Showing posts with label டூப்ளிகேட் காந்தி. Show all posts
Showing posts with label டூப்ளிகேட் காந்தி. Show all posts

மண்டேன்னா ஒண்ணு! வேறென்ன, அரசியல்தான்!

எதிர்பார்த்தபடியே இன்றைக்கு கர்நாடக சபாநாயகர் நீண்டதொரு தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டு, தன்னுடைய ராஜினாமாவைக் கொடுத்து விட்டு பதவி விலகிவிட்டார். எடியூரப்பா நம்பிக்கை வாக்கைக் கோருவதே சட்ட விரோதமானது, நியாயமற்றது என்றெல்லாம் சித்தராமையா, குமாரசாமி இருவரும் பேசினார்கள் என்பதை விட தங்களை நியாயப்படுத்தி கொள்ள, பரப்புரை செய்தார்கள் என்பது தான் பொருத்தமாக இருக்கும். குரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றிபெற்ற பிறகே இந்த மாதிரிப் பெயரளவிலான பரப்புரை, அதைத் தொடர்ந்து சபாநாயகர் உணர்ச்சிகரமான ராஜினாமா உரை என்று தொடர்ந்ததில் கர்நாடக சட்டசபை மாலைவரை ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.


ஆனால் சபாநாயகர் 17 MLA க்களைத் தகுதி நீக்கம் செய்தது சரிதானா? இல்லை, ஒருதலைப்பட்சமானது, சபாநாயகர் தெரிந்தே உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவைப் புறந்தள்ளி, நீதிமன்ற அவமதிப்பைச் செய்துள்ளார் என்கிறார் மூத்த வழக்கறிஞர் BV ஆசார்யா! இவரை நினைவிருக்கிறதா? 


இன்றைக்கு அதிருப்தி MLA க்கள் சபாநாயகருடைய முடிவு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவிருக்கிறார்கள். நான் தொடர்ந்து சொல்லிவருகிற மாதிரி ரமேஷ்குமார் என்கிற காங்கிரஸ் ஆசாமியின் முடிவாக மட்டுமே, அதிருப்தி MLAக்களுடைய ராஜினாமாவை முதலில் முடிவு செய்யாதது மட்டுமே அல்ல, இப்போது தகுதிநீக்க உத்தரவையும் கூட அதன்மீது சம்பந்தப் பட்டவர்கள் என்னசொல்கிறார்கள் என்பதைக் கேட்க வாய்ப்புத் தராமல் நிருபர்கள் கூட்டத்தைக் கூட்டி அறிவித்தது, natural justice மறுக்கப்பட்டு ஒரு முறையான விசாரணையை சபாநாயகராக அவர் நடத்தவில்லை. இதை உச்சநீதிமன்றம் என்ன மாதிரி எடுத்துக் கொள்ளும், தீர்ப்பளிக்கும் என்பதை ஊகிப்பதொன்றும் கடினமானதில்லை. பத்தாவது ஷெட்யூல் பற்றி வாய்கிழிய பேசிவிட்டு, அடிப்படைவிஷயங்களைக் கூட மறந்து அவசர அவசரமாக முடிவை அறிவித்தது சபாநாயகரைப் பின்னால் இருந்து இயக்கிய சித்தராமையா மற்றும் காங்கிரசுக்கு வாடிக்கையாகிப்போன இன்னொரு கேலிக்கூத்து. 

இப்படி ஒரு பகிர்வை முகநூலில் பார்த்தேன்! இதுமாதிரிக்  குத்தூசி, குத்தீட்டி  என்ற பெயர்களில் குத்தாட்டம் போட்டு எழுதுகிற கழகச் சவடால் எவரையும் சட்டை செய்து படித்தது இல்லை. தங்கா   தமிழ்ச்செல்வன் இவருடைய வெள்ளந்தியான மருதைத்தமிழ் பிடிக்கும் என்பதால் இவர் பேசுவதைக் கொஞ்சம் கேட்டிருக்கிறேன்! ஆனால் பெயர் முன்னால்  இருப்பது தங்கமில்லை, துருப்பிடித்த தகரம்தான் என்றாகிப் போனபிறகு, இவரைப்பற்றி படித்த முதல் செய்தி இதுதான் என்பதால் இங்கேயும்!
      
