கோவை சரளாவோடு கோபித்துக் கொண்டு ....! தமிழக அரசியல்!

நிலையற்ற கோவா அரசியலில், ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்த முடிந்த ஒரே அரசியல் தலைவர் மறைந்த முதல்வர் மனோகர் பரிக்கர் என்று தயங்காமல் சொல்லிவிடலாம். மும்பை ஐஐடியில் படித்து என்ஜினீயராக மட்டும் வெளியே வரவில்லை. RSS இயக்கத்தின் முன்னணி ஊழியராகவும்! அதைவிட பரிக்கரின் மென்மையான அணுகுமுறையில் கிறித்தவ சர்ச்சும் ஏற்றுக்கொண்ட தலைவராகவும் இருந்தார் என்பதுதான் அவருடைய தனிச்சிறப்பு.  இதைப் படிக்கிற நேரத்தில், முழு அரசு மரியாதைகளோடு அவருடைய இறுதியாத்திரை நடந்து முடிந்திருக்கும்.

   
வழக்கம்போல கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதல்வர் நாற்காலியைக் குறிவைத்து நேற்றிலிருந்து காய் நகர்த்த  ஆரம்பித்துவிட்டார்கள் என்பது இந்த தேசத்தைப் பீடித்திருக்கும் அபசுரம். காங்கிரஸ் என்கிற விஷவிருட்சத்தை வேரோடு சாய்க்காமல் இங்கே எந்த ஒரு அரசியல் மாற்றமும் நிகழாது. 

உள்ளூர் அரசியலையே ஒழுங்காகத் தெரிந்து கொண்டு பேசத்தெரியாத தமிழ் சேனல்கள், கோவா நிலவரம் பற்றிப்பேசுவது உண்மையிலேயே வேடிக்கை. 

கமல் காசர் நடத்தும் மக்கள் நீதி மய்யம் ஒரு கேலிக்குரிய அறிக்கையை வெளியிட வேண்டிய நிலையை CK குமரவேல் உண்டாக்கிவிட்டாரோ?

குமரவேல் என்னவோ கோவை சரளாவை வம்புக்கிழுக்கிற மாதிரிப் பேட்டி கொடுக்கிறார்! கோவை சரளாவை வைத்து நேர்காணல் நடத்தியது தான் குத்தமாப் போச்சாம்! ஏதாவது சொல்ல வேண்டுமே!  

நம்மூரில் ஒருவிஷயம் ஏன் பிடித்திருக்கிறது, ஏன் ஆதரிக்கிறோம் என்று நேரடியாகச் சொன்னால் அது உலக அதிசயம்! அதே நேரம், நெகடிவான விஷயங்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பது தமிழேண்டா கலாசாரம்! இங்கே கமல் காசர் கட்சியில் இருந்து ஏன் வெளியேவந்தேன் என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் CK குமரவேல். ஆனால் இந்து தமிழ் திசை பின்னணியில் திமுக அழுத்தம் இருப்பதாக செய்தி சொல்கிறதே! கொண்டையை மறைக்கத் தெரியவில்லையோ? 

  
இது ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா தளத்தில் இருந்து! 

தமிழகத்தில் கல்வித்தந்தைகள் எப்படி உருவாகிறார்கள், என்ன செய்கிறார்கள்  என்பதற்கு இந்த ஒரு சாம்பிள் போதுமா? 


மனோகர் பரிக்கர் மறைவு! அஞ்சலி!

கோவா முதலமைச்சராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் பிஜேபி அரசில் திறம்படப் பணி செய்த திரு மனோகர் பரிக்கர் உடல்நலம் குன்றியிருந்து சற்றுமுன் காலமானார்.    


In a video clip from an alumni day function at IIT Bombay in 2014, the four-time Goa Chief Minister and former Union Defence Minister Manohar Parrikar — who passed away on Sunday evening after a prolonged illness — is described as the “original Aam Aadmi”. என்று The Hindu நாளிதழில் ஷோபனா கே நாயர் அஞ்சலி செய்திருக்கிறார்.

திறமைசாலியான ஒரு நல்ல நிர்வாகி, தலைவர் மறைவுக்கு மனப்பூர்வமான அஞ்சலிகள்!  

