Showing posts with label பானா சீனா. Show all posts
Showing posts with label பானா சீனா. Show all posts

இட்லி வடை பொங்கல்! #68 கொரோனா களேபரங்கள்! மம்தா! சீனப்பூச்சாண்டி! பானாசீனா!

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதில் மேற்கு வங்க அரசு இயந்திரம் முற்றிலுமாகச் செயலிழந்து போய்க் கிடப்பது அம்பலமாகியிருக்கிறது. இதுவரை கொரோனாவுக்காக சோதனை செய்யப்பட்டது ஏழாயிரத்துச் சொச்சம் நபர்களிடம் தான் என்பது இந்தியாவிலேயே ஆகக்குறைந்த எண்ணிக்கை என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லை. குழாயடிச் சண்டைக்காரியாக எதற்கெடுத்தாலும் கலகக் குரல்  எழுப்பும் மம்தா பானெர்ஜி நெருக்கடி, பிரச்சினை என்று வரும்போது தனது கையாலாகாத்தனத்தை மூடிமறைப்பதில் மட்டுமே குறியாக இருந்தார். டைம்ஸ்  நவ் டிவியின் 26 நிமிட விவாத வீடியோ இங்கே   யூட்யூப் தள வீடியோக்களை இணைக்க முடியவில்லை என்பது ப்ளாக்கர் தளம் விட்டுவிட்டு எனக்கு கொடுத்துவரும் குடைச்சல்.  


#FCC #FederalCommunicationsCommission  #ChinaMobile #ChinaUnicomAmericas #ChinaTelecomAmericas #PacificNetworksCorp #ComNet  


அமெரிக்காவின் FCC...அமெரிக்க தொலைத்தொடர்புக்கான நிர்வாக அமைப்பு.  கடந்த வருடம் மே மாதம், சீன கம்யூனிச அரசுக்கு சொந்தமான China Mobile நிறுவனம் ...அமெரிக்காவில் இயங்குவதற்கு அனுமதி மறுத்தது FCC. காரணம்...அதன் மூலம், அமெரிக்காவிற்குள்... சீனா தன்னுடைய உளவு வேலையை நிகழ்த்தும் என்று கூறியது.கடந்த மாதம்...அமெரிக்க நீதித்துறை ...சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களை அமெரிக்காவுக்குள் இயங்க அனுமதிப்பதை தடை செய்யும்படி சிபாரிசு செய்தது.

இந்த நிலையில்...அமெரிக்காவில் இயங்கி கொண்டிருக்கும் China Telecom Americas , China Unicom Americas, Pacific Networks Corp, இதன் துணை நிறுவனமான ComNet [USA] LLC ஆகிய சீன அரசு நிறுவனங்களை ...தங்களுக்கு சீன தொடர்பு இல்லை என்று நிரூபிக்காவிட்டால்..தடை செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது..FCC.

சீன அரசு நிறுவனத்திற்கு எப்படி சீன தொடர்பு இல்லாமல் இருக்கும் ? பின் ஏன் இப்படியான அறிவிப்பு ? என்று அபத்தம் போல தோன்றினாலும் தகுந்த காரணம் உண்டு.

உலகமயமாக்கலுக்கு பின்...உலக வியாபார ஒப்பந்தங்களின் படி ...அனுமதி அளிக்கப்பட்ட பிற நாட்டு நிறுவனத்தை வெளியற்றவோ..தடை செய்யவோ ..தகுந்த காரணங்களை கூற வேண்டும்.

அந்த சீன அரசு நிறுவனங்களால்..தங்களுக்கு சீன தொடர்பு இல்லை என்று நிரூபிக்க இயலாது என்பதால் தான் அப்படியொரு கேள்வி.



தாமதமாகவேனும் அமெரிக்காவும், இந்தியாவும், இதர உலக நாடுகளும் விழித்துக் கொண்டு காய்களை நகர்த்துகின்றன.இதற்கான எதிர்வினைகள் தான்...'உள்நாட்டு குழப்பங்கள்' உட்பட வேறு வகைகளில்...வேறு வடிவங்களில் ..வெளிப்படுகிறது.



அருண் ஜெயிட்லியையே குறைசொல்லிக் கொண்டிருக்க முடியாது. அவர் மேலே போய்ச்சேர்ந்து விட்டார்.  பானாசீனா மீதான வழக்குகள், விசாரணையின் நிலையென்ன? யாருக்காவது தெரியுமா?  


மீண்டும் சந்திப்போம்.

தந்தி டிவி சலீம்! அப்பச்சியிடம் பேட்டி எடுக்கிறார்!

