார் நோட்ஸ் போட வேண்டும் என்று கேட்காமல் இருக்கும் வரை சந்தோஷம்!

oooOooo 


வங்கிகள், நிதித்துறை,பொருளாதாரம் பற்றிப் பதிவில் எழுதி நாட்களாகி விட்டதே என்று செய்திகளைக் கொஞ்சம் தேடிப் படித்துக் கொண்டிருந்தேன்.  

அப்படிப் படித்துக் கொண்டிருந்தபோது சென்ற வருடம், அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது, 'உலகப் பொருளாதார நெருக்கடியை நாம் நிறுத்த முடியும்-அதைப் பற்றிப் பேசாமல் இருந்தால்!"  என்ற வாசகத்தைப் பார்த்தேன்!  சென்ற வருட ஏப்ரல் மாதத்தில் வெளியான பக்கம் இது! இந்த விவகாரமான படத்தை ஒரு டி ஷர்ட்டில் போட்டு இந்த வலைத் தளத்தில் சொல்லப்பட்ட காரணம்  இது!

"
GFCSUCKS.COM aims to stop incessant talking about the Global Financial Crisis and believes it is only making matters worse."

சரிதானா என்று கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொல்லுங்கள்!