Extremely sorry to hear of the passing of Shri Manohar Parrikar, Chief Minister of Goa, after an illness borne with fortitude and dignity. An epitome of integrity and dedication in public life, his service to the people of Goa and of India will not be forgotten
7:59 PM - 17 Mar 2019 

அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்று காத்திருக்கக் கூட முடியாத காங்கிரஸ் கோவாவில் ஆட்சியமைக்க மாலை ஆறுமணிக்கே கவர்னரிடம் மனு! 
Congress stakes claim to form government in Goa; writes to Governor to dismiss BJP-led govt which is in "minority" & call "single-largest party Congress to form govt".Also states in its letter, "any attempt to bring Goa under President's rule will be illegal & will be challenged"

இதுதான் காங்கிரஸ்! இதுதான் இந்திய அரசியலின் அழுகிப்போன பக்கம்!  

சண்டேன்னா மூணு! விசிக! காங்கிரஸ்! ரங்கராஜ் பாண்டே!

சிதம்பரத்தில் தனிச்சின்னம், ஆனால் விழுப்புரத்தில் சூரியன் என்று போட்டியிடுகிற இருதொகுதிகளில் இரு வேறு சின்னம் என்பது என்ன மாதிரியான நிலைபாடு?மீசையில் ஏதோ ஒட்டவில்லை என்று சொல்வார்களே, அதுமாதிரியா?

இந்த வீடியோவில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிற இன்னொரு செய்தி, விசிக தமிழ்நாடு தவிர, ஆந்திரா , கேரளா இரு மாநிலங்களிலும் தனிச்சின்னத்தில், இந்த நாடாளுமன்றத் தேர்தலில்போட்டியிடுகிறார்களாம்!


ஜோதிமணி! அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, காங்கிரஸ், திமுக இரு கட்சியினராலும் வாய்ப்பை இழக்கும்படி செய்யப் பட்டவர்! ராகுல் காண்டி கடைக்கண் அருளால் இன்று நாடாளுமன்ற வேட்பாளராகவும்! அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நேரத்திலேயே அம்மணி சவுண்டு கிளப்ப ஆரம்பித்துவிட்டார் என்கிறது செய்தி! தேறுவது கொஞ்சமல்ல நிறையவே கடினம்தான்!

சென்னையில் நேற்று வெற்றிகரமாக நடந்தேறியது, துருவங்கள்2. அரங்கை அதிரவைத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்காக இன்னமும் கடுமையாய் உழைப்பேன் என்று சொல்கிறார் ரங்கராஜ் பாண்டே ! ஆனால் அறிவிக்கப்பட்டபடி H ராஜா இல்லையாமே? பதிலாக MaFoi பாண்டியராஜன் கலந்து கொண்டாராம்! 

தொடர்ந்து மொபைல் ஆப், யூட்யூப், முகநூல் லைவ், இன்ஸ்டாக்ராம் ஊடகங்களில் இன்று முதல்!
     
      
ரங்கராஜ் பாண்டே மீண்டும் நேரலையில்! தொழில்நுட்ப வசதி முன்னேற்றத்தில்  இன்று மாலைமுதல் மீண்டும்    நேரலையில் நேயர்களைச் சந்திக்கவிருக்கிறார். நேரலையில் இணைந்திருக்க .....

Instagram :http://bit.ly/2TTedCS 
என்று சுட்டிகளைக் கொடுத்திருக்கிறார்கள். 