ப. சிதம்பரத்துக்கு முட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் தந்தி டிவிக்கு வந்திருக்கிறது என்பதை எப்படிப் பார்ப்பது? தன்னுடைய முட்டுகொடுக்கிற வேலையில்   தந்திடிவி சலீம் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார்? பானாசீனா நோகாமல் நெளியாமல் வெற்றிலைசுருளை மெல்வதுபோல வாசாலகமாகப் பேசக் கூடியவர் என்பது தெரிந்துமே கூட சரியான ஹோம் ஒர்க் செய்யாமல் சலீம் பேட்டி காண்கிறார்.


வீடியோ 40 நிமிடம்.  செட்டியாரிடம் நோண்டி நோண்டிக்  கேள்வி கேட்கக்கூடாது என்று சலீமுக்கு நெருக்கடி வந்திருக்கலாம். பூப்பூவென்று அப்பச்சி ஊதித்தள்ளி விட்டு பேட்டியை முடித்து விடுகிறார்.

சலீமைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்.        

#செய்திகளில் புலி வால்! பபிதா போகாட்! சீனாதானா!

ன்றைக்கு திங்கட்கிழமை நவராத்ரி இரண்டாவது நாள் சில நல்ல செய்திகளும் வந்திருக்கின்றன. சீனாதானா இன்னும் சிலகாலம் திஹார் சிறையிலேயே பத்திரமாக இருக்கட்டும் என்று டில்லி உயர்நீதி மன்றம் ஜாமீன் கோரிக்கையை நிராகரித்திருக்கிறது. காசுக்காரக் காங்கிரஸ் வக்கீல்கள் நீதிமன்றங்களை ஆட்டிப்படைத்த காலம் மலையேறுகிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?

  
ரியானா சட்டமன்றத் தேர்தல்களுக்கு பிஜேபி தனது வேட்பாளர்களை அறிவித்திருப்பதில் சில ஆச்சரியங்களும் இருக்கின்றன. டங்கல் என்று  அமீர்கான் இரு ஹரியானா மல்யுத்த வீராங்கனைகளை வைத்துப் படமெடுத்து அவர் கல்லாவை நிரப்பிக் கொண்டது ஞாபகம் இருக்கிறதா? 


ண்களுக்கான வீரவிளையாட்டு என்றே கருதப்பட்ட மல்யுத்தப் பயிற்சியை தனது இருமகள்களுக்கும் கற்பித்ததாக  ஹரியானா மல்யுத்த வீரர் மஹாவீர் சிங் போகாட்  வாழ்க்கையின் ஒரு பகுதியை மட்டுமே டங்கல் சொன்னது. தனது நான்கு மகள்கள் கீதா, பபிதா குமாரி, ரித்து, சங்கீதா தவிர சகோதரர் மகள்கள் பிரியங்கா, வினேஷ் ஆக போகாட் சகோதரிகள் ஆறுபேரையுமே மல்யுத்த வீராங்கனைகள் ஆக்கிப்  பயிற்சி கொடுத்தார் என்பது அவ்வளவாக வெளியே தெரியாத செய்தி! 


ந்த ஆறு போகாட்  சகோதரிகளில் கீதா, பபிதா , வினேஷ் மூவருமே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெவ்வேறு எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற தங்கமங்கைகள்! பிரியங்கா ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். ரித்து தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றவர். சங்கீதா சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர் என்ற தகவலைச் சொல்லிவிட்டு, இப்போது பபிதா போகாட், மற்றும் மல்யுத்தவீரர் யோகேஷ்வர் தத் இருவரும் ஹரியானாவில் பிஜேபி வேட்பாளர்களாகக் களம் இறங்குகிறார்கள் என்று சொன்னால்தான் செயதியை முழுமையாகச் சொன்னோம் என்ற திருப்தியே வருகிறது! 


னக்கு   புலித்தலை, புலிக்கொடி கொடி   காட்டி அரசியல் செய்கிற இந்தக் கட்சியையும் பிடிக்காது, புலி புலி என்று கூவி உண்டியல் குலுக்குகிறவர்களையும் பிடிக்காது என்ற தகவல் இங்கே வரும் நண்பர்களுக்குத் தெரிந்து இருக்கும்! சிவசேனா மட்டும் பிடிக்குமா என்ன? பால்தாக்கரேவின் பேரன் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே, தெற்கு மும்பை ஒர்லி சட்டசபைத் தொகுதியில் சிவசேனா வேட்பாளராகக் களம் இறங்கியிருக்கிறார் என்கிறது செய்தி. தாக்கரே, வாரிசுகளில் முதல்முறையாகக் களமிறங்குகிறவர் என்பதற்காக,   ஜெயித்தால் முதல்வர் நாற்காலிக்கு அடிபோட்டு , துணை முதல்வர் பெயர்ப் பலகைக்கு செட்டில் ஆகிவிடும்  ரகசியத்திட்டம் ஊருக்கே சிதம்பர வெளிச்சமாய் தெரிகிறதென்பதை சொல்லாமல் இருந்துவிட முடியுமா? 

