சண்டேன்னா மூணு! எல்லாமே அரசியல்தான்!

மய்யம் கமல் காசர் குறைந்தது மூன்று இடங்களில் பிரசாரம் செய்யவந்து கூட்டமில்லாததால் ரத்துசெய்து விட்டுப்போன கூத்தும் நடந்திருக்கிறது. அரசியலில் இது மிகவும்  சாதாரணமான விஷயம் என்பதால், கமல் காசரோ மய்யமோ அதிகம் பெரிதுபடுத்திக் கொள்ள வேண்டிய விஷயமில்லைதான்!

சிவகங்கை தொகுதியில் சினேகனுக்கு கொலைமிரட்டல் வந்ததாவது  நம்புகிற மாதிரி  இருக்கிறது! ஆனால்  கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் 24 மணிநேர ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வேண்டுமென்று கேட்டிருப்பது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது! 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காண்டிக்குமே அமேதி தொகுதி கைகழுவிவிடுமோ என்றபயம்! சிறுபான்மை வாக்குகள் அதிகமாக இருக்கும் கேரளா வயநாடு தொகுதியிலும் போட்டி என்ற செய்தி இடதுசாரிகளை உசுப்பி விட்டிருக்கிறது.   
வயநாடு தொகுதியில் CPI வேட்பாளரை எதிர்த்து ராகுல் காண்டி களமிறங்கினால் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை சிதைந்துவிடும் என்று CPI கட்சியின் டேனியல் ராஜா குரல் கொடுத்திருக்கிறார். இத்தனைக்கும் இடதுசாரிகள் தொடர்ந்து பலவீனப் பட்டுவருவதையும் இந்தப்பேட்டியில் D ராஜா ஒப்புக் கொண்டிருக்கிறார்! அவரவர் கவலை அவரவருக்கு!

காங்கிரசிடமிருந்து நழுவுகிறதா அமேதி? ராகுலுக்கு வேறு பாதுகாப்பான தொகுதி வயநாடுதானா? இந்த ஆசாமியைத் தானா அடுத்த பிரதமர் என்று இசுடாலின் முன்மொழிந்தார்? முன்மொழிந்த ராசிதான் படுத்துகிறதோ?   


அப்பாவும் மகனும் இமேஜை பூஸ்ட் செய்துகொள்கிறார்களாம்! பார்க்கும் போதே செட்டப் செய்து எடுக்கப்பட்டவை என்று சின்னக் குழந்தைக்குமே புரிகிறபோது எதற்காக இத்தனை முக்கல்?   

8 comments:

  1. நீங்க ஸ்டாலின், உதயநிதி படத்தை நம்பி, எங்கேயாவது அவர்களைப் பார்த்தபோது செல்போனை செல்ஃபிக்கு நீட்டுவதற்கு முன்பு உங்கள் கன்னத்துக்கு 'மார்புக் கவசம்' போல ஏதேனும் கவசமிட்டுச் செல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. பொதுவாகவே நான் புகைப் படம் எடுத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அரசியல்வியாதிகளுடன் selfie நோ சான்ஸ்! never!

      Delete
  2. //காங்கிரசிடமிருந்து நழுவுகிறதா அமேதி? // - இது அதீத கனவு. நிச்சயம் ராகுல் காந்தில் 1.5 லட்சம்-2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என்றே நினைக்கிறேன்.

    வயநாட்டில், இஸ்லாமிய, கிறிஸ்தவர்களின் வாக்கு வங்கி 52%க்கு மேல் இருப்பதால் அங்கு மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.

    ReplyDelete
    Replies
    1. 2014 இல் ஸ்ம்ருதி ஈரானியைக் களமிறங்கிய பிறகு ராகுல் காண்டி ஜெயித்த மார்ஜின் 107000 வாக்குகளாகக் குறைந்தது. இப்போது ஜெயிப்பதே கேள்விக்குறி என்று எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டபிறகே பப்பு வயநாடு வேட்பாளராகவும் போட்டியிடுகிறார். முக்கியமான விஷயம் ஆளும் கட்சியாக இருந்தபோதே இவர் ஜெயித்து அமேதி தொகுதிக்கு ஒரு பயனும் இல்லை. இப்போது ...?

      Delete
    2. அப்படி நினைக்காதீங்க சார்... மக்கள் எப்போவும் தொகுதிக்கு நல்லது செய்வாரா என்று பார்க்கவே மாட்டாங்க. தொகுதில எப்போதும் 70% ஏழைகள் இருப்பாங்க. அவங்க தேர்தல் களேபரத்துல எல்லாத்தையும் மறந்துடுவாங்க.

      2014, காங்கிரஸ் அதீத வெறுப்புணர்வு (ஹிமாலய ஊழல் என்பதால்), மோடி என்ற குஜராத் முதலமைச்சர், ஸ்டார் பிரதமர் வேட்பாளர்.

      இப்போ அப்படி இல்லை. இன்னும் 30-40 நாட்கள்தானே.... பார்ப்போம்.

      Delete
    3. பாமர ஜனங்கள் நல்லது செய்வார் என்று எந்த வேட்பாளரையும் தலையில் தூக்கிக் கொண்டாடுவதில்லை என்பதென்னவோ வாஸ்தவம்தான்! இது நாள் வரை எந்த ஒரு கட்சியும் இன்னொரு கட்சித்தலைவருக்கெதிராகவும் ஒரு ஸ்டார் வேட்பாளரைக் களமிறக்கியதில்லை என்பதாலேயே ராகுல் மாதிரியானவர்கள் அதிக மார்ஜினில் ஜெயித்து வந்ததான மாயை 2014 இல் உடைக்கப்பட்டது. இப்போது என்ன நடக்கிறதென்று நானும் பொறுத்திருந்து பார்க்கத்தான் விரும்புகிறேன். வயநாடுமே எதிர்பார்க்கிற அளவு கைகொடுக்குமா என்பதையும் சேர்த்தே!

      Delete
  3. செல்பி எடுத்தவரை அறைந்தவர், மெட்ரோ ரயிலில் பெண்களை அம்ரிதவரை அறைந்து பின்னுக்குத் தள்ளியவர்... கன்னத்தைக் கிள்ள அனுமதித்திருக்கிறார் என்றால்... ஹூ......ம் வோட்டுக்காக என்னென்ன செய்ய வேண்டி இருக்கிறது? சுயத்தை இழந்து, தன்மானம் விற்று...!

    ReplyDelete
    Replies
    1. வாக்கு அரசியல் என்று வந்துவிட்டால் மான ரோஷம் சூடு சொரணை எதுவும் இருக்கக் கூடாது என்பது திராவிட அரசியலின் பாலபாடம், ஸ்ரீராம்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!