வாய்விட்டுச் சிரிக்க மேட்டரே இல்லையா? ஏனில்லாமல்? Sudhakar Kasturi 5 மணி நேரம்
காலிங் பெல் அடிப்பது சிலநேரம் நல்லதுக்கில்லை. கதவைத்திறந்தபோது வாயெல்லாம் பல்லாக நுழைந்தார் ச.வ.ச காரியதரிசி.
என்ன? என்று கேட்குமுன் ஒரு செய்தித்தாளை கற்றையை நீட்டினார் “ என் எழுத்து வந்திருக்கு.ஒண்ணு தமிழு, இன்னோண்டு இங்க்லீஷ் - கேரளாலேர்ந்து” ல்
”என்னவே இது?
“எங்க தலைவரு மதுர பக்கம் போனப்ப, மொழி பெயர்ப்பு நாந்தாஞ் செஞ்சேன். படிச்சுப் பாரும்”
“ மீட்டிங்கெல்லாம் எப்படிப் போச்சி?”
அதேன் கேக்கீய? மதுரக் காரனுவோ நம்மூர்க்காரனுவள விட நல்லவங்க கேட்டியளா? சொல்லிட்டு, ஓட நேரம் கொடுத்துட்டுத்தான் அடிக்காய்ங்க”
“விசயத்துக்கு வாரும்”
அவர் குரல் செருமிக்கொண்டு தொடங்கினார் “ செம்பட்டிகிராமத்துல ஒரு மீட்டிங் முடிச்சிட்டு, போறவழியில, நம்ம பாசக்காரப்பயலுவோ, வண்டி நிறுத்தி, தலைவர் எங்கூர்லயும் ரெண்டு வார்த்த பேசிட்டுப் போணுன்னாவோ. ச...ரி...ன்னு போனா, ஒரு மகளிர் பள்ளிக்கூடத்து திடல்ல மீட்டிங்கி. பொம்பளேள்தான் நிறையபேரு. தலைவரு அவங்களப் பாத்துத் தொடங்கினாரு”
‘I know you would give a warm welcome to me"
”என்னைப் பாக்க நீங்க கொதிச்சிக்கிட்டிருப்பீயன்னு தெரியும்”
“In this place, my father got grand reception long ago"
"ரொம்ப முன்னாடி,எங்க பாட்டனாருக்கு திருமணவரவேற்பு இங்கிட்டுத்தான் நடந்திச்சி”
“My great grand father wanted women development here"
"எங்க பாட்டனாருக்கு இந்த ஊர்ல வளர்ந்த பொம்பளேள்மேல ஒரு விருப்பம்”
“அய்யோ” என்றேன் என்னை அறியாமல்.
அவர் தொடர்ந்தார் “ So I too have an eye on women development here"
”அதுனால, எனக்கும் இங்க சமஞ்ச பொம்பளேள் மேல ஒரு கண்ணு”
நான் எழுந்துவிட்டேன்.
“உக்காருங்க” என்றார் “இன்னும் இருக்கு. இத்தனையில ஆம்பளேள்ள சிலர் எழுந்து ஓடறானுவோ. எங்கடா?ன்னு கேட்டா, வீட்டுலேர்ந்து அருவா எடுத்துட்டு வர்றேன்னு கொலவெறியில போறானுவோ”ன்னாவ”
தலைவர் உடனே விச்யத்தைப் புரிஞ்சிகிட்டு “ I shall ask my secretary to brief you one by one. Be calm" ன்னாரு.
நான் அத மொழி பெயர்க்கறதுக்குள்ள, நம்ம பொள்ளாச்சி நண்பர் மைக்கைப் புடுங்கி “ என்ர காரியதரிசி, உங்க எல்லாருக்கும் உள்ளாடை கொடுப்பாருங்... அமைதியா இருங்..”ன்னாரு.
“ஏம்வே இப்படிச் சொன்னீரு?’ன்னு கேக்கேன். அதுக்கு அவரு “ briefனா ஜட்டி தானுங். அட நம்ம திருப்பூர் சமாச்சாரமுங்!. என்ன சைஸ்னு மட்டும் கேட்டு வைங்க்ணா”ங்காரு.
பொம்பளேள்ளாம் அடிக்க வந்துட்டாளுவன்னு அவசரமா சுமோல ஏறி வந்துட்டம்."
“நல்ல வேளை பொளைச்சீங்கவே” என்றேன்.
அடுத்த கிராமத்துல நுழையறப்பவே தடுத்து தொண்டர் சொல்லிட்டாரு “ அந்தூர்க்காரனுவோ போன் போட்டு சொல்லிட்டானுவ. இங்க ரிஸ்க் வேணாம். வேணா, மாட்டுக் கொட்டாயில பேச்சு வச்சுக்கலாமா?”ன்னாரு
மாட்டுகாரன் “ வேணாங்க. மாடெல்லாம் மிரண்டுரும். குதறிப்போடும் பாத்துகிடுங்க. வேணா கோழிப்பண்ணையில பேசுங்க. அதுங்க, கம்பி வலைக்குள்ளாற இருக்கும்லா? நமக்கும் ஸேஃப்டி”ன்னாரு. சரின்னு அங்கிட்டுப் போனம்.
இவரு பக் பக்குன்னு பேசறது கோழி மொழியில கெட்ட வார்த்தை போலிருக்கு. அதெல்லாம் மிரண்டு, நெஞ்சை விரிச்சு, சிறகை பலமா அடிச்சு கொக் கொக் நு கம்பிவலையைக் கொத்துதுங்க. நம்மூர் பத்திரிகைக்கு He gets standing ovation from hens நு எழுதச் சொன்னாரு ஒரு தலைவரு.
அந்தப் பயலுவ “ கோழியெல்லாம், காந்திக்கு எழுந்து நின்று முட்டையிட்டன”னு எழுதியிருக்கானுவோ. ovation நா முட்டை போடறதா சாமி?”
”அது ovulationவே. என்ன டைப் அடிச்சீருனு பாரும். “
அவர் மொபைலைப் பார்த்து “ ஆட்டோ கரெக்‌ஷன்ல ovulationனுல்லா போயிருக்கு?” என்றார்.
“கூட வந்த பத்திரிகையாளர் எல்லாரும் சிட்டாப் பறந்துட்டானுவோ. சரி, நாம கொச்சிக்கு கொடுத்த ந்யூஸ் எப்படி வந்திருக்குன்னு பாப்பம்னு தோழமை கட்சி ந்யூஸ்பேப்பர் , நெட்ல படிச்சேன். அதான் இந்த இங்க்லீஷ் பதிப்பு” என்றார்.
அதனைப் பிரித்தேன் “ National party's 50 year old young leader discussed poll plans with Red Dog Singaram"
“என்னய்யா சிவப்பு நாய் சிங்காரம்னுகிட்டு? புரியலையே?”
“செம்பட்டி கிராமத்துல நம்ம சைபால் சிங்காரம் தலைவரப் பார்த்தாருன்னு செய்தி. பட்டின்னா மலையாளத்துல நாயில்லா? அதான் நானே “ தலைவர், சொமந்த நாயி சிங்காரத்துன்னோடு சம்சாரிச்சு” ன்னு கொடுத்துட்டேன். அதான் இங்க்லீஷ்ல!”
சுத்தம்.
வழக்கம்போல் 
எரிதான் சுடினும் இறவா நமக்கு
சிரித்தே வருமே இறப்பு