மீண்டும் சந்திப்போம். 

சண்டேன்னா மூணு! பானாசீனா! தமிழிசை! திருமாவளவன்!

ப.சிதம்பரம் மாதிரியான அரசியல்வியாதி அரசியலில் தலைதூக்கிவிடக் கூடாதென்பது என் உறுதியான கருத்து. இந்த செட்டிநாட்டு ஜாமீன் ஆசாமி இதுவரை, என்ன சாதித்தார்? மிகக் குறுகிய காலத்திலேயே காங்கிரஸ் முதல் குடும்பம், கருணாநிதி வகையறா தேடிக் கொண்ட சம்பாத்தியத்தை விட சற்று அதிகமாகவே சம்பாதித்துவிட்டார் என்றொரு தகவல் பொதுவெளியில் உண்டு என்பதைத் தவிர சாதித்தது என்ன?  மூப்பனாரோடு ஒட்டிக் கொண்டு ரஜனி வாய்ஸில் அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பானாசீனா, எப்படிப் பட்டவர் என்பதை வேறு எவரையும் விட திமுகவினர் நன்கு அறிவார்கள். அவர்களால் உள்ளுக்குள் முனகுவதைத் தவிர வேறென்ன செய்து விடமுடியும்?

நிகழ்ச்சியின் பெயர் அக்னிப்பரீட்சை! உண்மையில்  அக்னிப்பரீட்சை யாருக்கு? யோசித்துப் பார்த்தால் அது  வாக்களிக்கப்போகும் ஜனங்களுக்குத் தான் என்பதைப் புரிந்துகொண்டால், அதுவே மாற்றத்துக்கான முதல் படி! இங்கே யாரை எதற்காக நிராகரிக்க வேண்டும் என்பதில் ஒரு தெளிவு வந்தால் அதுவே பானாசீனா மாதிரியானவர்கள் களையப்படுவதற்கு உந்துதலாக இருக்கும்!  வாய்ப்பந்தல் போடுகிறவர்களை இனம் கண்டு நிராகரிக்காவிட்டால், அடுத்த தலைமுறைக்குப் பெரும் தீங்கு செய்தவர்களாகிவிடுவோம் 
  
******* 

டாக்டர் யக்கோவ் தமிழிசை பற்றி என்னத்த சொல்ல?

வார்த்தை விளையாட்டு விளையாடுகிற இந்த வாய் மட்டும் இல்லாவிட்டால் ....?   

சமரசம், சமாதானம் பற்றிப் பேசுகிற தருணங்களில் மட்டுமல்ல கேள்விக்கு பதில் சொல்கிற எல்லாத் தருணங்களிலும்  குமரி அனந்தன் மகளாக மட்டுமே தெரிகிறாரே தவிர, பிஜேபி மாநிலத் தலைவராக வெளிப்படவில்லை என்பது தமிழக பிஜேபியின் தலைவிதி! அஞ்சு சீட்டுக்கே வாயெல்லாம் பல்லா?   

*******
திருமாவளவன் மட்டும் குறைந்தவரா என்ன?

பாமகவைத் தொடர்ந்து சீண்டுவதால் மட்டுமே சிதம்பரம் தொகுதியில் ஜெயித்துவிடலாம் என்ற நினைப்பா? பாஜக பாரம் பாமக பலவீனம் என்று அதிமுக கூட்டணி பற்றி ஏற்கெனெவே சொல்லி விட்டார்! விசிக மதிமுக வுடன் திமுக கூட்டணி எப்படியென்பதை ஜனங்கள் சொல்லத்தானே போகிறார்கள்?!  நிச்சயம் நிராகரித்துச் சொல்ல வேண்டும்! 

உண்மையில் கவனிக்கப்படவேண்டிய செய்தியாக! 

இன்றைக்கு  தேதிமுக சார்பில் செய்தியாளர்களிடம் திருமதி பிரேமலதா பேசியதுதான்! அரை சதவீதமா அதற்கும் குறைவா என்றுகூடத் தெரியாத விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரிகளே வீராப்புடன் பேசும்போது, எதிரிகளே குறைத்து மதிப்பிடும் போது கூட இரண்டரை சதவீத வாக்குவங்கி வைத்திருக்கும் தேதிமுக கொஞ்சம் தெனாவட்டாகப் பேசுவதில் என்ன குற்றம் சொல்லிவிடமுடியும்? 


