1960களிலிருந்தே தமிழகம் தேசிய நீரோட்டத்திலிருந்து விலக ஆரம்பித்துவிட்டது. இதற்கு மத்தியில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறந்து விடமுடியுமா என்ன? அதன் விளைவு, காங்கிரஸ் கட்சியே கூட தேசிய அந்தஸ்தையும் தேசியப்பார்வையும் இழந்து சில மாநிலக்கட்சிகளின் தயவில் இறுதிமூச்சை விட்டுக்கொண்டிருக்கிறது. பார்த்தீனியம் களைச்செடி மாதிரி வளர்ந்திருக்கிற திராவிட இயக்கங்களுக்கு ஒரு நல்ல மாற்றாக வளரவேண்டிய பொறுப்பும், வாய்ப்பும் பாரதீய ஜனதா கட்சிக்கு மட்டுமே இருக்கிறது. இதுநாள் வரை ஏதோ ஒரு திராவிடக் கட்சியுடன் இணக்கமாகப் போகிற ஒன்றை மட்டுமே செய்துவந்த பிஜேபியின் மாநில நிர்வாகிகள் திராவிடப்புரட்டை எதிர்த்து அரசியல் செய்வதில் எந்த விதமான அக்கறையையும் காட்டவில்லை என்பது ஊரறிந்த ரகசியம். இந்த நிலையில் பிஜேபியின் தமிழ் மாநிலத்தலைவராக K அண்ணாமலை ex IPS நேற்று கட்சித்தலைமையால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
வீடியோ 39 வினாடிகள். அண்ணாமலை ஒரு துடிப்பான இளைஞர். தேசியப் பார்வை கொண்ட ஆளுமை. ஆனால் இங்கே தமிழக பிஜேபியைத் தட்டி எழுப்புவது, திராவிடப் பாசம் மிகுந்தவர்களைக் களையெடுப்பது கடினமான சவாலாக இருக்கும். அண்ணாமலையை சமாளிப்பது இப்போது ஆளும் திமுகவுக்குமே பெரும் சவாலாக இருப்பார், எப்படி? கரூர் பேருந்து நிலையம் அருகே பிஜேபியினர் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்ததில் கடுப்பான மாவட்ட ஆட்சியர் அனைவரையும் கைது செய்யும்படி உத்தரவு போட்டுப்போய்விட் டார். செந்தில் பாலாஜிக்கு ஒருநியாயம் பிஜேபிக்கு ஒரு நியாயமா என்று பிஜேபியினர் கேள்விக்குப்பதில் சொல்லவும் முடியாமல் கைது செய்யவும் முடியாமல் போலீசார் தடுமாறியதில் வெளிப்பட்டது. அண்ணாமலை தலைவரான முதல் நாளே கலெக்டர், போலீசை பகைத்துக் கொண்ட பாஜகவினர்! என்ற செய்தியின் பின்னால் அண்ணாமலையின் தலைமைமீது மிகவும் அதீத நம்பிக்கை கொண்ட இளைஞர்கள் மற்றும் கட்சிக் காரர்கள் இருக்கிறார்கள் என்பதும் இருக்கிறது. (கரூரில் பிஜேபியினர் கைதுசெய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.)
வீடியோ 41 நிமிடம். கோலாகல ஸ்ரீனிவாஸ் கொஞ்சம் விரிவாக அண்ணாமலை பிஜேபியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதில் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பி, விடையைத் தேடவும் முயற்சித்து இருக்கிறார். திமுக சிலவருடங்களாகவே பிஜேபியை எதிர்த்து அரசியல் என்பதில் தெளிவாகச் செயல்பட்டு வருகிறது. அதேமாதிரி பிஜேபியும் தனது அரசியல் எதிரி திமுகதான் என்று ஒரு உறுதியான நிலை எடுக்குமா?