இட்லி வடை பொங்கல்! #17 சனிக்கிழமை ஸ்பெஷல்

தந்திடிவியை விட்டு விலகியபிறகு ரங்கராஜ் பாண்டே இன்னும் அதிக சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்து விட்டார்! குமுதம் கேள்விபதில், தனி யூட்யூப் சேனல், இதர தளங்களிலும் பேட்டி என்று ரவுண்டு சுற்றி வருகிறார். இன்று சென்னைவாசிகளுக்கு ஒரு வாய்ப்பு!
திருநாவுக்கரசருக்குப் பதிலாக மொழிபெயர்ப்புத் திலகம் கே வி தங்கபாலு இருந்திருந்தால் இன்னும் அதிக களை கட்டுமோ? யூட்யூப் லைவ் இருக்குமா என்று விவரம் தெரியவில்லை! இன்று காலை பார்த்தால் இன்னொரு தகவல், இப்படி!


விவாதம் ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே களைகட்ட வைப்பது ரங்கராஜ் பாண்டே ஸ்பெஷல்!

அடங்கொப்புராண சத்தியமா நா காவல்காரன்! சௌக்கிதார் சோர் ஹை என்று ராகுல் காண்டி ஊர் ஊராகப் போய்க் கூவிக் கொண்டிருப்பதற்கு பதிலடியாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் இப்படி! கொஞ்சம் சுவாரசியமான,சாதுர்யமான பதிலடியும் கூட ! பதிவிட்ட இரண்டேமணி நேரத்தில் ட்விட்டரில் 33000 லைக்ஸ் 11000 ரீ ட்வீட் என்று ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்கிறது News 18 செய்தி.  
Your Chowkidar is standing firm & serving the nation. But, I am not alone. Everyone who is fighting corruption, dirt, social evils is a Chowkidar. Everyone working hard for the progress of India is a Chowkidar. Today, every Indian is saying-
0:46 / 3:45
9:00 AM - 16 Mar 2019 


ராகுல் காண்டி கூட இப்படித்தான் விழித்திருப்பாரோ? காலம் செய்கிற கோமாளித்தனங்கள், கொடுமையான காமெடியாக இப்படியும்!

மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னால் சசிகலா, குடும்ப பரிவாரங்களைப் பற்றி இதே ஹிந்து இப்படி கார்டூன் போடுவதை கற்பனை செய்தாவது பார்த்திருக்க முடியுமா?