   

ஜனவரியில் ஒரு அரசியல் நவராத்திரி! ஒவ்வொரு நாளுமே அதிர்வேட்டுத்தான்!



வருகிற இந்த ஒன்பது நாட்கள்! ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு, கூட்டணிக் கட்சிகளின் விரிசலில் அழுகிச் சிதையுமா அல்லது நீதிமன்றத்தீர்ப்புக்களில் கருகுமா என்ற கேள்விக்கு விடை தெரிய வரலாம் என்ற  பரபரப்புத் தொற்றிக் கொள்ள வைத்திருக்கும் நவ ராத்திரியாக, வருகிற ஒன்பது நாட்களும் இருக்கும்!

திருட்டுப் பூனைகளுக்கே ஒன்பது உயிர்கள் என்பார்கள்!
அப்படியானால், திருட்டு அரசியல் வியாதிகளுக்கு அதைவிடக் கூடத் தானே இருக்க வேண்டும்? அரசியல்வியாதிகள் மற்றவர்களை மாட்டி விட்டுத் தாங்கள் தப்பித்துக் கொள்கிற கலையைக் கற்றுத் தேர்ந்தவர்கள் என்று அர்த்தமில்லை! இங்கே மற்றத் துறைகள், அவர்களை மாட்டி விடுகிற அளவுக்கு நேர்மையானதாகவும், வலிமை, துணிச்சலோடு இருந்ததில்லை என்பது மட்டுமே இத்தனை நாட்கள் அவர்கள் தப்பித்துக் கொள்வதற்குக் காரணமாக இருந்து வந்திருக்கிறது.

கே ஜி பால கிருஷ்ணன் மாதிரி அரசுக்கு எல்லாவிதத்திலும் வளைந்து கொடுக்கிற மாதிரியான ஒரு தலைமை நீதிபதி இருந்திருந்தால், இன்றைக்கு, உச்சநீதிமன்றத்தில் காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல், ஆதர்ஷ் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று வரிசையாக ஊழல் மந்திரிகள் என்று சிலரை மட்டும் தனிமைப்படுத்தி திஹாருக்குப் பெயரளவுக்கு அனுப்பி வைத்து மற்றவர்கள் எல்லாம் கறைபடாத கைகளுக்குச் சொந்தக் காரர்கள் என்று நாடகமாட வேண்டிய அவசியமே இருந்திருக்காது!

கூட்டணி தர்மம் என்றால் பெட்டிகளை மட்டும் பங்கு போட்டுக் கொள்வதல்ல! மாட்டிக் கொண்டால் , சிறைக்குப் போவதிலும் கூட்டாளியாக வேண்டுமே என்பது கூடத் தெரியாத மண்ணாந்தைகள் தான் நம்மை ஆள்கிற பொறுப்பில் இருக்கிறார்கள்!ஆ. ராசா, தெனாவெட்டாக, நான் என்ன குற்றம் செய்தேன்? பிரதமருக்கும், அன்றைய நிதியமைச்சருக்கும் தெரிந்தே தானே செய்தேன்? வேண்டுமானால், அவர்களையும்சாட்சிகளாக இந்த வழக்கில் விசாரித்துப் பார்க்கலாமே என்று சொல்கிற அளவுக்கு இந்தக் கூட்டணிக் குழப்பம் பப்பரப்பா என்று பல்லை இளித்துக் கொண்டு அம்மணமாக இருக்கிறது.

ஊழல் இருப்பது எல்லோருக்கும் தெரிகிறது, ஆனால் அதை சட்ட ரீதியாக நிரூபிப்பது, அப்புறம் அதற்குத் தகுந்த மாதிரி தண்டனை அளிப்பது என்பது சாத்தியமே இல்லாத அளவுக்கு நம்முடைய நிர்வாகம், நீதித்துறை, அரசியல், ஜனநாயகத்தின் நாலாவது தூண் என்று தங்களைப் பற்றி பீற்றிக் கொள்ளும் ஊடகங்கள் எல்லாமே சீரழிக்கப் பட்டிருக்கின்றன.  எமெர்ஜென்சி தருணத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி திரு எச் ஆர் கண்ணா ஒருவரைத் தவிர அரசுக்கு எதிராகக் குரல் எழுப்ப அன்றைய நீதிபதிகளில் வேறு எவருமே இல்லை.

