இட்லி வடை பொங்கல்! #17 சனிக்கிழமை ஸ்பெஷல்

தந்திடிவியை விட்டு விலகியபிறகு ரங்கராஜ் பாண்டே இன்னும் அதிக சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்து விட்டார்! குமுதம் கேள்விபதில், தனி யூட்யூப் சேனல், இதர தளங்களிலும் பேட்டி என்று ரவுண்டு சுற்றி வருகிறார். இன்று சென்னைவாசிகளுக்கு ஒரு வாய்ப்பு!
திருநாவுக்கரசருக்குப் பதிலாக மொழிபெயர்ப்புத் திலகம் கே வி தங்கபாலு இருந்திருந்தால் இன்னும் அதிக களை கட்டுமோ? யூட்யூப் லைவ் இருக்குமா என்று விவரம் தெரியவில்லை! இன்று காலை பார்த்தால் இன்னொரு தகவல், இப்படி!


விவாதம் ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே களைகட்ட வைப்பது ரங்கராஜ் பாண்டே ஸ்பெஷல்!

அடங்கொப்புராண சத்தியமா நா காவல்காரன்! சௌக்கிதார் சோர் ஹை என்று ராகுல் காண்டி ஊர் ஊராகப் போய்க் கூவிக் கொண்டிருப்பதற்கு பதிலடியாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் இப்படி! கொஞ்சம் சுவாரசியமான,சாதுர்யமான பதிலடியும் கூட ! பதிவிட்ட இரண்டேமணி நேரத்தில் ட்விட்டரில் 33000 லைக்ஸ் 11000 ரீ ட்வீட் என்று ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்கிறது News 18 செய்தி.  
Your Chowkidar is standing firm & serving the nation. But, I am not alone. Everyone who is fighting corruption, dirt, social evils is a Chowkidar. Everyone working hard for the progress of India is a Chowkidar. Today, every Indian is saying-
0:46 / 3:45
9:00 AM - 16 Mar 2019 


ராகுல் காண்டி கூட இப்படித்தான் விழித்திருப்பாரோ? காலம் செய்கிற கோமாளித்தனங்கள், கொடுமையான காமெடியாக இப்படியும்!

மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னால் சசிகலா, குடும்ப பரிவாரங்களைப் பற்றி இதே ஹிந்து இப்படி கார்டூன் போடுவதை கற்பனை செய்தாவது பார்த்திருக்க முடியுமா?

அதிமுக கூட்டணி முடிவானாலும் தொகுதிப்பங்கீடு சவ்வாக இழுத்துக்கொண்டே போவதைக் குறித்த ஒரு செய்தி!  

மீண்டும் சந்திப்போம்!
          

2 comments:

  1. அதிமுக தொகுதி பங்கீட்டில் சறுக்கப்போகிறார்கள்... ஆனால் யார்தான் 100 சதவிகிதம் சரியாய்த் தேர்ந்தெடுக்க முடியும்! ரசிக ரஞ்சனி சபா போக ஆசைதான். சற்றே தூரம் அதிகம்! நேரம் அதிகமில்லை!

    ReplyDelete
    Replies
    1. எதிலாவது லைவ்வாக ஒளிபரப்புகிறார்களா என்று தேடிச் சலித்துவிட்டேன் ஸ்ரீராம்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!