அதிமுக கூட்டணி முடிவானாலும் தொகுதிப்பங்கீடு சவ்வாக இழுத்துக்கொண்டே போவதைக் குறித்த ஒரு செய்தி!  

மீண்டும் சந்திப்போம்!
          

BSNL பொறுப்பில்லாத பொதுத்துறை, இங்கே யாருக்காக?

இன்றைய செய்தியாக BSNL ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் இன்று வழங்கப்படுவதாக அதன் நிர்வாக இயக்குனர் அறிவித்தது வந்திருக்கிறது. ஏற்கெனெவே இந்தச் செய்தியை ஓரிரு  நாட்களுக்கு முன்னாலேயே எகனாமிக் டைம்சில் MTNL நிறுவனத்துக்கு 171 கோடி செவ்வாய்க்கிழமையே  DoT தந்துவிட்டது BSNL  ஊழியர்களுக்கு சம்பளம் மார்ச் 21தேதிக்கு முன்னர் வழங்கப்படும் என்தாகப் பார்த்தேன்.

BSNL Salary Issue: Govt. Says Every Employee Will Get Salary Before Holi; Releases Rs 171 Crore. For the first time in 18 years, BSNL employees haven't received their salaries இது இரண்டுநாட்களுக்கு முந்தைய செய்தி 

கிருஷ்ண மூர்த்தி STweet text
 
 இழவு வீட்டில் அரசியல் செய்யும் திமுக தலைவர்கூட நேற்றைக்கு ட்விட்டரில் தன் கண்டனக்குரலைப் பதிவு செய்திருக்கிறார். ஆமை புகுந்த வீடும் அரசியல்வாதி தலையிடும் பொதுத்துறையும் உருப்பட்டதில்லை என்பதை BSNL ஊழியர்கள் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. நிறுவனத்தை மூடுகிற எண்ணம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இன்னொருபுறம்  பொறுப்பில்லாத பொதுத்துறையை மக்களுடைய வரிப் பணத்தில் எதற்காகக் கட்டி அழவேண்டும் என்ற கண்டனக்குரல்களும் வலுத்து வருகின்றன. 

தொடர்புடைய பதிவு1    பதிவு 2    

மத்தியில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதும் பிஎஸ்என்எல்-லை விற்பதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும் என்று விரும்புகிறேன். நட்டம் ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் பொறுப்பற்ற பொதுத்துறை நிறுவனங்கள் தயவு தாட்சண்யமின்றி அரசுப்பாதுகாப்பில் இருந்து வெளிவர வேண்டும்.
நான் அடிக்கடி சொல்லி வருவது போல, அரசுக்கு தொழில் செய்யும் எந்தத் தகுதியும் கிடையாது. தனியார் யாரும் வரும் வரை, தனிக்காட்டு ராஜாவாக இயங்கி வந்த ஏர் இந்தியா, தூர்தர்ஷன், பிஎஸ்என்எல் போன்ற அரசு நிறுவனங்கள் தனியாரின் திறன்மிகு போட்டியால் இப்போது தத்தித் தடுமாறுகின்றன. எந்த சுய முன்னேற்ற முயற்சிகளும் எடுக்காமல் ராஜாங்கம் செய்து வந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்களும் புலம்புகின்றனர்.
இருக்கும் ஒரே வழி இவை யாவும் தனியார் மயமாக்கப்பட வேண்டும். ஓரளவு நட்டமடையாத விலைக்கு இவற்றின் பங்குகளை விற்று விட்டு அரசு தன் தொடர் நட்டத்தை நிறுத்த வேண்டும். இந்த விற்பனையில் வரும் லாபம் வளர்ச்சி, கட்டுமான மற்றும் சமூக நலப்பணிகளில் செலவழிக்கப் பட வேண்டும்.
இப்படிச் சொல்லியிருப்பதைப் பார்த்துக் கொண்டு வந்ததில் ...........
வலது சாரி இயக்கங்கள் உலக அளவில் தற்போது வெற்றி அடைவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? 
இது தமிழ் கோரா தளத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு கேள்வி!
காரணம் உலகமயமாக்கல்.உலகமயமாக்கலின் காரணமாக பல்வேறு கலாச்சாரங்கள் பல புதிய சவால்களை எதிர்கொண்டுள்ளன.இதனால் பல சமூகங்கள், தங்கள் தங்கள் அடையாளங்களை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் உள்ளன.இந்த அச்சத்தை வலதுசாரி இயக்கங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.எனினும் இதன்பின் நியாயமானக் காரணங்கள் ஏதுமில்லை என முழுமையாக புறந்தள்ளிவிட இயலாது.