அண்ணாமலைக்கு முன்னால் இருக்கும் ஆகப்பெரிய சவால் இது தான்! சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்ள இறைவன் துணையிருப்பானாக. அண்ணாமலைக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகளுடன்!
மீண்டும் சந்திப்போம்.
அண்ணாமலை நிச்சயம் வித்தியாசமானவராக இருப்பார்.
ReplyDeleteபோலீஸ் துறை, திமுக சார்பாகச் செயல்பட்டாலும், நிச்சயம் பாஜகவை முன்னெடுத்துச் செல்வார் அண்ணாமலை. அவருக்கு வாழ்த்துகள்.
நிச்சயம் போலிப்புரட்டுக் கட்சிகள், உதிரிக்கட்சிகள் அழியவேண்டிய நேரம் இது. தமிழகத்தில் அதிமுக, பாஜக, திமுக, பாமக, காங்கிரஸ் என்ற ஐந்து கட்சிகளே உள்ளன. இதில் தேசியப் பார்வை குறைந்தது இரண்டு கட்சிகளுக்காவது உண்டு. பார்க்கலாம் தமிழக அரசியல் எப்படிப் போகிறது என்று
அண்ணாமலை தான் வித்தியாசமானவர் என்பதை பள்ளப்பட்டி ஜமாத் பிரசாரத்துக்கு உள்ளேவராதே என்று தடைபோட்டதை உறுதியாக சமாளித்ததிலேயே நிரூபித்து விட்டார் நெல்லைத்தமிழன் சார் ! இங்கே மதுரையில் அதிமுக அமைச்சர்களை கோரிப்பாளையம் பகுதியில் உள்ளே நுழைய விடாமல் தடுத்தபோது, சத்தமே இல்லாமல் பின்வாங்கி ஓடினார்கள்.
Deleteதிமுகவும் அதிமுகவும் உதிரிக்கட்சிகள் தயவில்லாமல் ஆட்சியில் அமரவே முடியாது என்ற நிலையில், பிஜேபியும் அந்த உதிரிக்கட்சிகளில் ஒன்றாக ஆகிவிடக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுவது காலத்தின் தேவை.
பிஜேபியைத் தவிர தேசியப்பார்வை கொண்ட கட்சி புதிய தமிழகம் கட்சி ஒன்றுதான் தமிழகத்தில் இருப்பதாக எனக்குத் தெரிகிறது. நீங்கள் யாரை நினைத்துச் சொல்கிறீர்கள்?
ஒரு மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்க வைக்கிறது.
ReplyDeleteநிச்சயமாக நல்லதொரு மாற்றம் வரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது ஸ்ரீராம்!
Deleteஅண்ணாமலை வெல்க..
ReplyDeleteபுதியதொரு மாற்றம் விளையட்டும்..
ஜெய்ஹிந்த்..
அண்ணாமலை மாநிலத் தலைவராக வெற்றி பெறவேண்டும் என்பதே நம்முடைய பிரார்த்தனையாக இருக்கிறது துரை செல்வராஜு சார்! மாற்றத்துக்கான விதையாக அண்ணாமலை இருப்பார்.
Deleteதிராவிட கட்சிகளின் பொய் புரட்டுகளை வெளிச்சம் போட்டுக்காட்டினால் ,போதும்.அதற்கு ஒரு தொலைக்காட்சி துவங்கப்படவேண்டும்.
ReplyDeleteதமிழகத்தில் தான் வெட்டி அரசியல் பேசும் சேனல்கள் அதிகம் என்பதை அறிவீர்களா சம்பத் சார்? இன்னொரு சேனல் அவசியம் தானா?
Deleteதிராவிட மாயை தமிழ்நாட்டைப்பீடித்து நீண்டகாலமாகி விட்டது. ஒரு சரியான அரசியல் மூவ் போதும், இவர்களை வெளிச்சம் போட்டுக்காட்ட. இன்றைய தலைப்புச்செய்தி என்னவென்று பார்த்திருப்பீர்கள் தானே!