ராம்நாத் கோயங்காவின் இந்தியன் எக்ஸ்ப்ரஸ் குழுமப்பத்திரிகைகள், ஒன்றிரண்டு, ஜனசங்கப் பத்திரிகைகள், இங்கே தமிழ்நாட்டில் துக்ளக் தவிர்த்து ஊடகங்கள் எதுவுமே எமெர்ஜென்சி காலக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுத்தவை அல்ல!


அரசு அதிகாரிகள் எவருக்குமே முதுகெலும்பு இருந்து, அமைச்சர் பெரு மக்கள் செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்கும் தைரியம் இருந்ததில்லை என்பது மட்டுமில்லை, அதை விட அவர்கள் தான் ஊழல் செய்வது எப்படி என்பதை பல அமைச்சர்களுக்கும் கற்றுக் கொடுத்ததே என்பதும், ஊழலின் கூட்டாளிகளாகப் பல அதிகாரிகள், அரசு ஊழியர்கள் இருந்தார்கள், இன்னமும் இருக்கிறார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான்! மீதமுள்ளவர்களில் பெரும்பாலோனோர், கோழைகளாகத் தலைவணங்கித் தவறு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நேரடியாகவோ மறை முகமாகவோ உடைந்தையாக இருந்தார்கள் என்பதை இங்கே அழுத்தமாகச் சொல்லித்தான் ஆக வேண்டும்!

இங்கே தமிழகத்தில் திமுக, அரசு இயந்திரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிற கலையில் வேறெவரையும் விடத் தேர்ச்சி பெற்றிருந்தது கூட எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்!ஆனால், அந்த சாமர்த்தியம் ஒன்று தான் கருணாநிதியை மிகப்பெரிய அரசியல் சாக்கியராகவும், வித்தகராகவும் காட்டிக் கொண்டிருக்கிறது, கட்சித் தொண்டர்களின் வலுவும் கட்டமைப்பும் எப்போதோ காணாமல் போய் விட்டது என்றால் ஒத்துக் கொள்வதற்குச் சங்கடமாகத்தான் இருக்கும்! ஆனால் அது தானே உண்மை!



பொம்மை அசைவதே விந்தையாகத் திரைப்படங்கள் இருந்த காலத்தில் அடுத்த கட்டமாக, திரையில் பொம்மைகள் வசனம் பேசியது மிகப் பெரிய விந்தையாக இருந்ததில் ஆச்சரியமில்லை!அதை விட அர்த்தமிருக்கிறதோ இல்லையோ, அடுக்கு மொழி வசனங்கள், உவமானங்கள் என்று நிறைய அள்ளித் தெளித்துக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கடைசியில் ஒன்றுமே இல்லாத ஒன்றை வசனஜாலமாகக் காட்டி வெற்றி பெற்றவர் கருணாநிதி! அன்றைக்கு பொம்மைகள் பேசுவதே விந்தை என்றிருந்த காலத்து டெக்னிக் இன்றைக்கு எடுபடுமா? பெண்சிங்கம், இளைஞன், பொன்னர் சங்கர், உளியின் ஓசை என்று அடுத்தவன் காசைக் கரைத்து எடுக்கப்பட்ட படங்களில் பெருத்த ஓசை எழுப்பிக் கொண்டிருந்த உளி எந்த அளவுக்குத் துருப்பிடித்துக் காணாமலேயே போய்விட்டது என்பதைச் சொல்லுமே!

நவராத்திரி! அடுத்து வரும் இந்த ஒன்பது நாட்களுக்கும், எமெர்ஜென்சி, கருணாநிதி, உளியின் ஓசை, துருப்பிடித்துத் தேய்ந்து போன திராவிட இயக்கம் இவைகளுக்கெல்லாம் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? இருக்கிறது!
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு போன்ற மிக முக்கியமான வழக்குகளைக் கண்காணித்து வரும் உச்சநீதிமன்ற பெஞ்சில் இருக்கும் இரண்டு நீதிபதிகளில் திரு. சிங்வியும், திரு அசோக் குமார் கங்குலியும் இடம் பெற்றிருக்கிறார்கள். நீதிபதி கங்குலி, வருகிற பிப்ரவரி இரண்டாம் தேதி ஒய்வு பெறுகிறார். அவர் ஒய்வு பெறுவதற்கு முன்னதாக, இந்த பெஞ்சின் முன்னர் இருக்கும் சில முக்கியமான வழக்குகளில் ஏற்கெனெவே தீர்ப்பு ரிசர்வ் செய்யப்பட்டு விட்டதை வருகிற ஒன்பது நாளைக்குள்  எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்பது இப்போது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. அதில் முக்கியமாக, ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப. சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்கவேண்டும் என்ற டாக்டர் சுப்ரமணிய சுவாமியின் மனு மீதான தீர்ப்பும் ஒன்று! இதே வழக்கு, சிபி ஐ சிறப்பு நீதிமன்றத்திலும் பாரலலாக நடந்து அதன் மீது தீர்ப்பு வருகிற நாலாம் தேதி சொல்லப் படுமென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.   