நம் உலகம் சரிசமமானது அல்ல. ஒரு அமெரிக்க உழவர் சராசரியாக வைத்திருக்கும் நில அளவு, முதலீடு ஒரு இந்திய உழவரின் அளவைவிட மிகப்பெரிது. அவர் கொடுக்கும் விலை இவருக்கு ஒரு போதும் கட்டுப்படியாகாது. எனவே ஒரே சந்தை, ஒரே போட்டி என்பது சாத்தியமே இல்லை.இதிலிருந்துதான் அச்சம் தொடங்குகிறது.

ஐரோப்பிய யூனியனைப் பொறுத்தவரை பொருளாதாரக் காரணங்களுக்காக இடம்பெயர்வது பெரும் சிக்கலை உண்டாக்கியது. உள்ளூர் மக்கள் வேலையிழப்பு, ஊதியக் குறைவு போன்றவை சிக்கலை உண்டாக்கின. ( கலாச்சார சீர்கேடு, அரசியல் வலிவு குறைதல், சட்டம் ஒழுங்குப் பிரச்சனை என்பதெல்லாம் அடுத்தக் கட்டம்தான் )

அதுபோல கட்டுப்பாடற்ற இடப்பெயர்வும் தவறு தான். அனைவரும் ஓர் இடம் நோக்கி படையெடுத்தால் அந்த இடம் வாழும் தகுதியை இழக்கக் கூடும். தவிர அவர்களின் சொந்தப் பகுதியும் அழிந்து போகும்.இந்தியாவைப் பொருத்தவரை, வலதுசாரி இயக்கங்கள் குழப்பமானவை. அவை மக்களைப் பின்னோக்கி இழுக்கின்றன.

அடுத்தப் பத்தாண்டுகளில் மாநிலங்களுக்கிடையேயான இடப்பெயர்வு மிகப்பெரியச் சிக்கல்களை உருவாக்கப்போகிறது. ஏற்கனவே குசராத், கர்னாடகா மாநிலங்கள் வேலைவாய்ப்புகளில் தத்தமது மக்களுக்கே முன்னுரிமை என்ற சட்டங்களை இயற்றியுள்ளன. இக்கருத்து மற்ற மாநிலங்களுக்கும் விரிவடையும்.வட மற்றும் தென் மாநிலக்கிடையேயான பொருளாதார மற்றும் மக்கட்தொகை இடைவெளி இதைத் தீவிரப்படுத்தும்.

மாநிலங்களுக்கிடையேயான நகர்வு இங்கு கட்டுப்பாடற்றது. சரியான தரவுகள் கூட நம்மிடம் இல்லை. இதுவும் ஒரு சிக்கல்.கட்டுப்பாடற்ற குடியேற்றம் வளர்ந்த மாநிலங்களில் அழுத்தங்களை உருவாக்கும். விட்டுவந்த மாநிலங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் ( மூளை ஏற்றுமதி )

நடுவண் அரசு சட்டம் இயற்றி முறைப்படுத்தினால் பல பிரச்சினைகளை முன்கூட்டித் தீர்க்கலாம்.
மொத்தத்தில் இது ஒரு சுழற்சி போல. இரண்டாம் உலகப்போருக்கு முன் வலதுசாரிகள் கை ஓங்கியிருந்தது. எல்லை மீறிய போது போருக்கு இட்டுச்சென்றது. போருக்குப் பின் இடதுசாரிகள். எல்லை மீறிய போது உலகமயமாக்கல் அழுத்தங்களைக் கொடுத்துள்ளது..

இப்பொழுது மீண்டும் வலதுசாரிகள்!.இரண்டுக்கும் நடுவே தீர்வு உள்ளது  

என்கிறார் Arivaran Balu கற்பனாவாத சோஷலிசக் கனவுகளில் திளைத்தவரோ? அறியேன்! எதிரும் புதிருமான இரு கண்ணோட்டங்களை உங்கள் பார்வைக்கு வைத்திருப்பது ஒரு ஆரோக்கியமான விவாதத்துக்காக!