      
GoodReads தளத்தில் இந்தப் புத்தகத்தின் மீதான விமரிசனங்கள், அப்புறம் இணையத்தில் தேடல்கள் என்று நேற்றைக்கு மார்கரெட் ஆல்வா என்கிற காங்கிரஸ் கட்சிக்காரருடைய சுயசரிதை பற்றிய விவரங்களைப் படித்துக் கொண்டிருந்தேன். சோனியாவின் வஞ்சகக் குணம், பணப்பேராசை, கூட இருந்தவர்களைக் கைகழுவி விடுவது முதலான உன்னதமான தலைமைப் பண்புகளை 391 ரூபாய் கொடுத்து வாங்கிப் படித்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்கிற சலிப்பு நிறைய இருக்கிறது. 

நரேந்திர மோடி ஊடகங்களை சந்தித்ததே இல்லை என்று நிறையப் பேசுகிறவர்களுக்கு சோனியா காண்டியிடம் ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் இருந்த குளறுபடிகள் பற்றியோ, bofors ஊழலில் அவரும் அவரது உறவினர்களும் சம்பந்தப் பட்டிருந்தது பற்றியோ, சீதாராம் கேசரியைத் தள்ளிவிட்டு காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்தது, அதில் 10 ஆண்டுகள் ஆட்சியில் மன்மோகன்சிங்கை வெறும் டம்மிப்பிரதமராக மட்டுமே வைத்திருந்தது, 2G ஸ்பெக்ட்ரம் உட்பட வெடித்துக் கிளம்பிய ஊழல்களைப்  பற்றியோ எந்த ஊடகமாவது அவரிடம் ஒரு கேள்வியையாவது கேட்டிருக்குமா? ஊடகங்களுக்கு எந்தப் பிரச்சினை மீதாவது ஒரு முழுமையான பேட்டியை அளித்திருக்கிறாரா? கொஞ்சம் தேடிப்பாருங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.


                   

இட்லி வடை பொங்கல்! #8

ஸ்டாலின் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்த ராசி ரொம்ப நல்ல ராசி தான் போல ! ஹிந்து தமிழ் நாளிதழ் இப்படிப் படம்போட்டுக் கலாய்க்கிறது!

அங்கே அப்படியென்றால் #துக்ளக் இந்த வார அட்டைப் பட நையாண்டிஇப்படி!



செய்தாலும் செய்வார்கள் என்கிறீர்களா? #கழகங்கள் எந்தக் காலத்தில் எதையும் நேர்வழியில் நேரடியாகச் செய்திருக்கிறார்கள்? இப்படி வேண்டிக் கொள்ளவும் ப்ராக்சிகள் இல்லாமலிருக்குமா?

ராகுல் காந்தி தன்னைக் காஷ்மீரி கௌல் பிராம்மணன் என்று சொல்லிக் கொள்கிறாராம்! யாராவது எப்படி என்று கேட்டிருப்பார்களோ? அப்பா வழிப் பாட்டன் ஃபெரோஸ் கான்= பெரோஸ் காந்தியாக பின்னாட்களில் அறியப்பட்டவரை, பாட்டி இந்திரா முஸ்லிமாக மதம் மாறித் திருமணம் செய்து கொண்ட கதை தெரியும் இல்லையா? அப்புறமும் எப்படி கௌல்?
சரி, அதுதான் போய்த்தொலைகிறது, அம்மாவழியில் பார்த்தாலுமே கூட இத்தாலியக் கிறித்தவர்தானே?!

அப்பன்வழி, அம்மா வழி இரண்டிலுமே வேறுவேறு மதங்கள் தான்! ஆனாலும் ராகுல் காந்தி தன்னை எந்த அடிப்படையில் தன்னைக் காஷ்மீரி கௌல் பிராமணன் என்று சொல்லிக் கொள்கிறாராம்? உங்களுக்காவது ஏதாவது புரிகிறதா? கான் gandhe ஆகி டூப்ளிகேட் காந்தியாகவும் ஆன கதை மாதிரிக் கூட இல்லாமல் இது என்ன புதுக்கதை?