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடாக வழங்கப்பட்ட 122 உரிமங்கள் ரத்து செய்யப்படுமா என்பதும் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் முக்கியமான பரபரப்பில் ஒன்று 

இதுபோக பிரசாந்த்பூஷன், தொடுத்திருக்கும் சில மனுக்களின் மீதும் தீர்ப்பு தயாராக இருக்கிறது. இந்த தீர்ப்புக்கள் சாதாரமானவை அல்ல! குறிப்பிட்ட சிலமந்திரிகளுக்குப் பெரிய சிக்கலைக் கொடுக்கக் கூடியவை என்பதோடு, ஆளும் ஐ மு கூட்டணிக் குழப்பத்தையே தலைகீழாகக் கவிழ்த்துவிடக் கூடியவை! அதனால் தான் திரு கங்குலி ஒய்வு பெறுவதற்கு முன்னால் வழங்க இருக்கும் தீர்ப்பு விவரங்களைக் குறித்தான முக்கியத்துவம் பரபரப்பாகத் தொற்றிக் கொண்டிருக்கிறது.

சில தளங்களில், கங்குலி ஒய்வு பெற்ற பிறகு ஸ்பெக்ட்ரம் வழக்கைக் கண்காணிக்கும் பெஞ்சில் யார் இடம் பெறுவார்கள் என்பதை பற்றி மட்டுமே முக்கியமாக சொல்லிக் கொண்டிருப்பதையும் பார்த்தேன்.

சுமார் ஆறுமாதங்களுக்கு முன்னால், உச்சநீதிமன்ற நீதிபதி திரு கங்குலி, ஒரு புத்தக வெளியீட்டு விழாவில்; பேசியதில் இருந்து ஒன்றிரண்டு வரிகளைச் சொன்னால் இந்தப்பதிவில் முந்தைய பாராக்களில் சம்பந்தமில்லாத பழைய கதைகளைத்தொட்டுப் பேசிக் கொண்டிருந்தது ஏன் என்பது புரியும்!

"லஞ்சம் ஊழல் என்பது வெகு ஆழமாக வேரோடியிருக்கிறது.நம்முடைய சமூக அமைப்பில் துரதிர்ஷ்ட வசமாக ஊழல் செய்பவருக்குத்தான் வெற்றிகரமான வாழ்க்கை அந்தஸ்து கிடைத்து வருகிறது. இந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வோம்.ஊழல் செய்பவர் சமுதாயத்துக்கு வெளியே இருந்து வருபவர் அல்ல. பெரும்பாலான தருணங்களில், அவர் ஒரு தலைவராகவோ, ஹீரோ மாதிரிக் கொண்டாடப்படுகிறவராகவோ இருக்கலாம். ஊழல் தடுப்புச் சட்டம் என்று இருக்கிறது. ஒரு நீதிபதியாக இருந்து அல்ல, என் மனதில் படுவதைச் சொல்கிறேன். அது ஊழலைப் பாதுகாக்கிற சட்டமாகவே இருக்கிறது. இந்த ஊழல் தடுப்புச் சட்டத்தில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது, அதாவது ஊழல் குற்றச் சாட்டைஒருவர் மீது சுமத்த முன் அனுமதி பெறவேண்டும்!யார் இந்த முன் அனுமதியைத் தருவது? இப்படி ஒரு பாதுகாப்பு, தடுப்புச் சுவர் இல்லையானால், ஒன்றுமில்லாத குற்றச்சாட்டுக்களாக நீதிமன்றத்தில் குவியும் என்று ஒரு சாக்காகச் சொல்லப்படுகிறது. ஆக, ஊழலை அறவே அகற்றுவதில்  நாம் உண்மையானவர்களாக இல்லை."

பழைய நடப்பு, இப்போது நடந்துகொண்டிருப்பது இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொஞ்சம் என்னதான் நடக்கும் என்று கொஞ்சம் ஊகிக்க முடியுமா? கொஞ்சம் முயன்று தான் பார்ப்போமே!
2010 ஆம் வருடம்,வரிசையாக மெகா ஊழல்கள் வெளிச்சத்துக்கு வருகிற வருடமாக இருந்தது என்றால் 2011 ஆம் ஆண்டோ, அந்த மெகா ஊழல்களுக்குப் பொறுப்பானவர்கள்  யார் என்பதை அடையாளம் காட்டியே ஆகவேண்டிய அவசியத்தை உண்டாக்கியது. வழக்கமாகப் பூசி மெழுகிவிட முடியாதபடி, இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றமே  தன்னுடைய நேரடிக் கண்காணிப்பில் எடுத்துக் கொண்டது.

அண்ணா ஹசாரே ஊழல் எதிர்ப்பின் அடையாளமாகத் தொடங்கிய இயக்கம், சிறுபொறி பெரு நெருப்பாகிவிடும் என்று ஆளும் கட்சி பயந்தது. போராட்டத்தை திசைதிருப்ப, களங்கப் படுத்த எல்லாவகையிலும் முயன்றது. ஒரு லோக்பால் மசோதாக் கூட நாற்பத்துமூன்று ஆண்டுகளாக வெறுமே பேசிக் கொண்டே இருந்து, நிறைவேற்றமுடியாத கபடம் வெளிப்பட்டது.

ஊழலுக்கு யார் பொறுப்பு என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், அதோ அவன், இல்லை இல்லை இதோ இவன் என்று எங்கெங்கோ கையைக் கட்டிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது என்று, கூட்டணி தர்மத்தில் கையை வைக்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறது பாருங்கள், இங்கே தான், பழைய நினைப்புடா பேராண்டி என்று பராசக்தி வசனத்தை வைத்து மட்டுமே சிறந்த கதை வசனகர்த்தா வாகக் காலம் பூராவும் ஓட்ட முடியாது என்று ஆகியிருக்கிற யதார்த்தம் கண் முன்னே நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது.

ஒய்வு பெறப்போகும் நீதிபதி கங்குலி என்ன தீர்ப்பு எழுதுவார், அவரிடத்தில் வேறு யார் வருவார், அப்புறம் அந்த பெஞ்ச் முன்னால் உள்ள வழக்குகள் என்னவாகும் என்பதில் எல்லாம் விஷயமே இல்லை!
மண்ணுமோகன் சிங்  மரியாதை இழந்து, ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு, ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வரட்டுமே அது வரை பொறுத்திருக்கலாம் என்று நினைத்தால் கூடக் காலம் அனுமதிக்காது போலத்தான் ஒரு வெளிச்சக் கீற்று 2012 இன் துவக்கத்திலேயே தெரிகிறது!

சண்டேன்னா மூணு! கனிமொழி! கபில் சிபல்!பானா சீனா!


லீவு முடிஞ்சு நாளைக்குக் கோர்ட் ஆரம்பம்!மறுபடி கூண்டுல நிக்கணும்! ஆசீர்வாதம் ஆச்சாரி வேற சாட்சியத்துல ஸ்ட்ராங்கா நிக்கறார்! நயினா அகடவிகடத்துல பெயிலில் வந்தாச்சு! அண்ணன்மார் உபயத்துல கட்சிப் பொறுப்புக்கும் பதவிக்கும் இலவு காத்த கிளி கதைதான்! அடுத்ததா என்ன ப்ளான் பண்ணலாம் ?

ஓவரா உளருவாயரா இருந்தாக்க இப்படித்தான்!பாருங்க,இப்ப சத்தத்தையே காணோம்!காலை மொதல்ல மென்னு முழுங்கட்டும்!! அடுத்த உளருவாயருக்கும் இதே கதிதான்! அபிஷேக் மனு சிங்வி!


பானா சீனா பாவம்! ரொம்ப நல்லவர்னு மண்ணுமோகன் சிங்கே வந்து சொல்லிட்டுப் போயிட்டாருங்க! மண்ணுமோகன் ராசி தெரியும் இல்லையா? ஆ.ராசாவுக்கும் மண்ணு இப்படித்தான் ரொம்ப நல்லவர்னு ஆரம்பத்துல சர்டிபிகேட் கொடுத்தாருங்கோ!
 இது ச்சும்மா! அட்டவணை! பயமுறுத்தறதுக்கு இல்லீங்கோ!

சண்டேன்னா மூணு! ஊழலுக்கெதிரான இந்தியாவும் சால்வை அழகரும்!



சென்னையில் அண்ணா ஹசாரே கூட்டத்துக்குத் திரளாக வந்திருந்த கூட்டம் இது. புகைப்படத்துக்கு நன்றி: ஹிந்து நாளிதழ் 


உறுதியான லோக்பால் அமைப்பு இருக்குமேயானால் சிதம்பரம் ஜெயிலுக்குள் இருந்திருப்பார் என்றார் அண்ணா.

 ஊழலுக்கெதிரான இந்தியா! 