நேற்று காங்கிரஸ் கட்சியின் 134-வது நிறுவன நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கேக் வெட்டி கொண்டாடினர். படம்: பிடிஐ என்று செய்தி வெளியாகி இருக்கிறதே! யார் கண்ணிலாவது பட்டதோ? 

1885 இல் ஒரு பிரிட்டிஷ் ஐசிஎஸ் அதிகாரி ஆரம்பித்த காங்கிரஸ் அல்ல இன்றிருப்பது! இந்தியர்கள் தலைமை ஏற்றபிறகும் கூட பிரிட்டிஷ் அரசிடம்  சலுகைகளை மட்டும் கோரிய அமைப்பாக இருந்த அந்தக் காங்கிரசும் இல்லை. 

Many Muslim community leaders, like the prominent educationalist Syed Ahmed Khan, viewed the Congress negatively, owing to its membership being dominated by Hindus. Orthodox Hindu community and religious leaders were also averse, seeing the Congress as supportive of Western cultural invasion.
The ordinary people of India were not informed of or concerned about its existence on the whole, for the Congress never attempted to address the issues of poverty, lack of health care, social oppression, and the prejudiced negligence of the people's concerns by British authorities. The perception of bodies like the Congress was that of an elitist, then educated and wealthy people's institution. இதுதான் காங்கிரசின் ஆரம்பகால நிலைமை! பால கங்காதர திலகர் வந்த பிறகுதான் காங்கிரசுக்கு தேசிய உணர்வே வந்தது. திலகரும் பிபின் சந்திரபாலும், ஸ்ரீஅரவிந்தரும் வ உ சியும் ஊட்டி  வளர்த்த தேசிய உணர்வுடன் இருந்த காங்கிரசல்ல இன்றிருப்பது!

1915 இல் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி  என்கிற ஒரிஜினல் காந்தி வந்த பிறகு காங்கிரஸ்  என்பது தியாகம் செய்யத் தயாராக இருந்த தொண்டர்களோடு, மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு இயக்கமாகவும் இருந்ததே, அந்தக் காங்கிரசல்ல இன்றிருப்பது!

நேரு கைகளில் ஆட்சி வந்ததுமே நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. தனக்குப் பிடிக்காத ஒருவர், புருஷோத்தம்தாஸ் டாண்டன் 1950 இல் காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக நாடகம் நடத்தியதும் 1959 இல் தன் மகளையே காங்கிரஸ் தலைவராக்கி, மக்கள் சிபாரிசின் பேரில் உலகில் முதல் முறையாக கேரளாவில் ஜனங்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த கம்யூனிஸ்ட் கட்சி அரசை 356 வது பிரிவின் கீழ் கலைத்ததும் ஆன அந்தக் காங்கிரசும் அல்ல இன்றிருப்பது. இந்திரா தன்னுடைய சுயநலத்துக்காகக் காங்கிரசை இரண்டாக உடைத்ததும் எண்பதுகளின் தொடக்கத்தில் ஆட்சியில் இருந்தபோது தன்னுடைய பிரிவுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் என்று பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிற மாதிரி செய்து கொண்டது பழைய கணக்கு, வரலாறு! அதுகூட அல்ல இன்றிருப்பது!   

இந்திரா, ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து சோனியா தன்னுடைய வாரிசுகளுக்காகத் தயார் செய்து வைத்திருக்கிற சுயநலக்கும்பலால் மட்டுமே ஆன ஒரு உருவகம் இப்போது காங்கிரஸ் கட்சி என்ற பெயரில்!  அவ்வளவுதான்!    

Jaya produces proof on Gandhi’s intent to dissolve Congress

PTI  Updated on April 02, 2013
Tamil Nadu Chief Minister J. Jayalalithaa






Tamil Nadu Chief Minister Jayalalithaa today presented documentary evidence to Congress members in the state Assembly to validate her minister’s argument that Mahatma Gandhi wanted to dissolve the century-old political party after Independence.