இது அண்ணா ஹசாரே, அவரைப் பின்பற்றுகிறவர்களுடைய முழக்கம்
நம்மால் என்ன செய்ய முடியும் என்று சோம்பிக் கிடக்கிறவர்கள் மத்தியில் நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று அண்ணா ஹசாரே போன்றவர்கள முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஊழலுக்கு எதிரான இயக்கம் தொடங்கி போராட்டங்களை நடத்தி வரும் அன்னா ஹசாரே, சென்னைக்கு வந்த போது, பெரியார் தி.க., மே 17 இயக்கம், மக்கள் இயக்கம் உள்ளிட்டவை கருப்புக் கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. இதனால் விமான நிலையத்தில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று காலை பெங்களுருவிலிருந்து சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது அவருக்கு எதிரிப்பு தெரிவித்து பெரியார் தி.க., மே 17 இயக்கம், மக்கள் இயக்கம் உள்ளிட்டவை கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தன. ஜனநாயகத்திற்கு எதிராக, சர்வாதிகாரி போல செயல்படும் அன்னாவும் ஒரு பயங்கரவாதி என்றும், இந்தி வெறியரான அவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என்று பெரியார் தி.க.வினர் குற்றம்சாட்டினர்.

அர்த்தமிழந்து போன  வார்த்தைகள் வெற்றுக் கோஷங்களிலேயே இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த மாதிரியான அமைப்புக்கள், ஆசாமிகள்  கிளம்பிக் கொண்டிருப்பார்கள்?

எனக்கு மலையாளம் தெரியாது!இந்தப் படம் என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள மலையாளம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் உண்டோ!
 
சால்வை அழகர் பானா சீனா விவகாரம் நாளொரு பூதம் பொழுதொரு வதந்திகளால் சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்துக் கிளம்பியபோது,  ராசா மட்டுமே இவ்வளவு பெரிய ஊழலைத் தனியொரு ஆளாகச் செய்திருக்க முடியுமா என்று கருணாநிதி ஆரம்ப நாட்களில் ஒரு கேள்வியை எழுப்பினார். அதை இப்போது அவரே மறந்திருப்பார்!! ஆனால் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ஆராசாவும் சிதம்பரமும் கூட்டாகத்தான் இந்த விவகாரங்களில் ஈடு பட்டிருக்கிறார்கள் என்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருக்கிறார். நிதித்துறையில் இருந்து ஒருவர், சிபிஐ அதிகாரி ஒருவர் ஆக இருவரை சாட்சிகளாக அழைக்கக் கூடும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், வழக்கறிஞராக தன்னுடைய கட்சிக்காரர் ஒருவர் மீது உள்துறை மந்திரியாகவும் இருந்து அதீதக் கரிசனம் காட்டியதாக ஒரு தகவல் கசிந்து நாடாளுமன்றத்தில் ஏகத்துக்கும் அமளி. வேடிக்கை என்னவென்றால், இந்த விவகாரத்தில், இதைக் கசிய விட்டதே சிதம்பரத்தின் மீது அதீதமான அன்பு கொண்ட இன்னொரு அமைச்சர் சகா தான் என்றும் தகவல்கள் சொல்கின்றன.


தேக்குமரம் வளர்ப்பு, பாக்குமரம் வளர்ப்பு என்று அனுபவம் மிக்க நடேசன்கள் ஜனங்களிடமிருந்து பணத்தை சுருட்டி, சவுக்கு குச்சி மாதிரி இருந்த மீனாள் உண்டியலில் கொட்டிய தருணத்திலும்  கூட, அனுபவத்தை பானா சீனா தான் காப்பாற்றியதாக ஒரு தகவல், நினைவு!

தன்னுடைய செல்வாக்கு குறைந்துவிடவில்லை என்று காட்டிக் கொள்வதற்காக, வருகிற 26 ஆம் தேதி சென்னைவருகிற பிரதமரை, அன்று மாலையே காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொள்ள ஏற்பாடும் செய்திருக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தொட்டவர்கள் ஒவ்வொருவரையும் படா
பாடு படுத்திக் கொண்டிருக்கிறது.அவ்வளவு ராசியான ஊழல்!

கேடி பிரதர்ஸ் மட்டும் தான் இது வரை திருட்டுப் பூனைகள் மாதிரி, எந்த செய்தியும் வெளிவராதபடி, கமுக்கமாகக் காரியங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதுவும் கூட ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்றே தோன்றுகிறது.பானா சீனா உள்ளே போக வேண்டுமென்றால் முதலில் போகவேண்டியது தயாநிதி! 


போகிற போக்கைப் பார்த்தால், அப்படி ஒன்றும் அவசியமில்லாத படிக்கு, சால்வை அழகர் தானே முந்திக் கொள்வார் போல இருக்கிறதே!